Sunday, December 17, 2017

சுகம் தரும் ஸுந்தரகாண்டம்


கும்பமுனி ஸ்ரீ அகஸ்திய மகரிஷி, நாடியில் ஹனுமந்ததாசன் அவர்களுக்கு வால்மீகி எழுதிய ராமாயணத்தில் "ஸ்ரீ ராம சரிதையின்" சக்தி மிகுந்த ஸ்லோகங்களை சுட்டிக்காட்டி, எந்த எந்த சர்கங்கள், எப்படிப்பட்ட பிரச்சினைகளை கடந்துவர ஒரு மனிதனுக்கு உதவி செய்யும் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.

மேலும், "இதை நம்பி பாராயணம் செய்பவர்கள் நிச்சயமாக தங்கள் கர்மாவை கடந்துவிடுவார்கள். இது ஸ்ரீராமர், ஸ்ரீ அனுமன் அருளால் அடியேன் அகத்தியனுடைய வாக்கு. அதுதான் இறைவன் சித்தம்" என்று அருளியுள்ளார்.

"அஞ்சனை மைந்தனை ஸ்ரீராமபிரான் வெகுவாக நம்பினார். இதை அனுமனும் உணர்ந்திருந்தார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இருக்கவேண்டும் என்று அனுமனும் தன்சக்தியை உணர்ந்து செயல்பட்டார். அத்தனை கவனத்துடன், அனுமன் செயல்பட்ட விதம், அவர் செய்த லீலைகள், தூதுவனுக்குரிய குணங்கள், என்னால் முடியும் என்கிற நம்பிக்கை, ஸ்ரீராம சேவையே என் பிறப்பின் அர்த்தம், ஸ்ரீராம தாசத்துவம், அவர் செய்த ஜபம், த்யானம் போன்றவை, பின்னால் முனிவர்களால் மந்திர உருவில் போற்றப்பட்ட பொழுது, இறை கனிந்து தன் அருளை அந்த மந்திரத்திற்குள் புகுத்தி, இன்றும் மனித இனம் அதை பாராயணம் செய்தால் பலனை, இறை அருளை பெற்றுக் கொள்ளட்டும் என்று தீர்மானித்ததை, அடியேனும் கண்கூடாக பார்த்தேன். ஒவ்வொரு மிக சிறந்த நிகழ்ச்சிக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும்.

சுந்தரகாண்டம் அனுமனின் லீலைகளாயினும், இன்றும் பலம் மிகுந்து, அருள் நிறைந்த, சிறந்த பலனளிக்க கூடிய ஒரு காண்டமாக இருக்க காரணமே, அதனுள் உறைந்திருக்கும், ஸ்ரீராமனின் ஆசிர்வாதம்தான். இது மட்டும் மனிதனுக்கு புரிந்தால் போதும், அவன் தன் வாழ்க்கையை நல்ல பாதையை நோக்கி திருப்பி விடலாம்" என்று நாடியில் கூறியுள்ளார்.


"ஸ்ரீராம சரிதையை வால்மீகி ஏழு காண்டங்களாக விவரித்துள்ளார். எனினும், இறையே இந்த சுந்தரகாண்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நவகிரக தசை, திசா புக்தியில் சிரமப்படுகிறவர்கள், அப்படிப்பட்ட தாங்க முடியாத பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடியை சேர, இறைவனே காட்டிக்கொடுத்த மகா புண்ணிய வழி. கர்மாவுக்கு ஏற்றவாறு தண்டனையை இறைவனே கொடுத்தாலும், அதுவே மனம் விரும்பி திருந்தி வாழ நினைக்கும் மனிதர்களுக்கு, மாற்று வழியை காட்ட கால காலமாக யோசித்துக் கொண்டிருந்தது என்பது, சித்தர்களாகிய எங்களுக்கு இப்பொழுதுதான் புரிய வந்தது. இதை கைப்பற்றி, மனம் ஒன்றி, தன்னையே இறைவனுக்கு கொடுப்பவனுக்கு, விடுதலை நிச்சயம். நினைத்தது நிறைவேறும்" என்று நாடியில் கூறியுள்ளார்.

அனுமனை பெருமைப்படுத்த சுந்தரகாண்டம் உருவானது. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில், இறைவனே மனித அவதாரம் எடுத்தால் எப்படிப்பட்ட கர்ம வினையையும் தாங்கித்தான் கடந்து வரவேண்டும் என்று உணர வைத்த இறைவன், தன் தாசனை பணிந்து, அவர் செய்த அரிய விஷயங்களை பாராயணம் செய்வதின் மூலம், மனித இனத்தின் பிரச்சினைகளை விலக்க வழிகாட்டியுள்ளார்.


நம் அனைவரின் பிரச்சினைக்கும், இறைவன் உத்தரவால், அகத்தியப்பெருமான் எந்தெந்த ஸ்லோகங்களை கூறி வந்தால் பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம் என்று நாடியில் ஹனுமந்ததாசன் அவர்களுக்கு கூறியுள்ளார்.

ஹனுமந்ததாசன் ஸ்வாமிகள் நாடியில் நடந்த நிகழ்ச்சிகளை திரு.கார்த்திகேயன் அவர்களிடம் தெரிவித்திருந்தார். திரு. கார்த்திகேயன் சற்று உள்வாங்கி படித்து, நடைமுறைப்படுத்தி, தனது 'அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்"' என்ற வலைப்பூவில் தொகுத்து அளித்துள்ளார்.

இந்த தொகுப்பில், என்னென்ன தசைகள் நடந்தால் என்னென்ன பிரச்சினைகள் வந்தால் சுந்தர காண்டத்திலுள்ள எந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நற்பலன் கிடைக்கும் என்பது குறிப்பிட்டுள்ளது.

அடியேன் அந்த வலைப்பூவில் படித்த ஆக்கங்களை இங்கு என்னுடைய "KOSHASRINI" வலைப்பூவில் ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

இதை வாசிக்கும் அனைவருடைய பிரச்சினைகளும் விலகி, அனைவரும் கும்பமுனி ஸ்ரீ அகஸ்திய மகரிஷி அருளால், எல்லா நலமும் பெற்று, வளமும் பெற்று, சிறந்த வழிகாட்டுதல் அமைந்து, மேன்மேலும் உயர்நிலை அடைந்திட வாழ்த்துகிறேன், வேண்டிக் கொள்கிறேன்.அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!

சுந்தரகாண்டத்தின் எந்த ஸ்லோகத்தையும் எவன் எந்த நல்ல ஒரு விஷயத்துக்காக வாசித்தாலும், அப்படி பாராயணம் பண்ணுகிற நேரத்தில், அவன் தான் அறிந்தோ அறியாமலோ, அந்த இறையாக மாறிவிடமுடியும், இறையை உணர முடியும்.

"நமோஸ்து வாசஸ்பதயே ஸ்வஜ்ரிணே ஸ்வயம்புவே
சைவ ஹூதாஸனாயச|
தானே சோக்தம் யதிதம் மாமக்ரோத வனெள
கஸா தச்ச ததாஸ்து நான்யதா!!
என்கிற இந்த ஸ்லோகத்தை யார் சொன்னாலும், அநேக நன்மைகளை பெற்று வாழ்வார்கள். சுந்தரகாண்டத்தில் சொல்லப்பட்டுள்ள மிக மிக முக்கியமான ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.


சர்கம் 1
"ஏழரைச் சனி ஆரம்பமானவர்களுக்கும், அஷ்டம சனியால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், சனி மகா தசையில் கேது புக்தியோ, கேது தசையில் சனி புக்தியோ நடப்பவர்களுக்கும், சுந்தரகாண்டத்தின் முதல் சர்க்கத்தை (அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்களை) தினம் பாராயணம் செய்தால், அந்த கஷ்டங்கள் நீங்கிவிடும். அவர்கள் மனதில் அச்சம் என்பதே இருக்காது".

Chapter 3 ... Overcome effects of devils, ghost, spirits

சர்கம் 5.6.7
'நேர்மையாக முயற்சி செய்தால் வெற்றி அடையலாம் என்றாலும், எந்த கிரகங்களினாலும் எந்த இடையூறு வந்தாலும் மனிதர்கள் அனைவரும் சுந்தரகாண்டத்திலுள்ள ஐந்து, ஆறு, ஏழாவது சர்க்கத்தை தினம் பாராயணம் பண்ணி வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இதற்காகவே எழுதப்பட்டது இந்த சர்கங்கள் என்பது, ஆன்றோர் வாக்கு".

