Friday, December 8, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 26 (1)

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 புதன் கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 26 வியாழக்கிழமை …


எர்லி மார்னிங் பைவ்  கிளாக் பிலைட் .. so வீட்டைவிட்டு 

ரெண்டரை மணிக்கு கிளம்பி ஏர்போர்ட்டுக்கு மூன்றைக்கு 

போயாச்சு .. நாசகதர்மிணிஇளைய சகோதரன் .. டிஜி யாத்ரா

App ரொம்ப helpful .. facial recognition technology .. 

மெயின் என்ட்ரன்ஸ் முதல் செக்யூரிட்டி கிளியரன்ஸ் வரை ஆறே 

நிமிஷம் தான் .. நம்ம மூஞ்சி, ID கார்டு, போர்டிங் பாஸ் இத 

மூனையும் திரும்பித்திரும்பி பார்த்து மெயின் என்ட்ரன்ஸ் 

செக்யூரிட்டி நம்மள  உள்ள விடவே ஏழுஎட்டு நிமிஷம் ஆயிடும் .. 

அதுக்கு முன்னாடி பெரிய Q நிக்கணும் .. டிஜி யாத்ரா just 

walk-in .. காலம்கார்த்தல மூன்றை மணிக்கு ஏர்போர்ட் நம்மூர்

கோயம்பேடு மார்க்கெட் ரெங்கநாதன் ஸ்ட்ரீட் மாதிரி ஒரே 

ஜனங்கள் .. freeயா நடக்க முடியல .. நமது பாரத தேசம் 

நன்னா முன்னேறிடுத்து  .. பிலைட்டுக்குள் உட்கார்ந்ததும் 

அசத்திடுத்து .. ஏழு மணிக்கு ஒரு புண்ணியவதி தட்டிஎழுப்பி 

சூடா காஃபியும் ஒரு டபுள்டெக் buttered பிரட் சாண்ட்விச் 

குடுத்தா .. காபி சூப்பர்ப், சாண்ட்விச் நாக்கு உள்ள 

விடமாட்டேன்னு அடம்ஒருமாதிரி உள்ளே தள்ளிட்டேன்  


எட்டரை மணிக்கு வாரணாசி ஏர்போர்ட்ல இறங்கியாச்சு .. 

ஏர்போர்ட்  நல்ல விஸ்தாரமா அழகிய வேலைப்பாடுகளுடன் 

நன்னா இருக்கு .. ஏற்கனவே புக் பண்ணின cabwala ரெடியா 

இருந்தார் .. ஏர்போர்ட்லேர்ந்து ஓல்ட் காசி ரொம்ப தூரம் .. 

ஒன்றைமணி நேரம் ஆயிடுத்து .. போற வழியெல்லாம் 

பளிச்சென்னு இருக்கு .. பெரியபெரிய பிராண்ட் எல்லாம் கடை 

திறந்துருக்கா .. பாரதப்ரதமர் தொகுதியாச்சே 

வாத்யார் ஆத்துக்கு போறப்போ பத்து மணி ஆயிடுத்து .. 


1991லேர்ந்து வாத்யார் குடும்பம் பரிச்சயம்.. ரூம் கொடுத்தார்

பெரிய வீடுமூணு அடுக்கு .. ரூம்ல சாமான்லாம் வெச்சுட்டு 

பக்கத்ல இருக்கும் சிவாலய காட் கங்கை நதியில் ஸ்னாநம் 

பண்ண போனோம் .. அந்த காலத்ல பிக்ஷண்டார்கோவில் 

அக்ராஹாரத்ல வஸிக்கிறப்போ காவேரிக்கு போறமாரி வேஷ்டி,

வெறும் உடம்புமேல துண்டு, செருப்பு இல்லாம வெறும்காலுடன் 

நடந்து போனோம் .. ஏழு நிமிஷம் ஆச்சு .. 32 வருஷங்கள் 

கழித்து புண்ணிய க்ஷேத்ரம் காசியில் புனித கங்கையில் 

ஸ்னாநம் .. ஆஹா என்னஒரு பரமானந்தம்.. உடல் குளிர்ச்சி

உள்ளம் குளிர்ச்சி, ஆத்மா குளிர்ச்சி  .. இடுப்பளவு நீரில் 

நின்றுகொண்டு ஏழுமுக்கு .. ஸஹதர்மிணியுடன் மூணு முக்கு ..

 கங்கா மாதக்கு ஒரு முக்கு .. ஸூர்ய பகவானுக்கு அர்க்யம்

பண்ணெண்டு மணிக்கு இலை போட்டு திவ்ய சாப்பாடு .. 

சுடசுட சாதம் சாம்பார் ரஸம் தயிர் கறி கூட்டு அப்பளம் வடை 

பாயஸம் .. கங்கைல குளிச்சதுநல்ல பசி நன்னா சாப்டாச்சு .. 

அப்புறம்என்னதூக்கம் தான் .. நாலு மணிக்கு எழுந்தா 

சமையற்கார மாமா சூடா காபி கொடுத்தார் 

( ….. தொடரும் )

No comments:

Post a Comment