சியாமளா தண்டகம் .. காளிதாசனின் படைப்பு
श्यामलादण्डकं कालिदासविरचितम् ॥
ஶ்யாமலாதண்டகம் காலிதாஸவிரசிதம் ॥
தியான ஸ்லோகத்தில்,
அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக,
திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக,
தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக,
கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது. இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே.
வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது.
மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
॥ த்யானம் ॥ … ॥ ध्यानम् ॥
माणिक्य वीणा मुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम् ।
माहेन्द्र नीलद्युति कोमलाङ्गीं मातङ्ग कन्यां मनसा स्मरामि ॥ १॥
चतुर्भुजे चन्द्रकलावतंसे कुचोन्नते कुङ्कुमरागशोणे ।.
पुण्ड्रेक्षुपाशाङ्कुशपुष्पबाण- हस्ते नमस्ते जगदेकमातः ॥ २॥
மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||
சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண-
ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||
I always meditate on the daughter of Matanga Maharshi,
Who playfully holds a Veena made of Mankikya, Who is lazy by intoxication, Whose speech is picturesque and beautiful and
Whose body is resplendent like the dark blue gemstone.
O The Mother of the Worlds, Who has four hands, Whose head is adorned with the crescent moon, Who has a full bosom, Who has a complexion red as kukum and Who carries in HER hands a bow of sugarcane, arrows of flowers, the rope and the ankusa (goad),
my prostrations before YOU.
மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும், பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும்,
நீல மணியின் ஒளியுடன் கூடிய அழகிய உடலுறுப்புகள்
உள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான
சியாமளா தேவியை மனதில் தியானம் செய்கிறேன்.
நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும், நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும்,
குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன சியாமளா தேவியே!
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
॥ विनियोगः ॥ … ॥ வினியோக: ॥
माता मरकतश्यामा मातङ्गी मदशालिनी ।
कुर्यात् कटाक्षं कल्याणी कदम्बवनवासिनी ॥ ३॥
மாதா மரகதஶ்யாமா மாதங்கீ³ மத³ஶாலினீ ।
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கத³ம்ப³வனவாஸினீ ॥ 3॥
May the Mother, Who is dark as the marakata gemstone
Who is the daughter of Matanga Maharshi, Who is exuberant,
Who is auspicious and Who abides in the Kadamba forest,
cast on me the glances from HER eye-corners.
உலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல
நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும், மதங்க முனிவரின் புத்ரியுமான சியாமளா தேவியே
உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன்.
॥ ஸ்துதி ॥ … ॥ स्तुति ॥
जय मातङ्गतनये जय नीलोत्पलद्युते ।
जय सङ्गीतरसिके जय लीलाशुकप्रिये ॥ ४॥
ஜய மாதங்க³தனயே ஜய நீலோத்பலத்³யுதே ।
ஜய ஸங்கீ³தரஸிகே ஜய லீலாஶுகப்ரியே ॥ 4॥
Victory to the daughter of Matanga.
Victory to the ONE who has the complexion of the dark blue lily. Victory to the ONE who enjoys and appreciates music.
Victory to the ONE who is fond of the playful parrot.
நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக.
॥ दण्डकम् ॥ … ॥ தண்டகம் ॥
जय जननि सुधासमुद्रान्तरुद्यन् मणीद्वीप संरूढ् –
बिल्वाटवीमध्य कल्पद्रुमा कल्प
कादम्ब कान्तारवासप्रिये, कृत्तिवासप्रिये, सर्वलोकप्रिये |
ஜய ஜனனீ ஸுதாஸமுத்ரான்த ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட
பில்வாடவீமத்ய கல்பத்ருமா கல்ப காதம்ப காந்தாரவாஸப்ரியே
க்ருத்தி வாஸப்ரியே ஸர்வ லோகப்ரியே |
(Victory to the Divine Mother) Who is the darling of Siva and the whole world and Who likes to live in the forest of kalpavriksha-like kadamba trees surrounding which is a forest of bilwa trees on the island of Manidweep in the midst of the ocean of nectar.
அம்ருதம் எனும் கடலின் மத்தியில், மனதைக் கவரும் சிறப்புடைய தீவில், வில்வ மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில், கற்பக விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே, யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே, அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே,
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
सादरारब्ध सङ्गीत सम्भावना सम्भ्रमालोलनी
पस्रगाबद्ध चूलीसनाथत्रिके सानुमत्पुत्रिके |
ஸாதராரப்த ஸங்கீத ஸம்பாவனா ஸம்ப்ரமாலோலநீ
பஸ்கராபத்த சூலீஸனாதத்ரிகே ஸானுமத்புத்ரிகே |
(Victory to the Divine Mother) who is the daughter of Himavan, Whose locks around which are tied garlands of nipa
which oscillate when SHE nods in appreciation of the melodious music started in HER honor.
ஹிமவானின் புதல்வியே! நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத
ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும்
கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு.