சர்கம் 1.2.3.4.5.6.7.8.9
"நம்பிக்கைதான் வாழ்க்கை எனினும், சுந்தரகாண்டத்தின் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள சரகத்தையும் விடாமல் தினம் படித்து வருபவர்களுக்கு, ராகு, கேது, சனி ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து நிரந்தர விடிவு கிடைக்கும். இது சாத்தியமான உண்மை.
நாக/சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், ப்ரம்ம ஹத்தி தோஷம் மேற்சொன்ன சர்கங்களை தினம் வாசித்து வருவதால், நிவர்த்தியாகும்.

சர்கம் 10.11.12.13
"மனிதன் முயற்சி செய்யும் பொழுது இடையூறு வரத்தான் செய்யும். அதையும் தாண்டி செல்கிற மன தைரியம் அவனுக்கு வேண்டும். சுந்தரகாண்டத்தின் பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று சர்கங்களில் உள்ள 195 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு, அனுமனே அதை அருளுவார், அனைத்து தடைகளும் நீங்கிவிடும் என்பது சத்தியம்." 

சர்கம் 14
"ராகு, சனி, கேது, குரு" ஆகிய நான்கு கிரகங்களும் அஷ்டமத்தில் இருந்து ஆட்டிவைக்கும் பொழுது, சங்கடங்களையும், மனக்கலக்கத்தையும், எப்பேர்பட்டவர்களும் சந்திக்க வேண்டிவரும். அப்படிப்பட்ட அத்தனை பேர்களும், வேலைக்கு முயற்சி செய்யும் இளைஞ்சர்கள், திருமணம் இன்னும் நடக்கவில்லையே என்று மனதிற்குள் குமரிக்கொண்டிருக்கும் யுவதிகள், பணத்தட்டுப்பாடு கொண்டு எப்படி வாழப் போகிறேன் என்று துடி துடிக்கும் சம்சாரிகள், அத்தனை பேர்களும் கண்டிப்பாக இந்த சுந்தர காண்டத்திலுள்ள பதினான்கு சர்க்கங்களையும் படித்து வந்தால் மிகப் பெரிய எதிர்காலம் சீக்கிரமே கிடைக்கும், அதையும் அனுமனே தருவார், இது நிச்சயம்!"
"பதிநான்காவது சர்க்கத்தை தினமும் பாராயணம் பண்ணி, ஒரு மனிதன் தன் பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டால், இறை அருள், எந்த காரியத்தையும் சாதிக்க வைக்கும்.

Chapter 15 ... To gain wealth and happiness
Chapter 16 ... To attain detachment from worldly life

சர்கம் 18
"ஜாதக ரீதியாக தொட்டதெல்லாம் தடங்கல் ஆகிக்கொண்டிருப்பவர்களும், சுபகாரியமான திருமணம், சீமந்தம் நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தினர்களும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க துடிப்பவர்களும், அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்களும், ராகு, கேது தோஷங்களில் பீடிக்கப்பட்டவர்களும், சனி மகா தசையில் ராகு, கேது புத்தி நடப்பவர்களும் வறுமையில் வாடுபவர்களும், இந்த சுந்தரகாண்டத்தின் பதினெட்டாவது சர்க்கத்திலுள்ள ஸ்லோகங்களை விடாது படித்து வந்தால், அனைத்து சிரமங்களும், அனுமன் அருளினால் விலகும்".

Chapter 19 ... To realise God and become one capable of sweet words
Chapter 20 and 21 ... For good behavior

சர்கம் 23.24.25.26
இருபத்து மூன்று முதல் இருபத்தி ஆறாவது வரையுள்ள நான்கு சர்கங்களில், வால்மீகி பெண்மைக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், அதனால் அடைகிற துன்பங்களையும் விவரித்து கூறியுள்ளார். விவாகரத்து செய்ய நினைப்பவர்கள், கணவனை விட்டு பிரிந்து வாழ்பவர்கள், வெளியுலக வட்டாரத்தில் மற்ற சக நபர்களால் விரட்டப்படும் பெண்களுக்கும், தங்கள் ராசியில் ஏழாமிடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது உள்ள பெண்களுக்கும், அந்த களத்திர அஷ்டம ஸ்தானக் கொடுமையிலிருந்து நீங்க; ஆறாமிடத்து பாவம் பலமற்று செயல்பட இந்த நான்கு சர்கங்களையும், அப்படியே பட்டாபிஷேக சர்கத்தையும் படித்தால், துயரம் விலகும், கணவர் கிடைப்பார், இல்லற வாழ்க்கை மேலும் இனிமையாகும்.

Chapter 27 ... To get rid of bad dreams

சர்கம் 29
"இருபத்தி ஒன்பதாவது சர்கத்தில், எட்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நல்ல சகுனங்கள் எவை, எவை என்பதை மனிதனுக்கு உணர்த்தும்."

சர்கம் 30
"தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை நீங்க, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர, குடும்பத்தில் ஏற்படும் மற்ற அனைத்து கஷ்டங்கள், மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகள் சுகம் பெற, அத்தனை பேர்களும் இந்த சுந்தரகாண்டத்திலுள்ள 30வது சர்க்கத்தை தினமும் மூன்று தடவை, அனுமனை நினைத்துக் காலையில் பாராயணம் செய்து வந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சந்திர மகா தசையில் ராகு, கேது புக்தி நடப்பவர்கள், ராகு மகா தசையில் சந்திர புக்தி, சூரிய புக்தி நடப்பவர்கள், கேது தசையில் சந்திரன், செவ்வாய், சூரிய  புக்தி நடப்பவர்கள், ஆகியோருக்கு இந்த முப்பதாவது சரகம் நல்ல உயரிய வாழ்வுதனை அள்ளிக்கொடுக்கும்."

சர்கம் 31.32.33.34.35
"முப்பத்தி ஒன்று முதல், முப்பத்தி ஐந்தாவது சர்கம் வரையில் உள்ள ஸ்லோகங்களை தினமும் பாராயணம் செய்வதால், கீழ் காணும் சிரமங்கள் அனைவருக்கும் விலகும்.
கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்கிறவர்கள் அனுமனின் ஸ்ரீராம சரிதத்தை தினம் படிப்பது நன்று. வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள், வாழ்க்கையில் நம்பிக்கை குறைந்தது போகிறவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் அனைவரும், இந்த சர்கங்களை படித்துக் கொண்டே வந்தால் போதும், துன்பம் அத்தனையும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும்." 

சர்கம் 35.36.37.38
"கஷ்டங்கள் தொடர்ந்து பெறுகின்ற அனைத்து மக்களும், ஆபத்தில் துடிப்பவர்களும், வியாதியினால் போராடுபவர்களும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பவர்களும், அஷ்டம குரு, அஷ்டம கேது, ராகு நடந்து கொண்டிருப்பவர்களும் , திருமணமாகாத ஆண், பெண் இருபாலர்களும் 35, 36, 37, 38 ஆவது சர்கங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றும், கஷ்டங்களை விலக்கி வைத்துவிடும்! சௌபாக்கியங்களை அளிக்கும். இது ஒரு மிக மிக முக்கியமான சௌபாக்கிய பகுதியாகும்".

சர்கம் 39.40.41.42
"மனம் நொந்துபோன மனிதர்களுக்கு முப்பத்தி ஒன்பதாவது சர்கத்தில் உள்ள 53 ஸ்லோகங்கள், ஒரு வரப்பிரசாதம்."
"பயத்தினால் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், தன்  பலத்தை தானே அறிந்து கொள்ளாதவர்களுக்கும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் குரு, கேது, சனி இருந்து அதற்குரிய மகாதசையோ, புக்தியோ, அந்தரமோ நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற துர்தேவதைகளால் திடீரென்று பீடிக்கப்பட்டவர்களுக்கும், தோஷங்கள் அனைத்தும் உடனடியாக மறையவும், சந்தோஷங்கள் அதிகரிக்கவும், காவல்துறை, ஜெயில் பயம் விலகவும், முப்பத்தி ஒன்பது முதல் நாற்பத்தி ரெண்டு வரையில் உள்ள சர்கங்களில் உள்ள அனைத்து ஸ்லோகங்களையும், மனதிற்குள் தினம் பாராயணம் செய்து வரலாம். அத்தனை சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் இவை".

