Sunday, December 3, 2017

தலவிருட்சங்கள்


ஒவ்வொரு திருத்தல தலவிருட்சதிற்க்கும் ஒவ்வொரு தெய்வீகத் தன்மை உண்டு. குருந்தமரம், ஆவுடையார் கோவில்.

துளசி மாலை, கடுக்கன், நெற்றிச் சின்னங்கள், பூணூல், அரைஞாண் கயிறு போல ருத்திராட்சமும் சக்தி வாய்ந்த திருஷ்டி ரட்சை காப்புச் சாதனமாகும். ஆனால், உரிய முறையில் பெறப்பெற்ற ருத்ராட்சத்திற்கே தெய்வீக சக்திகள் உண்டு. எனவே இறையடியார்கள் தங்களிடம் உள்ள ருத்ராட்சங்களை இக்குருந்த மர நிழலில்வைத்து 108 முறை குருந்த மரத்தை வலம் வந்து மாணிக்க வாசகரின் பிடித்த பத்து பாடல்களை ஓதி ருத்ராட்சங்களை அணிந்து கொண்டால் அம்மாலைகளில் உள்ள தோஷங்கள் நீங்கும்.மிகவும் அபூர்வமான பராய் மரத்தை தலமரமாக உடைய திருத்தலமே இங்கு நீங்கள் காணும் திருப்பராய்த்துறை திருத்தலமாகும்.

எத்தகைய கடுமையான புற்று நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய அற்புத திருத்தலம். இங்குள்ள தல விருட்சமான பராய் மரத்திற்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சளை பூசி வலம் வந்து வணங்குதல் நலம். தோல் வியாதிகளும் குணமாகும். ரவையுடன் சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு இடுதல் நலம். ஆனால், இம்மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து சுயநலமாக பயன்படுத்தினால் பெரும் சாபங்கள் விளையும் என்பதை நினைவில் கொள்ளவும்.புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் திருத்தல தலவிருட்சம் புன்னை மரம்.

காஞ்சீபுரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்று இத்தல விருட்சங்களும் யுகங்களைக் கடந்து பிரளயத்திற்கும் சாட்சியாய் நிற்பவை. இத்தல விருட்சங்களின் தரிசனமே நான்கு வேதங்கள் ஓதிய பலனை அளிக்க வல்லது. தங்கள் கையால் அரைத்த மஞ்சளைப் பூதி தல விருட்சங்களை வழிபடுவதால் கணவன் மனைவியரிடையே, உறவு முறைகளில், அலுவலகங்களில் உள்ள எத்தகைய பகைமை உணர்வும் மறையும்.ஸ்ரீஜகத்ரட்சகர் சிவாலயம், மணமேல்குடி. 

கோயில் தல விருட்சங்களுக்கு தாமே அரைத்த மஞ்சளால் அலங்கரித்து வலம் வந்து வணங்குவதால் தோல் நோய்களால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறும். வெள்ளிக் கிழமைகளில் 51 முறையும், வியாழக் கிழமைகளில் 30 முறையும் இத்தகைய தலவிருட்ச வலங்களை மேற்கொள்ளுதல் சிறப்பாகும். மூட்டுவலிகளுக்கு அற்புத நிவாரணம் கிட்டும். தலவிருட்சங்களில் அடியில் அமர்ந்து ஜபிக்கப்படும் மந்திரங்கள் எளிதில் சித்தியாகும்.ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருத்தலம், மணமேல்குடி. 

இப்பழமையான ஆல், அரசு, வேம்பு மரங்களை வலம் வந்து வணங்கி திருக்குளாத்திலிருந்து நீர் வார்த்து வணங்கி வருதலால் தந்தை வழி சொத்துக்களை இழந்தோர் மீண்டும் அத்தகைய சொத்துக்களை மீட்க இறைவன் அருள் புரிவார். ஷண்ணாவதி தினங்களில் இத்திருக் குளக்கரையில் தர்ப்பணம் அளித்து வருதலால் எத்தகைய சொத்து பிரச்னைகளுக்கும் நியாயமான முறையில் தீர்வுகள் கிட்டும். கோர்ட்டு வழக்கு என்று அலைய வேண்டிய அவசியமே கிடையாது. இது சித்தர்கள் காட்டும் நல்மார்கம்.வஞ்சிக்கள்ளி என்னும் ஒருவித சிரஞ்சீவி மூலிகை வளரும் இடமே செட்டிக்குளம் முருகன் கோயிலாகும். 

