Thursday, May 19, 2022

“லலிதா ஸ்தவரத்னம்” (ஆர்யாத்விசதீ) …. ललितास्तवरत्नं ( आर्या द्विशती )

 



மஹரிஷி துர்வாஸர் இயற்றிய “லலிதா ஸ்தவரத்னம்
(ஆர்யாத்விசதீஸ்தோத்ரத்திலிருந்து  எடுக்கப்பட்ட 
சில ஸ்லோகங்கள்.  


இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பதின் பலனை ஸ்ரீ அம்பாள் தான்  

கூறுவதற்குத் தகுதி என்று ஸ்ரீ துர்வாஸ மஹரிஷி கூறியிருக்கிறார்.


 ( தமிழ் உரை : சேங்காலிபுரம்  ப்ரம்ஹஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் )


ललितास्तवरत्नं महर्षिदूर्वासः प्रणीतम्  ( आर्या द्विशती  )

 श्री ललितास्तवरत्नम्  पारायण क्रमः 


वन्दे गजेन्द्रवदनं वामाङ्कारूढवल्लभाश्लिष्टम् 

कुङ्कुमपरागशोणं कुवल्यिनीजार-कोरकापीडम् 


லலிதாஸ்தவரத்னம்ʼ மஹர்ஷிதூ³ர்வாஸ꞉ ப்ரணீதம் 

ஆர்யா த்³விஶதீ  )

.. ஶ்ரீ லலிதாஸ்தவரத்னம்  பாராயண க்ரம


வந்தே  கஜேந்த்ரவதனம் வாமாங்காரூட வல்லபாஸ்லிஷ்டம் 

குங்கும பராக ஸோணம்  குவலயினீ ஜாரகோரகாபீடம் ||


இடது மடியிலுள்ள தனது பத்னியாகிய வல்லபா தேவியினால் 

ஆலிங்கனம் பண்ணப்பட்டவரும்செங்கழனீர் புஷ்பத்தை மலரச் 

செய்யும் சந்திரனை சிரஸ்ஸில் தரித்தவரும்குங்குமத்தூள் 

போன்ற சிவந்தவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.



ललिता पातु शिरो मे ललाटाम्बा  मधुमतीरूपा 

भ्रूयुग्मं  भवानी पुष्पशरा पातु लोचनद्वन्द्वम्  १९८॥


லலிதா பாது ஶிரோ மே லலாடாம்பா³  மதுமதீரூபா .

ப்ரூயுக்³மம்ʼ  வானீ புஷ்பஶரா பாது லோசனத்³வந்த்³வம் .. 198


எனது சிரஸ்ஸை லலிதாதேவி ரக்ஷிக்க வேண்டும் மதுமதியின் 

உருவங் கொண்ட ஸ்ரீஅம்பிகை  நெற்றியைக் காக்க  வேண்டும் 

பவானீயானவள் எனது இரண்டு  புருவங்களையும் ரக்ஷிக்க வேண்டும் 

புஷ்பங்களை பாணமாகக் கொண்ட  ஸ்ரீஅம்பாள்  

இரண்டு கண்களையும்  காக்க வேண்டும்.



पायान्नासां बाला सुभगा दन्तांश्च सुन्दरी जिह्वाम् 

अधरोष्टमादिशक्तिश्चक्रेशी पातु मे चिरं चिबुकम्  १९९॥


பாயான்னாஸாம்ʼ பா³லா ஸுபகா³ ³ந்தாம்ʼஶ்ச ஸுந்த³ரீ ஜிஹ்வாம் .

அதரோஷ்டமாதி³ஶக்திஶ்சக்ரேஶீ பாது மே சிரம்ʼ சிபு³கம் .. 199..


பாலையானவள் என்னுடைய மூக்கையும்பற்களை சௌபாக்யம் 

வாய்ந்த அம்பிகையும்நாக்கை ஸுந்தரியும்(அழகு வாய்ந்தவளும்), 

கீழ் உதட்டை ஆதிசக்தியும்முகவாய்க் கட்டையை சக்ரேஸியும் 

வெகுகாலம் ரக்ஷிக்கவேண்டும்.



कामेश्वरी  कर्णौ कामाक्षी पातु गण्डयोर्युगलम् 

श‍ृङ्गारनायिकाव्याद्वदनं सिंहासनेश्वरी  गलम्  २००॥


காமேஶ்வரீ  கர்ணௌ காமாக்ஷீ பாது ³ண்ட³யோர்யுக³லம் .