சர்கம் 43.44.45.46
நாற்பத்தி மூன்று முதல், நாற்பத்தி ஆறுவரை உள்ள சர்கங்களை, பட்டாபிஷே சர்க்கத்தோடு படித்து, பாயாசம் நிவேதனம் செய்து வந்தால் அனுமன் போல் பிரகாசிக்கலாம்.
அவை  "ராகு, கேது தோஷம், அஷ்டம சனி, அஷ்டம குரு, கேது இவர்களால் பீடிக்கப்பட்டவர்கள், எதிரிகளால் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள், எப்பொழுதும் வாழ்க்கையில் தோல்வி அடைந்து கொண்டு இருப்பவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற, சாதனை படைக்க, எதிராளியின் கொட்டத்தை அடக்க, இந்த சர்கங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்".

சர்கம் 47.48.49.50
"துர்தேவதைகளால் பீடிக்கப்பட்டவர்கள், எதையோ கண்டு மிரண்டு, தினம் தினம் பயந்து பயந்து வாழ்கிறவர்கள், சந்திர தசையில் ராகு, கேது புக்தி நடந்து கொண்டிருப்பவர்கள், சூரிய தசையில் கேதுவும், கேதுவோடு சந்திரனும் அஷ்டமத்தில் ராசியாக அமையப்பெற்றவர்கள், கொடும் குணத்திற்குரிய நபர்களோடு வாழ்க்கை, தொழில் நடத்துகிறவர்கள், சந்திராஷ்டமம் வந்த நாளில் அவதியுறுகிறவர்கள், அனைவரும் இந்த நான்கு சர்கங்களை (47-50) படித்து வந்தால், ஆஞ்சநேயர் வந்து அவர்களுக்கு உதவுவார், வாழ்வு கொடுப்பார், எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்".

சர்கம் 51.52.53.54
திருடர் பயம், எதிரிகளினால் பயம், போக்கிரிகளால் பயம், அக்னியினால் பயம், ஆகியவற்றினால் தினம் அவதிப்படுகிறவர்களும், கஷ்டத்தினால் மாட்டிக்கொண்டவர்களும், செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், செவ்வாய், கேது இரண்டும் சேர்ந்து எட்டாமிடம், ஆறாமிடத்தில் இருக்கும் ஜாதகர்களும், அஷ்டம திசையாக செவ்வாய் தசை நடந்து கொண்டிருப்பவர்களும், ரசாயனம், அடுப்படியில் வேலை செய்பவர்களும் 51 முதல் 54 வரையுள்ள சுந்தரகாண்ட சர்கத்தை படித்து வந்தால், அவர்களுக்கு, எந்தவித உயிர் ஆபத்தும், ஏற்படாது, தீயால் பாதிக்கப்பட மாட்டார்கள், பயமும் விலகிவிடும்".

சர்கம் 55.56.57
"பரீட்ச்சையில் தோல்வி அடைந்தவர்கள், பதவியை இழந்தவர்கள், விதியினால் கஷ்டப்படுபவர்கள், அஷ்டம குரு, அஷ்டமச்சனி இருக்கிறவர்கள், சனி திசையில் ராகு புக்தி, கேது புக்தி நடக்கிறவர்கள், சூரிய தசையில் கேது, ராகு, சனி புக்தி நடக்கிறவர்கள், நொந்து போன உள்ளத்தோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்ற விரக்தியில் நடமாடுபவர்கள், தோல்விகளை தவிர வேறு ஏதும் அறியாத வியாபாரிகள், தொழில் அதிபர்கள், அத்தனை பேர்களும் 55 முதல் 57 வரை உள்ள சர்கங்களை விடாப்பிடியாக தினம் மூன்று தடவை பாராயணம் செய்து பார்த்தால், துன்பம், தோல்வி, பயம், விரக்தி அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். இது நிரந்தர உண்மை".

சர்கம் 58.59
"58, 59 சர்கங்களை பாராயணம் செய்கிறவர்களுக்கு, இதுவரை செய்த பாபங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கும். எதிரிகளை பற்றிய பயம் விலகும். தெய்வ அனுகூலம் நெருங்கி வரும். தடங்கல்கள் ஒவ்வொன்றாக மறையும். சனிதோஷம் விலகும். ராகு, கேதுவினால் ஏற்படும் நோய்கள், கெடுதல்கள் இருக்கிற இடத்தை விட்டு ஒழியும். செய்வினை பலமற்றுப் போகும். தரித்திரம் விலகும். நின்று போன சுபகாரியங்கள் மறுபடியும் நடக்கும். தோல்வி வெற்றியாக மாறும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்".

சர்கம் 60.61
"வாழ்க்கையில் சில முக்கியமான முடிவை எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களும், நேர்மையாகச் செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும், வில்லங்கம் இல்லாமல் செயல்பட 60, 61 சர்கங்களை படித்துவிட்டு துணிந்து செயலில் இறங்கலாம்.  சந்தோஷமாகவே எல்லாம் நடக்கும். சூரியனோடு, கேது உள்ள ஜாதக ராசிக்காரர்கள், சந்திரனோடு ராகு இருக்கும் பொழுது பிறந்தவர்கள், முக்கியமான முடிவை குடும்பத்திற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சொல்லக்கூடிய பொறுப்பில் இருப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, சூரிய தசையில் ராகு புக்தி நடக்கிறவர்களுக்கும் மேற் கூறிய சர்கங்கள், மறுமலர்ச்சியையும், ஊட்டத்தையும் கொடுக்கும், நல்வழியைக் காட்டும், மனதில் நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுக்கும்".

சர்கம் 62.63
எதையும் சமமாக நினைத்து வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்ற தத்துவத்தை, சுந்தரகாண்டத்தின் 62, 63ம் சர்கத்தில் காணலாம். இந்த 62, 63ம் சர்கத்தை படிப்பவர்கள் அனைவருக்கும் தோல்வி என்பது நெருங்காது, பயம் என்பது இருக்காது, தடங்கல்கள் விலகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எட்டாம் வீட்டில் கேது, ராகு, குரு இருப்பவர்களும், சனிபகவானால் கஷ்டப்படும் அஷ்டம சனி நடப்பவர்களும், அஷ்டம ராகு நடந்து கொண்டிருப்பவர்களும், கஷ்டம் நீங்கி வாழ்வார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பயந்து கொண்டிருப்பவர்களுக்கு எம பயம் விலகும். இருதய அறுவை சிகிர்ச்சை, மூளை அறுவை சிகிர்ச்சை வெற்றி அடையும். திருடர்கள், நெருப்பு, இயற்க்கை சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களும், துன்பத்திலிருந்து விடுதலையை நிச்சயம் அடைவார்கள்.

சர்கம் 64
களத்திர ஸ்தானத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்து, அவரவர்கள் மகா புக்தியோ, திசையோ நடப்பவர்கள் 64ஆம் சர்கம் பாராயணம் செய்தால் அத்தனை தோஷத்தையும் விலக்கி, தாம்பத்திய வாழ்க்கையை மலரச் செய்யும். திருமண வாழ்க்கையில் சந்தோசம் இல்லாதவர்கள், பிரிந்துவிட  வேண்டும் என்று வருந்தி தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தொழில் நிமித்தம் காரணமாகக் கணவனும் மனைவியும் தனித் தனியாக பிரிந்திருப்பவர்கள், காதல் தோல்வி ஏற்படுமோ என்று அனுதினமும் பயந்து கொண்டிருப்பவர்கள், அத்தனை பேரும் இந்த சர்கத்தை தினம் மூன்று தடவை படித்து வந்தால் போதும், நடக்காத திருமணம் நடக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் விலகும், இல்வாழ்க்கையில் பரிபூரண ஆனந்தத்தை அடைவார்கள்.

சர்கம் 65
சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கவலைப் படுபவர்கள், ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கும் ஜாதகத்திற்கு சொந்தக்காரர்கள், சந்திரனோடு கேது இருப்பவர்கள், கேது திசையில் சந்திர புக்தி நடப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் சந்திராஷ்டமத்தில் அவதிப்படுபவர்கள், கணவன் மனைவியை பிரிந்திருப்பவர்கள், விவாகரத்து செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வரவில்லை என்று கவலைப்படுபவர்கள், அன்யோன்யமாக பழகத்தடை இருப்பவர்கள், களத்திர தோஷம் உடையவர்கள், செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இந்த அறுபத்திநான்காவது சர்கத்தையும் முப்பத்தாறாவது சர்கத்தையும் தொடர்ந்து தினம் பாராயணம் செய்து வந்தால், சங்கடங்கள் நீங்கி சௌபாக்கியம் பெறுவார்கள்.

