அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட
அதியற்புதமான துதிப்பாடல் இது. ஸ்ரீஆதிசங்கரரால்அருளப்பட்டது.
श्रीगणेशाय नमः ।
महादेवीं महाशक्तिं भवानीं भववल्लभाम् ।
भवार्तिभञ्जनकरीं वन्दे त्वां लोकमातरम् ॥ १॥
ஸ்ரீகணேஸாய நம:
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்
தேவியே, மஹாதேவனின் மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும்,
பவானியும், சிவனிடத்தில் அன்புகொண்டவளும், சம்சார வாழ்வில்
ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும், உலகங்களுக்கு
தாயுமான தங்களை வணங்குகிறேன்.
भक्तप्रियां भक्तिगम्यां भक्तानां कीर्तिवर्धिकाम् ।
भवप्रियां सतीं देवीं वन्दे त्वां भक्तवत्सलाम् ॥ २॥
பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்
பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும்
பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், பரமசிவனிடம் அன்பு
கொண்டவளும், பதிவிரதையும், பக்தர்களிடம் அன்பு
கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.
अन्नपूर्णां सदापूर्णां पार्वतीं पर्वपूजिताम् ।
महेश्वरीं वृषारूढां वन्दे त्वां परमेश्वरीम् ॥ ३॥
அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்
நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால்
நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும், பௌர்ணமி முதலிய பர்வ
தினங்களில் பூஜிக்கப்பட்டவளும், மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப
வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம்
ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.
कालरात्रिं महारात्रिं मोहरात्रिं जनेश्वरीम् ।காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
பிரளயகால ராத்திரியாகவும், மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும்
शिवकान्तां शम्भुशक्तिं वन्दे त्वां जननीमुमाम् ॥ ४॥
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
பிரளயகால ராத்திரியாகவும், மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும்
(சிவராத்திரி, நவ ராத்திரி முதலானபுண்ணிய கால ராத்திரியாக
இருப்பவளும்), மோஹத் தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும்,
ஜனங்களுக்குஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம்,
புஷ்பம் ஆகியவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும்,
பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின்
பொருளுமான தங்களை வணங்குகிறேன்.
जगत्कर्त्रीं जगद्धात्रीं जगत्संहारकारिणीम् ।
मुनिभिः संस्तुतां भद्रां वन्दे त्वां मोक्षदायिनीम् ॥ ५॥
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹார காரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம் வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும்,
உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும், மஹரிஷிகளால்
ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை
அளிப்பவளும், மோக்ஷத்தைக்கொடுப்பவளுமான தங்களை
வணங்குகிறேன்.
देवदुःखहरामम्बां सदा देवसहायकाम् ।
मुनिदेवैः सदासेव्यां वन्दे त्वां देवपूजिताम् ॥ ६॥
தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும்
தேவர்களுக்கு உதவி புரிபவளும், மஹரிஷிகளாலும்,
தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும், தேவர்களால்
பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.
त्रिनेत्रां शङ्करीं गौरीं भोगमोक्षप्रदां शिवाम् ।
महामायां जगद्बीजां वन्दे त्वां जगदीश्वरीम् ॥ ७॥
महामायां जगद्बीजां वन्दे त्वां जगदीश्वरीम् ॥ ७॥
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்
முக்கண்கள் கொண்டவளும், பக்தர் களுக்கு மங்களம் அருள்பவளும்,
தங்க வர்ணமாய் இருப்பவளும், போகங்களையும், மோக்ஷங்களையும்
கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்ப வளும், மஹா
மாயஸ்வரூபிணியாக இருப்பவளும், உலகங்களுக்கெல்லாம்
ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.
शरणागतजीवानां सर्वदुःखविनाशिनीम् ।
सुखसम्पत्करां नित्यां वन्दे त्वां प्रकृतिं पराम् ॥ ८॥
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்
சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும்
सुखसम्पत्करां नित्यां वन्दे त्वां प्रकृतिं पराम् ॥ ८॥
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்
சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும்
போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்டசம்பத்துகளையும்
அளிப்பவளும், உலக இயக்கத்துக்குக் காரணமான சிறந்த
பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.
इति योगानन्दविरचितं श्रीदेव्यष्टकं सम्पूर्णम् ॥ ஸ்ரீதேவி அஷ்டகம் முற்றிற்று
குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன்,
ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்டகனவுகள், மனக் கலக்கம்
ஆகியன விலகும்.
நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த துதியை பாராயணம்
நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த துதியை பாராயணம்
செய்து அம்பாளை வழிபடுவதால் சகலநன்மைகளும் கைகூடும்.
மிக்க நன்றி: திரு குமார் ராமநாதன் அவர்களின் முகநூல் பதிவு
No comments:
Post a Comment