शेखरी भूतशीतां शुरेखामयूखावलीबद्ध-सुस्निग्ध
नीलालकश्रेणि शृङ्गारिते लोकसम्भाविते |
कामलीलाधनु स्सन्निभ भ्रूलता पुष्पसन्दोह सन्देह कृल्लोचने,
वाक्सुधासेचने, चारुगोरोचना पङ्ककेलील लामाभिरामे, सुरामे | रमे |
ஸேகரீ பூதஸீதாம் ஸுரேகாமயூகாவலிபத்த ஸுஸ்நிக்த
நீலாலகஸ்ரேணி ஸ்ருங்காரிதே லோகஸம்பாவிதே |
காமலீலாதனு: ஸன்னிப ப்ரூலதா
புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசனே வாக்ஸுதாஸேசனே
சாருகோரோசனா பங்ககேலீல லாமாபிராமே ஸுராமே | ரமே |
(Victory to the Divine Mother) Who is worshipped by the people
and Whose beauty is enhanced by the dark blue locks which are smooth and which are illumined by the rays from the crescent
moon adorning HER forehead.
சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே!
நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின்
கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, உனக்கு எனது நமஸ்காரங்கள்.
(Victory to the Divine Mother) Who is the embodiment of beauty,
Who is Lakshmi Herself, Whose eye-brows give the impression of
the bow of Cupid, Whose eyes lead one to doubt that they are the flowers of the eye-brow creepers, Who showers sweet words and Who is adorned with a pretty bindi (a round mark on the forehead)
of gorochana.
மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே! காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ என ப்ரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே!
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
प्रोल्लसद्ध्वालिका मौक्तिकश्रेणिका चन्द्रिका मण्डलोद्भासि लावण्य
गण्डस्थलन्यस्त कस्तूरिकापत्र रेखासमुद्भूत सौरभ्य- सम्भ्रान्त
भृङ्गाङ्ग नागीत सान्द्रीभवन्मन्द्र तन्त्रीस्वरे,सुस्वरे | भास्वरे |
ப்ரோல்லஸத்வாலிகா மௌக்திகஸ்ரேணிகா
சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய
கண்டஸ்தலன்யஸ்த கஸ்தூரிகாபத்ர
ரேகாஸமுத்பூத ஸௌரப்ய ஸம்ப்ரான்த
ப்ருங்காங்க நாகீத ஸாந்த்ரீபவன்மந்த்ர
தந்த்ரீஸ்வரே, ஸுஸ்வரே | பாஸ்வரே |
(Victory to the Divine Mother) Whose beautiful cheeks are lighted
up by the moonlight-like lustre from the string of pearls adorning
the short curly hair (playing on her forehead) and the melody from the Veena is made denser by the humming of honey-bees which
are attracted by the fragrance arising from the patterns of
kasturi made on HER cheeks. Victory to the Mother Who has a melodious voice and Who has a resplendent form.
ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும், கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா
நாதத்துடன் இணைந்தவளே, வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே, உனக்கு எனது நமஸ்காரங்கள்.
वल्लकी वादनप्रक्रिया लोलतालीद लाबद्ध-
ताटङ्क भूषाविशेषान्विते, सिद्धसम्मानिते |
வல்லகீ வாதனப்ரக்ரியா லோலதாலீத லாபத்த
தாடங்க பூஷாவிஷேஷான்விதே, ஸித்தஸம்மானிதே|
(Victory to the Divine Mother) Who is honoured by the siddhas and Who is adorned with tatankas (ear-ornaments) crafted from palm leaves which oscillate in the process of her playing the veena.
दिव्यहाला मदोद्वेल हेला लसच्चक्षुरान्दोलन
श्रीसमाक्षिप्तकर्णैक- नीलोत्पले |
श्यामले पूरिताशेषलोकाभि | वाञ्छाफले श्रीफले |
திவ்யஹாலா மதோத்வேல ஹேலா லஸச்சக்ஷுராந்தோலன
ஸ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக நீலோத்பலே|
ஶ்யாமலே, பூரிதாஸேஷலோகாபி | வாஞ்சாபலே ஸ்ரீபலே |
(Victory to the Divine Mother) the beauty of Whose eyes
undulating because of the inebriation caused by imbibing
somarasa, surpasses the beauty of the blue lily worn on HER
ears, Who is of dark blue complexion, Who fulfils the desires of
all the people, Who is without blemish and Who gives riches as
the fruit (of worshiping HER)
சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே,
நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் விரும்பும்
பலன்களை அளிப்பவளே, பரிசுத்தமானவளே!
ஐஸ்வர்யங்களை அளித்து அருள்பாலிக்கின்றவளே,
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
स्वेद बिन्दूल्ल सद्फाल लावण्य निष्यन्द सन्दोह सन्देह कृन्नासिकामौक्तिके
सर्वविश्वात्मिके सर्वसिद्ध्यात्मिके कालिके |
ஸ்வேத பிந்தூல்ல ஸத்ப்பால லாவண்ய நிஷ்யந்த
ஸந்தோஹ ஸந்தேஹ க்ருன்னாஸிகாமௌக்திகே
ஸர்வ விஸ்வாத்மிகே ஸர்வஸித்தயாத்மிகே காளிகே |
(Victory to the Divine Mother) Who is Kali, Who is the soul of all mantras and all psychic powers and the pearl on whose nose-stud gives the impression that it is a drop oozing from the beauty of
HER forehead with beads of perspiration glistening on it.
