Sunday, December 10, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 28

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 28 சனிக்கிழமை …


நேத்திக்கு அலைஞ்சது அசத்திடுத்து .. ஏழு மணி ஆயிடுத்து 

ஏந்துகிறதுக்கு .. ஆஸ்வாஸ்படுத்திண்டு எட்டரை மணிக்கு கங்கை

நதியில் ஸ்னாநம் பண்ண போனோம் .. சஹதர்மினியுடன் காசியில் 

கங்கா ஸ்னாநம் (துலா ஸ்னாநம்) .. ரெண்டாம் தடவை சிவாலகாட் 

ஸ்னானம் .. ஆஹா என்ன ஒருபரமானந்தம் .. இடுப்பளவு நீரில் 

நின்றுகொண்டு ஏழு முக்கு .. ஸஹதர்மிணியுடன் மூணு முக்கு ..

கங்கா மாதாக்கு ஒரு முக்கு .. ஸூர்ய பகவானுக்கு அர்க்யம் .. 

அங்கே படியிலுள்ள சிவலிங்க தரிசனம் 


தங்கியிருந்த இடத்தை சுத்தியுள்ள வீதிகளில் கேஸுல் வாக் .. ஒரு

இடத்துல நல்ல கூட்டம் .. கிட்டபோய் பாத்தா பெட்டிக்கடை மாதிரி

ரொம்ப சின்னக்கடை .. பெநாரஸ்ஸி லஸ்ஸி .. நாங்களும் 

வாங்கிண்டோம் .. திக் கிரீமி பால் எடுத்துண்டு, அது மேல ராபரி 

மலாய் குங்குமப்பூ கிஸ்மிஸ் முந்திரிஇத்யாதி போட்டு, ஒரு பெரிய 

மண்குவளையில குடுத்தான் .. ஆஹா என்ன ஒரு ருசிஒரு 

அலாதியான டேஸ்ட் .. சின்னச் சின்ன ஆசைசிறகடிக்கும் ஆசை .. 

இன்னுரு குவளை வாங்கி குடிச்சாச்சு .. ஒரு குவளை 20 ரூபாதான்

ரொம்ப சீப் .. வயிறு ரொம்பிடுத்து , ப்ரேக் பாஸ்ட் ஓவர் 

நாடு முழுவதிலிருந்து யாத்ரீகர்கள் விஜயம் .. அதனால டிசைன் 

டிசைனா ட்ரெஸ்கள்பலவிதமானமனிதர்கள்விதவிதமான 

பாஷைகள் .. நடுநடுவே அரைநிக்கர் பனியன் பாரினர்கள் ..

போதாக்குறைக்கு பசுமாடுகள் .. இவைகளோடு போட்டியாக 

இரிஃஷாக்கள் ஸ்கூட்டர்கள் கார்கள் பஸ்கள் ..இவற்றையெல்லாம் 

வேடிக்கை பார்த்துகொண்டுருக்கும் போலீஸ்காரர்கள்காரிகள் .. 

ஆஹா என்ன ஒரு வியக்கத்தக்க அனுபவம்


திரும்பி வரப்போ ஒருமணி ஆயிடுத்து .. தரையில உட்காண்டு இலை

போட்டு லஞ்ச் .. சாதம்சாம்பார் ரஸம் மோர் கறி கூட்டு .. சுத்திட்டு 

வந்ததுநல்ல பசி நன்னா சாப்டாச்சு .. அப்புறம் என்னகட்டையை 

கடத்தியாச்சு . அஞ்சு மணிக்கு எழுந்தா சூடா காபி ரெடி . இன்னிக்கி

சந்திர கிரஹணம், கோயில்கள் சாத்தியிருக்கும் .. அதனால வாசல் 

திண்ணைல உட்காண்டு வேடிக்கை .. வாத்யார் ஆத்துக்கு ஜனங்கள் 

வந்துண்டே இருக்கா .. போறவா வரவாட்டலாம் எங்கேந்து வறேள் 

எதுக்கு வந்திருக்கேள்ன்னு குஜலம் விஜாரிப்பு ..டைம் போனதே 

தெரியல .. எட்டரை மணிக்குசமையற்கார மாமா குரல் குடுத்தார் .. 

பந்திக்கு முந்திண்டாச்சு .. தோசை சட்னி சாம்பார் .. 

மூணு எண்ணம், ஒரு டம்ளர் மோர் 


9 மணிக்கு படுத்தாண்டாச்சு11:30 மணிக்கு எழுந்தோம் .. வாத்யார்

ஆத்து முத்தத்துல 23 பேர் அசெம்பிளி ..  11:45க்கு வாத்யார் சந்திர

கிரஹண ஸங்கல்பம் செஞ்சுவெச்சார் .. வேஷ்டிதுண்டுடன் சிவாலய 

காட் கங்கை படித்துறைக்கு நடை .. ராத்திரி 1:30க்கு கங்கையில் 

ஸ்னாநம் .. 1:45க்கு கிரஹண தர்ப்பணம்கங்கையில் அர்ப்பணம் .

 என்ன ஓரு கொடுப்பினைபோன ஜென்ம புண்ணியம் .. தாய் 

தந்தைக்கும் முன்னோர்களுக்கும் புண்ணிய காசி ஷேத்திரத்தில்

புனித கங்கை நதிக்குள் நின்றுகொண்டு கிரஹண தர்ப்பண அர்க்யம்

கிரஹண மோக்ஷத்துக்கு பின் ராத்திரி 2:30க்கு கங்கையில் 

ஸ்னாநம் .. சஹதர்மினியும் கூட பண்ணினாள் 

3 மணிக்கு ரூம்க்கு போய் படுத்தாண்டாச்சு, அரைகுறை தூக்கம் ..

நாளைக்கு அயோத்யா விஸிட்.. cabwala கார்த்தாலே நாலரை 

மணிக்கு “டான்” ன்னு வந்து எழுப்பிடுவான்  


( ….. தொடரும் )

No comments:

Post a Comment