Thursday, March 13, 2014

ப்ரேத ஸம்ஸ்காரம்

...

ப்ரேத ஸம்ஸ்காரம் : சரீரத்தின் சிறப்பு ..... ஸ்ரீ மஹா பெரியவா

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.

”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ண முடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’ பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்ோட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?” என்று ேட்கலாம்.

சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் ேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா - இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம்செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின்அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று - எல்லாவற்றுக்கும்மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை – என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக்கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’ இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே?கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான்.

”தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?”- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் – என்று வசனமே இருக்கிறது. ” தேஹோ தேவாலய : ப்ரோக்தா ” – உள்ளேஇருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘ காயமே கோயிலாக ‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்றுதெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’ பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசான வாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக்கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும்.

”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்."

Courtesy: Krishnamurthy Balasubramanian @ 'Brahmana Sampradaya'

Saturday, March 8, 2014

My Mother's Last Journey

...
Lakshmi Subramanyam, 82 years.
Born in Triplicane, Madras.
Born to Aandam and Vayacheri Nataraja Ramachandra Iyer.
Born with an elder bro Gopalakrishnan & a younger bro Sethuraman.
Married to Aangari Kandaswamy Subramanya Iyer.
Mother of 7 sons.
Grandmother to 5 grandsons & 3 granddaughters.

In November 2013, I had an audience with an Agasthya Siddhar to seek his advices to sort out some shortcomings in my personal life. When I left his place, I just asked him about my mother's 'andimakalam' for which he said that after 3 months, her condition will become worse and within 3 months the end will come to her. And she will undergo a slight painful death. I informed this meeting and his words to my mother and requested her to be very careful from February onwards.

In the third week of January 2014, she migrated to Chennai from Bangalore. At that time she was completely down. Cannot move on her own. Brother Ramesh resigned his job and went with her to take care of her. My mother always do the things by applying some algorithms. And we never question her about her doings. Originaly she expressed her desire to settle down at Pune since my father and her mother breathed their last there and she intended to be cremated on the same place where these two had been cremated.

But she changed her plan and expressed her desire to move to Chennai. A day before her departure, she casually uttered to my bro Swaminathan that she would not come back.

In the last week of January 2014, she had experienced diffculties in breathing and was admitted in a hospital. After a week she was discharged. On the 10th Feb night, she had problems in dischaging urine and admitted in hospital. We were told that her two kidneys have failed and doing dialysis at this age is not at all advisable. They asked us to take her home. Except bros Ramesh & Suresh, none were there. I was in ThiruMandurai for abishekam and other bros at Bangalore.

On hearing this Kumar & Satish reached Chennai but I could not as I was on way to Bangalore from Trichy. On 11th morning, I was told that mother's condition becoming question mark. Planned to go by car with Srikanth in the night. But at the late night, Srikanth was asked to go to Pune on official grounds and train tickets were booked for me and Usha for next day ie 12th. But in the 12th morning, Srikanth postponed his Pune visit and we started by Vento to Chennai around 9.30 am. On the way, he had to attend to so many conference calls and we have reached Chennai around 5 in the evening. Bro Swaminathan had come on 12th morning.

By the time, my mother started to loose her memory power. With great difficulty, she was able to recognise me Usha and Srikanth. And she asked me in a good tone 'nee saptaya (did you eat)'. I informed Umakanth and Kanu to rush immediately to see my mother. Around 8 in the night, they came along with Nagars. But my mother could not recognize them. Fortunately 10 days earlier, both Umakanth & Kanu called on my mother and my mother conversed with them.

My mother's pulse rate was drastically dipping around 8 in the night when Umakanth came. I have asked him to return back with Usha and they left immediately. Srikanth also left. But slowly the pulse rate had come to normal level. Since the situation was not alarming, bro Swaminathan also left for Bangalore.

The rest had gone to sleep. Ramesh and Kumar were sleeping near mother. Around 1 in the night, we all woke up and found that our mother's breathe slowly reducing. We were holding her and watching her. A sudden sound went off from her mouth at 1.30 and the end came.

The end was clocked as 1.30 am on Friday the 14th February 2014 but as per our Panchangam it was 13th Thursday night, Kumba Maasam Sukla Palsham Sathurdasi Thithi.

Satish and Narayanan to hospital to fetch Doctor to certify the death. Doctor came around 2.20 and certified. Text messages sent to all close relatives at 2.30 and informed them that the Cremation will be done before 12 noon on 14th.

Around 3.30 am, Sundu Chithappa, Thangam Chithi, Meena Authai, Sethu Mama, Vimla Mami, Prakash, Raju and Ravi came. Then after an hour, Saradha Chithi, Goma Authai, Akila, Kanchana, Priya, Rama, Uma & her parents came. Srikanth came at 6 and Usha, Umakanth & Kanu came at 7.30 in the morning. And Balu.

The Final Rites started at 9.30 and went for an hour and half. Were informed that Swaminathan is driving from Bangalore with Rekha, Akshay & Vinuda. By 12 noon, started the Last Journey. The pal bearers were Prakash, Ravi, Raju and Balu. All menfolks to cremation ground. Waited for Swaminathan. Then MayanaBhoomi Samskar. Then lit the pyre. Mother gone with flames.

Next day, collection of bones and ashed, and immersion into Ocean.

By noon, left for Bangalore. Srikanth on wheels. Me Usha and Sama. Reached OBz around 9 in the night, after dropping Sam at his place. Next day came, Ramesh Kumar Satish by train.

The Rituals for 9th Day to 12th Day were performed at a hall nearby Lakeview Sri MahaGanpati Temple, Ulsoor Lake. Rajesh came for 10th Day ceremony, for Kuzhi Tharpan. Gopal & Chandu came.

The 13th Day Suba Sweekaram was done at mother's place in Jogpalya. Sundu Chithappa came.

It was planned to perform the Rituals, 27th Day Oonamasigam to Varushapdigam at OBz. May the God and the departed Mother bless us.

An Astonishment ...

On 09/11/2013 when I met the Agastya Siddhar, he said that after 3 months my mother's health will become worse and within 3 months the end will come. Also he uttered a Tamil sentence when I was about to leave him.
That was,
" Kumba Udayathila, Unakku pidicha Sivarathiri velaiyele, Pakshi paranthadum ". I could not understand the meaning and scribbed in on my ipad. And totally forgot.

I met him on 09-11-2013. He said, after 3 months her health will become worse. We admitted our mother at hospital on 10-02-2014, that was exactly after 3 months from 09-11-2013. The end came on 13th night, that was after 3 days.

After completion of Suba Sweekaram function, when I was looking for a reference in my iPad I came across this sentence.

When I dissected it for the meaning, I was stoned.

The end came to my mother at 1.30 in the very early morning. That day was the First of the Tamil month Maasi and the Thithi was Sathurdasi.

When I was doing the rites, the Vadyar said 'Kumba mase, Sukla pakshe, Sathurdasyam".

For every Maha Shivratri I used to give Honey for abishekam to our Kuladeivam for Moonam Kalam.

Apply these parameters to the Sidhhar sentence.

" Kumba Udayathila, Unakku pidicha Sivarathiri velaiyele, Pakshi paranthadum "

Kumba Udaythila = at the start of Kumba = the First Day of Kumba Masam

Unakku pidicha Sivarathiri velaiyele = Moonam Kalam 1 am to 3 am & Sivarathri is Sathurdasi Thithi

Pakshi paranthadum = bird will fly away = Soul departed

My mother passed away at 1.30 on the first day of the Tamil month Maasi (Kumba Mase) on the Sathurdasi Thithi.

The Siddha Vakyam never fails.

Friday, March 7, 2014

Janma Nakshtra Day @ Thirumandurai

...
10th February 2014 .. My 62nd Janma Nakshtra Day.
Born in Mirgasirisha in Nandana Thai in 1953, I have completed 61 years.

It was planned to perform Full Abishekam to all the Deities at our KulaDeivam temple at ThiruMandurai. A week back, met my mother and got her blessings and guidance for this performance. Me and Usha been to Mala's house two days earlier to make arrangements for this event. Because of non availability of train tickets, took KPN.

A to Z of the Abishekam samans including vastrams and 'Prasadam' provisions bought at Mangal & Mangal. Been to temple a day earlier to handover the provisions to Mani so as to prepare the Prasadams.

Umakanth, Kanu, Heenu and Mrs & Mr Nagar arrived by Rockfort a day earlier and ferried them to a hotel near Chatram Bus Stand. Then Me, Usha, UK, Heenu and Nagars been to ThiruvanaiKovil. After a very long time, I am visiting this magnificient temple. Had an atmarta darshan of the Divine Mother & Father. Then to Mala's house to have lunch. Then to Samayapuram. Mala too accompanied. Here too had a fully satisified darshan of Samayapurathal. Then to Eesambalathy Amman temple at BishandarKovil. The Grama Devadai. What a mental happiness. Explained to Kanu about the temple and Marulali. Then to SriRengam temple. Due to shortage of time, had only darshan of Sakkrathalwar.

Me and Usha back to Mala's house and UK, Kanu, Nagars to hotel. Me and Krish to Poo Kadai and purchased the Malais and uthiripoo and other items. Around 11.30 in the night, Srikanth rang up and informed that he is driving and will be reaching the house in a hour. It is a good sign that he is mingling and he slept in the Mala's house.

Next day at 6.30 in the morning, except Srikanth, all to ThiruMandurai. Both Usha and Kanu put 'MaaVilakku' before Amman. By the time the Abishekam started, Srikanth arrived. First, each and every Parivara Deities. Abishekam & Vastram. Started with the Nandis standing before Amravaneswarar & Valambigai. Then, Nardhana Vinayagar, Aadi Sankarar, Dakshinamurthy, Periya Pillaiyar, Valli Devaiyanai sameda Subramanyar, GajaLakshmi, BalaDandyuthapani, Vishnu, Brahma, Durgai, Chandikeswarar, Navargrahas, Suryan, Bairvar, Nalwar and Periya Nandi. For these Devadas, only Paal Abishekam.

Then full Abishekam. Paal, Thayir, Thean, Panchamirtham, Santhanam, et al. Nagars brought Ganga Jal from Haridwar. Abishekam was done with the holy water for Ammai & Appan. The same abishekam to Karuppu. Then Vastram, Malais, and Archanai.

Nagar brought me a Spadiga Malai & Rudraksha Malai, and for Usha a venmuthu malai. All these adorned to Ammai & Appan during abishekam.

Vashti & Pudavai to Mani, Kumar, Ramdas & family along with 500Rs. Also to MadaPalli cook a veshti with 200. Given sufficient amount to Mani, Kumar's son and Ramdas for abishekam & archanai.

Then Prasadam. Sakrai Pongal, Vadai, Puliyodarai & Thayir sadam. No doubt, very tasty. Then me, Usha & Srikanth to Mala's house. Uamakanth, Kanu, Nagars to hotel.

After a nap, me Usha Srikanth left Mala's house in the evening by Vento for Bangalore. On way, paid a courtesy visit to meet Nagars at hotel. From Karur to Bangalore, very good road. Reached Oasis Breeze around 2 in the night.

An approximate of 20K spent for this Abishekam & Archani.

Wednesday, February 19, 2014

என் தாய் காலமானார்


என்னை ஈன்றெடுத்து, நல்லபடியாக ஒழுக்க நெறி தவறாமல் வாழ வழிகாட்டி, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும உற்சாகத்தையும் ஊட்டி வளர்த்து, என் வாழ்க்கையை செம்மையாக்கி, என் உதரம் நிறைந்து உள்ளம் குளிர்ந்து வாழ ஆசீர்வதித்து, என் கனவை நினைவாக்கும் முயற்சியை வழிநடத்திய என் தாய் ....

14/02/2014 வெள்ளிக்கிழமை அதிகாலையில் 1:30 மணிக்கு காலமானார். அன்று மத்தியாணமே தகனம். ஈமக்கிரியைகள் 21/02/2014 முதல் 25/02/2014 வரை நடைபெறுகிறது.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒருவருக்கு பெற்ற தாயை விட பெரிய உறவு யாரும் இல்லை. இதயத்தையும் மனதையும் தேறுதல் சொல்ல இயலாத நிலை என்னுடையது.

Monday, February 3, 2014

சுப்ரம்மணியம்

சு+பிரம்ம+நியம் என்பதே 'சுப்ரம்மணியம்'

சு என்றால் உயர்வான அல்லது மேலான என்று பொருள்.
ப்ரம்மம் என்பது பரமாத்மா அதாவது சதாசிவத்தைக் குறிப்பது.
நியம் என்றால் தோன்றிப் பிரகாசிப்பது அல்லது ஒளிர்வது.
அதாவது சதாசிவத்தின் ஞானத்திலிருந்து (நெற்றிக்கண்) உதித்து ஞானமே வடிவாகப் பிரகாசிப்பவன் என்பது பொருள். எனவேதான் ஞான சூரியன் என்றும். சேந்தன் என்றும் கூறுவார்கள்.