मुग्द् धमन्दस्मितोदार वक्त्र-स्फुरत् पूग
ताम्बूल कर्पूर खण्डोत्करे | ज्ञानमुद्राकरे |
सर्वसम्पत्करे पद्मभास्वत्करे | श्रीकरे |
முக்த மந்தஸ்மிதோதார வக்த்ரஸ்புரத்பூக
தாம்பூல கற்பூர கண்டோத்கரே | ஞானமுத்ராகரே |
ஸர்வஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே | ஸ்ரீகரே |
(Victory to the Divine Mother) Whose face is lighted up by a
beautiful smile, Whose mouth is fragrant with betel leaf areca nut
and camphor pieces, Who sports the gnana mudra on HER hand, Who showers riches (on HER devotees) and
Whose hands are beautiful and soft like the lotus.
காளியே! மந்திரங்களுக்கும் அமானுஷ்ய ஆற்றல்களுக்கும் இருப்பிடமானவளே! நெற்றியில் காணும் வியர்வைத் துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞான முத்திரை உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, எழில் மிகுந்த தாமரை புஷ்பம் போல் கைகளை உடையவளே!
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
कुन्द पुष्पद्युतिस्निग्ध दन्तावली
निर्मला लोल कल्लोल सम्मेलन स्मेर शोणाधरे | चारुवीणाधरे | पक्वबिम्बाधरे |
குந்த புஷ்பத்யுதிஸ்நிக்த தந்தாவலீ
நிர்மலா லோல கல்லோல ஸம்மேலனஸ்மேர ஸோனாதரே |
சாருவீணாதரே | பக்வபிம்பாதரே |
(Victory to the Divine Mother) Who carries the beautiful veena, Whose lips are red like the ripe bimba fruit and Whose teeth shine
like jasmine buds and the red of HER lips mixes with the pure
white of HER teeth when SHE smiles.
திருக்கரங்களில் வீணையை ஏந்தியவளே, முல்லைபுஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் ப்ரகாசத்துடன் கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே,
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
सुललित नवयौवना रम्भ चन्द्रोदयोद्वेल लावण्य
दुग्धार्णवाविर्भ वत् कम्बु बिम्बोक भृत्कन्थरे | सत्कलामन्दिरे | मन्थरे |
ஸுலலித நவயௌவனா ரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய
துக்தார்ணவாவிர்ப வத்கம்பு பிம்போக ப்ருத்கந்தரே |
ஸத்கலாமந்திரே | மந்த்தரே |
(Victory to the Divine Mother) Whose gait is leisurely, Who is the repository of all fine arts, Whose neck is like the conch emerging from the milky ocean of the high tide of beauty caused by the
rising moon of freshness of youth, delicate and beautiful.
நளின நடையுடையவளே! அனைத்து கலைகளின் களஞ்சியமாக இருப்பவளே! துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்து உடையவளே!
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
दिव्यरत्नप्रभा बन्धुरच्छन्न हारादि भूषा समुद्योतमाना नवद्याङ्गशोभे | शुभे |
திவ்யரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா
ஸமுத்யோதமானா நவத்யாம் ஸுஸோபே | ஸுபே |
(Victory to the Divine Mother) Who is the embodiment of auspiciousness and whose blemishless beauty is lighted up by ornaments like necklaces studded with divine diamonds and gems.
சிறந்த ரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே,
மங்கள ஸ்வரூபிணியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.
रत्नकेयूर रश्मिच्छटापल्लव प्रोल्लस द्दोल्लता राजिते योगिभिःपूजिते |
ரத்னகேயூர ரஸ்மிச்சடாபல்லவ
ப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே யோகிபி: பூஜிதே |
(Victory to the Divine Mother) Who is worshipped by the yogis
and Whose hands shine with the rays from the diamond-studded keyura, the rays giving the impression of tender leaf buds.
विश्वदिङ्मण्डलव्यापि-माणिक्य-
तेजस्फुरत्-कङ्कणालंकृते- विभ्रमालंकृते- साधुभिस्सत्कृते!
விஸ்வதிங்மண்டல வ்யாபி மாணிக்ய
தேஜ:ஸ்புரத்கங்கணாலங்க்ருதே விப்ரமாலங்க்ருதே
ஸாதகை: ஸத்க்ருதே |
(Victory to the Divine Mother) Who is worshipped by sadhus,
the splendour of the manikya in Whose bangles spreads in all directions of the world and who is splendidly adorned.
ரத்னங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே,
உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
वासरारंभवेला-समुज्जृंभमाणारविन्द-प्रतिद्वन्द्वि-पाणिद्वये! संततोद्यद्दये! अद्वये!
வாஸராரம்ப வேலஸமுஜ்ரும்ப மாணாரவிந்த
ப்ரதித்வன்த்வி பாணித்வயே | ஸந்ததோத்யத்தயே | அத்வயே |
(Victory to the Divine Mother) Who is one without a second, Whose compassion is always ascendant and Whose both hands surpass the beauty of the blooming lotus in the early morning.
दिव्य्ररत्नोर्मिका-दीधितिस्तोम-
संध्यायमानाङ्गुलीपल्लवोद्यन्नखेन्दु-प्रभामण्डले !
सन्नताखण्डले ! चित्प्रभामण्डले ! प्रोल्लसद्कुण्डले!