ஶ்ருʼங்கா³ரநாயிகாவ்யாத்³வத³னம்ʼ ஸிம்ʼஹாஸனேஶ்வரீ  ³லம்


காதுகளை காமேச்வரியும்இரண்டு கன்னப்ரதேசங்களை 

காமாக்ஷியும்ஸ்ருங்கார  நாயகியானவள் முகத்தையும்

ஸிம்மாஸனேச்வரியானவள் கழுத்தையும் ரக்ஷிக்கட்டும்.



स्कन्दप्रसूश्च पातु स्कन्धौ बाहू  पाटलाङ्गी मे 

पाणी  पद्मनिलया पायादनिशं नखावलीर्विजया  २०१॥


ஸ்கந்த³ப்ரஸூஶ்ச பாது ஸ்கந்தௌ⁴ பா³ஹூ  பாடலாங்கீ³ மே 

பாணீ  பத்³மநிலயா பாயாத³நிஶம்ʼ நகா²வலீர்விஜயா .. 201..


ஸ்ரீ ஸ்கந்தனுடைய தாயானவள் என்னுடைய இரண்டு 

தோள்களையும்கைகளை பாடலாங்கியும்கரதலங்களை 

பத்மத்தில் வஸிப்பவளும் (பத்ம நிலயா என்றவளும்), 

நகங்களின் வரிசையை விஜயயானவளும் எப்போதும் ரக்ஷிக்கட்டும்.



कोदण्डिनी  वक्षः कुक्षिं चाव्यात् कुलाचलतनूजा 

कल्याणी  वलग्नं कटिं  पायात्कलाधरशिखण्डा  २०२॥


கோத³ண்டி³னீ  வக்ஷ꞉ குக்ஷிம்ʼ சாவ்யாத் குலாசலதனூஜா .

கல்யாணீ  வலக்³னம்ʼ கடிம்ʼ  பாயாத்கலாதரஶிக²ண்டா³ .202


மார்பை கோதண்டினீயும்வயிற்றைப் பர்வதராஜ குமாரியும்

கல்யாணியானவள் மத்ய பாகத்தையும்சந்திரபிம்பத்தை சிரோ 

பூஷணமாகக் கொண்டவள் இடுப்பையும் ரக்ஷிக்கட்டும்.



ऊरुद्वयं  पायादुमा मृडानी  जानुनी रक्षेत् 

जङ्घे  षोडशी मे पायात् पादौ  पाशसृणि हस्ता  २०३॥


ஊருத்³வயம்ʼ  பாயாது³மா ம்ருʼடா³னீ  ஜானுனீ ரக்ஷேத் .

ஜங்கே⁴  ஷோட³ஶீ மே பாயாத் பாதௌ³  

பாஶஸ்ருʼணி ஹஸ்தா .. 203..


உமையானவள் எனது இரண்டு தொடைகளையும்

ம்ருடானீயானவள் இரண்டு முழங்கால்களையும்

ஜங்கப்பிரதேசத்தை ஷோடசியும்பாசம் ஸ்ருணி இவைகளை 

தரித்த அம்பாள் கால்களையும் ரக்ஷிக்க வேண்டும்.



प्रातः पातु परा मां मध्याह्ने पातु मणिगृहाधीशा 

शर्वाण्यवतु  सायं पायाद्रात्रौ  भैरवी साक्षात्  २०४॥


ப்ராத꞉ பாது பரா மாம்ʼ மத்யாஹ்னே பாது மணிக்³ருʼஹாதீஶா .

ஶர்வாண்யவது  ஸாயம்ʼ பாயாத்³ராத்ரௌ  பைரவீ ஸாக்ஷாத் 


பராபட்டாரிகை காலையிலும்நடுப்பகலில் மணிமயமான 

கிருஹத்தற்கு நாயகியும்சாயங்காலத்தில் சர்வாணியும்

இரவில் ஸாக்ஷாத் பைரவியும் (வாராஹியும்என்னை ரக்ஷிக்கட்டும்.



भार्या रक्षतु गौरी पायात् पुत्रांश्च बिन्दुगृहपीठा 

श्रीविद्या  यशो मे शीलं चाव्याश्चिरं महाराज्ञी  २०५॥


பார்யா ரக்ஷது கௌ³ரீ பாயாத் புத்ராம்ʼஶ்ச பி³ந்து³க்³ருʼஹபீடா² .

