Saturday, July 7, 2018

அகஸ்திய கவசம்




அகஸ்தீஸ்வரர் கவசம்


அம்மையப்பன் தன்னருளால் ஆனந்த உவகையால்

'அம்உம்மம்' என்னும் ௐங்கார ஓசையினால் உதிந்தெழுந்த ௐளியுருவே

உலகெல்லாம்  உணர்ந்தேத்தும் ௐங்காரப் புதல்வனே! அகஸ்தீசா! அகஸ்தீசா

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம் 

காத்தருள்! காத்தருள்! மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


பிறவிப் பெருங்கடல் நீந்தா வினையினால்

பலகோடி ஆண்டுகளாய் பரிதவிக்கும் ஆத்மா,

அரவணைக்க ஆளின்றி அழுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம் .. காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


ௐருயிராய்த் தொடங்கி ஆறுயிராய் நிலைத்து

பிறப்பிலும் இறப்பிலும் அல்லலுறும் ஆத்மா,

அழுவதற்கும் இயலாமல் அரற்றுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்.. காத்தருள்! காத்தருள்!

மகா குருவே சரணம், சரணம், சரணம்.


நன்மையும் தீமையும் உணர்த்திய பின்னாலும்

தற்புகழ்ச்சிக் கொண்டதனால் நிலையிழந்த ஆத்மா,

பலமிழந்து தடுமாறி தவிக்கின்ற துயரத்தை

நீக்கியரூள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம். காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


காசுபல வைத்திருந்தும்

பசித்த வயிற்றுக்கு அன்னமிட எண்ணாமல்

பக்தியெனும் பேராலே பொழுதெல்லாம் சீரழிக்கும்

ஆத்மாவின் பழுதுகளை நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


அகங்கார மமகார குணத்தாலே பிதற்றி

வாழ்வெல்லாம் புகழ்தேடி அலைகின்ற ஆத்மா,

செல்லும் வழியின்றி படுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


அன்பதனைப் புரியாமல் அனைவரையும் அடிமையாக்கி

தற்பெருமை சுகத்தாலே நிலையிழந்த ஆத்மா,

எமனுலகப் பயத்தாலே அலறுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


மந்திரங்கள் பலசொல்லி வலுவிழந்த மதமார்க்கம்

நீதியினைப் புறந்தள்ளி தன்னுயிரை மிகமதித்த

அகோர ஆத்மா, அலறியழும் துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


அட்டாங்க யோகத்தை ஆசையினால் மிகப்பழகி

மூட்டுகளில் நீர்தேங்கி உடலழிய உண்மையை

உணராத ஆத்மா கலங்குகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


புராணப் போதையிலே வாழ்விழந்து போனாலும்

வாழ்விக்க உற்றதொரு குருவில்லா ஆத்மா

கடைத்தேற இயலாமல் கலங்கிடும் துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


ஐம்பூத கலவையினால் உடலெடுத்த ஆத்மா

ஐம்பூதம் அறியாமல் உய்யும்வழி புரியாமல்

பலவழிகள் தான் கற்று படுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


மானுடம் மாய்க்கின்ற பிரிவினைகள் பலசெய்து

குதியோட்டம் போட்ட இருளுலகு ஆத்மா

தர்மத்தை அறியாமல் தவிக்கின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


எழுபத்தி ரெண்டாயிரம் நாடி நரம்பெல்லாம்

ஓங்காரம் பரவாமல் உருப்படவும் முடியாமல்

நோயாலே நொந்தழியும் கொடூர துயரத்தை 

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


ஆறாதார சக்கரத்தின் அருமை உணராமல்

ஓராயிரம் ஜெபதபங்கள் செய்தாலும் உயர்வின்றி

சுயபோதைக் கோளாறால் நிலையழியும் துயரத்தை

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம் காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


தசவாயு அத்தனையும் தடுமாறா வகை செய்து

உடலெடுக்க வழி செய்த உன்னதம் புரியாமல்

ஏதோதோ பல செய்து ஏமாறும் துயரத்தை 

நீக்கியருள் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


காணுகின்ற காட்சியெலாம் இறையுருவாய் எண்ணாமல்

குறைபேசி வாழ்ந்திட்டேன்; குற்றம் பல புரிந்திட்டேன்;

குருவருள் இல்லாமல் ஏதுமறியாமல் இருந்திட்டேன்!