திவ்யரத்னோர்மிகா தீதிதிஸ்தோம
ஸந்த்யாய மானாங்குளி பல்லவோத்யன்னகேந்து| ப்ரபாமண்டலே ஸன்னதாகண்டலே | சித்ப்ரபா மண்டலே | ப்ரோலஸத்குண்டலே|
(Victory to the Divine Mother) before whom bows Indra,
Who is effulgent consciousness, Whose ear-globes shine and
Whose nails give the impression of the orb of the rising moon,
the diamond-studded rings on HER fingers giving out bright
red rays creating the impression of evening twilight period
(sayam sandhya).
இரண்டற்று ஒன்றேயானவளே, சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே, எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, சாயங்கால சிவந்த வானம் போல் கைகளை அலங்கரிக்கும் ரத்ன மோதிரங்களின் ஒளி, உதயமாகும் நிலவின் கோளம் போல் ப்ரகாசமுடைய தளிர் நகம் விரல்களுடையவளே, ஞானமாகிற ஒளியினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே,
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
तारकाराजिनीकाश हारावलिस्मेर चारुस्तना भोगभारान
मन्मध्य-वल्लीवलिच्छेद वीचीसमुद्यत्समुल्लास सन्दर्शिताकार
सौन्दर्यरत्नाकरे |. वल्लकीभृत्करे | किङ्कर श्रीकरे |
தாரகாராஜிநீகாஸ ஹாராவலிஸ்மேர சாருஸ்தனா போகபாரான மன்மத்ய வல்லீபலிச்சேதவீசீ *ஸமுல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே வல்லகீப்ருத்கரே | கிங்கர ஸ்ரீகரே |
(Victory to the Divine Mother) Who showers wealth on those
serving HER, Whose bosom is adorned by several gold chains studded with diamonds resembling a cluster of stars and
Who is slightly bent (because of the weight of the breasts) and
Who has wave-like folds in the middle which further enhance the beauty of what is already an diamond mine (or ocean) of beauty.
हेमकुम्भोपमोत्तुङ्ग वक्षोजभारावनम्रे | त्रिलोकावनम्रे |
ஹேமகும்போப மோத்துங்க வக்ஷோஜ பாராவநம்ரே | த்ரிலோகாவனம்ரே |
(Victory to the Divine Mother) Whose full breasts resemble pots
of gold causing HER to bend slightly and to Whom the three
worlds bow down (as the Divine Mother)
लसद्वृत्तगम्भीर नाभीसरस्तीर शैवाल शङ्काकरश्याम रोमावलीभूषणे | मञ्जुसम्भाषणे |
லஸத்வ்ருத்த கம்பீர நாபிஸரஸ்தீர ஸைவால ஸங்காகரஸ்யாம ரோமாவலீ பூஷணே | மஞ்சுஸம்பாஷனே |
(Victory to the Divine Mother) Whose speech is sweet and
Who is adorned with dark hair around the deep and round navel which makes one think of a lake with moss on its banks.
நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசையினால் சோபையூட்டப்பட்ட உயர்ந்த
பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை
உடையவளே, தங்கக்குடத்திற்கு ஒப்பான மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.
चारुशिञ्चत्कटीसूत्र निर्भत्सितानङ्ग लीलधनुश्शिञ्चिनीडम्बरे| दिव्यरत्नाम्बरे|
சாருஸிஞ்ஜத்கடீஸூத்ர நிர்பர்த்ஸிதாநங்க
லீலாதனு: ஸிஞ்ஜனீ டம்பரே, | திவ்யரத்னாம்பரே |
(Victory to the Divine Mother) Who is clothed in divine
gem-studded raiment and the tinkling sound from Whose
waist-belt competes with that from the sporty bow of Kama
(Cupid) (in arousing passionate love)
पद्मरागोल्लस न्मेखलामौक्तिकश्रोणिशोभाजितस्वर्णभूभृत्तले| चन्द्रिकाशीतले|
பத்மராகோல்லஸன் மேகலா பாஸ்வரஸ்ரேணி ஸோபாஜிதே ஸ்வர்ண பூப்ருத்தலே| சந்த்ரிகா ஸீதலே|
(Victory to the Divine Mother) Who is as cool as the moonlight
and the expanse and beauty of Whose hip, adorned with a
mekhala which shines with red stones, surpasses the expanse
and beauty of the plateau of the golden mountain (Meru).
विकसित नवकिंशुकाताम्र दिव्यां
शुकच्छन्न चारूरुशोभा पराभूत सिन्दूर शोणाय
मानेन्द् रमातङ्ग हस्मार्ग्गले| वैभवानर्ग्गले| श्यामले|
விகஸித நவகிம்ஸுகாதாம்ர திவ்யாம்
ஸுகச்சன்ன சாரூருஸோபா பராபூத ஸிந்தூர ஸோணாய
மானேந்த்ர மாதங்க ஹஸ்தார்கலே| வைபவானர்கலே| ஸ்யாமளே|
Victory to the Divine Mother) Whose beautiful thighs covered with divine clothes with the colour of new blooming kimshuka flowers, compete with Indra’s elephant’s trunk smeared with sindur,
Who is a dark beauty and Whose grace flows unimpeded.
