என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்
அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல்
நவம்பர் 1 புதன் கிழமை நடுநிசி வரை …
நவம்பர் 1 புதன் கிழமை …
ஆழ்ந்த தூக்கம் .. ஏழு மணி ஆயிடுத்து ஏந்துகிறதுக்கு .. பஞ்ச தீர்த்த
ஸ்னானம் பண்ண ரெண்டு பேர்ஒரு போட்ல போறா, நீங்க join
பண்ணிக்கோங்கோன்னு வாத்யார் சொன்னார் .. அப்டியே
கிளம்பிட்டோம் .. கங்கையில் போட் சவாரி .. நாங்க இருக்கும்
சிவாலா காட் to அஸ்ஸி காட் ..
அஸ்ஸி நதி கங்கையுடன் ஸங்கமிக்கும் இடம், சும்ப-நிசும்ப
அரக்கர்களை அழித்தபிறகுதுர்கா தேவி தன் வாளை வீசியதால்
இந்த இடம் அஸ்ஸி காட் .. மத்ஸ்ய, கூர்ம, பத்ம, அக்னி
புராணங்களில் இந்த அஸ்ஸி காட் விவரிக்கப்பட்டுள்ளது ..
குளிக்கல, தலையிலே ப்ரோச்னம் பண்ணிண்டாச்சு ..
to தசாஸ்வமேத் காட் ..
ப்ரஹ்மா ஒருயாகம் நடத்தி பத்துகுதிரைகளை பலியிட்டு (தஸஅஷ்வ
அஷ்வ மேத் .. 10 குதிரைகள் தியாகம்) கங்கையில் ருத்ர ஸரோவர்
கலக்கும் இடத்தில் இந்த காட் (படித்துறை) சிவபெருமானுக்காக
கட்டினார் என்று புராணங்கள் கூறுகிறது ..
இங்கேயும் குளிக்கல, தலையிலே ப்ரோச்னம் ..
to வருணா காட் ..
வருணா நதி கங்கையுடன் ஸங்கமம் ஆகும் இந்த இடத்தில் விஷ்ணு
பகவான் தன் கைகளையும் கால்களையும் அலம்பியதால், பகவான்
பாதங்கள் பட்ட இந்த இடம் படோடக் தீர்த்தம் என்று
அழைக்கப்படுகிறது .. இங்கேயும் குளிக்கல, தலையிலே ப்ரோச்னம்
to பஞ்சகங்கா காட் ..
பிந்து மாதவ் கோவில் இருக்கும் படித்துறை .. பிந்து மாதவ் தாமரை
பாதங்களின் கீழ் யமுனை கங்கை ஸரஸ்வதி கிரானா துத்பாபா என்றஐந்து நதிகள் பஞ்சகங்கையாக பாய்கின்றன.. இதனால் பஞ்சகங்கா
காட் என்று அழைக்கப்படுகிறது ..
இங்கேயும் குளிக்கல, தலையிலேப்ரோச்னம் ..
to மணிகர்ணிகா காட் ..
சிவபெருமானுக்குகாக விஷ்ணு தன் சக்ராயதுத்தால் தோண்டிய
சக்ரபுஷ்கரணி குண்டத்தை பார்வதிதேவி பார்த்துகொண்டுருக்கும்
போது அன்னையின் காதில் இருந்து ஒரு விலையுயர்ந்த கல் இந்த
குண்டத்தில் விழுந்துவிட்டதால் இது மணிகர்ணிகா குண்டம் என்று
அழைக்கப்படுகிறது.
மஹா ஷம்ஷான் (புனித தகன மைதானம்) என்று அழைக்கப்படும்
இங்கு எவரின் உடல் தகனம் செய்யப்படுகிறதோ அவரின் காதில்
சிவபெருமான் தாரக மந்திரத்தை ஓதுவதால் அவர் மோக்ஷ்த்தை
உடனே அடைகிறார் என்று பரிபூர்ணமாக நம்பப்படுகிறது .. இந்த
காட்டின் தெற்கு பகுதியில் எந்நேரமும் தகனங்கள் இருப்பதால்
வடக்கு பகுதியில் தான் குளிக்கவேண்டும் .. படகில் இருந்து மூன்று
தகனங்களை பார்த்துவிட்டு மணிகர்ணிகா காட்டில் கங்கையில்
ஸ்னாநம் .. துலா ஸ்னாநம் சஹதர்மினியுடன்… ஐந்தாம் தடவை ..
இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ஏழு முக்கு .. ஸஹதர்மிணியுடன்
மூணு முக்கு .. கங்கா மாதாக்கு ஒரு முக்கு ..
ஸூர்யபகவானுக்கு அர்க்யம் .. back to சிவாலா காட்
மணி பத்தாயிடுத்து .. அதனால சிவாலா காட்லேந்து வாத்யார்
அஹத்திற்கு நடந்து வரவழியிலே ஒரு சின்ன கையேந்தி பவன் ..
மூணு பூரி ரெண்டு ஜிலேபி பெநாரஸ்ஸி லஸ்ஸி .. ப்ரேக் பாஸ்ட் ஓவர்
சாயங்காலம் கிளம்பறதால stay food settle பண்ண வாத்யார்
கிட்ட கேட்டோம் .. ஏழு நாள் ஸ்டே, மார்னிங் ஈவினிங் காபி, full
course லஞ்ச், டின்னர் (எல்லாம் அன்லிமிடெட்) .. வாத்யார்
அமௌன்ட் சொன்னதும் ஆடிபோய்ட்டோம் .. எல்லாம் சேத்து
ஏழாயிரம் தான் .. unbelievable .. வாத்யார் நீடுழி வளமுடன் வாழ்க
( தொடரும் )
No comments:
Post a Comment