தமிழர்களுக்கே சொந்தமான முருகன் வேறு தமிழ் வேறு அல்ல என்பது தமிழ் அறிஞர்கள் கருத்து. 12 தோள்களையும் 12 உயிரெழுத்தாகவும், 18 கண்களை 18 மெய்யெழுத்தாகவும், 6 இன எழுத்துக்களை ஆறு முகங்களாகவும், ஃ என்ற ஆயுத எழுத்து வேலாகவும் குறிப்பிடுவார்கள்.
உலகில் தோன்றிய சித்தர்களுக்கெல்லாம் தலைவன் முருகனே. எனவேதான் சித்தநாதன் என்பார்கள். அதனால்தான் போகர் பழனியில் தங்கள் குலகுருவான சுப்ரமண்ய சித்தருக்கு நவபாசான சிலையைச் செய்து பிரதிஷ்டை செய்தார். அகத்தியர், அருணகிரி போன்றவர்களுக்கும் அவ்வளவு ஏன், சிவனுக்கும் கூட குருவாக முருகன் குருபரன் என்று சொல்லப்படுவதன் காரணம் அவர் பகுத்தறிவின் அடையாளமாக, மனிதனின் வடிவமாகவேத் திகழ்வதுதான். அவர் மூலமாகவே தமிழ் பூமிக்கு வந்தது என்பது ஆன்றோர் வாக்கு.

காந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்தே ஸ்கந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது.

சிவபெருமான் கொண்டுள்ள ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்த்தே முருகனுக்கு ஆறுமுகம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கீழ் நோக்கிய முகம் என்பது பொருள். சிவபெருமானின் உலகத்தை நோக்கிய முகமாகிய ஞானக் கண்ணாகிய நெற்றிக்கண்ணை தனது ஆறாவது முகமாகக் கொண்டவன் முருகன். எனவே முருகனின் தத்துவத்தை முழுவதும் உணர்ந்தவன் ஞானத்தை உணர்ந்தவனாவான்.

வேல் என்பது அறிவின் நிலையைக் குறிப்பது. கூர்மையாக, அகலமாக, ஆழமாக சிந்திப்பவன் உலகையே வெல்லலாம் என்பது நுட்பம்.

மனிதனின் ஆறு ஆதாரங்களும் ஆறு படைவீடுகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆணவம், கன்மம், மாயை இந்த மூன்றையும் அடக்குபவன் ஞானத்தை அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவே மயில், யானை, ஆடு இந்த மூன்றையும் அடக்கி வாகனமாக வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது.

யோகத்தில் திளைத்து ஞானத்தை உணர்ந்தவனுக்கு முதுமை என்பதே கிடையாது என்பதை உணர்த்தவே குமரன் என்பார்கள்.

முருகு என்றால் அழகு என்பது பொருள். தமிழ் அறிஞர்கள் மு என்றால் மெல்லினமென்றும், ரு என்றால் இடையினம் என்றும், கு என்றால் வல்லினம் என்று அழகு தமிழில் குறிப்பிடுவார்கள். இவை சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று மண்டலங்களைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு.

சரவணபவ என்றால் நாணல் காட்டில் பிறந்தவன் என்று வடமொழிக்காரர்கள் கதை கட்டுவார்கள். ஆனால் தமிழ் மொழியைப் பொருத்தவரை சரம் என்றால் மூச்சு அவணன் என்றால் திண்ணிய அல்லது பூரணமான, செல்வாக்கு உடைய என்று பொருள். அதாவது உயிர்களுக்கு மூச்சாக விளங்குபவன் என்றும், மூச்சை கவனித்து முறையாக சுவாசிப்பவர்களுக்குள் ஞானமே வடிவாகத் தோன்றுபவன் என்று பொருள்.

சதாசிவத்தில் சக்தி ஒடுங்கி நிற்கிறது. பிரபஞ்சத்தில் சிவ சொரூபம், சக்தி சொரூபம் என்று இரண்டு நிலைகளில் விளங்குகிறது. நாம் பெற்றுள்ள உடல் சக்தியின் சொரூபமாகும். அதற்குள் உயிராக விளங்கும் அறிவுப் பொருள் சிவ சொரூபமாகும். இந்த இரண்டையும் இணைத்து அதன் பயனால் மேன்மையடைவதையே திருக்கல்யாணம் என்று சொல்கிறார்கள். அவ்வேளையில் வடகோடு தாழ்ந்து தெற்கு உயர்வது என்று சொல்வது எதற்காகவென்றால், வடக்கு என்பது நம் தலைப்பகுதியைக் குறிப்பது, அதாவது பரமாத்வை அடைவதற்கான அனைத்து விஷயங்களும் அடங்கிய பகுதி. ஞான வாசலே அங்குதான் உள்ளது. தெற்கு என்பது மனிதனை கீழ் நோக்கி அழுத்தி இந்திரிய சுகங்களில் அழுத்தி வைக்கும் உடல் பகுதியைக் குறிப்பது. திருமணம் ஆனவர்கள் மனம் முழுவதும் இந்திரிய சுகத்தில் திளைத்து அதிலேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் ஞானத்தை அடைய முடியாமல் போகிறது. இதையே வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது என்றார்கள். அதற்காகவே அகத்தீயான ஞானத்தை அனுப்பி அதை சமன் செய்ததாகச் சொல்வார்கள். அதாவது யோக நிலையில் உண்மையை உணர்ந்து அளவும் நெறி முறையும் கடைபிடித்தால் இரண்டு பகுதியும் சமநிலையில் திகழும்.
 இதையே முருகனும் உணர்த்துகிறார். அவருக்கு இரண்டு சக்திகள். ஒன்று தெய்வயானை கிரியா சக்தி, இரண்டு வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை தேவர்கள் நிலையைக் குறிக்கும் கிரியா சக்தி. எனவேதான் அவளை தேவர்களின் அரசனின் மகளாகச் சொன்னார்கள். அதாவது மனிதர்களும் தேவர்களுக்கு நிகராக கிரியையாகிய மேலான செயல்களின் மூலம் தெய்வத்தை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதைக் குறிப்பவள் தெய்வயானை. வள்ளியைப் பொருத்தவரை இச்சை அதாவது கடவுள் மேல் உண்மையான பற்று அல்லது அன்பு கொண்டு கடவளை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதை உணர்த்துகிறாள். இதில் மற்றொரு சூக்குமமான கருத்தும் உண்டு. குலத்தில் மேலானவர், கீழானவர் என்பதெல்லாம் கடவுளுக்கு முன் கிடையாது. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களும் உண்மையான பக்தியின் மூலம் இறைவனை அடையலாம். அதாவது யோகத்தின் மூலம் ஞானமே வடிவான இறைவனை அடைவதைக் குறிப்பவள் தெய்வயானை. பக்தியின் மூலம் இறைவனை அடைவதைக் குறிப்பவள் வள்ளி. எனவே குலத்தில் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி பிற மனிதர்களை தன்னிடத்தில் வர அனுமதிகாதவர்களை இறைவன் தன்னிடத்தில் வர அனுமதிக்கமாட்டான்.

... Courtesy: SasitharaSharma @ 'aanmigam'

Sunday, February 2, 2014

ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம்

 ॥ श्री हनुमान वडवानल स्तोत्रम् ॥
श्री गणेशाय नमः ॥

ॐ अस्य श्री हनुमानवडवानल स्तोत्रमंत्रस्य ॥ श्रीरामचंद्र ऋषिः ॥ श्रीवडवानल हनुमान देवता ॥ मम समस्तरोगप्रशमनार्थ आयुरारोग्यैक्ष्वर्या भिवृध्दर्थ समस्तपापक्षयार्थं सीतारामचंद्र प्रीत्यर्थ हनुमान्वडवानल स्तोत्र जपमहं करिष्ये ॥ 1 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवते श्री महाहनुमंते प्रकटपराक्रम सकलदिङ् मण्ड्लयशोवितानधवलीकृत जगत्रितय वज्रदेह रुद्रावतार लंकापुरीदहन उमाअमलमंत्र उदधिबंधन दशशिरः कृतांतक सीताक्ष्वसन वायुपुत्र अंजनी गर्भसंभूत श्रीरामलक्ष्मणानंदकर कपिसैन्य प्राकार सुग्रीवसाह्या रणपर्वतोत्पाटन कुमारब्रह्मचारिन् गभीरनाद सर्वपापग्रहवारण सर्वज्वरोच्चाटन डाकिनीविध्वंसन ॥ 2 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवंते महावीराय सर्वदुःखनिवारणाय ग्रहमंडळ सर्वभूतमंडल सर्वपिशाचमण्डलोच्चाटन भूतज्वर एकाहिकज्वर द्वयाहिकज्वर त्र्याहिकज्वर चातुर्थिकज्वर संपापज्वर विषमज्वर तापज्वर माहेक्ष्वर वैष्णवज्वरान् छिं धि छिं धि यक्षब्रह्मराक्षस भूतप्रेतपिशाचान् उच्चाटय् उच्चाटय ॥ 3 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवते श्री महाहनुमते ॥ 4 ॥

ॐ र्हां र्हीं र्हूं र्हैं र्हौं र्हं: आं हां हां हां हां औं सौ. एहि एहि ॐ हं ॐ हं ॐ हं ॐ हं ॥ 5 ॥

ॐ नमो भगवते श्रीमहाहनुमते श्रवणचक्षुभूतानां शाकिनीडाकिनीना विषमदुष्टांना सर्वविषं हर हर ॥ 6 ॥

आकाशभुवनं भेदय भेदय छेदय छेदय मारय मारय शोषय शोषय मोहय मोहय ज्वालय ज्वालय
प्रहारय प्रहारय सकलमायां भेदय भेदय ॥ 7 ॥

ॐ र्हां र्हीं ॐ नमो भगवते महाहनुमते सर्व ग्रहोच्चाटन परबल क्षोभय क्षोभय ॥
सकल बंधनमोक्षणं कुरु कुरु ॥
शिरःशुलगुल्मशुल सर्वशूलान्निर्मूल्य निर्मूलय ॥ 8 ॥

नागपाशनंत्तवासुकित्तक्षककर्कोटक कालियान् यक्षकुल जलदगतबिलगत रात्रिंचर दिवाचर सर्वान्निर्विषं ॥ कुरु कुरु स्वाहा ॥ 9 ॥

राजभय चोरभय परमंत्र परयंत्र परतंत्र परविद्याश्छेदय छेदय ॥ 10 ॥

स्वमंत्र स्वयंत्र स्वतंत्र स्वविद्याः प्रकटय प्रकटय ॥ 11 ॥

सर्वारिष्टान्नाशय नाशय ॥ 12 ॥

सर्वशत्रून्नाशय नाशय ॥ 13 ॥

असाध्यं साधय साधय ॥ 14 ॥

हुं फ़्ट् स्वाहा ॥

॥ इति बिभीषणकृतं हनुमद्वडवानलस्तोत्र संपूर्णम् ॥

|| ஸ்ரீ ஹனுமான் வட³வானல ஸ்தோத்ரம் ||

ஸ்ரீ க³ணேஸா²ய நம​: ||

ஓம் அஸ்ய ஸ்ரீ ஹனுமான் வட³வானல ஸ்தோத்ர மந்த்ரஸ்ய || ஸ்ரீராமசந்த்³ர ரிஷி​: || ஸ்ரீவட³வானல ஹனுமான் தே³வதா || மம ஸமஸ்த ரோக³ ப்ரஸ²மனார்த்த² ஆயுராரோக்³யைஸ்வர்யாபிவ்ருத்த³ர்த்த² ஸமஸ்த பாப க்ஷயார்த்த²ம் ஸீதாராமசந்த்³ர ப்ரீத்யர்த்த² ஹனுமான் வட³வானல ஸ்தோத்ர ஜப-மஹம் கரிஷ்யே || 1 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே ஸ்ரீ மஹாஹனுமந்தே ப்ரகட பராக்ரம ஸகல தி³ங்மண்ட்³ல யஸோ²விதான, தவலீக்ருத ஜக³த்ரிதய வஜ்ரதே³ஹ ருத்³ராவதார லங்காபுரீத³ஹன உமா அமல மந்த்ர உத³தி-ப³ந்தன த³ஸ²ஸி²ர​: க்ருதாந்தக ஸீதாக்ஷ்வஸன வாயுபுத்ர அஞ்ஜனீ க³ர்ப்பஸம்பூத ஸ்ரீராம லக்ஷ்மணானந்த³கர கபிஸைன்ய ப்ராகார ஸுக்³ரீவஸாஹ்யா ரணபர்வதோத் பாடன குமார ப்³ரஹ்ம-சாரின் க³பீரநாத³ ஸர்வ-பாப-க்³ரஹ-வாரண ஸர்வ-ஜ்வரோச்சாடன, டா³கினீ வித்வம்ஸன || 2 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே மஹாவீராய ஸர்வது³க்:க² நிவாரணாய க்³ரஹமண்ட³ல ஸர்வபூதமண்ட³ல ஸர்வ பிசா²ச மண்ட³லோச்சாடன பூத-ஜ்வர-ஏகாஹிக-ஜ்வர-த்³வ்யாஹிக-ஜ்வர-த்ர்யாஹிக-ஜ்வர-சாதுர்தி²க ஜ்வர-ஸம்பாப ஜ்வர- விஷம-ஜ்வர-தாபஜ்வர-மாஹேக்ஷ்வர வைஷ்ணவ-ஜ்வரான் சி²ந்தி சி²ந்தி, யக்ஷ-ப்³ரஹ்ம-ராக்ஷஸ-பூத-ப்ரேத-பிசா²சான் உச்சாடய உச்சாடய || 3 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே ஸ்ரீ மஹா ஹனுமதே || 4 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர: ஆம் ஹாம் ஹாம் ஹாம் ஹாம் ஓம் ஸௌம் ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் || 5 ||