ரத்தினங்கள் பதித்த ஜரிகை வஸ்த்ரம் அணிந்தவளே,
மன்மதனின் வில்லின் நாணுக்கு ஒப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, பவுர்ணமி நிலவு போன்று
குளிர்ந்தவளே, பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய இடையுடையவளே, மலர்ந்த பலாச புஷ்பம் போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று தோன்றுகிறது,
எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே,
இந்திரநீல போன்ற நிறம் உடையவளே,
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
कोमलस्निग्द्ध नीलोत्पलोत्पादि तानङ्गतूणीर
शङ्काकरोदार जङ्घालते चारुलीलागते |
கோமளஸ்நிக்த நீலோத்பலோத்பாதி தானங்க தூணீர
ஸங்காக ரோதார ஜங்காலதே சாருலீலாகதே |
(Victory to the Divine Mother) Whose lower leg is pretty and
smooth giving the impression of Kama’s quiver made of blue lilies
and Whose gait is pretty and playful.
नम्रदिक्पाल सीमन्तिनी कुन्तलस्निग्द्ध
नीलप्रभापुञ्च सञ्जात दुर्वाङ्कुरा शङ्क सारङ्ग
संयोगरिङ्खन्न खेन्दूज्ज्वले प्रोज्ज्वले| निर्मले|
நம்ரதிக்பால ஸீமந்தினீ குந்தலஸ்நிக்த
நீலப்ரபாபுஞ்ச ஸஞ்ஜாத தூர்வாங்குரா ஸங்க ஸாரங்க
ஸம்யோகரிங்கன்ன கேந்துஜ்வலே ப்ரோஜ்வலே | நிர்மலே |
(Victory to the Divine Mother) Who is resplendent and pure and Whose toe nails are brilliant and Who is surrounded by deer
which are attracted by the dark smooth locks of the consorts of
the presiding deities of the eight quarters who bow down at HER feet. The deer are deluded into thinking, by the texture and colour
of the hair, that it is green durva grass.
நீலத்தாமரை புஷ்பத்தினாலான மன்மதனின் அம்புறாத்தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற மென்மையான கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே, அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன்
அவை அறுகம்புல் தளிர்களா என்று அம்பிகையை சுற்றிநிற்கும் மான்கள் நினைத்தன. சந்திரன் போன்ற மிகையான
ப்ரகாசத்துடன் விளங்குபவளே, உனக்கு எனது நமஸ்காரங்கள்.
प्रह्व देवेश लक्ष्मीश भूतेश तोयेश वाणीश कीनाश दैत्येश यक्षेश
वाय्वग्निकोटीर माणिक्य संहृष्ट बाला तपोद्दाम–
लाक्षारसारुण्य तारुण्य लक्ष्मी गृहिताङ्घ्रि पद्म्मे सुपद्मे | उमे |
ப்ரஹ்வ தேவஸ லக்ஷ்மீச பூதேச தோயேச
வாணீ ச கீனா ச தைத்யே ச யக்ஷேச
வாய்வக்னி மாணிக்ய சங்க்ருஷ்ட கோடீர பாலா தபோத்தாம
லாக்ஷாரஸாருண்ய தாருண்ய லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரீ பத்மே ஸுதப்மே | உமே |
Victory to the Divine Mother) before whom bow down Indra,
Vishnu, Siva, the lokapalas, Brahma, Yama, the Asura King,
Kubera, Vayu, Agni and whose feet, adorned with red laksharasa and caressed by Lakshmi, shine like the light of the rising sun by
the rays of manikya in the crowns of the celestials bowing down.
வணங்குகின்ற இந்திரன், விஷ்ணு, சிவன், யமன், வருணன்,
குபேரன், ப்ரஹ்மா, நிருருதி, வாயு, அக்னி, இவர்களுடைய கிரீடத்திலுள்ள மாணிக்க மணிகளின் ஒளியால் இளம் வெய்யில் போல் சிவந்ததும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களை உடையவளே, உமாதேவியே!உனக்கு எனது நமஸ்காரங்கள்.
सुरुचिरनवरत्नपीठस्थिते सुस्थिते |
रत्नपद्मासने रत्नसिम्हासने शङ्खपद्मद्वयोपाश्रिते विश्रुते |
तत्र विघ्नेश दुर्गावटुक्षेत्रपालैर्युते |
मत्तमातङ्ग कन्या समूहान्विते | भैरवैरष्टभिर्वेष्टिते |
मञ्चुला मेनकाद्यङ्ग नामानिते | देवि वामादिभिः शक्तिभिस्सेविते |
धात्रि लक्ष्म्यादिशक्त्यष्टकैः संयुते | मातृकामण्डलैर्मण्डिते |
यक्षगन्धर्वसिद्धाङ्गना मण्डलैरर्चिते |
भैरवी संवृते पञ्चबाणात्मिके | पञ्चबाणेन रत्या च सम्भाविते |
ஸுருசி நவரத்ன பீடஸ்திதே ஸுஸ்திதே |
ரத்ன பத்மாஸனே ரத்ன ஸிம்ஹாஸனே ஸங்க பத்மயோபாஸ்ரிதே|
தத்ர விக்னேஷ துர்காவடுக்ஷேத்ரபாலைர்யுதே |
மத்தமாதங்க கன்யா ஸமூஹான்விதே |
பைரவைரஷ்டபிர்வேஷ்டிதே |
மஞ்ஜுளா மேனகாத்யங்க நாமானிதே,
தேவி வாமாதிபி:ஸக்திபி:ஸேவிதே |
தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகை: ஸம்யுதே |
மாத்ருகா மண்டலைர் மண்டிதே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கநா மண்டலைரர்சிதே |
பைரவீஸம்வ்ருதே பஞ்சபாணாத்மிகே |
பஞ்ச பாணேனே ரத்யா ச ஸம்பாவிதே |
(Victory to the Divine Mother) Who is seated on the dais of pretty nine jewels, Whose throne is of diamonds, Who is served by the Shankha and Padma Nidhis, Who is famous, Who is accompanied
by Ganesha, Durga, Vatu and Kshetrapala, Who has the company
of intoxicated matanga kanyas, Who is surrounded by the eight bhairavas, Who is honoured by Manjula, Menaka and other
celestial damsels, Who is served by saktis like Vama, eight saktis
of Dhatri ,Lakshmi and others, Who is worshipped by the seven mothers, yakshas, gandharvas and the siddhanganas, Who is surrounded by bhairavies, Who is the very soul of Kama, Who is honoured by Kama and Rati and Who is propitiated by Vasanta
who enjoys HER affection.
நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகிய சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளே;
சங்க நிதி பதும நிதி இரண்டாலும் சேவிக்கப்படுபவளே;
(சங்க நிதி வலம்புரிச் சங்கைக் குறிக்கிறது, பதும நிதி தாமரை மலரைக் குறிக்கிறது, இவை செல்வ வளத்தையும், அறிவையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.)
விநாயகர், துர்க்கை, ப்ரம்மச்சர்யம் பூண்ட பிரம்ம தேவதைகள், க்ஷேத்திரபாலர் இவர்களுடன் கூடியவளே; ஆனந்தத்தில் திளைக்கும் மதங்க முனிவரின் புதல்விகளால் சூழப்பட்டவளே; மஞ்ஜுளா, மேனகா முதலிய அப்ஸர ஸ்தீரிகளால் போற்றப்படுபவளே;
வாம சக்தி ( இச்சா சக்தி (விருப்பம்), கிரியா சக்தி (செயல்), ஞான சக்தி (அறிவு) ஆகிய மூன்று முக்கிய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது),
மற்றும் தாத்ரியின் எட்டு சக்திகளால் பூஜிக்கப்படுபவளே; ப்ராம்ஹீ முதலிய சப்த மாதாக்களால் பூஜிக்கப்படுபவளே;
யக்ஷர், கந்தர்வர், ஸித்தர் இவர்களால் பூஜிக்கப்படுபவளே;
எட்டு பைரவிகளால் சூழப்பட்டவளே; மன்மதனைப் போன்று மயங்க வைக்கும் ரூபலாவண்யம் உடையவளே; மன்மதன் ரதிதேவி இவர்களாலும் பூஜிக்கப்படுபவளே; ப்ரியமுள்ள வஸந்தருதுவினால் சந்தோஷப்படுத்தப்படுபவளே,
உனக்கு எனது நமஸ்காரங்கள்.
प्रीतिभाजा वसन्तेन चानन्दिते | भक्तिभाजं परं श्रेयसे | कल्पसे |
योगिनां मानसे द्योतसे छन्दसामोजसा भ्राजसे |
गीतविद्या विनोदाति तृष्णेन कृष्णेन सम्पूज्यसे |
भक्तिमच्चेतसा वेधसा स्तूयसे | विश्वहृद्येन वाद्येन विद्याधरैर्गीयसे |
ப்ரீதிபாஜா வஸந்தேன சானந்திதே |
பக்திபாஜம் பரம் ஶ்ரேயஸே | கல்பஸே |
யோகினாம் மானஸே த்யோதஸே| ச்சந்தஸா மோஜஸா ப்ராஜஸே|
கீத வித்யா விநோதாதி த்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே |
பக்திமச்சேதஸா வேதஸா ஸ்தூயஸே |
விஸ்வஹ்ருத்யேன வாத்யேன வித்யாதரைர்கீயஸே |
O Mother! You bless Your devotees with material and spiritual welfare. You shine in the hearts of yogis. You shine by the powerful Vedic chants. You are worshipped by Krishna who very much likes gitavidya( the fine art of music). Brahma sings Your praises with deep devotion. Vidyadharas sing Your glories with instruments
which captivate the hearts of all.
உலகின் தாயே! பக்தியுள்ளோருக்கு மோக்ஷமும் அனுக்ரஹமும் செய்கிறாய். யோகிகளின் மனதில் ப்ரகாசிக்கிறாய். வேதங்களின் ஸாரத்தில் உறைந்திருக்கிறாய். ஸங்கீத ரஸானுபவத்தில் ப்ரியமுள்ள க்ருஷ்ணனால் பூஜிக்கப்படுகிறாய். பக்தி ஆவேசம் உடைய பிரம்மாவால் பூஜிக்கப்படுகிறாய். மனதைக் கவரும்
வீணை முதலிய வாத்யங்களிசைக்கும் வித்யாதரர்களால் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறாய். உனக்கு எனது நமஸ்காரங்கள்.