சர்கம் 66.67
வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனியினால் அவதிப்படுபவர்கள், சனி மகாதிசையில் சுயபுக்தி, சூரிய புக்தி, கேது புக்தி, சந்திர புக்தி, ராகு புக்தி நடப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, கேது அந்தரம், ராகு புக்தி, ராகு அந்தரம், சனி புக்தி நடப்பவர்கள், செவ்வாயோடு கேது சம்பந்தப்பட்டு ஆறாம் வீட்டில் இருக்கும் ஜாதகவாசிகள், களத்திர செவ்வாய் தோஷத்தை உடையவர்கள் அனைவரும் இந்த அறுபத்தாறு, அறுபத்தேழாம் சர்க்கத்தை தினம் மூன்று தடவை காலையில் பாராயணம் செய்து வந்தால் அவர்களது கஷ்டம் நீங்கும், தலைவிதியே அற்புதமாக மாறும்.

.....
அகத்தியப்பெருமானின் "சித்தன்அருள்" வலைப்பூவிலிருந்து (https://siththanarul.blogspot.in/) பொருக்கி எடுக்கப்பட்டதை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். வலைப்பதிவர்க்கு மிக்க நன்றி. என்னுடைய ஆக்கங்கள் இல்லை.
.....

The benefits of performing Sundara Kandam Parayanam are umpteen and have been elaborated in Uma Samhita in a conversation between Lord Shiva and Parvathi. The Parayanam can be performed to ward off any problem or obstacles being faced by the individual such as delay in marriage, disturbed marriage, children, education, health, specific diseases, career, job progression, overcome difficulties in work environment, achievement of goals, purchase of assets like house, vehicle, etc; start of new business, recover from business losses, overcome enemies, legal battles, relationship issues, apart from a host of prayaschitams for sinful deeds. One can also aim for higher goals such as knowledge, enlightenment, and salvation.

To Recite Sundara Kandam, please visit the following Web-Sites.இன்றைய (17/12/2017) மார்கழி மூல ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி நன்னாளில் இப்பதிவை இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Thursday, December 7, 2017

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸொரூப சிறப்புகள்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)

விளக்கம்
கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்கு முனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்.
.........

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மகேசுவர மூர்த்தம். அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்று. சனகாதி முனிவர்களுக்கு ஞானம் கற்பிக்க எடுத்த வடிவம். 

பொதுவாகவே, ஈசனுக்கு உரிய திசை தெற்கு. ஈச அம்சமான, தென் திசைப் பரமனை நாம் வடக்கு நோக்கி வழிபடுகிறோம். வடதிசை வாழவைக்கும் திசை.
த, க்ஷி, ண - என்பன மூன்று பீஜாக்ஷரங்கள். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம்.
தம், க்ஷிம், ணம் இந்த மூன்று அக்ஷரங்களைச் சொல்லும்போதே நமது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை அழிகின்றன. பீஜாக்ஷர மூர்த்தியே தக்ஷிணாமூர்த்தி. வேறு எந்த மூர்த்திக்கும் இல்லாத ஒரு சிறப்பு இது. 
வட ஆலமரம் ஞானத்தைக் குறிக்கின்றது. ஞானத்தின் நிழலில் அமர்கின்றவர். மரம் எப்படி எங்கெங்கும் கிளைகள் பரப்பி ஊன்றி வளர்கின்றதோ, எங்கும் ஆன்ம ஞானத்தை தக்ஷிணாமூர்த்தி ஊன்ற வைக்கின்றார். மோனத்தின் மூலம் ஞானத்தை உணர்த்திய ஞான குருவான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல் சிறப்பு."சிவரஹசியம்” பத்தாவது காண்டம், இரண்டாவது அத்தியாயத்தில் 'தக்ஷிணாமூர்த்தி ப்ராதுர் பாவம்' என்ற தலைப்பின் கீழ்வரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸொரூபம். 

பிரம்மா தன் படைப்பை துவங்கிய பொழுது, தன் மானச புத்திரர்களான சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் என்ற நால்வரையும் ஸ்ருஷ்டி கர்மத்தில் ஈடுபடும்படி கூறினார்.

ஆனால் அவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் மறுத்து விட்டார்கள்.

அவர்கள் தங்களுக்கு யாராவது ஞானோபதேசம் செய்வார்களா என்று தேவர்களிடமும், முனிவர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த நாரத முனி, “பிரம்மாவை விட சிறப்பாக யார் ஞானோபதேசம் செய்ய முடியும். அவரிடம் போய் பிரம்மோபதேசம் பெறுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

“அப்படியே செய்கிறோம் “ என்று கூறி நாலு பிரம்ம குமாரர்களும் தேவர்கள் புடை சூழ ஸத்யலோகத்திற்கு சென்றார்கள். ஸத்யலோகம் சென்ற அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே காத்திருந்தது. அங்கே பிரம்மாவின் முன்னால் அமர்ந்து ஸரஸ்வதி தேவி வீணை வாசித்து கொண்டிருந்தார்கள். பிரம்மா, ’ஆஹா, ஆஹா” என்று ஆனந்தத்துடன் தாளம் போட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு பெண்மணியின் இசையில் லயித்து போயிருக்கும் பிரம்மனால் தங்களுக்கு ஞானோபதேசம் அருள முடியாது  என்ற முடிவிற்கு வந்த சனக குமாரர்களை "வைகுண்டலோகம் போகலாம், அந்த சாக்ஷத் நாராயணனிடமே உபதேசம் பெறலாம்” என்று நாரதர் கூற சனக குமாராதிகள் வைகுண்டம் வந்தடைந்தார்கள். அங்கு இன்னும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.

வைகுண்ட நாதரின் மாளிகைக்குள் எல்லோரும் அனுமதி இல்லாமல் செல்ல முடியாததால், எங்கும் எப்பொழுதும் செல்லக் கூடிய சலுகை பெற்றுள்ள நாரத முனி மட்டும் உள்ளே சென்றார். போன வேகத்திலேயே திரும்பியும் வந்து “இங்கே ஒன்றும் வேலைக்காகாது. ஸத்ய லோகத்திலாவது தேவி பிரம்மனின் முன்னால் அமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருந்தார். இங்கேயோ மஹாலக்ஷ்மித் தாயார் திருமாலின் பாதங்களை பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த  நாராயணனா ஞனோபதேசம் செய்யப் போகிறார்.?” என்று சொல்லி, கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே மஹாதேவன் அர்த்த நாரீஸ்வரராக நிறைந்த சபையில் தாண்டவமாடிக் கொண்டிருந்தார். விஷ்ணு மத்தளம் போட்டுக்கொண்டிருந்தார், பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.

இவராலும் காரியம் ஆகாது என்று முடிவு கட்டி சனக, சனத் குமரர்கள் அங்கிருந்து போக ஆரம்பித்தார்கள்.

இதையெல்லாம் ஞான திருஷ்டியில் அறிந்த சிவ பெருமான், பார்வதி தேவியை அங்கேயே விட்டு விட்டு ஞான வேட்கையால் தவித்துக் கொண்டிருக்கும் அந்த குமாரர்களைத் தேடி போனார்.

சிவ பெருமான், கருணையால் உந்தப்பட்டு, ஒரு பதினாறு வயது பால யோகியாக மாறி சனக குமாரர்கள் போகிற வழியிலுள்ள மானசரோவர் ஏரியின் வட திசையிலுள்ள ஆல மரத்தினடியில் தக்ஷிணாமூர்த்தியாக தென் திசை நோக்கி அமர்ந்து கொண்டார்.

வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் மௌனமே காந்தக்கல் போல் சனகாதிகளை ஈர்த்தது. இவரே தங்களுக்கு ஏற்ற குரு எனத் தெளிந்து அவரிடம் வந்து அமர்கின்றனர். பாலயோகியும் சீடர்களை வரவேற்கிறார். 
சநத்குமாரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்க யோகியும் அதற்கேற்ற பதில்களைக் கொடுக்கிறார். இவர்கள் சந்தேகங்கள் மேன்மேலும் எழும்புகின்றன. யோகியும் அசராமல் பதில் கொடுக்கிறார். 

கடைசியில் இந்த சந்தேகங்களும், அவற்றுக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷம் தொடர்ந்து நடைபெற்று வர, ஈசன் இனி இது ஒன்றே அனைத்திற்கும் ஒரே பதில் எனக் கூறுவது போல் சின்முத்திரை காட்டி நீடித்த மெளனத்தில் சமாதி நிலையில் அமர்கிறார். 
ஈசன் சமாதி நிலையில் அமர்ந்ததுமே சநத்குமாரர்கள் மனதிலும் இனம் காணா அமைதி, ஆநந்தம். ஈசனுடைய சமாதிநிலையின் சர்வத்துவம் அவர்களிடமும் வந்து அடைய அவர்களும் சச்சிதாநந்தப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அமைதி அடைகின்றனர். இதுவே சத்தியம், இதுவே நித்தியம், இதுவே அநந்தம் என்று தெளிவும் அடைகின்றனர். அந்த மௌன நிலையிலேயே  அவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தியான சிவபெருமான் ஆத்ம சாக்ஷாத்காரம் அளித்தார். 