ஓம் நமோ பக³வதே ஸ்ரீமஹாஹனுமதே ஸ்²ரவண சக்ஷுபூதானாம் ஸா²கினீ-டா³கினீனா விஷம-து³ஷ்டாம்னா ஸர்வ விஷம் ஹர ஹர || 6 ||

ஆகாஸ²புவனம் பேத³ய பேத³ய, சே²த³ய சே²த³ய, மாரய மாரய, ஸோ²ஷய ஸோ²ஷய மோஹய மோஹய ஜ்வாலய ஜ்வாலய ப்ரஹாரய ப்ரஹாரய ஸகலமாயாம் பேத³ய பேத³ய || 7 ||

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே மஹாஹனுமதே ஸர்வ க்³ரஹோச்சாடன பரப³ல க்ஷோபய க்ஷோபய ||
ஸகல ப³ந்தன மோக்ஷணம் குரு குரு || ஸி²ர​: ஸு²ல-கு³ல்ம-ஸு²ல, ஸர்வ ஸூ²லாந்- நிர்மூலய நிர்மூலய || 8 ||

நாக³பாஸ² நந்த வாஸுகி தக்ஷ, கர்கோடக காலியான் யக்ஷகுல-ஜல-த³க³த-பி³ல-க³த ராத்ரிஞ்சர தி³வாசர ஸர்வாந் நிர்விஷம் || குரு குரு ஸ்வாஹா || 9 ||

ராஜபய சோரபய பரமந்த்ர பரய்ந்த்ர பரதந்த்ர பரவித்³யாஸ்² சே²த³ய சே²த³ய || 10 ||

ஸ்வமந்த்ர ஸ்வயந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வவித்³யா​: ப்ரகடய ப்ரகடய || 11 ||

ஸர்வாரிஷ்டான் நாஸ²ய நாஸ²ய || 12 ||

ஸர்வ ஸ²த்ரூன் நாஸ²ய நாஸ²ய || 13 ||

அஸாத்யம் ஸாதய ஸாதய || 14 ||

ஹும் பட் ஸ்வாஹா ||

|| இதி ஸ்ரீவிபீஷணக்ருதம் ஹனுமத்³ வட³வானல ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

வட்வானல் என்றால் சமுத்திரத்தின் நடுவில் வசிக்கும் நெருப்பு. வடவாக்கினி என்று தமிழில் கூறுவதுண்டு. அதன் உணவு சமுத்திரத்தின் தண்ணீர்.

ஓம் என்னும் பிரணவத்துடன் கூடிய அனுமான் மந்திர வட்வானல் ஸ்தோத்ரத்தின் ரிஷி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, தேவதை - ஸ்ரீ வட்வானல் ஹனுமான், சர்வ ரோக நிவாரணம், தீர்க்க ஆயுள், ஐஸ்வர்யம், ஆரோக்யம், சகல வித பாப நிவர்த்தி அனைத்தையும் அருளும், சீதா ராமச்சந்திர மூர்த்திக்கு பிரியமான அனுமான் வட்வானல ஸ்தோத்ரத்தை ஜபிக்கிறேன்..

ஓம் ஹ்ராம் ஹ்ரீம், ஓம் நமோ பகவதே என்னும் மந்திர உச்சாடனத்தால் மஹா பராக்கிரமசாலியான, புகழ் அனைத்து திக்குகளிலும் பரவியுள்ள, இவ்வுலகத்தின் ஹ்ருதயமாக விளங்கும் அனுமானை வணங்குகிறேன்.

வஜ்ர தேகம் பொருந்தியவர், ருத்ரனாகிய சிவபெருமானின் அம்சாவதாரம், இலங்கையைத் தகனம் செய்தவர், உமா மகேஷ்வர மந்திரக் கடலின் திறவுகோலாகத் திகழ்பவர், பத்து தலை இராவணனை அழித்தவர், சீதையின் ப்ராணனை ரட்சித்து நம்பிக்கை ஸ்வாசத்தை அளித்தவர், வாயுவின் புத்ரர், மாதா அஞ்சனையின் மைந்தன், ராம லக்க்ஷமணர்களுக்கு மகிழ்ச்சியை கொணர்ந்தவர், வானர சேனைக்குத் தலைவராக வழி நடத்திச் செல்பவர், சுக்ரீவனுக்கு சகாயம் செய்தவர், ரத்னங்களால் ஆன பர்வதத்திலிருந்து தோன்றியவர்.அத்தகைய சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

குமார பிரம்மச்சாரி (இள பிரம்மச்சாரி), கம்பீர நாத த்வனியை ஒத்த குரலுடையவர், சர்வ பாபங்கள் மற்றும் க்ரஹ பீடைகளிலிருந்து நிவர்த்தி அருளுபவர், அனைத்து ஜ்வர பீடைகளிலிருந்து நிவாரணம் தருபவர், சகல வித டாகினி துன்பங்களை அழிப்பவர், அத்தகைய சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் என்னும் மந்திர உச்சானடத்தால் ஹனுமானை வணங்குகிறேன். வீர தீர பராக்கிரமர், துன்பத்தால் ஏற்படும் வருத்தத்தை நீக்குபவர், நவக்ரஹங்கள், பூத, ப்ரேத தோஷங்களால் விளையும் சங்கடங்களை நீக்குபவர், பூத ப்ரேத பயத்தால் விளையும் ஜ்வர தோஷம், கவலை, வருத்தம், சங்கடங்கள், மஹாவிஷ்ணு மற்றும் பரமேஸ்வரரின் கோபத்தால் ஏற்படும் ஜ்வரங்களிலிருந்து நிவர்த்தி அழிப்பவர் , யக்ஷர்கள், ப்ரஹ்ம ராட்சஸர்கள், பூத, ப்ரேத, பைசாசம் ஆகியவைகளை அழிப்பவர். அத்தகைய மந்த்ர சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

ஓம் ஹ்ராம் ஸ்ரீம் ஓம் என்னும் மந்தர உச்சாடனத்தால் மஹா பலசாலியான ஹனுமானை வணங்குகிறேன். ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரோம், ஹ்ரா, ஆம் ஹாம் ஹாம் ஹாம் ஹாம் ஓம் ஸௌம் ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் என்பது வட்வானல ஹனுமானின் பீஜ மந்த்ரம்.

பூத பிசாசுகளின் கண்களையும், காதுகளையும் அழிப்பீர்!!!, சாகினி, டாகினி, தீய மனிதர்கள், அனைத்து விஷங்களையும் அழிப்பீர்!!.

ஆகாயம், பூமி இவற்றை உடைப்பீர்!.

சகல மாயங்களையும் வெட்டுவீர், பலமிழக்க செய்வீர், மோஹிக்கச்செய்து எரித்து அழிப்பீர்!.

ஓம் ஹ்ராம், ஹ்ரீம் ஓம் என்னும் மந்த்ர உச்சாடனத்தால் தங்களை வணங்குகிறேன். நவக்கிரகங்களால் விளையும் அனைத்து கேடுகளையும் எதிர்த்து அழித்து என்னை காப்பீர்!!!.

சகல பந்த பாசங்களிலிருந்தும் எனக்கு முக்தி அளிப்பீர்!.

முடக்குவாதம், கணுக்காலில் ஏற்படும் வீக்கம், ஆகியவற்றிலிருந்து பூரண நிவாரணத்தை அளிப்பீர்!.

கொடிய விஷ சர்ப்பங்களான அனந்தன், வாசுகி, தக்க்ஷன், கார்கோடகன், காளிங்கன், யக்ஷர், நீரில் வாழும் மிருகங்கள், குகையில் வாழும் மிருகங்கள், இரவில் மட்டும் நடமாடும் மிருகங்கள், பகலில் மட்டும் நடமாடும் மிருகங்கள் ஆகியவற்றால் ஏற்படும் விஷ பந்தங்களை (தளைகள்), ஆபத்துக்களை முறியடித்து பெரும் துன்பத்திலிருந்து காப்பீர்!!!.

ராஜ பயம், திருடர் பயம், தீய மந்த்ர, யந்தர, தந்த்ர ப்ரயோகங்களை அழித்து என்னை காப்பீர்!.

தங்களின் பரிபூரண மந்த்ர, யந்தர, தந்த்ர ஞானத்தை எனக்கு வெளிப்படுத்தி அருள்வீர்!.

சகல அரிஷ்டங்களையும்(குறைகளையும்) நாசம் செய்வீர்!.
அனைத்து எதிர்ப்புகளையும் அழித்து காப்பீர்!.
முடியாததை முடித்து காட்டுவீர்!.
ஹூம் ஃபட் ஸ்வாஹா

விபீஷணரால் இயற்றப்பட்ட ஹனுமான் வட்வானல ஸ்தோத்ரம் முற்றிற்று.
...

மந்திர உச்சாடனத்துடன் கூடிய ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்வதற்கு குரு உபதேசம் அல்லது வேதம் நன்கு கற்றறிந்த பண்டிதர்கள் மூலம் கற்று பிறகு பாராயணம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும். இல்லையெனில் தவறான மந்திர உச்சாடனம் பயன் அளிக்காமல் போவதுடன், பிற வீபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம். இதை கவனத்தில் கொள்ளவும்.

பீஜ மந்திரங்களுடன் கூடிய இந்த ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆதலால் மிகவும் கவனத்துடன் குரு முகமாக அல்லது வேதம் கற்றறிந்தவர் மூலம் நன்கு கற்றறிந்து, பிறகு பாராயணம் செய்வது நல்லது.

பொதுவாக ஹனுமான் ஸ்தோத்ரத்தை எந்நாளும் செய்யலாம். இந்த ஸ்தோத்ரத்தை வடநாட்டினர் புதன்கிழமை அன்று மட்டும் பாராயணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

வழிபடும் மார்க்கத்திற்கு ஏற்ப, பாராயண விதிகளும் இரு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அவை:-

தந்திர விதி :
கடுகு எண்ணெய் விளக்கேற்றி தினம் 108 முறை ஆக 41 நாட்கள் ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்ய, அனைத்து தடைகளும் விலகி வேண்டியது கைக்கூடும்.

சாத்வீகம் :
புதன் கிழமைகளில் சுத்த பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி அனுமானை தியானித்து 108 முறை ஸ்தோத்ர பாராயணம் செய்ய தடைகள் விலகி, நல் ஆரோக்கியமும், செல்வமும் கைக்கூடும் என்பது நம்பிக்கை.

Courtesy:
 http://kshetrayaatra.blogspot.in/2014/01/sri-hanuman-vadvanal-stotra.html

Tuesday, January 28, 2014

என் தாய்


என்னை ஈன்றெடுத்து, நல்லபடியாக ஒழுக்க நெறி தவறாமல் வாழ வழிகாட்டி, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும உற்சாகத்தையும் ஊட்டி வளர்த்து, என் வாழ்க்கையை செம்மையாக்கி, என் உதரம் நிறைந்து உள்ளம் குளிர்ந்து வாழ ஆசீர்வதித்து, என் கனவை நினைவாக்கும் முயற்சியை வழிநடத்தும் என் தாய் .....

அவள் வாழ்க்கையின் நாட்கள் எண்ணக்கூடிய சூழ்நிலை துவக்கம்.
இதயத்தையும் மனதையும் தேறுதல் சொல்ல இயலாத நிலை என்னுடையது.

கருப்பன் காப்பாத்துவான்.

Guests in a Family Function ..

