Saturday, July 7, 2018

பிள்ளையார் பிரசன்னம் துதிப்பாடல் ....




அற்புதங்களும் மகத்துவங்களும் நிறைந்த இந்த அருள்கோவைப் பாடல், அகத்திய மாமுனிவரின் அருள்வாக்காகத் திகழும் ஓலைச் சுவடிகளின் பாகங்களிலிருந்து வெளி வந்தது என்பது பெரியோர் வாக்கு. அதாவது, அகத்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ளது இந்தஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’. 
சிவாலயங்களில் அம்மன்  சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்  சக்தி வாய்ந்த கணபதி மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் ஸ்ரீ தோரண கணபதி எனப்படுகிறார்.

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில் அமைந்துள்ள தோரண வாயிலினுள் பிரவேசிக்கும்போது  பலிபீடத்திற்கு அருகில் வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீதோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச-பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், தோரண கணபதி.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே 

திருமகள் அருளிருந்தும்  திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில்  ஒளியின்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும்  நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள்  காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின்மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

அல்லல்கள் அகலும்
பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!




காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையாகவும் தென்சென்னையின் வடக்குப் பாகமாகவும் விளங்கும் செல்வமணி குன்றத்தூர் எனப்படும் தென் குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழார் பெருமான் அவதரித்த இல்லத்திற்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்தி கோயிலில் தோரண வாயிலுக்கு எதிரில், ஸ்ரீதோரண கணபதி, தன்னை நாடி வருபவர்களுக்குக் கடன் தொல்லை தீர்ந்திட அருள்பாலிக்கிறார். 

தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே 
சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, 
ருணமோசன வல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா

தமிழில் தோரண கணபதி துதி

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதயே! தோன்றிடுக என் கண்முன்னே



வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் நன்றி: “GOOGLE IMAGES”

No comments:

Post a Comment