இள நரையைத் தடுப்பதும் முடி உதிர்வதைத் தடுப்பதும் வஞ்சிக்கள்ளியின் முக்கிய மருத்துவ குணங்களாகும். மஞ்சள் பூக்களுடன் இலுப்பை மணம் கூடிய இம்மூலிகையை வாரம் ஒருமுறை தரிசித்து முருகப்பெருமானுக்கு செம்பருத்தி தைலத்தால் அபிஷேகித்து வந்தால் இளநரை வராது. முடி சம்பந்தமான பிரச்னைகளால் திருமணத் தடங்கல்கள் ஏற்படாது. மூளைச் சோர்வை அகற்றும் அற்புத வழிபாடு இது.மன்னார்குடி திருத்தலம்திருக்கோயில் கோபுரங்களைப் பார்த்தவாறு அமைந்துள்ள சமித்து விருட்சங்கள், பாலுள்ள விருட்சங்கள் கீழ் அமர்ந்து தியானம் புரிவதால் அற்புத பலன்களைப் பெறலாம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர முடியாதவர்கள் இத்தகைய விருட்ச நிழல்களில் வலம் வருவதும் சுயம்பு மூர்த்தி வழிபாட்டிற்கு இணையான அற்புத பலன்களை அளிக்கும். தம்பதிகள் இத்தகைய மரங்களின் கீழ் உறங்கினால் அதுவும் ஒரு யோகமே.கொன்றை மரம், திருப்பத்தூர்

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கொன்றை மரத்திற்கு முன் அமர்ந்து திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய, “வேற்றாகி விண்ணாகி ...“ என்ற பாடலை ஓதிக் கொண்டே இருந்து சூரிய உதய சமயத்தில் சூரிய கதிர்கள் கொன்றை மலர்களின் மேல் படுவதை தரிசனம் செய்து வந்தால் அற்புத யோக சக்திகள் மலரும். இவ்வாறு ஒரு நாள் பெறும் யோக சக்தியே ஒரு வருட பிராணாயாமத்திற்கு ஈடான பலன்களை அருள வல்லது.
கொன்ற மரத்தின் நிழலை வேத சக்திகளின் பிரதிபிம்பமாக வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். ஆம், நீங்கள் ஒரு கொன்றை மரத்தை தரிசனம் செய்யும்போது ஓங்கார சக்திகளை மட்டும் தரிசனம் செய்வதில்லை, அனைத்து வேதங்களின் பிரதிபிம்பத்தையே தரிசனம் செய்கின்றீர்கள் என்றால் இதைவிட சிறப்பாக இறைவனின் கருணைக்கு எதைச் சான்றாகக் காட்ட முடியும். இந்த வேத பிம்ப சக்திகளை முழுமையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் மாத்திரமே. அதனால்தான் அகத்திய முனிவரை நாடி வந்த வால்மீகி முனிவருக்கு, “ஒன்றை சிவனுக்குச் சூட்டு, அது கொன்றையாக இருக்கட்டும்,” என்று கொன்றை மரத்தின் ஓங்கார வேத சக்திகளை அம்முனிவருக்கு உணர்த்தி அவர் திருப்பத்தூர் கொன்றை மரத்தின் அடியில் பல யுகங்கள் தவமியற்றி அற்புத வேத சக்திகளை தபோ பலனாக பெற அருள் வழி காட்டினார். வேத சக்தியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டியவரே வால்மீகி முனிவர். திருப்பத்தூர் கொன்றை மர நிழலில் பெற்ற தளிவேத சக்தியால்தான் லவகுசர்கள் விடுத்த அஸ்திரங்களால் மறைந்த ஸ்ரீராமரையே மீண்டும் உயிர்ப்பித்து இவ்வுலகிற்கு அளித்து ராமராஜ்யத்தை புனருத்தாரணம் செய்தார் வால்மீகி. ஒப்பற்ற ஒரு விஷ்ணு அவதாரத்தையே மீண்டும் உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். ஆம், சீதைக்கு பிறந்த லவனைப்போலவே மீண்டும் ஒரு ஸ்ரீராம பிரதிபலிப்பு என்ற குசனை உருவாக்கியவர் வால்மீகி முனிவர்தானே. இவ்வாறு கொன்றை நிழல் கோடி சாதிக்கும்.செவ்வாய்க் கிழமை காலை சூரிய ஹோரை நேரம் முழுவதும் அதாவது 7 முதல் 8 வரை திருப்பத்தூர் திருத்தல கொன்றை மரத்தை வலம் வந்து வணங்குதலால் தோல் வியாதிகள் எளிய முறையில் நிவாரணம் பெறும். மாணவர்களுக்கு ஆரஞ்சு பழரச தானம் சிறப்பு. செயற்கை பழரசங்களைத் தவிர்க்கவும்.மெய்ஞானபுரி. காரைக்குடி அருகே