Monday, January 27, 2014

ஶிவனது பத்தாயிரம் நாமங்கள் ... (401-420)

श्री साम्बसदाशिवायुतनामावलि:
ओम् नम: शिवाय ।

ओम् अमित प्रभावाय नम:
ओम् अमायाय नम:
ओम् अमूर्ति सादाख्य पश्चिम वदनाय नम:
ओम् अम्रुतमय गंगाधराय नम:
ओम् अमेय गुणाय नम:
ओम् अमेयात्मने नम:
ओम् अम्रुतायिताय नम:
ओम् अमरेश्वरे ॐकाराय नम:
ओम् अमलाय नम:
ओम् अमन्दानन्दाब्धये नम:
ओम् अमारुत समागमाय नम:
ओम् अमल रूपिणे नम:
ओम् अमर सार्व भौमाय नम:
ओम् अयोनये नम:
ओम् अयुग्म द्रुष्टये नम:
ओम् अयुग्माक्षाय नम:
ओम् अर्क चन्द्र् अग्नि नेत्राय नम:
ओम् अर्दनाय नम:
ओम् अर्थाय नम:
ओम् अर्थकराय नम: - ४२०

ओम् अर्यम्णे नमः
ओम् अर्थितव्याय नमः
ओम् अरिष्ट मथनाय नमः
ओम् अरोगाय नमः
ओम् अरिन्दमाय नमः
ओम् अर्धचन्द्र चूडाय नमः
ओम् अरूपाय नमः
ओम् अर्धनारीश्वराय नमः
ओम् अर्च्य मेढ्राय नमः
ओम् अरिमर्दनाय नमः
ओम् अर्ध हाराय नमः
ओम् अर्धमात्रा रूपाय नमः
ओम् अर्धकायाय नमः
ओम् अर्कप्रभ शरीराय नमः
ओम् अरण्येशाय नमः
ओम् अरिष्ट नाशकाय नमः
ओम् अरुणाय नमः
ओम् अरिषड्वर्ग दूराय नमः
ओम् अरिसूदनाय नमः - ४४०

ओम् अर्थात्मने नमः
ओम् अर्थिनां निधये नमः
ओम् अरिषड्वर्ग नाशकाय नमः
ओम् अर्धनारीश्वरादि चतुर्मूर्ति प्रतिपादकान्तर वदनाय नमः
ओम् अर्धनारी शुभांगाय नमः
ओम् अरातये नमः
ओम् अरुष्कराय नमः
ओम् अरिष्ट नेमये नमः
ओम् अर्हाय नमः
ओम् अर्धादिकाय नमः
ओम् अरिमथनाय नमः
ओम् अरण्यानां पतये नमः
ओम् अरथेभ्य: नमः
ओम् अर्थ पुल्लेक्षणाय नमः
ओम् अर्थितादधिक प्रदाय नमः
ओम् अर्ध हारार्ध केयूर स्वर्ध कुण्डल कर्णिने नमः
ओम् अर्ध चन्दन लिप्ताय नमः
ओम् अर्धस्रगनु लेपिने नमः
ओम् अर्ध पीतार्ध पाण्डवे नमः
ओम् अलघवे नमः - ४६०

ओम् अलक्ष्याय नमः
ओम् अलेख्य शक्तये नमः
ओम् अलुप्तव्य शक्तये नमः
ओम् अलंघ्य शासनाय नमः
ओम् अलिङ्गात्मने नमः
ओम् अलक्षिताय नमः
ओम् अलुप्त शक्ति नेत्राय नमः
ओम् अलंक्रुताय नमः
ओम् अलुप्त शक्ति धाम्ने नमः
ओम् अव्ययाय नमः
ओम् अवधानाय नमः
ओम् अव्यक्ताय नमः
ओम् अव्यग्राय नमः
ओम् अविघ्न कारकाय नमः
ओम् अव्यक्त लक्षणाय नमः
ओम् अविक्रमाय नमः
ओम् अवताराय नमः - ४८०

ओम् अवशाय नमः
ओम् अवराय नमः
ओम् अवरेशाय नमः
ओम् अव्यक्त लिङ्गाय नमः
ओम् अव्यक्त रूपाय नमः
ओम् अवध्याय नमः
ओम् अवस्वन्याय नमः
ओम् अवर्जाय नमः
ओम् अवसान्याय नमः
ओम् अवद्याय नमः
ओम् अवधाय नमः
ओम् अवार्याय नमः
ओम् अविद्यालेश रहिताय नमः
ओम् अवनिभ्रुते नमः
ओम् अवधूताय नमः
ओम् अविद्योपाधि रहित निर्गुणाय नमः
ओम् अविनाश नेत्रे नमः
ओम् अवलोकनायत्त जगत्कारण ब्रह्मणे नमः
ओम् अव्यक्त तमाय नमः
ओम् अविद्यारये नम: - ५००

ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி

ஓம் நம: ஶிவாய |

ஓம் அமித ப்ரபா⁴வாய நம:
ஓம் அமாயாய நம:
ஓம் அமூர்தி ஸாதா³க்²ய பஶ்சிம வத³னாய நம:
ஓம் அம்ருதமய க³ங்கா³த⁴ராய நம:
ஓம் அமேய கு³ணாய நம:
ஓம் அமேயாத்மனே நம:
ஓம் அம்ருதாயிதாய நம:
ஓம் அமரேஶ்வரே ஓங்காராய நம:
ஓம் அமலாய நம:
ஓம் அமந்தா³னந்தா³ப்³த⁴யே நம:
ஓம் அமாருத ஸமாக³மாய நம:
ஓம் அமல ரூபிணே நம:
ஓம் அமர ஸார்வ பௌ⁴மாய நம:
ஓம் அயோனயே நம:
ஓம் அயுக்³ம த்³ருஷ்டயே நம:
ஓம் அயுக்³மாக்ஷாய நம:
ஓம் அர்க சந்த்³ர் அக்³னி நேத்ராய நம:
ஓம் அர்த³னாய நம:
ஓம் அர்தா²ய நம:
ஓம் அர்த²கராய நம: - 420

ஓம் அர்யம்ணே நம:
ஓம் அர்தி²தவ்யாய நம:
ஓம் அரிஷ்ட மத²னாய நம:
ஓம் அரோகா³ய நம:
ஓம் அரிந்த³மாய நம:
ஓம் அர்த⁴சந்த்³ர சூடா³ய நம:
ஓம் அரூபாய நம:
ஓம் அர்த⁴னாரீஶ்வராய நம:
ஓம் அர்ச்ய மேட்⁴ராய நம:
ஓம் அரிமர்த³னாய நம:
ஓம் அர்த⁴ ஹாராய நம:
ஓம் அர்த⁴மாத்ரா ரூபாய நம:
ஓம் அர்த⁴காயாய நம:
ஓம் அர்கப்ரப⁴ ஶரீராய நம:
ஓம் அரண்யேஶாய நம:
ஓம் அரிஷ்ட நாஶகாய நம:
ஓம் அருணாய நம:
ஓம் அரிஷட்³வர்க³ தூ³ராய நம:
ஓம் அரிஸூத³னாய நம: - 440

ஓம் அர்தா²த்மனே நம:
ஓம் அர்தி²னாம்ʼ நித⁴யே நம:
ஓம் அரிஷட்³வர்க³ நாஶகாய நம:
ஓம் அர்த⁴னாரீஶ்வராதி³ சதுர்மூர்தி ப்ரதிபாத³காந்தர வத³னாய நம:
ஓம் அர்த⁴னாரீ ஶுபா⁴ங்கா³ய நம:
ஓம் அராதயே நம:
ஓம் அருஷ்கராய நம:
ஓம் அரிஷ்ட நேமயே நம:
ஓம் அர்ஹாய நம:
ஓம் அர்தா⁴தி³காய நம:
ஓம் அரிமத²னாய நம:
ஓம் அரண்யானாம்ʼ பதயே நம:
ஓம் அரதே²ப்⁴ய: நம:
ஓம் அர்த² புல்லேக்ஷணாய நம:
ஓம் அர்தி²தாத³தி⁴க ப்ரதா³ய நம:
ஓம் அர்த⁴ ஹாரார்த⁴ கேயூர ஸ்வர்த⁴ குண்ட³ல கர்ணினே நம:
ஓம் அர்த⁴ சந்த³ன லிப்தாய நம:
ஓம் அர்த⁴ஸ்ரக³னு லேபினே நம:
ஓம் அர்த⁴ பீதார்த⁴ பாண்ட³வே நம:
ஓம் அலக⁴வே நம: - 460

ஓம் அலக்ஷ்யாய நம:
ஓம் அலேக்²ய ஶக்தயே நம:
ஓம் அலுப்தவ்ய ஶக்தயே நம:
ஓம் அலங்க்⁴ய ஶாஸனாய நம:
ஓம் அலிங்கா³த்மனே நம:
ஓம் அலக்ஷிதாய நம:
ஓம் அலுப்த ஶக்தி நேத்ராய நம:
ஓம் அலங்க்ருதாய நம:
ஓம் அலுப்த ஶக்தி தா⁴ம்னே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் அவதா⁴னாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் அவ்யக்³ராய நம:
ஓம் அவிக்⁴ன காரகாய நம:
ஓம் அவ்யக்த லக்ஷணாய நம:
ஓம் அவிக்ரமாய நம:
ஓம் அவதாராய நம: - 480

ஓம் அவஶாய நம:
ஓம் அவராய நம:
ஓம் அவரேஶாய நம:
ஓம் அவ்யக்த லிங்கா³ய நம:
ஓம் அவ்யக்த ரூபாய நம:
ஓம் அவத்⁴யாய நம:
ஓம் அவஸ்வன்யாய நம:
ஓம் அவர்ஜாய நம:
ஓம் அவஸான்யாய நம:
ஓம் அவத்³யாய நம:
ஓம் அவதா⁴ய நம:
ஓம் அவார்யாய நம:
ஓம் அவித்³யாலேஶ ரஹிதாய நம:
ஓம் அவனிப்⁴ருதே நம:
ஓம் அவதூ⁴தாய நம:
ஓம் அவித்³யோபாதி⁴ ரஹித நிர்கு³ணாய நம:
ஓம் அவினாஶ நேத்ரே நம:
ஓம் அவலோகனாயத்த ஜக³த்காரண ப்³ரஹ்மணே நம:
ஓம் அவ்யக்த தமாய நம:
ஓம் அவித்³யாரயே நம: - 500


..... தொடரும் .....

- Courtesy: Vasudevan Tirumurti @ "anmikam4dumbme"

Friday, January 24, 2014

சபரிமலை பதினெட்டுப் படிகள் தத்துவம்


சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

1. காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

2. குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

3. லோபம்:
பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது.

4. மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

5. மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

6. டம்பம் (வீண் பெருமை):
அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

7. அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை.

8. சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

9. ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

10. தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

11. ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

12. மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

13. அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

14. கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

15. காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

16. மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

17. நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

18. மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்.

இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்

... Courtesy: Sasithara Sharma

Thursday, January 23, 2014

श्री सूक्तम् ... ஸ்ரீ சூக்தம் தமிழில


श्री सूक्तम्

ॐ ॥ हिर॑ण्यवर्णां॒ हरि॑णीं सु॒वर्ण॑रज॒तस्र॑जाम् । च॒न्द्रां हि॒रण्म॑यीं ल॒क्ष्मीं जात॑वेदो म॒ आव॑ह ॥

तां म॒ आव॑ह॒ जात॑वेदो ल॒क्ष्मीमन॑पगा॒मिनी॓म् ।
यस्यां॒ हिर॑ण्यं वि॒न्देयं॒ गामश्वं॒ पुरु॑षान॒हम् ॥

अ॒श्व॒पू॒र्वां र॑थम॒ध्यां ह॒स्तिना॓द-प्र॒बोधि॑नीम् ।
श्रियं॑ दे॒वीमुप॑ह्वये॒ श्रीर्मा दे॒वीर्जु॑षताम् ॥

कां॒ सो॓स्मि॒तां हिर॑ण्यप्रा॒कारा॑मा॒र्द्रां ज्वलं॑तीं तृ॒प्तां त॒र्पयं॑तीम् ।
प॒द्मे॒ स्थि॒तां प॒द्मव॑र्णां॒ तामि॒होप॑ह्वये॒ श्रियम् ॥

च॒न्द्रां प्र॑भा॒सां य॒शसा॒ ज्वलं॑तीं॒ श्रियं॑ लो॒के दे॒वजु॑ष्टामुदा॒राम् ।
तां प॒द्मिनी॑मीं॒ शर॑णम॒हं प्रप॑द्येஉल॒क्ष्मीर्मे॑ नश्यतां॒ त्वां वृ॑णे ॥

आ॒दि॒त्यव॑र्णे तप॒सोஉधि॑जा॒तो वन॒स्पति॒स्तव॑ वृ॒क्षोஉथ बि॒ल्वः ।
तस्य॒ फला॑नि॒ तप॒सानु॑दन्तु मा॒यान्त॑रा॒याश्च॑ बा॒ह्या अ॑ल॒क्ष्मीः ॥

उपैतु॒ मां दे॒वस॒खः की॒र्तिश्च॒ मणि॑ना स॒ह ।
प्रा॒दु॒र्भू॒तोஉस्मि॑ राष्ट्रे॒உस्मिन् की॒र्तिमृ॑द्धिं द॒दादु॑ मे ॥

क्षुत्पि॑पा॒साम॑लां ज्ये॒ष्ठाम॑ल॒क्षीं ना॑शया॒म्यहम् ।
अभू॑ति॒मस॑मृद्धिं॒ च सर्वां॒ निर्णु॑द मे॒ गृहात् ॥

ग॒न्ध॒द्वा॒रां दु॑राध॒र्षां॒ नि॒त्यपु॑ष्टां करी॒षिणी॓म् ।
ई॒श्वरीग्ं॑ सर्व॑भूता॒नां॒ तामि॒होप॑ह्वये॒ श्रियम् ॥

मन॑सः॒ काम॒माकूतिं वा॒चः स॒त्यम॑शीमहि ।
प॒शू॒नां रू॒पमन्य॑स्य मयि॒ श्रीः श्र॑यतां॒ यशः॑ ॥

क॒र्दमे॑न प्र॑जाभू॒ता॒ म॒यि॒ सम्भ॑व क॒र्दम ।
श्रियं॑ वा॒सय॑ मे कु॒ले मा॒तरं॑ पद्म॒मालि॑नीम् ॥

आपः॑ सृ॒जन्तु॑ स्नि॒ग्दा॒नि॒ चि॒क्ली॒त व॑स मे॒ गृहे ।
नि च॑ दे॒वीं मा॒तरं॒ श्रियं॑ वा॒सय॑ मे कु॒ले ॥

