Thursday, December 14, 2023

விருந்தாவன்.. மதுரா (2)

ஜனவரி 21ம் தேதி … (… தொடர்கிறது

ஆறு மணிக்கு தான் முழிப்பு வந்தது ..ஜஸ்ட்  கால், சூடா காபி

வந்தது .. காலார அரைமணி நேரம் நடந்து, பிரேம் மந்திர்க்கு 

போனோம் ..பலப்பல வண்ண விளக்குகளால் பளீர் என்று 

மின்னும் பிரமாண்டமான ஒரு மாடர்ன் கோவில் ..


பிரேம் மந்திர் .. 

விருந்தாவன் புறநகரில் 55 ஏக்கர் நிலப்பரப்பில் ஜகத்குரு ஸ்ரீ 

கிருபாலு ஜி மகராஜ் அவர்களால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும்

ஒரு நவீனமான புதுமையான கோவில் வளாகம். 

ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திர்.

சுமார் 1000 கைவினைஞர்களால் எழுப்பப்பட்ட இந்த நவீன 

வளாகம் கட்டிமுடிக்க 12 ஆண்டுகள் ஆனது என்றும், மொத்த 

செலவு 200 கோடி என்றும் கூறப்படுகிறது.

அழகான தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகளால் சூழப்பட்ட இந்த 

வளாகம் முழுக்க முழுக்க இத்தாலி நாட்டு பளிங்குக்கல்லால் 

கட்டப்பட்டது.  

கொடி உட்பட 125 அடி உயரமும், 190 அடி நீளமும், 128 அடி 

அகலமும் கொண்ட இரண்டு அடுக்கு வெள்ளை மாளிகை ராதா 

கிருஷ்ணர் முதல் நிலையிலும்சீதா ராமர் இரண்டாம் நிலையிலும்

உள்ளனர் பிரமாண்டமான சிகரம், ஸ்வர்ண கலசம் மற்றும் கொடி

ஆகியவற்றின் எடையைத் தாங்கும் வகையில் கர்ப்பகிரகத்தின் 

சுவர்களின் தடிமன் 8 அடி.

கோவிலின் வெளிச் சுவர்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து 

லீலைகளும் மிக அழகாக செதுக்கப்பட்டு இருக்கிறது மேலும் 

கிருஷ்ணரின் எண்ணற்ற அற்புதமான உருவப்படங்களும் 

காணப்படுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதான நான்கு லீலைகள் - ஜூலன் லீலா,

கோவர்தன் லீலாராஸ் லீலா, கலியா நாக் லீலா (Jhulan leela,

Govardhan leela, Raas leela, Kaliya Naag leela) - வாழ்க்கை

அளவிலான சித்தரிப்புகளுடன்  (life-size depictions) 

காணப்படுகிறது.

பிரேம் மந்திருக்குப் பக்கத்தில் ஒரே நேரத்தில் 25,000 பேர் 

தங்கக்கூடிய 73,000 சதுர அடியில் தூண் இல்லாதகுவிமாடம்

வடிவ சத்சங்க மண்டபம் கட்டப்பட்டு வருகிறது


கிட்டத்தட்ட மூணு மணி நேரம் சுத்தி எல்லாவற்றையும் பார்த்து 

ரசித்தோம் .. மாக்ஸிமம் கிளிக் பண்ணியத இங்கே ஷேர் 

பண்ணியுள்ளேன் .. பத்து மணிக்கு டின்னர் .. இன்னிக்கி 

அமாவாசையை என்பதால் எனக்கும் பார்யாளுக்கும் ஜெயின் 

ஸ்டைல் .. இத்யாதி வஸ்துக்கள் கிடையாது .. உருளைக்கிழங்க

மீடியம் சைஸில் வெட்டி, கடுகு நெய் தாளிச்சு, லேஸா உப்பு 

போட்டு கொடுத்தார் செஃப் .. என்ன ஒரு ருசி ..

அப்புறம் என்ன நேர படுக்கைதான் 



தொடரும் … )

No comments:

Post a Comment