Friday, January 10, 2014

பரமன் இரகசியம்

தனி தேஜசுடன் சிவலிங்கம் காட்சி தோன்றியது. 
மயிர்க் கூச்செறிந்தது. மனமெல்லாம் சிவன். 
அடியேன் அனுபவித்திருக்கிறேன்.
ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு 
அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?
... ஸ்ரீநிவாசன்

அடியேன்  வலைப்பூவில் ஆவலுடன் படித்து வரும் நாவல்


" பரம(ன்) இரகசியம் நாவல் "

அன்பு வாசக நண்பர்களுக்கு,

வணக்கம். நீங்கள் ஆவலுடன் படித்து வரும் பரம(ன்) ரகசியம் நாவல் இன்று அச்சு வடிவில் வெளியாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தக வடிவில் வர வேண்டும் என்று பல வாசகர்கள் ஆவல் தெரிவித்திருந்தார்கள். முழு நாவலையும் ஒரே வாசிப்பில் படித்து முடிப்பது திருப்திகரமாக இருக்கும் என்று சிலரும், கணினியில் படிப்பதை விடக் கையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதில் கிடைக்கும் திருப்தியே அலாதி என்று சிலரும், கணினியில் படிக்கும் வாய்ப்பில்லை என்பதால் புத்தகமாக வெளியிட்டால் தாங்களும் படித்து மகிழ்வோம் என்று இணைய வசதி இல்லாத சிலரும் தெரிவித்திருந்தார்கள். இத்தனை பேருடைய விருப்பமும் இந்த புத்தக வெளியீடு மூலமாக நிறைவேறி உள்ளது.

640 பக்கங்களில், 90 அத்தியாயங்களில், தரமான தாள்களில், கண்களை உறுத்தாத எழுத்துகளில் வெளிவந்துள்ள பரம(ன்) இரகசியம் நாவலின் விலை ரூ550/-

வாசக நண்பர்கள் தங்கள் நல்லாதரவை இந்த நூலிற்குத் தர வேண்டுகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இந்த நாவல் வெற்றிகரமாக அமையுமானால் “அமானுஷ்யன்” நாவலும் அடுத்ததாக புத்தகமாக வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவல் வழக்கம் போல வியாழன் அன்று இந்த வலைப்பூவில் அப்டேட் ஆகும். புத்தகம் வாங்க முடியாதவர்கள் வாரா வாரம் படித்துக் கொள்ளலாம்.

வாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: 
இந்த விசேஷ மானஸ லிங்கத்திற்கும் உங்களுக்கும் கூட ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும். கடைசி அத்தியாயம் படிக்கும் போது உங்களுக்கு அது புலப்படலாம். உங்களுக்குள் உறைந்திருக்கும் சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்...

ஜனவரி 10 முதல் 22 தேதி வரை நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி செல்லும் வாசகர்கள் பதிப்பகத்தாரின் ஸ்டால் எண்கள் 51 மற்றும் 52ல் இந்த நாவலையும், என் மற்ற புத்தகங்களையும் நேரில் 10% கழிவுடன் வாங்கிக் கொள்ளலாம்.

நாவல் வாங்க பதிப்பாளரைத் தொடர்பு கொள்ள –
Mobile: 9600123146
email: blackholemedia@gmail.com

BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No.7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
Tel : 044 43054779

Bank Details
Name: blackhole media publication ltd
Indian overseas bank, current/account no:165302000000377
Branch:alandur, chennai
Ifsc code: ioba 0001653

நாவல் முன்னுரையில் இருந்து சில வரிகள்....

.... பலர் இந்த சம்பவங்கள் நிஜமா, சில கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களைச் சுட்டிக் காட்டுகிறதா என்றும் அடிக்கடிக் கேட்டதுண்டு. தனிப்பட்ட நிஜ மனிதர்களை மையமாக வைத்து நான் இந்த நாவலை எழுதவில்லை. சித்தர் உட்பட எல்லா கதாபாத்திரங்களும், இதில் வரும் சம்பவங்களும் கற்பனையே. ஆனால் கதாபாத்திரங்களிலும், சம்பவங்களிலும் உண்மையின் சாயலை நீங்கள் பார்க்க முடியும். அந்த சாயலில் நீங்கள சிலரை அடையாளம் காண்பதாக உணரவும் வாய்ப்புண்டு. அப்படிக் கண்டால் அது தற்செயலானதே!

இந்த நாவலின் விசேஷ மானஸ லிங்கமும் என் தனிக் கற்பனையே. ஆனால் அந்தக் கற்பனையில் மகத்தான உண்மையை நான் கலந்து படைத்திருக்கிறேன். நம்முள்ளே இருக்கக் கூடிய, கடுமையாக முயற்சித்தால் உணரக் கூடிய மகாசக்தியைச் சில கற்பனை பூச்சுக்கள் பூசி இதில் காட்டி இருக்கிறேன்.

இந்த நாவலில் இரண்டு இடங்களில் என்னை மீறிய ஒரு சக்திக்குப் பங்குண்டு. அது என் ஆழ்மன எண்ண வெளிப்பாடா, இல்லை ஏதோ ஒரு வெளிசக்தியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது நியாயமாக இருக்கும் என்பதால் தெரிவிக்கிறேன்.

ஒன்று விசேஷ மானஸ லிங்கம் குறித்த ஓலைச்சுவடிகளில் ஒரு செய்யுள் போன்ற வரிகளை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடி ஒரு நாள் இரவு உறங்கினேன். மறு நாள் காலை செய்யுள் தயாராக என் மனதில் இருந்தது. கதைக்குப் பொருத்தமாய் ஒரு மாபெரும் உண்மையை உள்ளடக்கியதாய் அந்த இருவரிச் செய்யுள் வந்தது எப்படி என்று இன்னும் எனக்கு திகைப்பாகவே இருக்கிறது.

இன்னொன்று விசேஷ மானஸ லிங்கத்தின் முடிவு. நான் ஆரம்பத்தில் வேறொரு முடிவைத் தான் எண்ணி வைத்திருந்தேன். கடைசி நேரத்தில் ஒரு நாள் கனவாய் வந்து மறைந்த காட்சி தான் இந்த நாவலில் விசேஷ மானஸ லிங்கத்தின் கடைசிக் காட்சியாக மாறி விட்டது. விசேஷ மானஸ லிங்கம் கடைசிக் காட்சியில் தன்னை அப்படி எழுதி முடிக்க என்னைப் பணித்ததோ என்று பிரமிப்பும் கூட எனக்கு மிஞ்சுகிறது.....

அன்புடன்
என்.கணேசன்
http://enganeshan.blogspot.in/2014/01/blog-post_8.html

No comments:

Post a Comment