आ॒र्द्रां पु॒ष्करि॑णीं पु॒ष्टिं॒ सु॒व॒र्णाम् हे॑ममा॒लिनीम् ।
सू॒र्यां हि॒रण्म॑यीं ल॒क्ष्मीं जात॑वेदो म॒ आव॑ह ॥

आ॒र्द्रां यः॒ करि॑णीं य॒ष्टिं पि॒ङ्ग॒लाम् प॑द्ममा॒लिनीम् ।
च॒न्द्रां हि॒रण्म॑यीं ल॒क्ष्मीं॒ जात॑वेदो म॒ आव॑ह ॥

तां म॒ आव॑ह॒ जात॑वेदो ल॒क्षीमन॑पगा॒मिनी॓म् ।
यस्यां॒ हिर॑ण्यं॒ प्रभू॑तं॒ गावो॑ दा॒स्योஉश्वा॓न्, वि॒न्देयं॒ पुरु॑षान॒हम् ॥

ॐ म॒हा॒दे॒व्यै च॑ वि॒द्महे॑ विष्णुप॒त्नी च॑ धीमहि । तन्नो॑ लक्ष्मीः प्रचो॒दया॓त् ॥

श्री-र्वर्च॑स्व॒-मायु॑ष्य॒-मारो॓ग्य॒मावी॑धा॒त् पव॑मानं मही॒यते॓ । धा॒न्यं ध॒नं प॒शुं ब॒हुपु॑त्रला॒भं श॒तसं॓वत्स॒रं दी॒र्घमायुः॑ ॥

ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ॥


ஸ்ரீ சூக்தம் (தமிழில்)

திருமகளின் திருவருளைப் பெற உதவும் நிகரற்ற ஸ்லோகமாக தேவி புராணம் சொல்லும் துதி, சூக்தம். வடமொழியில் உள்ள வளம் தரும் ஸ்ரீ சூக்தம் துதி, இங்கே பொருள் மாறாமல் தமிழ்த் துதிகளாகத் தரப்பட்டுள்ளது. பொன்மகளைத் துதிக்கும் இப்பாடல்களைச் சொல்வது, பொருள் சேர்த்து வளம் கூட்டும்.

வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் இவற்றின் வரிசையில் மேலான சூக்தங்களும் உள்ளன என்பதால், சூக்தங்கள் நிச்சயம் பலனளிக்கும் என்பது, நிதர்சனமான உண்மை. ஸ்ரீ தேவியைப் போற்றும் ஸ்ரீசூக்தத்தின் தமிழாக்கமான, இம்மந்திரமாலையை மனம் ஒன்றிச் சொல்லுங்கள், மகத்தான செல்வமளிப்பாள் மலர்மகள்.

ஓம் அக்னிதேவனே! பொன்வெள்ளி மாலையணி
பொன்னிற மேனியாளை பொன்னாய் ஒளிர்பவளை
முழுநிலவு முகத்தவளை பெரும் பாவச்சுமை போக்கும்
புனிதமான இலக்குமியை என்னிடம் எழச்செய்வாய்!

பொன்பொருள் பசுக்கள் குதிரைகள் உறவுகளை
எவளருளால் என்றென்றும் பெற்று மகிழ்வேனோ
அவளந்த மகாலட்சுமி இமைப்பொழுதும் எமைவிட்டு
விலகாது இருக்க அக்னிதேவனே! அருள்வாய்.

குதிரைகள் முன்செல்ல யானைகளின் மணியோசை
திருமகளின் வரவை எடுத்தியம்ப தேரேறி பவனி வரும்
ஸ்ரீ தேவி யுனைவேண்டி அழைக்கின்றேன்.
செல்வமகளே மகிழ்ந்து என்னிடம் உறைவாய்!

கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர்
தனில்வாழும் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே
பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
திருமகளே நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.

குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே
பத்மினியே தேவர்தொழும் ஈம்பீஜ மந்திரவடிவே
உலகொளியே கருணைவடிவே நின்தாள் சரணம் சரணம்
திருமகளே வறுமையெனை விட்டோட அருள்வாய்

அருணன் நிறத்தவளே நின்தவத்தால் மரங்களின்
தலைவன் வில்வம் தோன்றியவரா தன்கனிகள்
அறியாமை அமங்கலம் அகப்புறத் தடையாவையும்
அழித்து மங்களம் உண்டாக்க வேண்டுகிறேன்.

பொருளரசன் குபேரனும் புகழரசனும் செல்வங்களுடன்
பணியரசன் எனைநாடி வருகவே நினதருள்
நிறைசேர் பூதலம் உதித்த யெனக்கு
நிறைமிகு செல்வம்புகழ் பெருமை தந்தருள்வாய்

கடும்பசி பிணிதாகம் கொண்டிளைத்த மூத்தவளை
மூதேவியை அண்டாமல் அகற்றுகின்றேன்
இளையவளே என்னில்லில் இல்லாமை இயலாமை
இடர்யாவும் இல்லாமல் அகற்றி அருள்வாய்

மணமிகு தூயவளே! வெற்றிகொள்ள முடியாதவளே!
திறமிகு வலிமை தருபவளும் அனைத்தும்
நிறைமிகு கொண்டவளும் எவ்வுயிர்க்கும் தலைவியுமான
பொருள் மிகு பொன்மகளே நீயிங்கு எழுந்தருள்வாய்

அருள்மிகு அநகாவே நான்விரும்பும் விருப்பங்கள்
மனம் மிகு மகிழ்வு வாக்கில் உண்மை
வளம் மிகு தரும் உணவு பால்மிகு தரும்பசு
புகழ்மிகு கீர்த்தியாவும் பெற்றுமகிழ அருள்வாய்.

கர்தமமா முனிவரேயுன் குலப்புதல்வியாம் பத்மமாலினி
அகில உலகை ஆளும் அரசியாய் அள்ள அள்ளிக்
குறையா பெருநிதி தருபவளாய் அனைவரையும்
தாயாய்க் காக்கு மவளால் என்குலமே எழுந்தருளட்டும்.

பொன்மகளின் தண்ணருளால் பூலகில் தண்ணீரால்
உயிர்வளர் தானியங்கள் உற்பத்தி மிகவாகி
என்னில்லை நிரப்பட்டும் உலக அன்னை திருமகளாம்
உதாராங்கா யெம்குலமே ஏகிவாழ அருள்வாய்

அக்னிதேவனே! புனிதநீருரை குங்குமநிற பத்மமாலினியை
உணவூட்டி உலக உயிர் வளர்க்கும் கருணைவடிவை
சந்திரனே அன்னவளை பொன்னிற மேனியாளை
மாதரசியை என்னில்லில் எழுந்தருளச் செய்வாய்

கம்பீரமாய் செங்கோலேந் தியகருணை மனத்தவளை
பொன்னி புண்ட செந்நிறத்தவளை அருணனை
பழித்த ஒளி யுடையாளை பொன்னான ரமாவை
என்னிடம் எழுந்தருளச் செய்வாய் அக்னிதேவனே!

மிடுகனகம் பால்பசுக்கள் பணிப்பெண் அசுவங்கள்,
ஏவல்செய் மானுடமும் பெற்றின் புற்றிருக்க
அருள்செய்யும் அன்னை அலைமகள் இமைப்பொழுதும்
எனைவிட்டு அகலாதிருக்க ஆவன செய் அக்னிதேவனே!

திருமகளின் அருள்வேண்டி தூயவனாய் புலனடக்கம்
உள்ளவனாய் மந்திரங்கள் பதினைந்தும் ஒரு முகமாய்
உருச்செய்தும் நெய்கொண்டு ஹோமம் செய்தும்
உள்ளமுருகி வழிபட அவளருள் சித்திக்குமே!

நற்பலன்கள் யாவையும் நல்கும் மகாலட்சுமி
மந்திரங்களை உலகுக்கு அளித்த முனிவர்கள்
அனந்தர் கர்தமர் சிக்லீதர் யெனும்மூவர்
அதிதேவதையாய்நிலை பெற்றவள் ஸ்ரீதேவியே!

தாமரையன்ன முகமும் கண்ளும் கால்களும்
எழிலாய் பெற்றுச் செந்தாமரையில் தோன்றி யவளே
எவ்வெப் பொருள்களால் வளம்பெற்று வாழ்வேனோ
அவ்வப் பொருள்களை எனக்குத் தந்தருள்வாய்

தனம்தரும் பசுதரும் குதிரைதரும் கோமளமே
தன லட்சுமியே! எனதாசை யாவும் நிறைவேறி
இகபர சுகம்பெற்று இனிதே வாழவழி
செய்யும் பெருநிதிமிகத் தருவாய் உகந் தெனக்கே.

உலகத்தாயே! புத்திர பௌத்திர தனதான்யம்
யானை குதிரை வாகனம்தரும் ஸ்ரீநிதியாய்
விளங்கும் திருமகளே என்னை நீள் ஆயுள்
ஆரோக்கியம் பெருநிதி உள்ளவனாய் உயர்த்துவாய்.

திருமகளே உன்னருளால் அக்னிதேவன் வாயுதேவன்
சூரியதேவன் வசுக்கள் இந்திரன் பிரகஸ்பதி
வருணன் ஏனைய தேவர்களும் சுகந்தரும்
வளங்கள் யாவையும் பெற்றுச்சுவைக்கின்றனர்.

குளிர்நிலவாய் தெய்வங்களின் ஆற்றலாய் விளங்கி
ஆதவனாய் ஒளியூட்டும் தலைவி திருமகளே
சந்திர சூர்யாக்கினி மூவரின் ஆற்றலின்
ஆற்றலான மகா லட்சுமியே உனை ஆராதிக்கிறேன்.

கருடனும் விருத்திராசுரனை வென்ற
இந்திரனும் சோமரசம் இனிமையாய்ப் பருகட்டும்
சோமயாகம் செய்ய விரும்பும் எனக்குத்
திருமகள் செல்வத்தை வாரிவாரி வழங்கட்டும்

புண்ணியம் மேலோங்க திருமகள் தியானமும்
மகாலட்சுமி மந்திரஸ்துதியும் மனமொன்றிச் செய்யும்
அருளாளரை கோபம் லோபம் பொறாமை
கெடுமதி என்னும் தீக்குணங்கள் தீண்டுவதில்லை.

தான்யலட்சுமி கருணையாள் மின்னலுடன் மேகங்கள்
மழையை இரவும் பகலும் பொழியட்டும்
விதைகள் யாவும் நன்கு முளைத்து வளரட்டும்
தெய்வநிந்தனை செய்வோரை விலக்கி ஓட்டுவாய்.

பத்மப்பிரியே! செந்தாமரை கைகொண்ட பத்மினியே
செந்தாமரை மீதமர்ந்த செந்தாமரைக் கண்ணியே
விஷ்ணுப் பிரியே! உலகோர் விரும்பி யேத்துமுன்
திருவடித் தாமரையை யென்மேல் வைத்தருள்வாய்

வெண்பட்டு இடையாளை மேலாடை அணிந்தவளை
செந்தாமரைக் கைகொண்டு மலர்த்தாமரை அமர்ந்தவளை
கம்பீரமிகு நாபிச்சுழி யழகும் பின்னழகும்
தாமரைக் கண்ணழகும் கனமிகு மார்பழகும்

நாணமுடன் குனிந்த தலையழகும் கொண்டவளை
தேவலோக யானைகள் ரத்தின பொற்கலச
நீர்கொண்டு மங்கல நீராட்ட மகிழ்பவளை
மங்களங்கள் நிறைமங்கள நாயகிமகா லட்சுமியை

பாற்கடல் அரசனின் புதல்வியாய்த் தோன்றி
தேவமாதர் யாவரும் செய்யும் பணியேற்று
உலகம் ஏற்றமுற ஒரே தீபமாய் சுடர்விட்டு
ஸ்ரீரங்கம் தனில்வாழும் தலைவியே செந்தாமரை
மீதமர்ந்த நின்கடைக் கண்பார்வை பட்டே
பிரம்மனும் இந்திரனும் சிவனும்பெருமையுற்றனர்
மூவுலகும் தன்னில்லாய்க் கொண்டு வாழும்
முகுந்தனின் அன்பரசியே உனையென்றும் வணங்குகிறேன்
சித்தம் சிந்திப்பதை நிறைவேற்றி யருளும்
சித்தலட்சுமி யாய்வெற்றி தரும்ஜெயலட்சுமியாய்
பெரும்தனம் தரும் தன லட்சுமியாய் வேண்டியது
வேண்டியாங்கு தரும்வர லட்சுமியாய் அறிவுதரும்
சரஸ்வதியாய் முக்திதரும் மோட்ச லட்சுமியாயுள்ள
மகாலட்சுமியே நான்வேண்டும் வரந்தந் தருள்வாய்

பாசம் அங்குசம் இருகை ஏந்த
வரஅபய முத்திரைகளை மற்றிருகை காட்டியருள
செந்தாமரை மீதமர்ந்த ஆதிசக்தி முக்கண்ணியே
கோடியிளம் சூரிய ஒளியினும்மேலாய் ஒளிவீசி
உலகாளும் உத்தமியே உனைநான் ஆரா திக்கிறேன்.

மங்களங்கள் யாவிலும் மங்களமாய் நிறைந்தவளே
வேண்டிய நலமருளும் மங்களமானவளே
சரணடைவதற் கேற்றதேவி முக்கண்ணி நாராயணியே
நாராயணி சரணம்! நாராயணி சரணம் !!

தாமரை கைகொண்டு தூயவெள்ளாடை நறுமண
மாலையணிந்து செந்தாமரை மீதமர்ந்த
பகவதியே பகவனுக்கு வல்லமைதரும் வடிவழகே
வேண்டுவோர் வேண்டியாங்கு வரமளித்து மூவுலகை
வாழவைக்கும் வளர்திருவே என்னையும் வாழவைப்பாய்

மகாவிஷ்ணு மனத்திற்கு உகந்த மாதவி
மாதவன் மனையாள் பூமிதேவி திருமாலின்
திருமார்பில் நிறைந்தவள் அச்சுதன் வல்லமை
யென போற்றப்படும் ஸ்ரீதேவியைச் சரண டைந்தேன்
ஓம் மகாலட்சுமியை என்றும் அறிந்து போற்றுவோம்

எங்கும் நிறை திருமாலின் துணையின் துணை வேண்டி
தியானிப்போம் அந்த லட்சுமி தேவியே
அவள்பாதம் பணிய நல்வழி காட்டட்டும்.

மகாலட்சுமியே! எப்பொழுதும் ஆற்றல் ஆரோக்கியம்
வளமிகு வாழ்வுதந்தவாறே காற்று வீசட்டும்
எனக்கு தனதான்யம் கால்நடை மக்கள் செல்வம்
நூறாண்டு வாழ்வு நீள் ஆயுள்
தந்துஎன் கடன்பசி நோய்வறுமை அகால மரணம் பயம்
கவலை மனத்துன்பம் இவையாவையும் அழிப்பாய்.

ஸ்ரீதேவி சென்றடையும் பாக்கியவான் புவியினில்
செல்வங்களை பெற்று வெற்றி நீள் ஆயுள்
மகிழ்வு புகழுடன் சுகவாழ்வு வாழ்ந்து
மரணமில்லா பெரும்பேற்றை எளிதில் அடைகிறான்.

எல்லாநலன்களும் திருமகளே என்றறிந்து
மந்திரங்கள் வேள்விகள் இடையின்றிச் செய்பவர்
அம்ருதாவை அடைந்து அவளருளால் வாழ்வில்
மக்கள் கால்நடை மிகு செல்வம் சேரவாழ்வர்.

... http://aanmikam.blogspot.in/2014/01/blog-post_22.html

சஷ்டியன்று சொல்ல வேண்டிய கந்தன் துதி!எந்த வேளையும் தொழவேண்டிய கந்தவேளை, கந்தசஷ்டி தினத்தில் கீழ்வரும் துதியைச் சொல்லிப் போற்றுங்கள். சர்வமங்களமும் தருவான் ஷண்முகநாதன்.

ஓம் அழகா போற்றி
ஓம் அனல் ரூபா போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் மாயவன் மருகா போற்றி
ஓம் சக்தி உமை பாலா போற்றி
ஓம் முக்தி அருள் வேலா போற்றி
ஓம் பன்னிருகை பாலகா போற்றி
ஓம் பக்தர்க்கருள் சீலா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோளா போற்றி
ஓம் ஆறெழுத்து அமலா போற்றி

ஓம் இடும்பனை வென்றோய் போற்றி
ஓம் இடர் களையும் இறைவா போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலகநாபன் மருகா போற்றி
ஓம் ஐயம் தீர் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார ரூபனே போற்றி
ஓம் ஓதிடும் வேதப்பொருளே போற்றி
ஓம் ஓதுவோர் மனதுக்கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் தீதிலா நன்மை புரிவோய் போற்றி
ஓம் குருவே திருவே குமரா போற்றி
ஓம் குறமகள் மனமகிழ் கோவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் மனதுறை செவ்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கருளும் மணியே போற்றி

ஓம் தண்ணருள் தந்திடும் தண்டபாணியே போற்றி
ஓம் மண்டலம் சுற்றிடும் மயில் வாகனா போற்றி
ஓம் வேதப்பொருளே வேலவா போற்றி
ஓம் நாதவடிவான நாயகா போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயனே போற்றி
ஓம் நறுந்தவ முனிவர் தலைவா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்தனே போற்றி
ஓம் பரங்குன்றம் உறை பாலகா போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பரமனே போற்றி
ஓம் இருளிடர் போக்கும் இறைவா போற்றி

ஓம் இதயக் குகை உறை குகனே போற்றி
ஓம் அன்பின் உருவமே அறுமுகா போற்றி
ஓம் ஒளவைக்கருளிய அன்பனே போற்றி
ஓம் சேயோனே குறிஞ்சி மேவுவோய் போற்றி
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
ஓம் கருணை நிறைந்த கடவுளே போற்றி
ஓம் அறுபடை வீடமர் ஆண்டவா போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சுப்ரமண்யா போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

ஓம் ஆறுதனில் தோன்றிய அறுமுகா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே கந்தனே போற்றி
ஓம் சஷ்டியில் மகிழும் ஷண்முகா போற்றி
ஓம் உதயச் சுடரே உமைபாலா போற்றி
ஓம் இதயத்துள் உறை இனியனே போற்றி
ஓம் பக்தர்தம் வினை தீர்ப்போய் போற்றி
ஓம் மாசிலா மனத்துறை மைந்தா போற்றி
ஓம் மாமயில் வாகனா மங்களா போற்றி
ஓம் வடிவேல் தாங்கி வருவாய் போற்றி
ஓம் அடியார் அல்லல் களைவாய் போற்றி

ஓம் வளமுள வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி குஞ்சரி நாயகா போற்றி
ஓம் செஞ்சுடரில் உதித்த செல்வனே போற்றி
ஓம் பார்வதி உளமகிழ் பாலனே போற்றி
ஓம் அமுதென தமிழை அளிப்போய் போற்றி
ஓம் தருநிழல் தமிழின் இறைவா போற்றி
ஓம் ஆடும் பரிவேல் அரசே போற்றி
ஓம் உடன் வந்தருளும் உமாசுதனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

ஓம் தந்தைக்கு மந்திரம் உரைத்த சரவணா போற்றி
ஓம் சிந்தைக்குள் உறைவாய் சிங்காரவேலா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ குக சண்முகா போற்றி
ஓம் வேடர்குல மகள் மணாளா போற்றி
ஓம் பாடற்கினிய பவகுமரா போற்றி
ஓம் அசலத்தில் ஆண்டியாய் நின்றவா போற்றி
ஓம் சகலத்தையும் தரும் சேயோன் போற்றி
ஓம் தெவிட்டா இன்னருள் தெய்வமே போற்றி

ஓம் தேவர் மூவர் பணி தேவனே போற்றி
ஓம் போகர் நாடிய மெய்ப் பொருளே போற்றி
ஓம் ஆகமம் போற்றும் அழகோனே போற்றி
ஓம் பாதகம் பாவம் போக்குவோனே போற்றி
ஓம் சித்திகள் அருளும் சிவபாலா போற்றி
ஓம் பக்தியில் மனமகிழ் பாலகா போற்றி
ஓம் ஆவினன் குடியுறை ஆறுமுகா போற்றி
ஓம் தணிகை மலைவாழ் தலைவா போற்றி
ஓம் தந்தைக்கு உரைத்த தயாபரா போற்றி
ஓம் சேயோனே செந்தில் நாதனே போற்றி

ஓம் சோலைமலை வளர் சுந்தரா போற்றி
ஓம் குன்றத்து குகை அருள் குமரா போற்றி
ஓம் கருணை மழை பொழி கந்தா போற்றி
ஓம் அருணகிரிக்கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலத்துக் குழந்தாய் போற்றி
ஓம் குறுமுனி போற்றிடும் குருவே போற்றி
ஓம் திருப்போரூர் திகழ் திருவே போற்றி
ஓம் மறுப்போர் இல்லாமாதவே போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

ஓம் வெற்றிக் கடம்ப மாலை அணிவோய் போற்றி
ஓம் பற்றுவோர் பாவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் குமரகுரு புகழ் குழந்தாய் போற்றி
ஓம் துதிபுரி அன்பர்தம் துணையே போற்றி
ஓம் மதியணி இறைவன் மைந்தா போற்றி
ஓம் நிதி மதி அருளும் நின்மலா போற்றி
ஓம் ஞானபண்டித சுவாமி போற்றி
ஓம் தீனருக்கருள் தெய்வமே போற்றி போற்றி.

... Courtesy: Sasithara Sharma @ aanmikam

Monday, January 13, 2014

தீபங்கள் துதிதீபங்களை ஏற்றிய பின்னர் கீழ்க் கண்ட துதியை ஓதவும்.

யா தேவி சர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ திருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ லக்ஷ்மீ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ


அடுத்து திருநாவுக்கரசு நாயனார் அருளிய வேற்றாகி விண்ணாகி … என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தை ஓதவும். இதனால் கோலத்தில் ஆவாஹனம் அடைந்த நவ சக்திகள் மூன்று ஆவரணமாக உள்ள 27 விளக்கு ஜோதிகளில் ஆவாஹனம் ஆகும்.

அடுத்து,

ஓம் தத்புருஷாய வித்மஹே அர்த்தநாரீஸ்வர தேவாய தீமஹி
தந்நோ அருணாசல தேவ ப்ரசோதயாத்

என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதவும். இதனால் விளக்கு ஜோதிகளில் ஆவாஹனம் அடைந்த நவசக்திகள் பெண்கள் அணிந்துள்ள மாங்கல்யங்களில் ஆவாஹனம் அடைந்து அவர்களுக்கு எல்லா காப்புச் சக்தி அனுகிரகங்களையும் அள்ளி வழங்கும். திருமணமான பெண்கள் மட்டும் அல்லாது கன்னிப் பெண்களும் இத்தகைய வழிபாட்டினால் திருமணத் தடங்கல்கள் நீங்கி நலம் பெறலாம்.

குறைந்தது 9, 18, 27 என்ற எண்ணிக்கையில் மேற்கொண்ட துதிகளை ஓதி பூஜையை நிறைவேற்றுதல் சிறப்பாகும். பூஜை நிறைவில் உரிய நைவேத்தியம் படைக்கவும். அவரவர் வசதிக்கேற்ப பொன் மாங்கல்யம், ஒன்பது கஜ நுல் புடவைகளை ஒரு மீட்டருக்குக் குறையாத ரவிக்கை துணியுடன் தானமாக அளித்தல் சிறப்பாகும்.

...

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்ததனால்
ஒன்பதோடொன்றொ டேழு பதினெட்டோ டாறும் உடனாய நாட்களவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

புடவை அணியும்போது திருஞான சம்பந்த நாயனாரின் மேற்கூறிய பாடலை பாடிக் கொண்டே அணிந்து கொள்ளுதல் நலம்.

... Courtesy: "kulaluravuthigai"

Sunday, January 12, 2014

எண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம்குசாவும் எண் சக்தியும்

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போல் எண்களும் இன்றைய மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கமாகி விட்டன. எனவே, எந்த அளவிற்கு ஒரு மனிதன் எண் சக்திகளைப் பெறுகிறானோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பண்புகளை எப்படி தெய்வீகமான முறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு விவரிக்கிறோம்.

எண் 1

தமிழ் அல்லது ஆங்கிலம் ஒன்றாந் தேதியில் பிறந்தவர்கள், அல்லது விதி எண்ணை ஒன்றாக கொண்டவர்கள், அதாவது 2.7.1990 (2+7+1+9+9+0 = 28 = 2+8 = 10 = 1+0 = 1) போன்ற தேதியில் பிறந்தவர்களின் வாழ்வில் ஒன்றாம் எண்ணின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இத்தகையோர் செய்ய வேண்டிய இறைவழிபாடுகளைப் பற்றி சித்த கிரந்தங்கள் தெளிவாக உரைக்கின்றன.

1. எண் 1 தனித்த சிவ தத்துவத்தைக் குறிப்பதால் பாண லிங்க மூர்த்திகள் வழிபாடு இவர்களுக்கு தேவையான அனுகிரக சக்திகளை அளிக்கும்.

எண் ஒன்றின் அதிதேவதா நவகிரக மூர்த்தி சூரிய பகவான். சூரிய பகவானுக்கு உரித்தான செந்தாமரை மலர்களால் மாலை கட்டி ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது திருவாதிரை, சித்திரை, சுவாதி போன்ற ஏக நட்சத்திர தினங்களில் அல்லது சதய நட்சத்திர (100 நட்சத்திரங்களின் கூட்டு) தினங்களிலும் இத்தகைய பாண லிங்க மூர்த்திகளுக்கு அணிவித்து ஆராதனை செய்து வருதல் நலம்.

சிறப்பாக புதுக்கோட்டை அருகே ஸ்ரீகொன்றையடி விநாயகர் திருத்தலத்தில் அருள்புரியும் வெட்டவெளி பாணலிங்க மூர்த்தி அற்புதமான வரங்களை அளிக்க வல்ல காருண்ய மூர்த்தி.

2. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பர நாதரை மேல் நோக்கு நாள்களில் வழிபட்டு ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் அளித்து வருதலால் திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்க்கை சுவையானதாக இருக்க எண் ஒன்றின் சக்தி துணை புரியும்.

3. ஸ்ரீபட்சி மேகாந்திரர், ஸ்ரீஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, வலது அல்லது இடது காலை துõக்கி நடனமாடும் நடராஜ மூர்த்திகள், ஸ்ரீதிரிபுர சம்ஹார தாண்டவ மூர்த்தி, ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி போன்ற ஒற்றைக் காலை ஊன்றி நடனமாடும் சிவ மூர்த்தங்கள், ஊட்டத்துõரில் அருள் புரியும் ஏக (ஒற்றை) கல் ஸ்ரீபஞ்சநதன நடராஜ சிலா மூர்த்திகளை அவ்வப்போது தரிசித்து வருதல் நலம்.

4. சிவசூரியன் அருளும் பூவாளூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வணங்கி உதிர்ந்த புட்டு தானமாக அளித்தலால் உயர்ந்த பதவிகளில் நிலவும் நிலையற்ற தன்மை நீங்க அருள் கிட்டும்.

எண் 2

1. சிவ சக்தியின் ஐக்கியத்தைக் குறிப்பது எண் 2. சக்தி அம்சம் பூரணமாகப் பொலியும் தலங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். ஸ்ரீமீனாட்சி அம்மன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி போன்று இறைவனைவிட இறைவியின் சான்னித்தியம் பெருகி உள்ள தலங்களில் அம்பாளையும் சிவபெருமானையும் வழிபட்டு மஞ்சள், குங்குமம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் சிறப்பு.

2. அர்த்தநாரீஸ்வரர் சிறப்பாக அருள்புரியும் திருச்செங்கோடு போன்ற திருத்தலங்களிலும், கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருளும் லால்குடி, உய்யக்கொண்டான் மலை போன்ற திருத்தலங்களில் தேங்காய் எண்ணெய் அகல் தீபமிட்டு தீபம் குளிரும் வரை ஆலயத்தை வலம் வந்து வணங்கினால் கணவன் மனைவியரிடையே அன்பு மிகும், குடும்ப ஒற்றுமை வளரும், எண் 2ன் சக்திகள் பெருகும்.

3. இறைவனுக்கு வலப்புறம் அம்பாள் அருள் புரியும் தலங்களில் மனைவியின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. வெண்தாமரை, சம்பங்கி, முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் அம்பாளுக்கு பூப்பந்தல் அமைத்து வழிபட்டு வந்தால் கணவன் அல்லது மனைவி இழந்து வாடுவோரின் வாழ்க்கையில் மணம் வீசத் தொடங்கும். வீடு, வாசல் போன்றவற்றை வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் பறிகொடுத்தோரின் வாழ்வு சீர்பெற சமுதாய பூஜையாக இத்தகைய வழிபாடுகளை இயற்றுவது நலம்.

4. சந்திர தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலங்களில் திருக்குளத்தில் நீராடி இறைவனுக்கும் நந்திக்கும் வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் உடம்பில் ஊறல், தேமல், அரிப்பு, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களால் அவதியுறுவோர் நலம் அடைவர்.

எண் 3

1. சிவா, விஷ்ணு, பிரம்மா மூர்த்திகள் ஒரு சேர அருளும் மும்மூர்த்தி தலங்களில் வழிபட்டு மா, பலா, வாழை என முக்கனிகளுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்தல் நலம்.

2. நின்று, அமர்ந்து, நடந்த கோலங்களில் பெருமாள் அருள்புரியும் உத்தரமேரூர் போன்ற திருத்தலங்களிலும், இறைவன் மூன்று நிலைகளாக அருளும் சீர்காழி, உளுந்துõர்பேட்டை அருகே இளவனார்சூரக் கோட்டை, புதுக்கோட்டை அருகே திருக்கோளக்குடி போன்ற சிவத் தலங்களிலும் இறைவனை வழிபட்டு மூன்று கண் உள்ள தேங்காய் மூடியைத் துருவி அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து பள்ளி மாணவர்களுக்குத் தானம் அளித்து வந்தால் என்ன படித்தாலும் மூளையில் ஏறவில்லை என்று சொல்லும் குழந்தைகள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவர்.

3. திருவாதிரை நட்சத்திரமும், வளர் மூன்றாம் பிறை சந்திரனும் இணைந்த நாட்களில் சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர் என்ற நாமம் தாங்கியுள்ள மூர்த்திகளையும், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் அருளும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி, துவரங்குறிச்சியில் அருளும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளின் ஜீவசமாதி இவற்றை தரிசனம் செய்து குழந்தைகளுக்கு கல்கண்டு கலந்த பசும்பால் தானம் அளித்து வருதல் சிறப்பு.

4. வியாழக் கிழமைகளில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திகளை வணங்கி மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

எண் 4

1. திருநெல்வேலி அருகே நான்குநேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவானமாமலை பெருமாளை புதன், சனிக் கிழமைகளில் வணங்கி ஒரு மூங்கில் முறத்தில் ஒரு படி பச்சரிசி, மூன்று உருண்டை வெல்லம், இரண்டு உருண்டை மஞ்சள், ஒரு முழுத் தேங்காய் இவற்றை ஐந்து சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.

2. நான்முகன் பிரம்மா தனிச் சன்னதி கொண்டு அருளும் திருச்சி அருகே திருப்பட்டூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வழிபட்டு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால் பிறந்தது முதல் வாழ்வில் துன்பத்தையே அனுபவித்து வரும் அடியார்களுடைய குறைகள் தீரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

3. நான்கு வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலில் இறைவனை வணங்கி, கிரிவலம் வந்து வேதம் ஓதும் மாணவர்களுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்து வருதலால் ஆஸ்துமா, கான்சர், தொழுநோய், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளின் வேகம் தணியும்.

4. நான்மாடக் கூடல் என்று பிரசித்தமாய் விளங்கும் மதுரை மாநகரில் அருளும் அமர்ந்த நிலை ஸ்ரீகூடல் அழகரைத் தரிசனம் செய்து செந்தாமரை மலர்களால் அர்ச்சித்தும், அடுத்த நிலையில் சயனன் கோலத்தில் அருளும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை நீலோத்பவ மலர்களால் அர்ச்சித்தும், நின்ற நிலையில் அருளும் ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாளுக்கு சாமந்திப் பூ திண்டு மாலை அணிவித்து வழிபடுவதால் ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும், நிரந்தரமாய் ஒரு வேலையிலிருந்து வருவாய் பெற இயலாதர்வர்களும் நன்னிலை அடைவர்.

எண் 5

1. உலகில் உள்ள எல்லா இனத்தவரும் வழிபட வேண்டிய உத்தம மூர்த்தியான திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் மூர்த்தியை வழிபட்டு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், புளி சாதம் போன்ற சித்ரான்னங்களைத் தானமாக அளித்தலால் கம்ப்யூட்டர், மைக்ரோபயாலஜி, அணு விஞ்ஞானம் போன்ற ஆராய்ச்சி துறைகளில் ஈடுபடுவோர் நலம் அடைவர்.

2. ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருஅருள் புரியும் திருவையாறு திருத்தலத்திலும், திருச்சி லால்குடி அருகே திருமணமேடு திருத்தலத்திலும் இறைவனை வணங்கி பொன் மாங்கல்யம் தானம் (ஒரு குண்டுமணி அளவாவது) அளித்தலால் அகால மரணம் ஏற்படாமல் இருக்க இறைவன் அருள் புரிவார். மரண பயத்தை அகற்றுவது பஞ்ச மூர்த்திகளின் தரிசனம். இக்காரணம் பற்றியே பெரும்பாலான சிவத்தலங்களில் இறைவனின் பஞ்ச மூர்த்திகளைப் பல்லக்குகளில் ஏற்றி வீதிகளில் வலம் வரும் தெய்வீக வழக்கம் இன்றும் நிலவி வருகிறது.

3. புத பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் திருவெண்காடு திருத்தலத்தில் முக்குள தீர்த்தத்தில் நீராடி வேதம் பயிலும் மாணவர்களுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி, மணி போன்ற பூஜை பொருட்களைத் தானம் அளித்தலால், வயதான காலத்தில் தக்க துணையுடன் வாழும் வசதியையும் நிலையையும் ஈசன் அருள்வார்.

4. ஒரு மாதத்தில் வரும் ரோஹிணி, புனர்பூசம், மகம், ஹஸ்தம், விசாகம் என ஐந்து நட்சத்திரங்களிலும் ராமா சீதா லட்சுமண சகிதமாய் காட்சி அளிக்கும் தெய்வ மூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற ஐந்து அமிர்த சக்திகள் கொண்ட அபிஷேகங்கள் செய்து, இறை மூர்த்திகளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தலைப் பாகை, சேலை, ஜாக்கெட் என்னும் ஐந்து வித ஆடைகளை அணிவித்து ஐந்து விதமான மலர்களால் அலங்கரித்து, சாதம், முறுக்கு, பணியாரம், தோசை, இட்லி போன்ற ஐந்து விதமான பதார்த்தங்களால் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு தானம் அளித்து வந்தால் என்றும் வற்றாத செல்வம் கொழிக்கும் நிலையை அடைவர்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜர் இத்தகைய அபிஷேக ஆராதனைகளை 14 ஆண்டுகள் தொடர்ந்து பஞ்ச பர்வ நாட்களில் நிறைவேற்றி வந்ததால்தான் உயிருடன் சொர்க்க லோகம் செல்லும் உத்தம நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. (பஞ்ச பர்வ நாட்களாவன தமிழ் மாதத்தில் முதல் தேதி, திங்கள்,வெள்ளி, சனிக் கிழமைகள், வளர் சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி திதிகள், கிருத்திகை நட்சத்திரம்).

எண் 6

1. சென்னை ஸ்ரீவெள்ளீஸ்வரர் திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு கால் மெட்டிகளை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருதலால் கண் பார்வை மங்குதல், மாலைக் கண், புற்று நோய் போன்ற கண் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

2. கழுதையை வாகனமாக உடைய ஸ்ரீபல்குனி சித்தர் அருளும் பூவாளூர் திருத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொண்டு கழுதைகளுக்கு காரட், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அளித்து வந்தால் மாடாக உழைத்தும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாத நிலை மாறி உழைப்புக்கேற்ற ஊதியமும், பண வரவும் கிட்ட இறைவன் அருள்புரிவார். மூதாதையர்களுக்கு வழிபாடுகள் விடுபட்டிருந்தால் அதற்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

3. சுக்ர வார அம்மன் அருளும் தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ராகு நேரத்தில் வழிபாடுகள் இயற்றி தானே அரைத்த மஞ்சளால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபடுதலால் தீர்க்க சுமங்கலித்துவம் பெற அன்னையின் அருள் கிட்டும்.

4. பல யுகங்களாக முருகப் பெருமாளின் அருளை வேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சுக்ர மூர்த்திக்கு தற்போது ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்தைத் தாண்டி உள்ள கிரிவலப் பகுதியில் ஏக முக தரிசனத்தை அடுத்து முருகப் பெருமானின் தரிசனம் கிட்டியது. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை வணங்கி சண்பக மலர்களால் மாலை தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி, பசு நெய் கலந்த பஞ்சாமிர்தத்தை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைத்து கிரிவலம் வரும் அடியார்களுக்கு வழங்கி வந்தால் தங்க, நவரத்தின வியாபாரிகள் நலம் அடைவர். ஆண் துணை இல்லாத குடும்பங்களிலும், ஆண் வாரிசுகள் இல்லாத தம்பதிகளும் தக்க நிவாரணம் கிடைக்கப் பெறுவார்கள்.

5. கும்பகோணம் அருகே வெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீராம மூர்த்தியை தரிசனம் செய்து இங்குள்ள சுக்ர தீர்த்தத்தில் நீராடி திண்டு தோசை, பெரிய வெங்காயம் கலந்த சட்னியுடன் தானம் அளித்தலால் ஆண்கள், பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் பெற முடியாத சுக்ர சக்திகளை ஓரளவு திரும்பப் பெறலாம். கம்ப்யூட்டரில் நீண்டநேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் நோய்களுக்கு நிவர்த்தி தரக் கூடிய தலம். ஆனால், மாதம் ஒரு முறையாவது இங்கு நீராடி வருதல் அவசியம்.

எண் 7

1. சப்த ரிஷிகள் அருளும் லால்குடி போன்ற சிவத்தலங்களிலும், சப்தரிஷீஸ்வரர் என்று இறைவன் நாமம் பூண்ட திருத்தலங்களிலும் சப்தமி திதிகளில் வழிபட்டு மஞ்சள் நிற ஆடைகள், உணவுகள், ஆபரணங்களைத் தானமாக அளித்தலால் இசைத் துறையில் உள்ளோர் முன்னேற்றம் அடைவர்.

2. அபூர்வமாக ஏழு பிரகாரங்களுடன் காட்சி தரும் பிரம்மாண்டமான திருக்கோயில்களான ஸ்ரீரங்கம், திருஅண்ணாமலை, மன்னார்குடி போன்ற திருத்தலங்களில் தினம் ஒரு பிரகாரத்திலாவது வலம் வந்து வாரத்தின் ஏழு நாட்களிலும் வழிபட்டு வருவதால் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு வழிகாட்டுதல் இன்றி தவிப்போர் தகுந்த வழிகாட்டியை அடைவர். ஆழ்ந்த நம்பிக்கை உடையோருக்கு முக்தியையே அளிக்கக் கூடியது இந்த சப்த பிரகாரங்கள் வழிபாடு. இவ்வாறு திருவரங்க சப்த பிரகாரங்களை 18 முறை நமஸ்கார பிரதட்சணத்துடன் வழிபட்ட பின்னரே ராமானுஜருக்கு அவருடைய குருநாதருடைய தரிசனம் கிட்டியது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

திருஅண்ணாமலை திருத்தலம் இறைவனே வலம் வரும் கிரிவலப் பாதையையே ஏழாவது பிரகாரமாக உடையது என்றால் இதைவிட சிறப்பான ஒரு பிரகாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரிசனம் செய்ய முடியுமா? பலரும் கிரிவலப் பாதையின் மகத்துவம் அறியாததால்தான் அதைச் சாதாரண வீதி, சாலை என்று எண்ணுவதால்தான் அதில் செருப்புகள் அணிந்து நடப்பது, கிரிவலப் பாதையில் எச்சில் துப்புவது போன்ற அசுத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அது சக்தி வாய்ந்த ஏழாவது பிரகாரம் என்பதை இனியாவது உணர்ந்து அங்கு முறையோடு கிரிவலம் வந்து அளப்பரிய பலன்களை அள்ளிச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

3. நமது பூலோக கணக்கில் சப்த ஸ்வரங்கள் என்ற ஏழு ஸ்வரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மற்ற லோகங்களில் ஏழிற்கும் மேற்பட்ட ஸ்வரங்களும், ஸ்வர தேவதைகளும் உண்டு. திருச்சி அருகே செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரரேஸ்வரர் திருத்தலத்தில் காணப்படும் இசைத் துõண்களைப் போல எங்கெல்லாம் இசைத் துõண்கள் உள்ளனவோ அத்திருக்கோயில்களில் வீணை, வயலின் போன்ற வாத்ய கருவிகளை வாசிக்கும் ஏழை இசைக் கலைஞர்களைக் கொண்டு இறைவனுக்கு நாதோபசாரம் செய்து மகிழ்வித்து, அந்த வித்வான்களுக்கு தக்க சன்மானம் வழங்கி கௌரவித்தலால் நரம்பு சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர் நலம் அடைவர்.

4. திருத்தனி திருத்தலத்தில் அமைந்துள்ள கன்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் சப்தரிஷி தீர்த்தத்தில் நீராடி தினைமாவு தேன் கலந்த உணவை பக்தர்களுக்குத் தானமாக அளித்து வந்தால் உடல், மன வியாதிகளால் தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நிறைவேறும். திருமணத்திற்குப் பின் தஞ்சை கரந்தை திருத்தலத்தில் அருளும் ஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்டரை வணங்கி நன்றி செலுத்துதல் அவசியமாகும். அப்போதுதான் பிரார்த்தனை முழுமை அடைகிறது என்பதை மனதில் கொள்ளவும்.

எண் 8

1. காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எண் எட்டு. அதனால்தான் எட்டை கால எண் என்றும் அழைக்கிறோம். ஒரு நாளின் பகல் பொழுதை ஒன்றரை மணி நேரம் கொண்ட எட்டு முகூர்த்தங்களாகவும் , இரவுப் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் பிரித்து கணக்கிடுவதால், எண் எட்டிற்கு பைரவ சக்திகள் மிகுந்திருக்கும். சீர்காழி, திருஅண்ணாமலை போன்று அட்ட (எட்டு) பைரவ மூர்த்தி அருளும் தலங்களில் தேய் பிறை அஷ்டமி தினங்களில் வழிபாடுகளை இயற்றி முந்திரி பருப்பு பாயசம் தானமாக வழங்குவதால் நேரம் காலம் பார்க்காது நிகழ்த்திய திருமணம், கிருஹப் பிரவேசம் போன்ற நற்காரியங்களில் ஏற்பட்ட கால தோஷங்களுக்கு ஓரளவிற்குப் பிராயச்சித்தம் கிட்டும்.

2. இறைவனே பைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருத்தலம், பைரவர் தனிச் சன்னதி கொண்டு அருளும் திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு, திருவாஞ்சியம், திருச்சி (பெரிய கடைவீதி ஸ்ரீபைரவர் கோயில்) போன்ற திருத்தலங்களில் இம்மூர்த்தியை வழிபட்டு நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி, கடலை மிட்டாய் போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத ஆபத்துக்கள் நீங்கும். இரவு நேரப் பயணங்களில் ஏற்படும் கால தோஷங்களுக்கு மிகக் குறைந்த அளவில் பரிகாரம் கிட்டும். இரவு நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பொதுவாக எவ்வித பரிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் இந்த பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

3. எண் எட்டிற்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அவதார மூர்த்திகளில் யாருக்குமே புரியாத புதிராக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளங்குவது போல எண் எட்டின் மகிமையும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டின் மகத்துவமும் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. கால தேசத்தைக் கடந்த நிலையில் நிற்கும் உத்தம பெருமாள் பக்தர்கள்தான் எட்டின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் அது மிகையாகாது.

கீழிருந்து மேலாகப் பார்த்தாலும், வலமிருந்து இடமாகப் பார்த்தாலும் எட்டின் தோற்றம் மாறாது என்பதே வேறு எந்த எண்ணிற்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.
மேலும், கையை எடுக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எட்டு என்ற எண் உருவத்தை எழுதிக் கொண்டே இருக்கலாம்.

இதனால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அலைபாயும் மனதை அடக்கி ஆள்வதே எண் எட்டு ஆகும். மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இந்த யுக்தியைத்தான் கையாண்டார். அதாவது கீதை என்ற ஒப்பற்ற தத்துவத்தை அர்ச்சுனுக்கு புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால், மிகவும் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு முனைப்பட்ட மனதுடன் கேட்க வேண்டும் அல்லவா? இவ்வாறு ஒரு முனைப்பட்ட சக்தியைத் தருவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் அஷ்ட வக்ர சக்திகளைப் போர் முனையில் நிறுவினார். அஷ்ட வக்ர சக்திகளைப் பற்றி மனித மனம் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதை எண் எட்டில் உருவகப்படுத்திப் பார்க்கலாம்.

மேலே ஒரு வட்டமும் கீழே ஒரு வட்டமும் இணைந்து உருவாவதுதானே எட்டு. இதில் மேல் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும், கீழ் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும் அஷ்ட வக்ர சக்திகளைக் குறிக்கின்றன.இந்த அஷ்ட வக்ர சக்திகள் எல்லாத் திசைகளிலும் சுழலும் தன்மை உடையது. இவ்வாறு எட்டுடன் சுழலும் மனச் சக்தியானது மெல்ல மெல்ல இரண்டு வட்டங்கள் சந்திக்கும் நடுப் புள்ளியில் வந்து சேர்ந்து விடும். அந்நிலையில் மனக் குழப்பம் நீங்கி தெளிவு பெறும். இவ்வாறு அர்ச்சுனனின் மனம் தெளிவடைந்தபோதுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதை என்னும் அரிய உபநிஷத்தை உபதேசித்தார். அன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்த அஷ்ட வக்ர தத்துவமே இன்றைய விஞ்ஞானத்தில் அணு ஆராய்ச்சி, வானிலை, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் குழலூதும் திருஉருவத்தை வீட்டில் வைத்து முடிந்தபோதெல்லாம் அவர் திருஉருவத்தை மனக் கண் முன் கொண்டு வந்து தியானித்துக் கொண்டிருந்தால்தான் எட்டைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆத்ம விசாரத்திற்கு முன்னோடியாக இருப்பதுதான் குழலுõதும் கிருஷ்ணனின் திருஉருவம்.

4. ஏற்கனவே கூறியதுபோல் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் காற்றில் அகப்பட்ட பஞ்சின் நிலையில் இருப்பதால் விதியின் வலிமையான பிடியில் இருந்து ஓரளவு விடுதலை பெற உதவுவதே திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி திருத்தல வழிபாடு.

எண் 9

1. எண் வரிசையில் கடைசியாக வரும் 9 பூரணத்துவத்தைக் குறிக்கிறது. எந்த எண்ணின் ஒன்பது மடங்கும் ஒன்பதாகவே வரும். எனவே, ஒன்பதை கடைசி எண் என்று சொல்லாமல் முழுமையான எண், பூரணமான எண் என்று சொல்வதே சிறப்பு.

எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை நினைத்து காரியத்தை ஆரம்பித்து, அந்தக் காரியம் நிறைவேறியவுடன் ஆஞ்சநேய மூர்த்திக்கு நன்றி சொல்லி முடிப்பது வழக்கம். இந்த இரண்டு மூர்த்திகளுக்குமே உரிய எண்ணாக ஒன்பது இருப்பதே அதன் சிறப்பு.

உலகிலேயே பெரிய பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையாரை ஒன்பது முறை கிரிவலம் வந்து வணங்குவது சிறப்பான வழிபாட்டு முறையாகும். கிரிவலத்தின்போது பூரணக் கொழுக்கட்டைகளை தானமாக அளித்தலால் பாதியில் நின்று போன திருமணங்கள், வீட்டு மனை வேலைகள், கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள், குளம், கிணறு தோண்டும் வேலைகள் நிறைவு பெறும்.

2. நவகிரக வழிபாடு தோன்றுவதற்கு முன்பே நிலவிய திருமழபாடி போன்ற சிவத்தலங்களில் நவகிரக சக்திகளை மூலவரே ஏற்று அருள்பாலிப்பதால் இத்தலங்களில் ஒன்பதின் சக்திகள் அபரிமிதமாக இருக்கும். ஒன்பது குழிகள் கொண்ட பணியாரச் சட்டியில் இனிப்பு பணியாரம் சுட்டு ஆடு மாடு மேய்ப்பவர்களுக்குத் தானமாக வழங்கினால் நாற்கால் பிராணிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம். புதிது புதிதாக வரும், இனந் தெரியாத காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

3. இறை மூர்த்திகள் வில், அம்பு, வேல், கத்தி போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருகிறார்கள் அல்லவா? இந்த ஆயுதங்களால் அவர்கள் தீயவர்களைத் தண்டிக்கிறார்கள் என்று கூறுகிறோம். உண்மையில் கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. அவரவர் செய்த நல்வினை தீவினை சக்திகளே மனிதர்களைத் தண்டிக்கின்றன.

ஒரு ஜீவனின் அகங்காரம் காரணமாக அத்து மீறிய கொடுமைகள் நிகழும் இறைவன் பல அவதாரங்கள் மூலம் அந்த ஜீவனின் ஆணவத்தை மட்டுமே அழிக்கிறான். இறை மூர்த்திகளின் இந்த ஆயுதங்களை நாம் எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் எல்லா அனுகிரகங்களையும் அந்த ஆயுதங்களின் மூலமாகவே பெறலாம்.

இம்முறையில் ஏற்பட்டதே பெருமாளின் சங்கு, சக்கர வழிபாடு. அதே போல சிவபெருமான் தாங்கி இருக்கும் மழுவானது ஒன்பதின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் திருக்கோயில்களில் காட்சி தரும் இந்த மழு ஆயுதத்திற்கும், மற்ற ஆயுதங்களுக்கும் சுத்தமான நல்ல எண்ணைக் காப்பிட்டு, கையால் அரைத்த சந்தனப் பொட்டிட்டு வணங்குவதால் தலைக்கு வந்த துன்பங்கள் தலைப்பாகையோடு போக ஈசன் அருள்புரிவார்.

4. அபூர்வமாக ஒன்பது கரங்களுடன் அருள்புரியும் ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாடு எண் ஒன்பதின் சக்திகளை எளிதில் பெற உதவும் உத்தம வழிபாடாகும். இதிலும் விசேஷமாக ஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் மிளிரும் சக்கரத்தை வணங்கி வருதல் மிகவும் சிறப்பு. நாம் வாழும் பூமிக்கு மூன்று விதமான சுழற்சிகள் உண்டு. அதாவது, தன்னைத்தானே சுற்றி வருதல், சூரியனைச் சுற்றி வருதல், தனது அச்சில் சுழல்தல் என்று மூன்று விதமான சுழற்சி முறைகள் மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்த ஒன்று. இவை மட்டுமல்லாமல் நாம் அறியாத பல சுழற்சி முறைகள் பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் உண்டு. இந்த சுழற்சி ரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். பொருட்களின் சுழற்சி முறைகளில் இன்றைய கலியுக மக்களுக்குத் தேவையான ஒன்பது சுழற்சி அனுகிரக சக்திகளை அளிப்பதே ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் பிரகாசிக்கும் சக்கரமாகும். தொடர்ந்து பல்லாண்டுகள் ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டை நிறைவேற்றி வந்தால் மனிதனின் ஊனக் கண்கள் மூலமாகவே இந்த ஒன்பது விதமான சுழற்சிகளையும் தரிசனம் செய்ய முடியும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை முறைகளை ஸ்ரீஆயுர்தேவி மகிமை என்னும் எமது ஆஸ்ரம நூலில் காணலாம்.

... சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் @ http://kulaluravuthiagi.com/kusa.htm