ஶ்ரீவித்³யா  யஶோ மே ஶீலம்ʼ சாவ்யாஶ்சிரம்ʼ மஹாராஜ்ஞீ .. 205


என்னுடைய பத்னியை கௌரியானவள் ரக்ஷிக்கட்டும் 

எனது புத்ரர்களை பிந்துக்ருஹத்தில் அமர்ந்தவள்ரக்ஷிக்கட்டும்.  

எனது  கீர்த்தியை ஸ்ரீவித்யையும்எனது நடத்தையை 

மஹாராஜ்ஞியானவளும் எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும்.



पवनमयि पावकमयि क्षोणीमयि गगनमयि कृपीटमयि 

रविमयि शशिमयि दिङ्मयि समयमयि प्राणमयि शिवे पाहि  २०६॥


பவனமயி பாவகமயி க்ஷோணீமயி ³³னமயி க்ருʼபீடமயி .

ரவிமயி ஶஶிமயி தி³ங்மயி ஸமயமயி ப்ராணமயி ஶிவே பாஹி .. 206


காற்றுஅக்னிபூமிஆகாசம்ஜலம்ஸூர்யன்சந்திரன்திக்குகள்,

காலன்பிராணன் என்ற இந்த எல்லாஉருவமாயும் கொண்ட  

ஹே சிவே ( மங்களகரேஎன்னைக் காக்க வேண்டும்.



कालि कपालिनि शूलिनि भैरवि मातङ्गि पञ्चमि त्रिपुरे 

वाग्देवि विन्ध्यवासिनि बाले भुवनेशि पालय चिरं माम्  २०७॥


காளி கபாலினி ஶூலினி பைரவி மாதங்கி³ பஞ்சமி த்ரிபுரே .

வாக்³தே³வி விந்த்யவாஸினி பா³லே புவனேஶி பாலய சிரம்ʼ மாம்


காளிகபாலினிசூலினிபைரவிமாதங்கிபஞ்சமித்ரிபுரை

வாக்தேவிவிந்த்யவாஸினிபாலைபுவனேஸ்வரிஎன்ற பல பெயரை 

உடைய ஹே அம்பிகையே என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்.



अभिनवसिन्दूराभामम्ब त्वां चिन्तयन्ति ये हृदये 

उपरि निपतन्ति तेषामुत्पलनयनाकटाक्षकल्लोलाः  २०८॥


அபினவஸிந்தூ³ராபாமம்ப³ த்வாம்ʼ சிந்தயந்தி யே ஹ்ருʼ³யே .

உபரி நிபதந்தி தேஷாமுத்பலநயனாகடாக்ஷகல்லோலா꞉ .. 208..


எவர்கள் தனது ஹ்ருதயத்தில் புதிதான குங்குமம் போல் சிவந்த 

நிறமுள்ள  தங்களை த்யானம் செய்கின்றார்களோ அந்த 

பக்தர்களின் பேரில்  ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கடாக்ஷை அலைகள் 

எப்போழுதும் விழுந்து கொண்டிருக்கும்.



वर्गाष्टकमिलिताभिर्वशिनीमुख्याभिरावृतां भवतीम् 

चिन्तयतां सितवर्णां वाचो निर्यान्त्ययत्नतो वदनात्  २०९॥


வர்கா³ஷ்டகமிலிதாபிர்வஶினீமுக்²யாபிராவ்ருʼதாம்ʼ வதீம் .

சிந்தயதாம்ʼ ஸிதவர்ணாம்ʼ வாசோ நிர்யாந்த்யயத்னதோ வத³னாத்


 என்ற வர்க்காஷ்டகங்களோடு கூடிய வசினீ

முதலியவர்களால் சூழப்பட்ட வெண்மை நிறமான தங்களை த்யானம்

பண்ணுகிறவர்களுடைய முகத்திலிருந்து அழகிய சொற்கள் 

வெளி வருகின்றன.



कनकशलाकागौरीं कर्णव्यालोलकुण्डलद्वितयाम् 

प्रहसितमुखीं  भवतीं ध्यायन्तो ये  एव भूधनदाः  २१०॥


கனகஶலாகாகௌ³ரீம்ʼ கர்ணவ்யாலோலகுண்ட³லத்³விதயாம் .

