Thursday, January 23, 2014

சஷ்டியன்று சொல்ல வேண்டிய கந்தன் துதி!



எந்த வேளையும் தொழவேண்டிய கந்தவேளை, கந்தசஷ்டி தினத்தில் கீழ்வரும் துதியைச் சொல்லிப் போற்றுங்கள். சர்வமங்களமும் தருவான் ஷண்முகநாதன்.

ஓம் அழகா போற்றி
ஓம் அனல் ரூபா போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் மாயவன் மருகா போற்றி
ஓம் சக்தி உமை பாலா போற்றி
ஓம் முக்தி அருள் வேலா போற்றி
ஓம் பன்னிருகை பாலகா போற்றி
ஓம் பக்தர்க்கருள் சீலா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோளா போற்றி
ஓம் ஆறெழுத்து அமலா போற்றி

ஓம் இடும்பனை வென்றோய் போற்றி
ஓம் இடர் களையும் இறைவா போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலகநாபன் மருகா போற்றி
ஓம் ஐயம் தீர் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார ரூபனே போற்றி
ஓம் ஓதிடும் வேதப்பொருளே போற்றி
ஓம் ஓதுவோர் மனதுக்கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் தீதிலா நன்மை புரிவோய் போற்றி
ஓம் குருவே திருவே குமரா போற்றி
ஓம் குறமகள் மனமகிழ் கோவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் மனதுறை செவ்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கருளும் மணியே போற்றி

ஓம் தண்ணருள் தந்திடும் தண்டபாணியே போற்றி
ஓம் மண்டலம் சுற்றிடும் மயில் வாகனா போற்றி
ஓம் வேதப்பொருளே வேலவா போற்றி
ஓம் நாதவடிவான நாயகா போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயனே போற்றி
ஓம் நறுந்தவ முனிவர் தலைவா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்தனே போற்றி
ஓம் பரங்குன்றம் உறை பாலகா போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பரமனே போற்றி
ஓம் இருளிடர் போக்கும் இறைவா போற்றி

ஓம் இதயக் குகை உறை குகனே போற்றி
ஓம் அன்பின் உருவமே அறுமுகா போற்றி
ஓம் ஒளவைக்கருளிய அன்பனே போற்றி
ஓம் சேயோனே குறிஞ்சி மேவுவோய் போற்றி
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
ஓம் கருணை நிறைந்த கடவுளே போற்றி
ஓம் அறுபடை வீடமர் ஆண்டவா போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சுப்ரமண்யா போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

ஓம் ஆறுதனில் தோன்றிய அறுமுகா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே கந்தனே போற்றி
ஓம் சஷ்டியில் மகிழும் ஷண்முகா போற்றி
ஓம் உதயச் சுடரே உமைபாலா போற்றி
ஓம் இதயத்துள் உறை இனியனே போற்றி
ஓம் பக்தர்தம் வினை தீர்ப்போய் போற்றி
ஓம் மாசிலா மனத்துறை மைந்தா போற்றி
ஓம் மாமயில் வாகனா மங்களா போற்றி
ஓம் வடிவேல் தாங்கி வருவாய் போற்றி
ஓம் அடியார் அல்லல் களைவாய் போற்றி

ஓம் வளமுள வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி குஞ்சரி நாயகா போற்றி
ஓம் செஞ்சுடரில் உதித்த செல்வனே போற்றி
ஓம் பார்வதி உளமகிழ் பாலனே போற்றி
ஓம் அமுதென தமிழை அளிப்போய் போற்றி
ஓம் தருநிழல் தமிழின் இறைவா போற்றி
ஓம் ஆடும் பரிவேல் அரசே போற்றி
ஓம் உடன் வந்தருளும் உமாசுதனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

ஓம் தந்தைக்கு மந்திரம் உரைத்த சரவணா போற்றி
ஓம் சிந்தைக்குள் உறைவாய் சிங்காரவேலா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ குக சண்முகா போற்றி
ஓம் வேடர்குல மகள் மணாளா போற்றி
ஓம் பாடற்கினிய பவகுமரா போற்றி
ஓம் அசலத்தில் ஆண்டியாய் நின்றவா போற்றி
ஓம் சகலத்தையும் தரும் சேயோன் போற்றி
ஓம் தெவிட்டா இன்னருள் தெய்வமே போற்றி

ஓம் தேவர் மூவர் பணி தேவனே போற்றி
ஓம் போகர் நாடிய மெய்ப் பொருளே போற்றி
ஓம் ஆகமம் போற்றும் அழகோனே போற்றி
ஓம் பாதகம் பாவம் போக்குவோனே போற்றி
ஓம் சித்திகள் அருளும் சிவபாலா போற்றி
ஓம் பக்தியில் மனமகிழ் பாலகா போற்றி
ஓம் ஆவினன் குடியுறை ஆறுமுகா போற்றி
ஓம் தணிகை மலைவாழ் தலைவா போற்றி
ஓம் தந்தைக்கு உரைத்த தயாபரா போற்றி
ஓம் சேயோனே செந்தில் நாதனே போற்றி

ஓம் சோலைமலை வளர் சுந்தரா போற்றி
ஓம் குன்றத்து குகை அருள் குமரா போற்றி
ஓம் கருணை மழை பொழி கந்தா போற்றி
ஓம் அருணகிரிக்கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலத்துக் குழந்தாய் போற்றி
ஓம் குறுமுனி போற்றிடும் குருவே போற்றி
ஓம் திருப்போரூர் திகழ் திருவே போற்றி
ஓம் மறுப்போர் இல்லாமாதவே போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

ஓம் வெற்றிக் கடம்ப மாலை அணிவோய் போற்றி
ஓம் பற்றுவோர் பாவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் குமரகுரு புகழ் குழந்தாய் போற்றி
ஓம் துதிபுரி அன்பர்தம் துணையே போற்றி
ஓம் மதியணி இறைவன் மைந்தா போற்றி
ஓம் நிதி மதி அருளும் நின்மலா போற்றி
ஓம் ஞானபண்டித சுவாமி போற்றி
ஓம் தீனருக்கருள் தெய்வமே போற்றி போற்றி.

... Courtesy: Sasithara Sharma @ aanmikam

No comments:

Post a Comment