Thursday, December 17, 2015

ஹரிவராசனம் விஸ்வமோகனம் - Harivarasanam Vishwamohanam



ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்) பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Harivarasanam Vishwamohanam
Haridadhiswaram Aaradhyapadhukam
Arivimardhanam Nithyanarthanam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

I worship the one who is seated on a throne befitting a king - the one who captivates the world.The queller of enemies and the one who dances the eternal dance.I worship that God - the son of Hari and Hara, who is my sole shelter.

.....

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Saranakirtanam Shakhtamanasam
Bharanalolupam Narthanalasam
Arunabhasuram Bhoothanayakam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

The one who is worshipped by the sharana goshas and who recharges the butter-like minds of devotees. The one who is captivatingly decorated.The one who likes the beautiful dance.The Lord of the bhoothas ( elements / aspects of terrestrial nature ) who is of the radiant hue of the dawn.I worship that God - the son of Hari and Hara, who is my sole shelter.

.....

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும், தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம் / நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Pranayasathyakam Praananayakam
Pranathakalpakam Suprabhanjitham
Pranavamanidram Keerthanapriyam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

The one who is the very truth. The one dear to the life..The one who created the universe. The one fond of keertanas The very form of the pranava mantra or Aumkara.
I worship that God - the son of Hari and Hara, who is my sole shelter.

.....

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Thuragavahanam Sundarananam
Varagadhayudham Vedavavarnitham
Gurukrupakaram Keerthanapriyam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

The one who rides on a horse. The one who has a beautiful face.The one who has the revered gadhayudha (mace). The one whose darshan is wonderful & to whom Vedas sing praises. The one who is the compassionate guru (beloved as Guru & beloved to his own Guru too .... who showered his mercy on his Guru's son) and the one fond of his praises being sung. I worship that God - The queller of enemies and the one who dances the eternal dance.- the son of Hari and Hara, who is my sole shelter.

.....

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Tribuvanarchitam Devathathmakam
Trinayanam Prabhum Divyadeshikam
Tridashapoojitham Chinthithapradam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

The one worshipped by all the 3 worlds.The soul of all divinities. The one who pure son of the threeeyed Lord Shiva.The one worshipped by the devas.The one who grants wishes & who is absorbed in the welfare (thought) of his dependants. I worship that God - The queller of enemies and the one who dances the eternal dance.- the son of Hari and Hara, who is my sole shelter.

.....

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Bhavabhayapaham Bhavukavaham
Bhuvanamohanam Bhoothibhooshanam
Dhavalavahanam Divyavaranam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

The one who removes the fear of the cycles of births and deaths. The one that carries or brings happiness. The captivator of the worlds (as he born of Vishwa Mohini, Sriman Narayana himself).The one who is one decked in vibhuti and has a white elephant for a vehicle.I worship that God - The queller of enemies and the one who dances the eternal dance.- the son of Hari and Hara, who is my sole shelter.

.....

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Kalamrudusmitham Sundarananam
Kalabhakomalam Gathramohanam
Kalabhakesari Vajivahanam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

The one who is enchantingly handsome. The one who has a smile on his beautiful face. The one who is softer than the softest (..as Kalabham..) & is highly attracted by chants/hymns. The one who rode on a tiger as the king of gods. I worship that God - The queller of enemies and the one who dances the eternal dance- the son of Hari and Hara, who is my sole shelter.

.....

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


Srithajanapriyam Chinthithapradam
Sruthivibhushanam Sadhujeevanam
Sruthimanoharam Geethalalasam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa

The one who is dear to his devotees. The one who bestows all desires. The one praised in the vedas and one who bestows life to ascetics. The captivating one who is fond of music. I worship that God - The queller of enemies and the one who dances the eternal dance.- the son of Hari and Hara, who is my sole shelter.


.....


ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது,

சுவாச பந்தத்தையே குறிக்கிறது. யோக பாடத்தில் கால் என்றால் மூச்சு என்று பொருள். ஐயப்பன், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார்(மூலபந்தம்).

மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.

யோகாசன நிலையில் வயிற்றை உள்ளிழுத்து (உட்டியானபந்தம்), மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்தக் கிரியா சக்தியை ஞான சக்தியாக மடைமாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் (நயன தீட்ஷை) நிலையில் இருப்பதால் தான், கலியுகத்தில் இவ்வளவு அதிகமானப் பக்தர்களைத் தன்பக்கம் ஈர்க்கமுடிகிறது.


..... இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.