“சின் முத்திரை” என்றால் கட்டை விரலையும் ஆள்க்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையம் உண்டாக்குவதாம். ஆள்க்காட்டி விரல் கட்டை விரலின் மத்தியை தொட வேண்டும். ஆட்காட்டி விரல் ‘அஹங்காரத்தையும்' கட்டை விரல் 'ஆன்மாவையும்' பிரிதிபலிக்கின்றன. இரண்டு விரல்களுக்குமான இடைவெளி 'மாயயை' குறிப்பிடுகிறது. அஹத்தை அழீத்து எப்பொழுது ஆன்மா பரமாத்மாவில் லயிக்கின்றதோ அப்பொழுது ஆன்மசக்ஷாத்காரம் ஏற்படுகிறது என்று பொருள். இந்த முத்திரை “தத்துவமசி” என்ற தத்துவத்தையும் குறிப்பிடுகிறது. சபரிமலையில் தர்ம சாஸ்தா தவக்கோலத்தில் சின் முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் ஆள்காட்டிவிரல்  தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், ஆள்காட்டிவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.ஸ்ரீதட்சிணாமூர்த்தி, இடையாற்றுமங்கலம், லால்குடி. 

மகாவில்வ இலைகளால் மாலை கட்டி இவருக்கு அணிவித்து துவாதசி வளர்பிறை திதிகளில் ஆராதித்து வந்தால் கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.ஸ்ரீதட்சிணா மூர்த்தி, கூகூர், லால்குடி. 

பலரும் காசி, பூரி திருத்தலங்களுக்கு யாத்திரை போவதற்காக என்னதான் ஏற்பாடுகள் செய்தாலும் அது ஏதாவது ஒரு காரணத்தினால் நிறைவேறாமல் போய்விடுகிறது. இவ்வாறு தெய்வீக காரியங்களை உறுதியுடன் நிறைவேற்ற உதவும் மூர்த்தியே கூகூர் தட்சிணா மூர்த்தி ஆவார்.ஸ்ரீதட்சிணா மூர்த்தி. ஆதிகுடி சிவத்தலம், லால்குடி.

திருஅண்ணாமலையில் சிவபெருமானின் தூல தரிசனத்தை தரிசிக்கும் சக்தியை ஒருவர் பெற வேண்டுமானால் முதலில் அவர் ஆதிகுடியில் சனகாதி முனிவர்களின் தரிசனத்தைப் பெற்றாக வேண்டும். சனகாதி முனிவர்கள் இன்றும் மனித உருவில் தட்சிணா மூரத்தி ஈசனை வழிபடும் உத்தம தலமே ஆதிகுடியாகும்.ஸ்ரீதட்சிணா மூர்த்தி, திருநெடுங்களம். 

சிரசாசனம் என்னும் யோகத்தை பிரம்மசாரிகள் மட்டுமே பயில வேண்டும் என்ற யோக நியதி உள்ளது. ஆனால், இம்முறையை அறியாமல் இல்லறத்தில் இருப்பவர்களும் சிரசாசனத்தை பயிலும்போது பலவிதமான உடல், மன துன்பங்கள் ஏற்படும். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிப்பவரே திருநெடுங்கள யோக தட்சிணா மூர்த்தி ஆவார். முறையாக யோகாசனம், தியானம் அறியாமல் பயின்று அதனால் ஏற்படும் துன்பங்களுக்கு பிராயசித்தம் அளிப்பவரே இத்தலதட்சிணா மூர்த்தி ஆவார்.ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி, லால்குடி, திருச்சி


ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் சிவத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளி இருந்தாலும் சுயம்பு லிங்க தத்துவத்தின் அடிப்படையில் எழுந்தருளியுள்ள அற்புத மூர்த்தியாவார். சிலருடைய குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகவே குழந்தைகள் மந்த புத்தியுடன் பிறக்கும் சூழ்நிலை அமைவதுண்டு. எத்தகைய மருத்துவ காரணங்களுக்கும் புலனாகாத இத்தகைய குறைபாடுகளை நீக்கக் கூடிய மூர்த்தி இவர் ஒருவரே ஆவார். குழநதைகள் தங்கள் கையால் சந்தனத்தை அரைத்து சிறு உருண்டைகளாக இந்த மூர்த்திக்கு அலங்கரிக்க அளிப்பதன் மூலம் தெளிவான மன வளர்ச்சியை கண் கூடாக காணலாம். தொடர்ந்த வழிபாடு அவசியம். சந்தனப் பொட்டுக்களின் மேல் ஜவ்வாது வைத்து அலங்கரித்தல் மேலும் சிறப்பாகும்.ஸ்ரீதட்சிணா மூர்த்தி, திருப்பத்தூர் திருத்தலம்


ஒவ்வொரு கிரகத்தின் பாதத்திலும் மூன்று நட்சத்திரங்கள் என்ற கணக்கில் 27 நட்சத்திர தேவதைகளுமே ஒன்பது கிரகங்களில் பாத சஞ்சாரம் கொள்கின்றன. இவ்வாறு நட்சத்திர தேவதைகள் அனைத்தும் தினந்தோறும் வணங்கும் மூர்த்தியாக இத்தல தட்சிணா மூர்த்தி அருள்பாலிப்பதால் இத்தல தட்சிணா மூர்த்தி வழிபாடு கிரகங்களின் எத்தகைய பிரதிகூல தசா, புத்தி, அந்தரங்க துன்பங்களையும் களையக் கூடியதாக அமைந்துள்ளது கலியுக மக்களின் பெரும்பாக்கியமே. பௌர்ணமி, அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சித்தர்கள் அளித்துள்ள நட்சத்திர துதியை இத்தலத்தில் ஓதி பாதாம்பருப்பு கலந்த பால் தானம் அளித்து வந்தால் கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும்.


ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகங்கள்

॥ दक्षिणामूर्तिस्तोत्र ॥ Dakshinamurthy Stotra
https://sanskritdocuments.org/doc_shiva/dakshina.html?lang=sa

॥ श्रीदक्ष्निणामूर्तिस्तोत्रम् २ ॥. Dakshinamurthy Stotram 2
https://sanskritdocuments.org/doc_shiva/dakshina2.html?lang=sa

॥ दक्षिणामूर्तिस्तोत्रं सूतसंहिता ॥  Dakshinamurthy Stotra from Suta Samhita 
https://sanskritdocuments.org/doc_shiva/dakShiNAmUrtistotraSutasamhita.html?lang=sa

॥ श्रीदक्षिणामूर्ति नवरत्नमालिकास्तोत्रम् ॥ DakShinamurti Navaratnamalika Stotra
https://sanskritdocuments.org/doc_shiva/daksh9.html?lang=sa

॥ श्रीदक्षिणामूर्ति अष्टोत्तर शतनामस्तोत्र ॥ DakShinamurti aShTottara Shatanama Stotra
https://sanskritdocuments.org/doc_shiva/dakshina108str.html?lang=sa

श्रीदक्षिणामूर्ति पञ्चरत्नस्तोत्रम् .. DAKSHINAMURTI PANCHARATNASTOTRAM
http://stotram.lalitaalaalitah.com/2013/03/blog-pos-2.html


Those who do want to know in English, please click the under given Link

http://creative.sulekha.com/sri-dakshinamurthy-iconography-and-some-other-questions-part-one_451222_blog


.........
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்
.........

Sunday, December 3, 2017

தலவிருட்சங்கள்


ஒவ்வொரு திருத்தல தலவிருட்சதிற்க்கும் ஒவ்வொரு தெய்வீகத் தன்மை உண்டு. குருந்தமரம், ஆவுடையார் கோவில்.

