Saturday, December 9, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 26 (4)


என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 26 வியாழக்கிழமை … (தொடர்கிறது)


காசி விஸ்வநாதர் கோயில் அருகில் தசாஷ்வமேத் காட்டில் 

விஸ்வநாத் கல்லியில் அமைந்துள்ளது அன்னபூரணி தேவி மந்திர்.

நுழைவுவாயில் அழகிய சித்ர வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

வாயிலின் வலது பக்கம் பாதாளலிங்கமும் இடப்புறம் ஒரு சின்ன

கிணறும் உள்ளது.  அன்னபூரணி மாதாவை சித்தரிக்கும் 12 

கல்தூண்களுடன் கூடிய அஷ்டகோண வடிவில்மண்டபம் உள்ளது.

கருவறையில் மூன்று வாயில்கள்இருக்கிறது.  தென்கிழக்கு 

வாயிலில் தேவியை தரிஸிக்கலாம்.  தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் 

என்றுஅழைக்கப்படும் மற்ற இரண்டு வாயில்கள் வழியாகவும் 

தேவியின் அருளை பெறமுடிகிறது.


கருவறையில் அன்னபூர்ணா தேவியின் இரண்டு சிலைகள் உள்ளன,

ஒன்று தங்கத்தாலும் மற்றொன்று பித்தளையாலும்ஆனதுஒவ்வொரு

நாளும் பித்தளை சிலையை தரிசனம் செய்யமுடியும்ஆண்டுக்கு ஒரு

முறை தீபாவளிக்குப் பிறகு கொண்டாடப்படும்  அன்னக்கூடு விழா 

நாளில் மட்டுமே தங்க சிலையை தரிசிக்க முடியும்.  இந்நாளில் 

பக்தர்கள் அனைவருக்கும் பல்வேறு மதிப்புள்ள நாணயங்கள் 

வழங்கப்படுகின்றனஇந்த நாணயத்தை வழிபடுபவர்கள் வளமான

வாழ்க்கைக்கு அன்னபூர்ணா மாதாவின் ஆசீர்வாதங்களைப் 

பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.


அன்னபூரணி அன்னை தன திருக்கரங்களில் ஒன்றில் தங்கக் 

கிண்ணத்தையும் மற்றுன்றில் தங்ககரண்டியும் ஏந்தியுள்ளாள்.  

தங்கக் கிண்ணத்தில் உள்ள பால் கலந்த அன்னத்தை தங்கக் 

கராண்டியால் அள்ளி அள்ளி அனைவருக்கும் அளிக்கிறாள்.  

அன்னத்தோடு ஞானத்தையும் சேர்த்து அளித்து உடலுக்கு 

மட்டுமல்லாமல் ஆத்மாவிற்கும் உணவு இடுகிறாள்.

ஸ்ரீதேவி பூதேவி உடனுறையும் அன்னபூரணி தேவியிடம் பிக்ஷண்டி 

கோலத்தில் ஈஸன் பிக்ஷை ஏந்தும் ஒரு அழகிய கண்ணைக்கவரும்

அற்புத திருக்கோலம் காணப்படுகிறதுதீபாவளியின் போது

அன்னபூரணியின் தங்க உருவம் உலக நலனுக்காக சிவனுக்குத் 

தர்மம் செய்வதாகக் காட்டப்படுகிறதுசுத்த தங்கத்தால் ஆன இந்த

திருவுருவம் கண்களை கூசச்செய்யும் ஒளியுடன் பிரகாசிக்கும். 

ஸுவர்ணத்தால் ஆன புடவைஉடுத்தி, நவரத்ன ஆபரணங்களை 

அணிந்து, தங்கக்குடையுடன் கூடிய நவரத்ன க்ரீடம் தலையை 

அலங்கரிக்கபத்மாஸனத்தில்கம்பீரமாக அன்னை அமர்ந்து

இடுப்பில் புலித்தோலுடன் நாகாபரணம் அணிந்து ஒரு கையில் 

உடுக்கையும் மற்றொன்றில் ப்ரம்ம கபாலமும் ஒரு ஆள் உயரத்தில் 

வெள்ளி விக்கிரமாக பிக்ஷடானர் திருவோடு ஏந்தி அன்னபூரணி 

தேவியிடம் பிக்ஷைகேட்க, இடக்கையில் தங்கக்கிண்ணத்துடன் 

வலக்கையில் உள்ள தங்க அகப்பையால் மாதா அன்னபூரணி 

ஈஸனுக்கு படியளிக்கிறாள்.  ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்குப்

பிறகு கொண்டாடப்படும்  அன்னக்கூடு விழா நாளில் மட்டுமே 

இந்த வைபவத்தை பார்க்கும் புண்ணியம் கிடைக்கும்



அன்னையின் சன்னதிக்கு எதிரே ஆதிசங்கர பகவத்பதார் 

ஸ்தாபித்த சக்கரமேரு உள்ளது.  ஆதிசங்கராச்சாரியார் 

இவ்விடத்தில் உலகோர் பசிபோக்க “அன்னபூரணா அஷ்டகம்” 

இயற்றினார்.  ‘நித்யாநந்தகரீ வராபயகரீ …’ என்று தொடங்கும் 

இவ்வஷ்டகத்தின் ஒவொவுறு ஸ்லோகத்தின்முடிவிலும் ‘கருணை 

நிரம்பிய மாதா அன்னபூரணியே எனக்கு பிக்ஷை இடு’ என்று 

முடித்துள்ளார்.  

(“பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ  மாதாந்நபூர்ணேஶ்வரீ”) 

ஞான வைராக்ய சித்தார்த்த பிக்ஷம் தேஹி  பார்வதி’ என்று 

கடைசி ஸ்லோகத்தில் கூறுகிறார்.  

(“ஞானம் வைராக்யம் இரண்டையும் பிக்ஷையாக அருளவேண்டும்.”)


( ….. தொடரும் )

No comments:

Post a Comment