Sunday, December 10, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 27 (3)

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை … (தொடர்கிறது)


அக்ஷயவடம் … अक्षयवट

அக்ஷயவடம் என்பது ஐதீகப்படி யுகம் யுகமாக உயிருடன் நிலைத்து

நிற்கும் ஒரு தெய்வீக ஆலமரம்.  பிரளயகாலத்தில் வட பத்ர சாயி

எனப்படும் ஆலிலை கண்ணன் துயில் கொண்டது இந்த 

புனிதமரத்தின் இலையில் தான்.  இதன் உடல் பாகம் கயா எனப்படும்

புனித க்ஷேத்திரத்திலும்நடு பாகம்காசி எனப்படும் வாரணாசியிலும்,

வேரின் முடிவு பாகம் திரிவேணி சங்கமம் எனப்படும்அலஹாபாதிலும்

இருப்பதாக ஐதீகம்.

சீதா பிராட்டிக்கு சாட்சியாக அக்ஷ்யவடம் ஸ்ரீராமரிடம் உண்மை 

சொன்னதால்அதன் அடியிலும் பித்ருக்களுக்கு பிண்ட தானம் 

செய்யக்கூடிய தகுதியை அடையும் என சீதை  ஆசீர்வதித்தார்.

கயா ஷ்ராதத்தில் பிண்ட பிரதானம் செய்த 32 பிண்டங்களை 

விஷ்ணு பாதத்தில் சேர்த்துவிடவேண்டும்.  அதன்பின் 64 

பிண்டங்களை அக்ஷய வடத்தருகே அர்பணித்து மரத்தடியில்

பித்ருக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  பெற்ற தாய்க்கு மட்டுமே 

16 பிண்டங்கள்.  நம்மைப் பத்து மாதம் சுமந்துஉதிரத்தைத் 

தாய்பாலாக்கி அளித்துபெற்று வளர்த்து ஆளாக்கும் அன்னைக்கு

இறந்த பின்னர் காட்டும் நன்றிக் கடனே 16 பிண்டப் பிரதானம்

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்ட “மாத்ரு ஷோடசி” தாய்க்கு மகன்

அளிக்கும் 16 பிண்டங்கள்பற்றியதுஒவ்வொரு ஸ்லோகமாக 

சொல்லி பிண்ட தானம் செய்ய வேண்டும்.

அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் தாயின் அருமை தெரியும்.

ஆல மரத்தின் அடியில் மூதாதையர்களை நன்றியுடன் நினைவு 

கூர்ந்து சமர்ப்பிக்கும் பிண்டங்களை எவ்வளவோ உயிரினங்கள் 

உண்டு பசியாறும் போது மூதாதையர்களுக்கு திருப்தி கிட்டும்.  

பிண்டமளிப்பவருக்கும் திருப்தி கிட்டும்.


திரும்பி பூமா மாமி ஆத்துக்கு வந்து பிடுச்சு வெச்ச 64 

பிண்டங்களை எடுத்துண்டு அக்ஷ்யவடம்போனோம் .. இழுக்கும் 

மூச்சுக் காற்றுக்கேதிருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை 

நோயற்று இருக்கும்பலப்பலவிதமான உடல் பகுதிகளுக்காக

ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை

தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமேஅது 

கடன் இல்லையா? .. என்னை பத்து மாதம் சுமந்துஉதிரத்தைத் 

தாய்பாலாக்கி அளித்துபெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு 

நான் காட்டும் நன்றிக் கடன் .. 

“மாத்ரு ஷோடசி” 16 ஸ்லோகங்களை ஒவ்வொரு ஸ்லோகமாக 

சொல்லி பிண்ட தானம் செய்தேன் ..

அதன்பின் 64 பிண்டங்களை அக்ஷயவடத்தடியில் பித்ருக்களுக்கு

சமர்ப்பணம் .. சமர்ப்பிக்கும் பிண்டங்களை எவ்வளவோ 

உயிரினங்கள் உண்டு பசியாறும் போது மூதாதையர்களுக்கு 

திருப்தி கிட்டும் என்று ஒருஅசைக்கமுடியாத நம்பிக்கை 

ரெண்டு மணிக்கு திரும்பி பூமா மாமி ஆத்துக்கு வந்தோம் .. இலை 

போட்டு திவ்ய சாப்பாடு .. மூணுமணிக்கு கிளம்பியாச்சு .. அஞ்சு 

மணி நேரம் டிரைவ் .. காசி வாத்யார் ஆத்துக்கு திரும்பும்புபோது 

எட்டு மணி ஆயிடுத்து .. சமையற்கார மாமா சூடா அரிசி உப்புமா 

கொத்ஸ் பரிமாறினார், கூட ஒருடம்ளர் மோர் .. அவர் நீடுழி வாழ்க .. 

கார்த்தாலே நாலுமணிக்கு ஏந்துண்டு லாங் டிரைவ் போய்ட்டு 

வந்ததால உடம்பு டயர்ட் ஆயிடுத்து .. எழுபது வயஸு 

ஆயிடுத்தோல்யோ நேர ரூம்க்கு போய்கட்டையை கடத்தியாச்சு .. 

நல்ல ஆழ்ந்த தூக்கம் 


( ….. தொடரும் )

No comments:

Post a Comment