அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல்
நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …
அக்டோபர் 26 வியாழக்கிழமை … (தொடர்கிறது)
காசி கண்டத்தில் உள்ள ஸ்கந்த புராணத்தில் ஸுப்ரஹ்மண்ய
பகவான் அகஸ்திய முனிவருக்கு விவரமாக காசியின்
பெருமையை சுவாரஸ்யமா விவரிக்கிறார்.
விஷ்வேஷ்வரோ விசாலாக்ஷி த்யுநதி காலபைரவঃ ।
ஸ்ரீமான்டுந்திர்தண்டபாணிঃ ஷடங்கோ யோக் ஏஷ வை ॥“
"விஸ்வேஸ்வரர், விசாலாக்ஷி, தெய்வீக நதி கங்கை,
காலபைரவர், அற்புதமான துண்டி கணபதி, தண்டபாணி."
யாத்திரிகர் காசி ஷேத்திரத்தில் கட்டாயம் தரிஸிக்கிவேண்டிய
ஸ்தலங்கள் பற்றி ஒரு ஸ்லோகம்விவரிக்கிறது.
விஸ்வேஷம் மாதவன் துண்டின் தண்டபாணிஞ்ச பைரவம்
வந்தே காஷீம் குஹாம் கங்காம் பவானீம் மணிகர்ணிகாம்॥
"விஸ்வேஸ்வரர், மகாவிஷ்ணு, துண்டி கணபதி, தண்டபாணி,
காலபைரவர், கங்கை நதி, அன்னைவிசாலாக்ஷி மற்றும்
மணிகர்ணிகா காட்.”
இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கையில் 84 படித்துறைகள்
உள்ளன. இவற்றுள்ளும் அசிசங்கம காட், தசாசுவமேத காட்,
மணிகர்ணிகா காட், பஞ்சகங்கா காட், வருணா சங்கம காட்
ஆகிய ஐந்தும் மிக சிறப்புடையவை.
காசி என்றால் "பிரகாசம்". விஸ்வநாத் என்றால்
"பிரபஞ்சத்தின் இறைவன்". முக்தித் தரும் ஜோதிர்லிங்கங்கள்
என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட
பன்னிரண்டு புண்ணிய தலங்களில் ஒன்று. வாழ்நாளில் ஒரு
முறையேனும் சென்று வழிபட வேண்டிய தலம். சிவபெருமானுக்கு
அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புகழ்வாய்ந்த இந்த ஆலயம்
“ஸ்கந்தபுராணத்தின் காசி கண்டத்தில்” குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக பழமை வாய்ந்த இந்த ஆலயம் ஆக்கிரமிப்பாளர்களால்
பலமுறை அழிக்கப்பட்டது. இந்திய மன்னர்களால் மீண்டும்
கட்டவும், பழுது பார்க்கவும், புனரமைப்பும் செய்யப்பட்டது.
தற்போதைய கோயில் 1785இல் இந்தூரின் மகாராஜா மல்ஹர் ராவ்
ஹோல்கரின் மருமகள் அஹில்யா பா ய்ஹோல்கரால் கட்டப்பட்டது.
இந்த ஆலய அமைப்பு மூன்று கோபுரங்களைக் கொண்டது.
ஞானவாபி அல்லது ஞானக் கிணறு என்று அழைக்கப்படும் ஒரு
வரலாற்றுக் கிணறு கோயில் வளாகத்தில் உள்ளது.
ஜோதிர்லிங்கத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து
காப்பாற்றுவதற்காக கோயிலின் பிரதான பூசாரி லிங்கத்துடன்
கிணற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது .
1833-1840 க்கு இடையில், ஞானவாபி கிணற்றைச் சுற்றி பல
அண்டை கோவில்கள் மற்றும்கட்டங்கள் கட்டப்பட்டன. பல
இந்திய அரச குடும்பங்கள் மற்றும் ராஜ்யங்களால் கோவிலுக்கு
பங்களிப்புகள் செய்யப்பட்டன. சீக்கியப் பேரரசின்
ஆட்சியாளரான மஹாராஜா ரஞ்சித் சிங், 1835ம்ஆண்டில்
கோவிலின் இரண்டு குவிமாட முலாம் பூசுவதற்கு தங்கத்தை
நன்கொடையாக வழங்கினார். நாக்பூரின் ரகுஜி போன்ஸ்லே III
1841ம் ஆண்டில் கோயிலுக்கு வெள்ளிப் பங்களிப்பை
வழங்கினார். 1860 ஆம் ஆண்டில், நேபாளத்தின் ராணா 7 அடி
உயரமுள்ள நந்தி கல் சிலையைபரிசாக அளித்தார்.
கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியது. விஸ்வநாத
கல்லி என்று அழைக்கப்படும் ஒருசிறிய சந்தில் புனித நதியான
கங்கை ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ள சிறிய கோயில்களின்
தொகுப்பால் இந்த கோயில் வளாகம்உருவாக்கப்பட்டுள்ளது.
நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி
தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம்
கேட்கிறது.
2019 ஆம் ஆண்டில், பிரதமர் மோடியின் காசி விஸ்வநாத்
தாழ்வாரத் திட்டத்தின்படி கோயிலின் மொத்த பரப்பளவு சுமார்
50,000 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டது. தாழ்வாரத்தின்
சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 1,400 வீடுகள் மற்றும் வணிக
நிறுவனங்கள் இடமாற்றம்செய்யப்பட்டது. கங்கேஷ்வர்
மகாதேவ் கோவில், மனோகமேஸ்வர் மகாதேவ் கோவில்,
ஜவ்விநாயக்கோவில், மற்றும் ஸ்ரீ கும்ப மகாதேவ் கோவில்
உட்பட 40க்கும் மேற்பட்ட இடிந்த பல நூற்றாண்டுகள்
பழமையான கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டன.
டிசம்பர் 13, 2021 அன்று ஒரு விழாவில் யாத்ரீகர்களுக்கான
தளத்தை பிரதமர் திறந்து வைத்தார். அநாமதேய தென்னிந்திய
நன்கொடையாளர் ஒருவர் கோவிலுக்கு 60 கிலோ தங்கத்தை
வழங்கியதை அடுத்து, கோவிலின் கருவறை பிப்ரவரி 2022 ல்
தங்க முலாம் பூசப்பட்டது.
கர்பகிரஹத்தில் அடர் பழுப்பு நிறத்தில் 2 அடி உயரமும், 3 அடி
சுற்றளவிலும் உள்ள ஜோதிர்லிங்கம் வெள்ளி மேடையில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர் கார்த்திகேயன்
அவிமுக்தேஸ்வரர் காலபைரவர் சனீஸ்வரர் சிவன்-பார்வதி விஷ்ணு
ஆகியோருக்கு சிறியசன்னதிகள் உள்ளன .
விஸ்வநாதரையும் விசாலாக்ஷியையும் தர்ஸனம் பண்ண வாத்யார்
ஒரு Guide அனுப்பிச்சார் .. நாலரை மணிக்கு கிளம்பினோம் ..
அவன்கிட்டே ஹிந்தியில பேசினா. “மாமா, தமிழிலேயே பேசுங்கோ.
எனக்கு தெரியும். “ என நம்மூர் அஹ்ரகார பசங்கமாதிரி ஸ்பஷ்டமா
பேசறான். கொஞ்சதூரம் இரிக்ஷா, அப்புறம் நடைதான் ..
குறுகலான சத்துக்கள், நிறைய ஜனங்கள், நடுநடுவே பசுக்கள்,
அங்கங்கே நிறைய போலீஸ் .. ஒரு இடத்திலே செருப்பும் செல்லும்
டெபாசிட் பண்ணியாச்சு .. இருபது நிமிஷம் கழிச்சு கோயில்
என்ட்ரன்ஸ் கண்ல தென்பட்டது .. நல்லவிஸ்தாரமான காரிடார் ..
பளிச்சென்னு இருக்கு
வெள்ளியிலான தொட்டிக்குள் பால் அபிஷேகத்தில் மூழ்கியிருக்கும்
மிகச்சிறிய அதிசக்திவாய்ந்த மிகபழமையான லிங்கத்தை கையால்
தொட்டு தர்ஸனம் .. அன்று குருவாரா ப்ரதோஷம் .. என்ன ஒரு
புண்ணியம் .. அவன் அருளால் அவனின் அருளை உணரும் ஒரு
வாய்ப்பு கிட்டியது, மெய்சிலிர்க்க வைத்தது .. ஒரு சிறு அதிர்வு
மட்டுமே, ஆனால்ஆற்றாலோ மிக பெரியது .. கோவில் வளாகத்தில்
உள்ள விநாயகர் கார்த்திகேயன் அவிமுக்தேஸ்வரர் பைரவர்
சனீஸ்வரர் சிவன்-பார்வதி விஷ்ணு ஆகியோரையும் தர்ஸனம் ..
ப்ரமாண்டமான ஞானவாபி நந்தி தேவரின் தர்ஸனம் பெரும்பாக்யம்.
( ….. தொடரும் )
No comments:
Post a Comment