அருள் தருவாய் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


கர்மவினை அத்தனையும் அறியாமல் வந்ததுவே

வழிகாட்டும் குருவின்றி ஆசையினால் விளைந்ததுவே

காலதேவன் அருளாலே அறிந்திட்டேன் குருதேவா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே

அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.


ஆனந்தப் பேரொளியில் அகலாமல் நிலைத்திருக்க

மனமதைச் செம்மையாக்கி குருவருளால் சீர்படுத்தி

வாசியிலே குடியிருந்து வாழும் கலை அறிவித்து

அருள்தருவாய் குருநாதா! அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்காத்தருள்! காத்தருள்!

மகாகுருவே சரணம்,சரணம், சரணம்.


மகாகுருவாம் அகஸ்தீசர் அருள்சீடன் நற்குணசிவம் 

வடித்திட்ட சிறுநூலாம் அகஸ்தீசர் அருள் கவசத்தை

கருத்துடனே காலை மாலை ஆறுமுறை ஓதுவார்கள் 

பிறப்பற்ற நிலைகண்டு பேரோளியில் நிலைத்திருக்கும் 

சித்தநிலை உருப்பெற்று சீருடனே வாழ்ந்திருப்பார்

பொய்யில்லை  ஒருபோதும்; சத்தியம்! சத்தியம்!







ஒரு முகநூல் பதிவில் படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ப்திவருக்கு மிக்க நன்றி.


வம்ச கவசம் .....




ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை

துர்க்காயை ஸததம் நம:

புத்ரபாக்யம் தேஹி தேஹி

கர்ப்ப விருத்திம் குருஷ்வந:

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்

ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ

மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:

ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ

ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி

வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர

கர்ப்ப ரட்சாம் குரு குரு

குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ

நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:

கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்

சோஷய சோஷய ஸ்வாஹா

அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்

ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்

கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே

அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே

ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:

அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:


அதி சீக்ர சத்சந்தான பிராப்திரஸ்து!


ஓம் சந்தான கணபதியே நம:

ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:


ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவருக்கு மிக்க நன்றி.

பிள்ளையார் பிரசன்னம் துதிப்பாடல் ....




அற்புதங்களும் மகத்துவங்களும் நிறைந்த இந்த அருள்கோவைப் பாடல், அகத்திய மாமுனிவரின் அருள்வாக்காகத் திகழும் ஓலைச் சுவடிகளின் பாகங்களிலிருந்து வெளி வந்தது என்பது பெரியோர் வாக்கு. அதாவது, அகத்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ளது இந்தஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’. 
சிவாலயங்களில் அம்மன்  சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்  சக்தி வாய்ந்த கணபதி மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் ஸ்ரீ தோரண கணபதி எனப்படுகிறார்.

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில் அமைந்துள்ள தோரண வாயிலினுள் பிரவேசிக்கும்போது  பலிபீடத்திற்கு அருகில் வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீதோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச-பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், தோரண கணபதி.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே 

திருமகள் அருளிருந்தும்  திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில்  ஒளியின்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும்  நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள்  காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின்மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

அல்லல்கள் அகலும்
பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!




காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையாகவும் தென்சென்னையின் வடக்குப் பாகமாகவும் விளங்கும் செல்வமணி குன்றத்தூர் எனப்படும் தென் குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழார் பெருமான் அவதரித்த இல்லத்திற்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்தி கோயிலில் தோரண வாயிலுக்கு எதிரில், ஸ்ரீதோரண கணபதி, தன்னை நாடி வருபவர்களுக்குக் கடன் தொல்லை தீர்ந்திட அருள்பாலிக்கிறார். 

தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே 
சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, 
ருணமோசன வல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா

தமிழில் தோரண கணபதி துதி

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதயே! தோன்றிடுக என் கண்முன்னே



வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் நன்றி: “GOOGLE IMAGES”