Monday, January 6, 2014

எமனார் நம்மிடம் வரமாட்டார்

நடக்கில் மெத்தென நடப்போ
நானாளு மனவரிந் துண்போ

முடக்கலு வெந்நீர் குளிதல்ல துண்னோ
மீறிய மிகப் பகலுறங் கோம்

சடக்கென மலமிரண்டை யுங் கழிப்போ
தையலார் புணர்ச்சியில் சத்தே

யிடக்கைக் கீழ்படக் கிடப்பினுங் கிடப்போம்
மெமனார் நமக்கென கிடவாரே.

நடக்கும் போது மெதுவாக சப்தம் வாராமல் நட.

தினந்தோறும் பசி அறிந்து உண்.

குடிப்பதற்கும் குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்து.

பகலில் உறங்காமல் இரு.

மலம் ஜலம் இரண்டையும் அடக்காமல் உணர்ச்சி வரும் பொழுதே கழித்துவிடு.

ஸ்திரீ போகத்தில் மிதமாக இரு.

படுக்கும் போது இடது கை கீழே இருக்கும் வண்ணம் படு.

இவ்வாறு இருப்பதால் எமனார் நம்மிடம் வரமாட்டார் என்று சொல்கிறார் ஸ்ரீ அகத்திய மகரிஷி.

இவை யாவும் ஒரு நல்ல அன்புள்ளம் கொண்டவர்களுக்கே பயனடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மீறி மற்றவர்களுக்கு உரைப்பின் தந்தையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

... Courtesy: Senthil Manickam

No comments:

Post a Comment