ஒவ்வொரு மரத்தினுடைய நிழலுக்கும் பலவிதமான நோய் நிவாரண சக்திகள் உண்டு. இதை முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்களே. இவ்வகையில் மகிழ மரத்திற்கு இரத்த சோகையை நிவர்த்தி செய்யும் சக்திகளும், இரத்தத்தை சுத்தி செய்யும் சக்திகளும் உண்டு. செவ்வாய்க் கிழமைகளிலும் அனுஷ நட்சத்திர தினங்களிலும் மகிழ மரத்தை 18 முறை வலம் வந்து குரங்குகளுக்கு பேரீச்சம் பழங்களை தானமாக அளித்தலால் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும். கர்ப்பிணிகளுக்கு ஒரு வர பிரசாதம் மகிழ மரம்.கடம்பர் கோவில், குளித்தலை

எத்தகைய கொடிய கர்மவினைகளையும் களையக் கூடியதே கடம்பமர தரிசனமாகும். இத்தகைய கடம்ப சக்திகள் அனைவரையும் சென்றடைவதற்காகவே 1008 யுகங்கள் கொடுவினைகளையே புரிந்து கொண்டிருந்த சூரபத்மன் கடம்ப மரமாக நின்றபோது அவனை சம்ஹாரம் செய்து சேவலாகும் மயிலாகவும் ஏற்றுக் கொண்டு அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான்.நாகலிங்க மரம், கடம்பர் கோவில், குளித்தலை

பூமியை விட்டுப் புறப்படும் ராக்கெட் நேராக விண்வெளிக்குச் சென்று விடுவதில்லை. முதலில் பூமியை சற்று நேரம் சுற்றி வந்த பின்னரே பூமியின் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மேலெழும்புகிறது ராக்கெட். இத்தகைய சக்தி இயக்கங்களை அடிப்படையாக உடையவையே கடம்பமரமும், நாகலிங்க மரமும். நாக பாம்பு ஒன்றுதான் நேராகவும் வளைந்தும் செல்லக் கூடிய தன்மை உடையது. இத்தகைய இயக்கங்களின் இரகசியங்களை புரிந்து கொண்டால்தான் astral travel என்னும் ஆன்மீகப் பயணத்தில் வெற்றி பெற முடியும். அதற்கு உதவிபுரிவதே கடம்பவன வழிபாடு.வதரி மரம் ஓமாம்புலியூர்

வதரி என்னும் இலந்தை மரம் தலவிருட்சமாக திகழும் திருத்தலமே சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் திருத்தலமாகும். அ உ ம என்ற ஓங்காரத்தின் மூன்று சக்திகளே மூன்று மூன்று இலைகளாக வதரி மரத்தில் திகழ்கின்றன. ஓங்காரத்தின் பிரயோக சக்தியே வதரி மரதத்தில் நாம் காணும் முள் ஆகும். இதை எந்த பூலோக சக்தியாலும் உருவாக்க முடியாது. எந்த விஞ்ஞானி வேண்டுமானாலும் ஒரு அணுகுண்டை உருவாக்கி விட முடியும். ஆனால், ஆயிரம் விஞ்ஞானிகள் ஒன்று கூடி முயற்சி செய்தாலும் ஒரு வதரி முள்ளை உருவாக்க முடியாது என்கிறார்கள் சித்தர்கள்.கௌரி தீர்த்தம் ஓமாம்புலியூர் 

தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பலரும் என்னதான் மாடாக உழைத்தாலும் தங்கள் முதலாளிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. அவ்வாறு தங்கள் பணிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று கலங்குவோர்கள் இத்தீர்த்தக் கரையிலுள்ள அரச மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சளால் பொட்டிட்டு அலங்கரித்து குங்குமமிட்டு வணங்கி வழிபடுவதால் முதலாளிகள், மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர். உறவினர்கள் இடையே ஏற்படும் மன வேறுபாடுகளும் தணியும்.


... மிக்க நன்றி: "குழலுறவுதியாகி" வலைத்தளம் (http://kulaluravuthiagi.com)

No comments:

Post a Comment