Thursday, November 1, 2012

பித்ரு பூஜை

...
இன்று எனது தந்தையின் 22வது ஸ்ராத்த தினம்
...

பித்ரு ஸ்துதி:

ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ள இந்த ஸ்தோத்ரம் தென் புலத்தாராகிய பித்ரு தேவர்களைப் பற்றியது.

ब्रह्मोवाच


ॐ नमः पित्रे जन्मदात्रे सर्व देव मयाय च
सुखदाय प्रसन्नाय सुप्रीताय महात्मने

सर्व यज्ञ स्वरूपाय स्वर्गाय पर मेष्टिने

सर्वतीर्थावलोकाय करुणा सागराय च

नमः सदा s s शु तोषाय शिव रूपाय ते नमः

सदा s पराध क्षमिणे सुखाय सुखदाय च

दुर्लभं मानुषमिदं येन लब्धं मया वपुः

संभावनीयं धर्मार्थे तस्मै पित्रे नमो नमः

तीर्थ स्नान तपो होम जपादि यस्य दर्शनम्

महागुरोश्च गुरवे तस्मै पित्रे नमो नमः

यस्य प्रणामस्तवानात् कोटिशः पितृ तर्पणम्

अश्वमेधशतैस्तुल्यं तस्मै पित्रे नमो नमः

फल श्रुतिः


इदं स्तोत्रं पितुः पुण्यं यः पठेत्प्रयतो नरः

प्रत्यहं प्रातरुत्थाय पितृ श्राद्ध दिनेsपि च
स्व जन्म दिवसे साक्षात्पितुरग्रे स्थितो sपि वा
न तस्य दुर्लभं किञ्चित् सर्वज्ञतादि वाञ्छितम्

नानापकर्म कृत्वापि यः स्तौति पितरं सुतः

स ध्रुवं प्रविधायैव प्रायश्चित्तं सुखी भवेत्
पितृप्रीतिकरो नित्यं सर्व कर्माण्यथार्हति
 

शुभम्
...


பித்ரு ஸ்துதி: ( தமிழ் )
 

ஸ்ரீ பிரம்மா உவாச

ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச

ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே

ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:

ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:

ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்

மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்

அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
 

பல ச்ருதி:

இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:

ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்

நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:

ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி


மங்களம்
...பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

ப்ரம்ஹ தேவர் கூறினார்

ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.

எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.

எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய தர்சனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.

ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.
...

" ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் "

செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.

மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது.

இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்த ஸ்ரீ யாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.

மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.

அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.

இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும். ஸ்வாமி இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.

தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி போஸ்ட், நத்தம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053.
இந்த தலம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.

பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும். அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நம் இல்லங்களில் முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்தாலும் அந்த திதியில் இந்த சன்னதியில் பணம் அனுப்பி பூஜை செய்ய வேண்டிக் கொள்ளலாம்.
குறைந்த கட்டணம் தான், எனவே எல்லோரும் பயன் பெற வேண்டும்.
...

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள் ...

ஒரு வருடத்தில் 96 தடவை ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது விசேஷமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்.

பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு - பன்னிரண்டு ,
அமாவாசை - பன்னிரண்டு, அஷ்டகை - பன்னிரண்டு,
வ்யதீபாதம் - பதிமூன்று , வைத்ருதி - பதிமூன்று ,
மன்வாதி - பதினான்கு, யுகாதி - நான்கு, மஹாளயம் - பதினாறு.

அஷ்டகைகள் என்பது - மார்கழி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள மாதங்களில் வரும் கிருஷ்ண பக்ஷ ஸப்தமி ( திஸ்ரோஷ்டகை ), கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ( அஷ்டகா ), கிருஷ்ண பக்ஷநவமி ( அன்வஷ்டகா ) இவையே.
... 
ஒரே நாளில் பல ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் செய்ய வேண்டிய ஸ்ராத்தங்கள், விட வேண்டிய ஸ்ராத்தங்கள்.

அமாவாசை அன்று மாதப்பிறப்பும் வந்தால் அன்று மாதப்பிறப்புக்காக மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் .

அதே போல அமாவாசை அன்றே மன்வாதி, யுகாதி,வ்யதீபாதம் ,வைத்ருதி , க்ரஹணம் போன்றவைகள் வந்தாலும் அமாவாசை தவிர மற்றவைகளை செய்ய வேண்டும்.

சில நேரங்களில் அமாவாசை அன்று மாலை க்ரஹணம் நிகழ்ந்தால் காலையில் அமாவாசை தர்ப்பணமும் மாலை க்ரஹண தர்ப்பணமும் செய்ய வேண்டும்.

ஒரே நாளில் கீழ்க்கண்ட ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் தனித்தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது,
அவைகள் - மாதப்பிறப்பு, யுகாதி , மன்வாதி , க்ரஹணம், அர்த்தோதயம் ,மஹோதயம், வைத்ருதி , வ்யதீபாதம்.

ஒரே நாளில் செய்யும் ஸ்ராத்தங்களின் முன் பின் க்ரமம்

அமாவாசையும் சோதகும்பமும் சேர்ந்து வந்தால் முதலில் சோதகும்பமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல மாஸிகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல ப்ரத்யாப்தீகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் ப்ரத்யாப்தீகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாசப்பிறப்பு , யுகாதி போன்றவைகள் சேர்ந்து வந்தால் மாசப்பிறப்பு யுகாதி போன்றவற்றை முதலில் செய்து விட்டு பிறகு ப்ரத்யாப்தீகம் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு ப்ரத்யாப்தீகமும் செய்ய வேண்டும்.

ஆப்தீகமும் மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் ஆப்தீகமும் பிறகு மாஸிகமும் செய்ய வேண்டும்.
...