துளசி மாலை, கடுக்கன், நெற்றிச் சின்னங்கள், பூணூல், அரைஞாண் கயிறு போல ருத்திராட்சமும் சக்தி வாய்ந்த திருஷ்டி ரட்சை காப்புச் சாதனமாகும். ஆனால், உரிய முறையில் பெறப்பெற்ற ருத்ராட்சத்திற்கே தெய்வீக சக்திகள் உண்டு. எனவே இறையடியார்கள் தங்களிடம் உள்ள ருத்ராட்சங்களை இக்குருந்த மர நிழலில்வைத்து 108 முறை குருந்த மரத்தை வலம் வந்து மாணிக்க வாசகரின் பிடித்த பத்து பாடல்களை ஓதி ருத்ராட்சங்களை அணிந்து கொண்டால் அம்மாலைகளில் உள்ள தோஷங்கள் நீங்கும்.மிகவும் அபூர்வமான பராய் மரத்தை தலமரமாக உடைய திருத்தலமே இங்கு நீங்கள் காணும் திருப்பராய்த்துறை திருத்தலமாகும்.

எத்தகைய கடுமையான புற்று நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய அற்புத திருத்தலம். இங்குள்ள தல விருட்சமான பராய் மரத்திற்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சளை பூசி வலம் வந்து வணங்குதல் நலம். தோல் வியாதிகளும் குணமாகும். ரவையுடன் சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு இடுதல் நலம். ஆனால், இம்மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து சுயநலமாக பயன்படுத்தினால் பெரும் சாபங்கள் விளையும் என்பதை நினைவில் கொள்ளவும்.புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் திருத்தல தலவிருட்சம் புன்னை மரம்.

காஞ்சீபுரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்று இத்தல விருட்சங்களும் யுகங்களைக் கடந்து பிரளயத்திற்கும் சாட்சியாய் நிற்பவை. இத்தல விருட்சங்களின் தரிசனமே நான்கு வேதங்கள் ஓதிய பலனை அளிக்க வல்லது. தங்கள் கையால் அரைத்த மஞ்சளைப் பூதி தல விருட்சங்களை வழிபடுவதால் கணவன் மனைவியரிடையே, உறவு முறைகளில், அலுவலகங்களில் உள்ள எத்தகைய பகைமை உணர்வும் மறையும்.ஸ்ரீஜகத்ரட்சகர் சிவாலயம், மணமேல்குடி. 

கோயில் தல விருட்சங்களுக்கு தாமே அரைத்த மஞ்சளால் அலங்கரித்து வலம் வந்து வணங்குவதால் தோல் நோய்களால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறும். வெள்ளிக் கிழமைகளில் 51 முறையும், வியாழக் கிழமைகளில் 30 முறையும் இத்தகைய தலவிருட்ச வலங்களை மேற்கொள்ளுதல் சிறப்பாகும். மூட்டுவலிகளுக்கு அற்புத நிவாரணம் கிட்டும். தலவிருட்சங்களில் அடியில் அமர்ந்து ஜபிக்கப்படும் மந்திரங்கள் எளிதில் சித்தியாகும்.ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருத்தலம், மணமேல்குடி. 

இப்பழமையான ஆல், அரசு, வேம்பு மரங்களை வலம் வந்து வணங்கி திருக்குளாத்திலிருந்து நீர் வார்த்து வணங்கி வருதலால் தந்தை வழி சொத்துக்களை இழந்தோர் மீண்டும் அத்தகைய சொத்துக்களை மீட்க இறைவன் அருள் புரிவார். ஷண்ணாவதி தினங்களில் இத்திருக் குளக்கரையில் தர்ப்பணம் அளித்து வருதலால் எத்தகைய சொத்து பிரச்னைகளுக்கும் நியாயமான முறையில் தீர்வுகள் கிட்டும். கோர்ட்டு வழக்கு என்று அலைய வேண்டிய அவசியமே கிடையாது. இது சித்தர்கள் காட்டும் நல்மார்கம்.வஞ்சிக்கள்ளி என்னும் ஒருவித சிரஞ்சீவி மூலிகை வளரும் இடமே செட்டிக்குளம் முருகன் கோயிலாகும். 

இள நரையைத் தடுப்பதும் முடி உதிர்வதைத் தடுப்பதும் வஞ்சிக்கள்ளியின் முக்கிய மருத்துவ குணங்களாகும். மஞ்சள் பூக்களுடன் இலுப்பை மணம் கூடிய இம்மூலிகையை வாரம் ஒருமுறை தரிசித்து முருகப்பெருமானுக்கு செம்பருத்தி தைலத்தால் அபிஷேகித்து வந்தால் இளநரை வராது. முடி சம்பந்தமான பிரச்னைகளால் திருமணத் தடங்கல்கள் ஏற்படாது. மூளைச் சோர்வை அகற்றும் அற்புத வழிபாடு இது.மன்னார்குடி திருத்தலம்திருக்கோயில் கோபுரங்களைப் பார்த்தவாறு அமைந்துள்ள சமித்து விருட்சங்கள், பாலுள்ள விருட்சங்கள் கீழ் அமர்ந்து தியானம் புரிவதால் அற்புத பலன்களைப் பெறலாம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர முடியாதவர்கள் இத்தகைய விருட்ச நிழல்களில் வலம் வருவதும் சுயம்பு மூர்த்தி வழிபாட்டிற்கு இணையான அற்புத பலன்களை அளிக்கும். தம்பதிகள் இத்தகைய மரங்களின் கீழ் உறங்கினால் அதுவும் ஒரு யோகமே.கொன்றை மரம், திருப்பத்தூர்

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கொன்றை மரத்திற்கு முன் அமர்ந்து திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய, “வேற்றாகி விண்ணாகி ...“ என்ற பாடலை ஓதிக் கொண்டே இருந்து சூரிய உதய சமயத்தில் சூரிய கதிர்கள் கொன்றை மலர்களின் மேல் படுவதை தரிசனம் செய்து வந்தால் அற்புத யோக சக்திகள் மலரும். இவ்வாறு ஒரு நாள் பெறும் யோக சக்தியே ஒரு வருட பிராணாயாமத்திற்கு ஈடான பலன்களை அருள வல்லது.
கொன்ற மரத்தின் நிழலை வேத சக்திகளின் பிரதிபிம்பமாக வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். ஆம், நீங்கள் ஒரு கொன்றை மரத்தை தரிசனம் செய்யும்போது ஓங்கார சக்திகளை மட்டும் தரிசனம் செய்வதில்லை, அனைத்து வேதங்களின் பிரதிபிம்பத்தையே தரிசனம் செய்கின்றீர்கள் என்றால் இதைவிட சிறப்பாக இறைவனின் கருணைக்கு எதைச் சான்றாகக் காட்ட முடியும். இந்த வேத பிம்ப சக்திகளை முழுமையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் மாத்திரமே. அதனால்தான் அகத்திய முனிவரை நாடி வந்த வால்மீகி முனிவருக்கு, “ஒன்றை சிவனுக்குச் சூட்டு, அது கொன்றையாக இருக்கட்டும்,” என்று கொன்றை மரத்தின் ஓங்கார வேத சக்திகளை அம்முனிவருக்கு உணர்த்தி அவர் திருப்பத்தூர் கொன்றை மரத்தின் அடியில் பல யுகங்கள் தவமியற்றி அற்புத வேத சக்திகளை தபோ பலனாக பெற அருள் வழி காட்டினார். வேத சக்தியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டியவரே வால்மீகி முனிவர். திருப்பத்தூர் கொன்றை மர நிழலில் பெற்ற தளிவேத சக்தியால்தான் லவகுசர்கள் விடுத்த அஸ்திரங்களால் மறைந்த ஸ்ரீராமரையே மீண்டும் உயிர்ப்பித்து இவ்வுலகிற்கு அளித்து ராமராஜ்யத்தை புனருத்தாரணம் செய்தார் வால்மீகி. ஒப்பற்ற ஒரு விஷ்ணு அவதாரத்தையே மீண்டும் உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். ஆம், சீதைக்கு பிறந்த லவனைப்போலவே மீண்டும் ஒரு ஸ்ரீராம பிரதிபலிப்பு என்ற குசனை உருவாக்கியவர் வால்மீகி முனிவர்தானே. இவ்வாறு கொன்றை நிழல் கோடி சாதிக்கும்.செவ்வாய்க் கிழமை காலை சூரிய ஹோரை நேரம் முழுவதும் அதாவது 7 முதல் 8 வரை திருப்பத்தூர் திருத்தல கொன்றை மரத்தை வலம் வந்து வணங்குதலால் தோல் வியாதிகள் எளிய முறையில் நிவாரணம் பெறும். மாணவர்களுக்கு ஆரஞ்சு பழரச தானம் சிறப்பு. செயற்கை பழரசங்களைத் தவிர்க்கவும்.மெய்ஞானபுரி. காரைக்குடி அருகே

ஒவ்வொரு மரத்தினுடைய நிழலுக்கும் பலவிதமான நோய் நிவாரண சக்திகள் உண்டு. இதை முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்களே. இவ்வகையில் மகிழ மரத்திற்கு இரத்த சோகையை நிவர்த்தி செய்யும் சக்திகளும், இரத்தத்தை சுத்தி செய்யும் சக்திகளும் உண்டு. செவ்வாய்க் கிழமைகளிலும் அனுஷ நட்சத்திர தினங்களிலும் மகிழ மரத்தை 18 முறை வலம் வந்து குரங்குகளுக்கு பேரீச்சம் பழங்களை தானமாக அளித்தலால் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும். கர்ப்பிணிகளுக்கு ஒரு வர பிரசாதம் மகிழ மரம்.கடம்பர் கோவில், குளித்தலை

எத்தகைய கொடிய கர்மவினைகளையும் களையக் கூடியதே கடம்பமர தரிசனமாகும். இத்தகைய கடம்ப சக்திகள் அனைவரையும் சென்றடைவதற்காகவே 1008 யுகங்கள் கொடுவினைகளையே புரிந்து கொண்டிருந்த சூரபத்மன் கடம்ப மரமாக நின்றபோது அவனை சம்ஹாரம் செய்து சேவலாகும் மயிலாகவும் ஏற்றுக் கொண்டு அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான்.நாகலிங்க மரம், கடம்பர் கோவில், குளித்தலை

பூமியை விட்டுப் புறப்படும் ராக்கெட் நேராக விண்வெளிக்குச் சென்று விடுவதில்லை. முதலில் பூமியை சற்று நேரம் சுற்றி வந்த பின்னரே பூமியின் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மேலெழும்புகிறது ராக்கெட். இத்தகைய சக்தி இயக்கங்களை அடிப்படையாக உடையவையே கடம்பமரமும், நாகலிங்க மரமும். நாக பாம்பு ஒன்றுதான் நேராகவும் வளைந்தும் செல்லக் கூடிய தன்மை உடையது. இத்தகைய இயக்கங்களின் இரகசியங்களை புரிந்து கொண்டால்தான் astral travel என்னும் ஆன்மீகப் பயணத்தில் வெற்றி பெற முடியும். அதற்கு உதவிபுரிவதே கடம்பவன வழிபாடு.வதரி மரம் ஓமாம்புலியூர்

வதரி என்னும் இலந்தை மரம் தலவிருட்சமாக திகழும் திருத்தலமே சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் திருத்தலமாகும். அ உ ம என்ற ஓங்காரத்தின் மூன்று சக்திகளே மூன்று மூன்று இலைகளாக வதரி மரத்தில் திகழ்கின்றன. ஓங்காரத்தின் பிரயோக சக்தியே வதரி மரதத்தில் நாம் காணும் முள் ஆகும். இதை எந்த பூலோக சக்தியாலும் உருவாக்க முடியாது. எந்த விஞ்ஞானி வேண்டுமானாலும் ஒரு அணுகுண்டை உருவாக்கி விட முடியும். ஆனால், ஆயிரம் விஞ்ஞானிகள் ஒன்று கூடி முயற்சி செய்தாலும் ஒரு வதரி முள்ளை உருவாக்க முடியாது என்கிறார்கள் சித்தர்கள்.கௌரி தீர்த்தம் ஓமாம்புலியூர் 

தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பலரும் என்னதான் மாடாக உழைத்தாலும் தங்கள் முதலாளிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. அவ்வாறு தங்கள் பணிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று கலங்குவோர்கள் இத்தீர்த்தக் கரையிலுள்ள அரச மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சளால் பொட்டிட்டு அலங்கரித்து குங்குமமிட்டு வணங்கி வழிபடுவதால் முதலாளிகள், மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர். உறவினர்கள் இடையே ஏற்படும் மன வேறுபாடுகளும் தணியும்.


... மிக்க நன்றி: "குழலுறவுதியாகி" வலைத்தளம் (http://kulaluravuthiagi.com)

Saturday, December 2, 2017

கார்த்திகை தீபஜோதி ... அருணாசல ஜோதி

ஜோதி ஜோதி அருணாசல ஜோதி
அருணாசலம் என்றால் அருணம் + அசலம்அருணம் என்றால் நெருப்பு, அசலம் என்றால் மலைஇது நெருப்பு மலைஅண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறார்.

இம்மலையின் மிக முக்கிய சிறப்பு இங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழா.

கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலை நுனியில் காட்டா நிற்போம்

வாய்த்து வந்த சுடர்காணில்

பசிபிணி இல்லாது உலகில் மன்னி வாழ்வார்

பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு

தவிரும் இது பணிந்தோர் கண்டோர்

கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு

முத்திவரம் கொடுப்போம் 

அருணாசல புராணம் 


ஒவ்வொரு வருட அருணாசல கார்த்திகைத் தீபத்திலும் எண்ணற்ற வகையான ஈஸ்வர ஜோதிக் கிரணங்கள் தோன்றுகின்றன. ஆதிமுதல் காண இயலா அண்ணாமலையில்தான், அடி முதல் காண இயலா மஹாபிரபு சர்வேஸ்வரன், நம் மானுட அறிவு மற்றும் அறிவுக்குப் புலனாகும் வகையில், அருணாசல தீபமாக ஆண்டு தோறும் கார்த்திகைத் திருநாளில் காட்சி தருகின்றார்


கோடானுகோடி யுகங்களில் தோன்றிய அருணாசல ஜோதிகள் யாவும் கிரிவலப் பாதையில்தாம் பரவி நிறைந்துள்ளன. கிருத யுகம் முதல் கலியுகம் வரை பல்வேறு பிறவிகளைப் பெற்று வாழ்ந்தோர், இங்கு திருஅண்ணாமலையில் அருணாசல மலையைக் கிரிவலம் வருகையில் தங்கள் பூர்வ ஜென்ம வினைகளின் செயற்கழிவிற்கான எளிய வழிமுறைகளைப் பெறுகின்றனர்


அருணாசல ஜோதியின் ஒவ்வொரு ஜோதிக் கற்றையும் விதவிதமான பலன்களைத் தாங்கி வருவதாகும். ஒவ்வொரு அருணாசல தீபக் கதிரிலுமே கோடானு கோடி வகையில் அதியற்புதமான பலன்கள் பொதிந்து இருக்கின்றன

உத்தமமான பிரார்த்தனைகளை நாம் அருணாசல தீபத்திடம் வைத்தால், தீப ஜோதி அனுக்கிரக தேவதைகளும் உத்தமமான பலன்களை அள்ளித் தருகின்றன.
அருணாசல தீபஜோதி வகைகள்

ஷோடச அனுக்ரஹ ஜோதி ...
பதினாறு விதமான பலன்களைத் தருகின்ற தீப ஜோதி.
பரவெளித் திசைகள் எட்டு, உள்மனத் திசைகள் எட்டாக, பதினாறு திசைகளில் இருந்தும் மனிதனுக்கு வரும் துன்பங்களைத் தீர்க்க உதவுபவையே ஷோடச அனுக்ரஹ ஜோதி.

அன்ன தாரண ஜோதி ...
முப்பத்திரண்டு விதமான அறங்களின் பலாபலன்களைத் தர வல்ல ஜோதியும் உண்டு. ஒவ்வொரு ஆண்டிற்கான சிறப்புடைத் தான தர்ம வகைகளும் உண்டு. 
திருஅண்ணாமலையில் ஸ்ரீஉண்ணாமுலை அம்மனும், காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி தேவியும், முப்பத்திரண்டு விதமான அறங்களை, சாதாரணமான மானிடப் பெண் வடிவில் வந்தி நிறைவேற்றி, கலியுகப் பெண்மணிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நல்வழிகாட்டித் தந்து அருள்கின்றனர். 
ஒவ்வொரு தானமும், தர்மமும், ஒவ்வொரு விதமான ஜோதி வகைகளைத் தோற்றுவித்துத் தரும். அருணாசலப் புண்ணிய பூமியில், சிறிய அளவில் அன்னதானம் நிகழ்த்தினால் கூட, அங்கு அன்ன தாரண ஜோதி எழுந்து, ஜீவ சுத்தி, வான சுத்தி, பரவெளி சுத்தி, மன சுத்தி, உடல் சுத்தி போன்ற முப்பத்திரண்டு வகையான சுத்திகளை, உடல், மனம், உள்ளத்திற்கு அளிக்கக் கூடியதாகத் திகழ்கின்றது. 

அஷ்டோத்திர மாலா ஜோதி ...
அஷ்டோத்திர மாலா ஜோதி என்கின்ற கார்த்திகை தீப ஜோதியில், 108 வகையான அனுக்கிரக ஜோதிகள் உண்டு. 
சாதாரண பாமரர் முதல் நாட்டுத் தலைவர்கள் வரை அனைவருக்கும் அருள வல்ல ஜோதி இது. “மக்கள் செய்வது மன்னன் தலையில்” என்பதாக, குடிமக்கள் ஆற்றுகின்ற செயல்களின் தன்மைகள், நாட்டுத் தலைவர்களையுமம பலவகைகளில் பாதிக்கும் ஆதலின் இந்த ‘அஷ்டோத்திர மாலா ஜோதி” மூலம் தக்க நிவர்த்திகளைப் பெற்றிட, குடும்பத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் ஆண்டு தோறும் குறைந்தது ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அருணாசல ஜோதி தரிசனம் பெற்றிடல் வேண்டும்.
ஜோதியில் இருந்து தோன்றுவதே ஜோதிடக் கலை! 
எனவே, அனைத்து ஜோதிடர்களும் அருணாசல தீபத்தன்று கட்டாயமாக ஜோதி தரிசனம் பெற்றாக வேண்டும். 
பூவுலகின் அனைத்துத் துறையினரும் - விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள், பாமரர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் - போன்று அனைவருக்கும் தேவையான அனைத்து வகை தரிசனப் பலாபலன்களையும் அருள வல்லதே அருணாசல தீபமாகும். 

சாயா சாலேஷு அருணாசல ஜோதி ...
வென்றவர் தோற்கவும், தோற்றவர் வெல்லவும், கற்றவர் ஏற்கவும், கல்லாதவர் உணரவும் - இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் தேவையான நல்வர அனுக்ரஹ சக்திகளைத் தருவதே "சாயா சாலேஷு அருணாசல ஜோதி."
தோல்வி என்பதும் வாழ்வில் அடைய வேண்டிய ஒன்றே! ஒருவர் வென்று, மற்றொருவர் ஜெயித்தல் உலக நியதி. ஆனால் ஆன்ம ஜோதிப் பாடத்தில், தீவினைகள் தோற்று, உள்ளம் சீர்மை பெறுதல் மிகவும் முக்கியமானதாகும். தோல்வியில் மானுடம் சீர் பெறுதல் நிகழுமாயின் சீர்திருத்தப் பாடமாக அது ஏற்புடையதுதானே! எனவே, அருணாசல தீப தரிசனப் பலாபலன்கள், ஒவ்வொருவருடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உறைந்து உணர்விப்பதாகும். அருணாசல தீபம் நன்கு சுடர் விட, ஒவ்வொருவரும் தன் குடும்பத்தின் சார்பில் குறைந்த பட்சம் ஒரு மீட்டர் திரியையாவது அருணாசல தீப ஜோதி ஏற்றிட அளித்திட வேண்டும். 
அடுத்த ஒரு மீட்டர் திரியை, அறியாமையாலும், திரியைக் கூட வாங்கித் தராத நிலையில் உள்ள பாமரர்கள் சார்பாகவும் அளித்திட வேண்டும். 
மூன்றாவது மீட்டர் துணியை தாவரங்கள், பிராணிகள் போன்ற இதர ஜீவன்களின் நலன்களுக்காக அளித்திட வேண்டும். 
இதுவும் அருணாசல சேவையின் ஒரு பாங்கேயாம். 
அவரவர் வசதிக்கேற்ப இவ்வகையில், மூன்று பங்கு தைலம், திரி, பசு நெய் போன்றவற்றை அளித்து, அருணாசல தீபத்தைப் பன்னாட்கள் காட்சி அளிக்கச் செய்திட வேண்டும்.

உண்மையில், அருணாசல ஜோதியை ஆற்றுவிக்கும் தீபத்தின் ஒரு சிறிய திரி இழையில் தோன்றும் அருணாசல தீப ஜோதிக் கிரணங்களும் யாங்கணும் பரவி, விரவி, பல்கிப் பெருகி சந்ததி சந்ததியாய் நல்வரங்களை வர்ஷிக்க வல்லதெனில் என்னே இதன் மஹிமை! 
எனவே, இனியேனும் ஆண்டுதோறும் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக, ஆண்டு தோறும் குறித்த நற்காரியங்களை ஆற்றிட, தக்க இறைச் சங்கல்பங்களை எடுத்துக் கொண்டு நற்செயல்களை ஆற்றி வருவதுடன், வருடம் தோறும், அருணாசல தீப ஜோதிக்காகத் தைலம், எண்ணெய், கற்பூரம், திரி, பசு நெய் ஆகிய ஐந்தையும் அவரவர் வசதிக்கேற்ற அளவில் தானம் அளித்தலால், ஒரு சிறிய இழையில் எழும் தீப ஜோதிக் கிரண அருளமுதமானது, தத்தம் சந்ததிகளுக்கும், மூதாதையர்களுக்கும் எண்ணற்ற பலாபலன்களைக் கொழித்துச் செழித்துத் தருவதாகும். 

அருணாசலத் தீப ஜோதி தோன்றும் அற்புதத் திருநாளில், அவரவர் மன எண்ணங்களின் பதிவு மேற்கண்ட தீபப் பொருட்களில் பதிந்து, எண்ணங்களை, ஏக்கங்களை, ஆசைகளை முறைப்படுத்தி, கிரக, கோசார, கோள தசமஹா பலாபலன்களை நன்முறையில் நிலை நிறுத்தி ஜீவன்களுக்கு உதவிட, அருணாசல தீபம் துணை புரிய வேண்டி ஜோதிப் பிரகாச வள்ளலாம் சிவபெருமானை வேண்டித் துதித்திடுவோம்.

அருணாசல தீபம் நாம் பூகோளப் பூர்வமாக எண்ணுவது போல, அருணையைச் சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டும் தெரிவதல்ல. 
குறித்த கோணத்தில் இருந்து அனைத்து நாடுகளிலும், அண்ட சராசரக் கோளங்களிலும், நட்சத்திரங்களிலும் காண வல்லதே அருணாசல தீப ஜோதி. 
எனவே, இந்த அருணாசல தீப ஜோதி தோன்றும் நாளில், இயன்ற தான தர்மங்களைச் செய்து, தான தர்மத்தில் சாசுவதமாகப் பொலியும் ஜோதிப் பிரகாசத்தை நிரவி, நல் எண்ண சக்திகளை விருத்தி செய்து, உண்மையாகவே தியானம் பயில்வோருக்கு, சத்குருவே எங்கிருந்தும் இறையருளால் அருணாசல ஜோதிக் கிரணங்கள் மூலமாக ஆசி ஜோதிகளை அருள்கின்றார். 
எந்த நாடு இத்தகைய அனுகிரக நல்வழி முறைகளை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றதோ அந்நாடு நன்னிலை பெறும். 
வருங்காலத்தில் அருணாசல தீபப் பெருவிழாவில் பல நாடுகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஜோதி விருத்திக்காகத் தங்கள் உதவிகளை நல்கி, பன்னாட்டுக் கொடிகளும் தீபப் பெருவிழாவில் பறக்கும் படியாக உலகப் பெருவிழாவாக அருணாசல கார்த்திகை தீபப் பெருவிழா அகில உலக ஜோதிப் பெருநாளாகத் துலங்க உள்ளது.

பூமியின் இதயமாகக் கூறப்படும் அருணாச்சலத்தின் சிகரத்தில் விளங்கும் ஜோதி ஒளியின் உண்மையானது, அழியக் கூடிய இந்த ஜட உடலே நான் ஆவேன் என்று நினைக்கும் (தேகாத்ம புத்தி) மனதை நீக்கி, அந்த மனதை உள் முகமாக்கி இதயத்தில் நிலையாக ஒன்றி, உண்முக திருஷ்டியால் இரண்டற்ற ஏக சக்தியாகிய உள் ஒளியின் உண்மை சொரூபத்தை உணர்வதே.
– பகவான் ரமணர் திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. 

தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். 
முற்றத்தில் 4, பின்கட்டில் 4, கோலமிட்ட வாசலில் 5, திண்ணையில் 4, வாசல் நடை, மாடக்குழி, நிலைப்படி, சுவாமி படம் அருகில் தலா 2 விளக்குகள், சமையல் அறையில் 1 மற்றும் வெளியே எம தீபம் 1 என்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும். 
வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்......
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.....

இன்றைய (2/12/2017) தீபத்திருநாள் நன்னாளில் இப்பதிவை இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.