ப்ரஹஸிதமுகீ²ம்ʼ  வதீம்ʼ த்யாயந்தோ யே  ஏவ பூனதா³꞉ 


பொன் கம்பி போன்ற நிறமுடையவளும்இரண்டு காதுகளிலும் 

அசங்குகின்ற குண்டலங்களை உடையவளும்சிரித்த முகத்தை 

உடைய தங்களை எவர்கள் தியானம் செய்கிறார்களோ அவர்கள் 

பூமியில் வஸிக்கும் குபேரர்கள் ஆவார்கள்.



शीर्षाम्भोरुहमध्ये शीतलपीयूषवर्षिणीं भवतीम् 

अनुदिनमनुचिन्तयतामायुष्यं भवति पुष्कलमवन्याम्  २११॥


ஶீர்ஷாம்போருஹமத்யே ஶீதலபீயூஷவர்ஷிணீம்ʼ வதீம் .

அனுதி³னமனுசிந்தயதாமாயுஷ்யம்ʼ வதி புஷ்கலமவன்யாம் .. 211


சிரஸ்ஸின் நடுவில் சீதமான அம்ருதத்தை வர்ஷித்துக் 

கொண்டிருக்கும் தங்களை தினந்தோறும் த்யானிப்பவர்களுக்கு 

அளவற்ற ஆயுள் இவ்வுலகில் உண்டாகிறது.



मधुरस्मितां मदारुणनयनां मातङ्गकुम्भवक्षोजाम् 

चन्द्रवतंसिनीं त्वां सविधे पश्यन्ति सुकृतिनः केचित्  २१२॥


மதுரஸ்மிதாம்ʼ மதா³ருணநயனாம்ʼ மாதங்க³கும்பவக்ஷோஜாம்

சந்த்³ரவதம்ʼஸினீம்ʼ த்வாம்ʼ ஸவிதே⁴ பஶ்யந்தி ஸுக்ருʼதின꞉ கேசித்


மதுரமான சிரிப்பை உடையவளாயும்மதத்தினால் சிவந்த கண்களை

உடையவளாயும் யானையின் சிரஸ்ஸுபோல் கடினமான ஸ்தன 

பாரத்தை உடையவளாயும்சந்திர கலையை தரித்தவளுமான 

தங்களை புண்யசாலிகளான சில உபாஸகர்கள் தனது 

பக்கத்திலேயே காண்கின்றனர்.



ललितायाः स्तवरत्नं ललितपदाभिः प्रणीतमार्याभिः 

प्रतिदिनमवनौ पठतां फलानि वक्तुं प्रगल्भते सैव  २१३॥


லலிதாயா꞉ ஸ்தவரத்னம்ʼ லலிதபதா³பி⁴꞉ ப்ரணீதமார்யாபி⁴꞉ .

ப்ரதிதி³னமவனௌ பட²தாம்ʼ ²லானி வக்தும்ʼ ப்ரக³ல்பதே ஸைவ 


லலிதமான பதங்களுடைய ஆர்வா விருத்தத்தில் செய்யப்பட்ட 

ஸ்ரீலலிதா தேவியின் ஸ்தோத்ர ரத்னமாகிய இந்தஸ்துதியை 

இவ்வுலகில் நித்யம் படிப்பவர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை

சொல்வதற்கு  அந்த லலிதாதேவியே தகுதி உள்ளவளாக ஆகிறாள்.




सदसदनुग्रहनिग्रहगृहीतमुनिविग्रहो भगवान् 

सर्वासामुपनिषदां दुर्वासा जयति देशिकः प्रथमः  २१४॥


 इति महर्षिदुर्वासः प्रणीतं ललितास्तवरत्नं सम्पूर्णम् 


ஸத³ஸத³னுக்³ரஹநிக்³ரஹக்³ருʼஹீதமுனிவிக்³ரஹோ ³வான் .

ஸர்வாஸாமுபநிஷதா³ம்ʼ து³ர்வாஸா ஜயதி தே³ஶிக꞉ ப்ரத²꞉ .. 214..


.. இதி மஹர்ஷிது³ர்வாஸ꞉ ப்ரணீதம்ʼ லலிதாஸ்தவரத்னம்ʼ ஸம்பூர்ணம் 



ஒரு முகநூல் பதிவில் படித்து அறிந்த விஷயங்களை நான் 

அறிந்தவைகளோடு அங்கொன்றும்இங்கொன்றுமாக சேர்த்து 

இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

முகநூல் பதிவருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.