Sunday, December 10, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 29 (2)

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 29 ஞாயிறு …  (தொடர்கிறது)

நாகேஷ்வர்நாத் மந்திர்

அயோத்தியின் சிவன் கோயில் .. இங்குள்ள சிவலிங்கம் ஶ்ரீ ராமரின்

மகனான குஷ் ப்ரதிஷ்டை செய்தார் என்று சொல்கிறார்கள் .. 

குஷ் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்தபோதுஅவரது

கைக்கவசம் தண்ணீரில் விழுந்ததுசிறிது நேரம் கழித்துஒரு நாக

கன்னிகை தோன்றி அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தாள். குஷ் 

அவளுக்காகக் இந்த கோவிலைக் கட்டினார்” என்று ஒரு 

நாட்டுப்புறக் கதை  கூறுகிறது 


ராமஜன்மபூமி ராம் மந்திர்

டோட்டல் ஏரியா 2.7 ஏக்கர்; 360 அடி நீளம், 235 அடி அகலம்,

சிகரம்உட்பட 161 அடி உயரம் உள்ள இக்கோயில் 57400 சதுரஅடி

பரப்பளவில் அமைந்துள்ளது; ஒவ்வொன்றும் 20 அடி உயரம்

கொண்ட மூன்று தளங்கள்; தரை தளத்தில் 160 தூண்கள்முதல் 

தளத்தில் 132 தூண்கள்இரண்டாவது தளத்தில் 74 தூண்கள்;  

5 பீடங்கள், 12 வாயில்கள்;  

war-footing work is going on to complete the project by

January2nd week, but I have my own doubts whether it

would be completed by that time;  எல்லாம் அவன் செயல் ..

கூண்டு மாதிரி அமைக்கப்பட்டுள்ள இரண்டடி அகலம் உள்ள

குறுகிய பாதையில் சுமார் 5 கி.மீ தூரம் வளைந்து-வளைந்து

சென்று, போறப்போ அங்கங்கே விகரஸ் செக்யூரிட்டி செக்கிங்

(தேவையா?), 20 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய ராமர்

லக்ஷ்மணர் சீதை விக்கிரங்களை நொடிகளில்தரிசனம் செய்து 

(ஆக்சுலா விரட்டப்பட்டு), வயதானவர்கள் ரொம்ப கஷ்டப்பட 

கூடும், 40-45 நிமிஷம் கழிச்சு வெளிய வரப்போ ஒரு நிம்மதி

பெருமூச்சு தானே வருது .. பகவானை தரிஸிக்கஇவ்ளவு 

செக்யூரிட்டி செக்கிங் தேவையாமனஸு ரொம்ப வலிக்கிறது ..


ராம் மந்திர் விட்டு வெளியேவந்தா சற்று எதிர்க்கே அயோத்தியில்

மிகவும் ப்ரசித்திபெற்ற ஹனுமான்கார்ஹி இருக்கு .. இது குகைக்

கோயில், 76 படிகள் மேல ஏறனும் .. பன்னெண்டு மணி ஆயிடுத்து,

கார்த்தாலேந்து ஒன்னும் சாப்டல, பசிரொம்ப நடந்ததால பாடி 

டயர்ட் .. ஸ்கிப் பண்ணிட்டோம் 


நம்ம ஸ்டைல் சாப்பாடு கடை தேடிப்பிடிக்க மத்யானம் ஒன்னு 

ஆயிடுத்து .. உடுப்பி பவன்என்ன இருக்குன்னு பாத்தா, உப்புமா 

தோசை .. வேற வழிசாப்டாச்சு .. பசி போக்கின கடவுளுக்கு நன்றி


கனக பவன்கௌசல்யா பவன்ஶ்ரீ துளசி ஸ்மார்க் பவன்கைகேயி

பவன்லவ-குச மந்திர்லக்ஷ்மண் கிலாமணி பர்வத்… என்று

ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் உள்ளன.  

இவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. 

ஆனா டைம் ஷார்டேஜ், விட்டுட்டோம்


கிளம்பியாச்சு .. four hours drive .. காசி வாத்யார் ஆத்துக்கு 

திரும்பும்புபோது மணி ஆறு .. சமையற்கார மாமா சூடா காபி 

கொடுத்தார் .. பாடி நார்மலுக்கு வந்துடுத்து .. 

அஸ்ஸி காட் கங்கா ஆரத்தி பாக்க ஒரு batch போறாநீங்க join

பண்ணிக்கோங்கோன்னு வாத்யார் சொன்னார் .. அப்டியே

கிளம்பிட்டோம் .. சிவாலா காட் to அஸ்ஸி காட் போட் சவாரி .. 

நிலா வெளிச்சத்தல கங்கையில அரை மணி நேரம் பயணம் .. 

பரந்தவெளிஜில்லுன்னு காத்து, போட் ஆடிஆடிபோறதால கங்கை

நீர் மேலே தெளிக்கிறது .. ஆஹா என்ன ஒரு ஆனந்தம் .. சங்கு 

நாதத்துடன், மந்த்ர கோஷத்துடன், வாத்யங்களின் வாசிப்புடன், 

ஆராதனை பாடல்களுடன் பெரிய பித்தளை விளக்குகளை ஏற்றி

கையிலேந்தி கங்கா மாதாவிற்கு ஆராதனை .. ஆரத்தியின் 

வெளிச்சத்தால் முழு சூழலும் ப்ரகாசமா ஆயிடுத்து .. ஆரத்தியை

போட்லேந்தே பாத்தோம் .. எங்கள சுத்தி நிறைய போட்.. 

போட்லேந்து பாக்றவா சிறிய விளக்குகளை தாமரை இலையில் 

வைத்து கங்கையில் மிதக்க விட்டா .. பாக்கும்போது  ஒருவிதமான

தெய்வீக அலையை உணரமுடிகிறது .. 

தசாஸ்வமேத் காட் ஆரத்தி தான் மிகவும் பிரசித்தின்னு சொல்றா



திரும்பும்புபோது 9 மணி ஆயிடுத்து ..  சமையற்கார மாமா சூடா 

ரவா உப்புமா தேங்கா சட்னி பரிமாறினார், கூட ஒரு டம்ளர் மோர் .. 

அவர் நீடுழி வாழ்க .. கார்த்தால நாலு மணிக்கு ஏந்துண்டு லாங் 

டிரைவ் போய்ட்டு வந்ததால உடம்பு டயர்ட் ஆயிடுத்து .. நேர 

ரூம்க்கு போய் கட்டையை கடத்தியாச்சு 


( ….. தொடரும் )

No comments:

Post a Comment