श्रवणहर दक्षिणक्वाणया वीणया किन्नरैर्गीयसे |
यक्ष गन्धर्व सिद्धाङ्गना मण्डलैरर्च्यसे |
सर्वसौभाग्य वाञ्छावतीभिर् वधूभि स्सुराणां समाराध्यसे |
ஸ்ரவண ஹரண தக்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீயஸே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலைரர்ச்யஸே |
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்சாவதீ பிர்வதூபி: ஸுராணாம் ஸமாராத்யஸே |
Your glories are sung by Kinnaras by playing the melodious
Veena which captivates the ears. You are worshipped by groups
of yakshas, gandharvas and shiddhas. You are propitiated by the wives of devas who desire for themselves all the good things in life.
सर्वविद्या विशेषत्मकं चाटुगाथा समुच्चारणा
कण्ठमूलोल्लसद्- वर्णराजित्रयं
कोमलश्याम लोदारपक्षद्वयं तुण्डशोभाति
दूरीभवत् किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे |
ஸர்வவித்யா விஷேஷாத்மகம் சாடுகாத்தா ஸமுச்சாரணம்
கண்டமூலோல்ல ஸத்வர்ண ராஜித்ரயம்
கோமளஸ்யாம லோதார பக்ஷத்வயம் துண்டஸோபாதி
தூரீபவத் கிம்சுகம் தம்சுகம் லாலயன்தீ பரிக்ரீடஸே |
You mollycoddle and play with the parrot which is the
personification of all knowledge, which keeps telling interesting stories, which has on its neck three lines of different colours,
which has two pretty dark green wings and whose beak
surpasses the kimshuka flower in its red colour.
செவிகளுக்கு இனிய நாதமுடைய வீணையினால் கின்னர்களால் பாடப்படுகிறாய். யக்ஷ கந்தர்வ ஸித்தர்களால் பூஜிக்கப்படுகிறாய். இஷ்ட ஸித்திகளில் விருப்பங்கொண்ட தேவஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய்.
சகல வித்யைகளின் ஸாரமுடைய இனிமையான ஸ்லோகங்களை மொழிகின்றதும், கழுத்தின் அடிப்பாகத்தில் மூன்று வர்ணக் கோடுகளையுடையதும், அழகிய பச்சை நிற இறக்கைகள் உடையதும், புரச மொட்டின் நேர்த்தியை எஞ்சுகிற அழகுடன்
கூடிய மூக்குடையதும்ஆன கிளியுடன் விளையாடிக் களிக்கிறாய். உனக்கு எனது நமஸ்காரங்கள்.
पाणिपद्मद्वयेनाक्षमालामपि स्फाटिकीं ज्ञानसारात्मकं var मालागुण
पुस्तकञ्चङ्कुशं पाशमाबिभ्रती तेन
सञ्चिन्त्यसे तस्य वक्त्रान्तरात् गद्यपद्यात्मिका भारती निस्सरेत् |
येन वा यावकाभाकृतिर्भाव्यसे, तस्य वश्या भवन्ति स्त्रियः पूरुषाः |
येन वा शातकम्बद्युतिर्भाव्यसे सोपि लक्ष्मीसहस्रैः परिक्रीडते |
பாணிபத்மத்வயேன அக்ஷமாலாமபி ஸ்பாடிகீம்
ஞானஸாராத்மகம் புஸ்தகம் *சாங்குஸம் பாஸமாபிம்ப்ரதீ யேன
ஸஞ்சின்த்யஸே தஸ்ய வக்த்ரான்தராத்
கத்யபத்யாத்மிகா பாரதீ நி:ஸரேத் |
யேந வா யாகவா பாக்ருதிர் பாவ்யஸே
தஸ்ய வஸ்யா பவந்தி ஸ்த்ரிய: புருஷ: |
யேந வா ஸாதகும்பத்யுதிர் பாவ்யஸே
ஸோபி லக்ஷ்ம்ஹீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே |
If a devotee meditates on YOU as holding in Your hands
the crystal akshamala, the book of supreme knowledge, the goad
and the rope, from his mouth will emerge all knowledge in the form
of poetry and prose.
If he meditates on YOU as having a red complexion, all men and women will be under his spell.
If he meditates on YOU as having golden complexion, he will sport with thousands of Lakshmis (i.e. he will have immeasurable wealth).
किन्न सिद्ध्येद्वपुः श्यामलं कोमलं चन्द्रचूडान्वितं तावकं ध्यायतः |
तस्य लीला सरोवारिधीः तस्य केलीवनं नन्दनं
तस्य भद्रासनं भूतलं तस्य गीर्देवता किङ्करि तस्य चाज्ञाकरी श्री स्वयं |
கிம் ந ஸித்யதேத் வபு: ஸ்யாமளம் கோமளம்
சந்த்ர சூடான்விதம் தாவகம் த்யாயத: |
தஸ்ய லீலா ஸரோவாரிதி: தஸ்ய கேலீவனம் நந்தனம்
தஸ்ய பத்ராஸனம் பூதலம் தஸ்ய கீர்தேவதா கிங்கரீ
தஸ்ய சா ஜ்ஞாகரீ ஸ்ரீ:ஸ்வயம் |
What is not accessible or achievable to the devotee who meditates
on YOUR beautiful dark blue form sporting the crescent moon on
the head?
