என்னுடைய காசி யாத்திரையில் கயா க்ஷேத்ரத்தில்
அக்ஷயவடத்தடியில் பெற்ற தாய்க்கு “மாத்ரு ஷோடசி”
ஸ்லோகங்களை ஒவ்வொரு ஸ்லோகமாக சொல்லி பிண்ட தானம்
செய்தேன்.
இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை
நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக
ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை
தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே,
அது கடன் இல்லையா?
பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள், நம்மைப் பத்து மாதம்
சுமந்து, உதிரத்தைத்தாய்பாலாக்கி அளித்து, பெற்று வளர்த்து
ஆளாக்கும் அன்னைக்கு இறந்தபின்னர் காட்டும் நன்றிக் கடன் ..
“ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய’
அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட.
அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்
உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு
அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை
வெறும் எள்ளும் தண்ணீரும் தான். ஒரு தடவை கயாவுக்கு போ.
அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை.
”புத்” என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான்
‘புத்ரன்’ என்று சாஸ்திரம் சொல்கிறது.
மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும் ( 16 ஸ்லோகங்கள்)
கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
गर्भस्य उध्गमने दुःखं विषमे भूमिवर्त्मनि |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
என்னைக் கர்ப்பத்தில் தாங்கிய படி, மேடு பள்ளங்களில் ஏறி
இறங்கும்போது என் தாய் வேதனைகளை அனுபவித் தாளே,
அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப்
பிண்டத்தைத் தருகின்றேன்.
மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
मसि मसि कृतं कष्टं वेधन प्रसवे ठाढ़ा |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் என் தாய்க்கு என்னால்
ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக
இப்பிண்டத்தைத் தருகிறேன்.
பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
पधाभ्यं प्रजायथे पुत्रो जनन्या:परिवेधनम् |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
என் தாயின் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய
வேதனை எனக்குச் சேர்த்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப்
பிண்டத்தைத் தருகின்றேன்.
ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
सम्पूर्णे धसमे मसि च अथ्यन्थम मातृपीडनम् |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னைச் சுமந்தபோது அவளுக்கு
உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க
இப்பிண்டத்தைத் தருகின்றேன்.
சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
चैथिल्ये प्रसवेप्रप्ते मथः विन्थति दुष्कृतम् |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை
போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப்
போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.
பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
पिबेश्च कटुद्रव्यानि क्वथनि विविधानी च |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, கசப்பான மருந்துகளைச்
சாப்பிட்டாளே என் தாய், அவளுக்கு நான் செய்த இந்தக்
கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க,
பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
अग्निना शोषयथधेहं धारी रथ्रो पोषणेन |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன & ஆகாரமின்றி
ஜடராக்னியின் (பசி என்னும் பெரு நெருப்பு) வெம்மையில்
என் தாய் நொந்தாளே, அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்த
கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக
இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
राथ्रौ मूठरापुरेशभ्यं क्लिन:स्यां मातृकर्पदा |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
இரவில் நான் என் தாயின் ஆடைகளை, மல மூத்திரத்தால் அசுத்தம்
செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.
க்ஷ§தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
क्षित्या विहवले पुत्रे मथा ह्यन्थम प्रयचति |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
எனது பசி தாகம் தீர்க்க (தனக்கு இல்லையென்றாலும்) அவ்வப்போது
உணவும் நீரும் எனக்குத் தந்தாளே என் தாய், அவளை வருத்திய
பாவத்தை நீக்கப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.
திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
धीवरथ्रौ सदा मथा धाधाति निर्भारं स्थानम् |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
அல்லும் பகலும் என் தாயின் முலைப் பால் அருந்தும் போது அவளை
நான் துன்புறுத்தினேனே, அதனால் விளைந்த பாவத்திற்குப்
பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.
மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
माघे मासि निथके शिशिरेथ्यन्था दुखिथा |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
மாக மாதத்தில் சிசிர ருதுவில் கோடையில் என்னைக் காக்கத் தன்
உடலை வருத்திக் கொண்டாளே என் தாய், அவளுக்கு நான் தந்த
இந்தத் துன்பங்களால் விளைந்த பாபங்களைப் போக்கிக் கொள்ளப்
பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
पुत्रे व्याधि समयुक्ते मथः क्रान्तकारिणी |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
மகன் நோய்வாய்ப்பட்டானே என்று கவலையால் வாடி இருந்தாளே
என் தாய், அவளுக்கு விளைவித்த அந்த மனத் துயருக்குப்
பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
यमध्वरे महाघोरे मथा शोशांति संथाथम |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
யமலோகம் செல்லும் என் தாய் கோரமானவற்றை
யெல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப்
பிண்டத்தைத் தருகின்றேன்.
யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
यावथ पुत्रो न भवति थवन् मथुश्च शोषनम् |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால்
புத்திரர்கள் அவர்களது தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும்
இப்பிண்டத்தைத் தருகின்றேன்.
ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
स्वल्प आहारस्य कारणे यावथ पुत्रश्च बलका |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட
கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்குத் நான் தந்த வேதனைகளுக்குப்
பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.
காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
गथ्रबंगा भावेन मथा: मृत्युयु येवनासंशय: |
तस्य निश्क्रमणार्थाय मातृ पिण्डं धाधाम्यं अहम् ||
கர்ப்பத்திலும், சிசுவாக இருந்த போதும் மரண வேதனையை ஒத்த
பல கஷ்டங்களை நான் என் தாய்க்குத் தந்தமைக்குப் பரிகாரமாக
இந்த பிண்டத்தைத் தருகின்றேன்.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்,
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவர்களுக்கு மிக்க நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment