Wednesday, June 30, 2021

அன்னை வாராஹி …


ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,

பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!

அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி

இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!


ஓம் வாராஹ முஹ்யை வித்மஹே

தண்ட நாதாய தீமஹி

தந்நோ ஹரிகிரி ப்ரசோதயாத்;


ஓம் மகிஷ த்வஜாய வித்மஹே

தண்ட ஹஸ்தாய தீமஹி

தந்நோ வாராஹி ப்ரசோதயாத்


மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக 

உருவானவள் வராஹி.  சப்த கன்னிமார்கள் பிராமி, வைஷ்ணவி, 

மகேஷ்வரி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி இவர்கள் 

முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன், திருமால் 

ஆகிய தெய்வங்களின் சக்திகள்.  இவர்களில் வாராஹி பன்றி முகமும், 

பெண்ணின் உடலும் கொண்டவர்.  நான்கு கரங்களை உடையவர்.  

பின்இருகரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் 

கொண்டிருப்பார்.  இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி, சிம்மவாகனத்தில் 

அமர்ந்திருப்பார்.  தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் 

முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! 


அபிராமி அந்தாதியில் இரு பாடல்களில் வாராஹி என அம்பிகையை 

அபிராமிபட்டர் பாடுகிறார்.

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு

வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்

றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”


“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்

உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா

வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே

செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’


ஓம் ஸ்யாமளாயே வித்மஹே

ஹல ஹஸ்தாய தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

- வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவது..


|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: |

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||


அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில்

இருந்து தோன்றியவள்.  

இவளே ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).

மந்திர சாஸ்திரபழமொழி : “வாராஹிக்காரனோடு வாதாடாதே”


வாராஹி அம்மன் வழிப்பாட்டு முறைகள்.


புதன், சனிக்கிழமைகள், திரயோதசி திதி, பஞ்சமி திதி, நவமி, 

திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.  

எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட 

சிறப்பான பலன்களைப் பெறலாம்.


ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி.

அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான 

நைவேத்தியங்களுடன் பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று 

மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.


ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை 

அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.

வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை 

உண்டாகும்.

மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் 

நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.

பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.

நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.


ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத்தண்டு, 

வாழைத்திரி பயன்படுத்தலாம். 

அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.


நைவேத்தியங்கள்:-

தோல் எடுக்காத உளுந்து வடை, 

மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம், 

மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், 

மிளகு சீரகம் கலந்து செய்த தோசை,  நவதானிய வடை, 

குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம் கலந்த பால், 

கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன்படைக்கலாம்


1. வாராஹிக்கு ஏற்ற மாலை – செவ்வரளி மாலை.

2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் – செந்தாமரை, வெண் தாமரை.

3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு – தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, 

தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக்கிழங்கு, பனங்கிழங்கு.

4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் – மரிக்கொழுந்து, 

கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.

5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் – வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், 

சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரிவேர்.

6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்- செவ்வண்ண வஸ்திரம் 

ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.

7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் – 

கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை

இத்துடன் பானகம் முதலியன.


வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.

2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.

3. புலி வாகன வாராஹி.

4. வெண் குதிரை வாகன வாராஹி.

இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் 

தருவதாக சித்தர்களாலும், மந்திரசாஸ்திரங்களாலும் விரிவாக 

விளக்கப்பட்டுள்ளன.


ஜபத்திற்கான மந்திரங்கள்


ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 1:

ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வாராஹி வராஹமுகி 

ஐம் க்லெளம் ஐம் அந்தே அந்தினி நம: ருந்தே ருந்தினி நம: 

ஜம்பே ஜம்பினி நம: மோஹே மோஹினி நம: ஸ்தம்பே ஸ்தம்பினி நம: 

ஐம் க்லெளம் ஐம்ஸர்வ துஷ்டப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் 

ஸர்வ வாக் சித்த சக்ஷுர் முக கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் 

குரு குருசீக்ரம் வச்யம் குரு குரு ஐம் க்லெளம் ஐம் 

ட: ட: ட: ட: ஹீம் பட் ஸ்வாஹா!!


ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 2:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம்; நமோ பகவதி 

வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி;

அந்தே அந்தினி நமஹா; ருந்தே ருந்தினி நமஹா; 

ஜம்பே ஜம்பினி நமஹா; மோஹே மோஹினிநமஹா; 

ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹா; 

சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் 

சர்வ வாக் சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் 

குரு குரு சீக்ரம் வச்யம், ஐம் க்லௌம் 

ட: ட: ட: ட: ஹூம் அஸ்த்ராய பட் ||


ஸ்ரீ மகாவாராஹியின் 

அங்க தேவதை .. லகு வார்த்தாளி 

உபாங்க தேவதை .. ஸ்வப்ன வாராஹி

பிரத்யங்கதேவதை .. திரஸ்கரணி


ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம்:

லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவி பாதுகாப்யாம் நம:||

இவள் ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை.

ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம் ஜெபிக்க இயலாதவர்கள் லகு வாராஹி 

மந்திரத்தை ஜெபித்து வரலாம். 

இது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக விளங்கும்.


ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம்: 

ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட: ட: ஸ்வாஹா||

அல்லது

ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட: ட: ஸ்வாஹா||

இவள் ஸ்ரீ மகாவாராஹியின் உபாங்க தேவதை. 

இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை, தீமைகளைக் 

கனவில் வந்து அறிவித்து நம்மைக் காப்பாள்.   இம்மந்திரத்தை 

நியமங்களுடன் உறங்கும் முன் 11 நாட்கள் தொடர்ந்து தினமும் 

1100 முறை ஜெபித்து வந்தால் 11 நாட்களுக்குள் அன்னை 

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில் வந்து நம் மன விருப்பங்களை 

நிறைவேற்றி, பிரச்சனைகளைத் தீர்ப்பாள். 

இவளுக்குப் பிடித்தநைவேத்யம் இளநீர்.


ஸ்ரீ திரஸ்கரணி மூல மந்திரம்:

ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே; மஹாநித்ரே; 

சகல பசுஜன மனஸ் சக்ஷு ச்ரோத்ரம் திரஸ்கரணம்குரு குரு ஸ்வாஹா||

இவள் மாயைக்கு அதிபதி. 

இவளை வழிபட மாயை நீங்கும். மனகுழப்பங்கள் தீரும்.


குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-


1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|

மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||


2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :

ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; 

ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசயநாசய ||


3.செல்வ வளம் பெருக:

க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; 

ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||


4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:

ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே 

தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||


5.எல்லா வகையான பயமும் நீங்க:

ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; 

சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; 

சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||


6.வறுமை நீங்க :

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி 

மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||


ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:


மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள், ஜெபிக்க இயலாதவர்கள் 

யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை 

காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க 

அவள் அருள் துணை நிற்கும். 

1. ஓம் பஞ்சமி தேவ்யை நம:

2. ஓம் தண்டநாதா நம: 

3. ஓம் சங்கேதா நம: 

4. ஓம் சமயேச்வரி நம: 

5. ஓம் சமயசங்கேதா நம: 

6. ஓம் வாராஹி நம: 

7. ஓம் போத்ரிணி நம: 

8. ஓம் சிவா நம: 

9. ஓம் வார்த்தாளி நம: 

10. ஓம் மகாசேனா நம: 

11. ஓம் ஆக்ஞா சக்ரேச்வரி நம: 

12. ஓம் அரிக்னீ நம: 


ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி 

உடையவை.   சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் 

தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 

32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.  அல்லது அதில் உள்ள 

ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும்.  அதில் உங்கள்

தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர 

தேவை நிச்சயம் நிறைவேறும்.


காரியசித்தி, பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை, 

யந்திர, மந்திர, ஹோமம், ரக்ஷை உள்ளது. 

ஸ்ரீ அச்வாரூடா, ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள், அரசாங்ககளில் வெற்றி 

தருவதுடன், எத்தகை யவழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும்.


கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||


அன்னை வாராஹி போற்றி



“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;

ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: | 

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; 

பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” 


மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் 

செய்யும்படி தாழ்மையுடன்வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.  

எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் 

உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும்.  

இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், 

உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.


ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, 

ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், 

எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.


வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த 

விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், 

இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவர்களுக்கு 

மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.