For him the ocean is the pool for water sports, the Nandana vana
is the forest where he can play, his seat is the entire earth, the Goddess of speech is his handmaid and Goddess Lakshmi waits
for his orders.
தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது.
சிவந்த மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள்.
ஐஸ்வர்ய ரூபியாக உன்னை த்யானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய்.
சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல
வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம் செய்பவருக்கு
எதுதான் கிட்டாது.
சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும் பணிப்பெண்ணாகிறாள்.
அவர்க்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள்.
सर्व तीर्थात्मिके सर्व मन्त्रात्मिके सर्व यन्त्रात्मिके
सर्व तन्त्रात्मिके सर्व चक्रात्मिके सर्व शक्त्यात्मिके
सर्व पीठात्मिके सर्व वेदात्मिके सर्व विद्यात्मिके
सर्व योगात्मिके सर्व वर्णात्मिके सर्वगीतात्मिके
सर्व नादात्मिके सर्व शब्दात्मिके सर्व विश्वात्मिके
सर्व वर्गात्मिके सर्व सर्वात्मिके सर्वगे सर्व रूपे
जगन्मातृके पाहि मां पाहि मां पाहि मां
देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमः
ஸர்வ தீர்தா²த்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே ஸர்வ யந்த்ராத்மிகே
ஸர்வ தந்த்ராத்மிகே ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஶக்த்யாத்மிகே
ஸர்வ பீடா²த்மிகே ஸர்வ வேதா³த்மிகே ஸர்வ வித்³யாத்மிகே
ஸர்வ யோகா³த்மிகே ஸர்வ வர்ணாத்மிகே. ஸர்வ கீ³தாத்மிகே
ஸர்வ நாதா³த்மிகே ஸர்வ ஶப்³தா³த்மிகே ஸர்வ விஶ்வாத்மிகே
ஸர்வ வர்கா³த்மிகே ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே³ ஸர்வ ரூபே
ஜக³ன்மாத்ருʼகே பாஹி மாம் பாஹி மாம் பாஹி மாம்
தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ
தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நம:
O Devi!, the soul or essence of all holy waters, all tantras,
all mantras, all chakras (symbols), all psychic powers, all seats of power, all philosophy, all knowledge, all yogas, all musical sounds,
all vedas, all speech, all worlds, all divisions and all austerities,
Who is everywhere, Who is all forms,
Who is the Mother of all the worlds please save me, save me,
I prostrate before YOU, I prostrate before YOU,
I prostrate before YOU.
சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே!
எல்லா ஜ்யோதிஷ் சக்கரங்கள் சக்திகளுக்கும் இருப்பிடமானவளே
எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த
ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம் முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே,
எங்கும் வ்யாபித்த அத்வைத வடிவினளே,
ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று,
என்னைக் காப்பாற்று, என்னைக்காப்பாற்று,
உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்,
உனக்கு என் நமஸ்காரங்கள்
इति श्यामला दण्डकम् सम्पूर्णम् ॥
இதி ஶ்யாமலா த³ண்ட³கம் ஸம்பூர்ணம் ॥
தை அமாவாசையில் திருகடையூருக்கு இந்த ராஜ சியாமளா நவராத்திரியினை தொடங்கும் பொருட்டே அன்னையினை
வழிபட அந்த சரபோஜி மன்னன் வந்திருந்தான், அவனே
அபிராமி பட்டரை சீண்டி "அபிராமி அந்தாதி" வர
காரணமுமானான்
ராஜ சியாமளா நவராத்திரிக்காக அன்னையே தன் பக்தன் மூலம் கொடுத்த பாடல் அது. அதனை பாடி வழிபட்டால் நிச்சயம்
எல்லா பூரண பலன்களும் ராஜ சியாமளையின் அனுகிரஹமும் முழுக்க கிடைக்கும். அது சத்தியம்.
சிவசக்தி அம்சமான அவளை, மன்னர்களும் அவையோரும் வணங்கிய அவளை, "அபிராமி அந்தாதி" பாடி வணங்குதல்
மிக சரியானது
எளிய முறை பூஜை
1. ஓம் ஸங்கீத யோகின்யை நமஹ
2. ஓம் சியாமளா தேவ்யை நமஹ
3. ஓம் சியாமா தேவ்யை நமஹ
4. ஓம் மந்திர நாயிகாயை நமஹ
5. ஓம் மந்திரிணியை நமஹ
6. ஓம் சசிவேசானியை நமஹ
7. ஓம் ப்ரதானேசியை நமஹ
8. ஓம் சுகப்ரியாயை நமஹ
9. ஓம் வீணா சக்தியை நமஹ
10. ஓம் வைணீகீ சக்தியை நமஹ
11. ஓம் முத்ரிணி சக்தியை நமஹ
12. ஓம் நீபப்ரியா சக்தியை நமஹ
13. ஓம் கதம்பேசீ சக்தியை நமஹ
14. ஓம் ப்ரியகப்ரியா சக்தியை நமஹ
15. ஓம் கதம்பவன வாஸின்யை நமஹ
16. ஓம் ஸதா மாதா நமஹ
मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।. यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.
மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும்.
இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.
ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே
தீங்கு விளைவிக்கும்.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள்








