Monday, December 11, 2023

காசி யாத்திரை … அக்டோபர் 30 (2)

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 30  திங்கள் … (தொடர்கிறது)

காசி தண்டபாணி கோயில் ..

கால பைரவர் கோவிலில் இருந்து குறுகிய சந்துக்கள் மூலம் இந்த

கோவிலை அடைய 5 நிமிடங்களே ஆகும் மிகச்சிறிய கோயில். 

காசியின் ஷெரீப் என்று அழைக்கப்படுகிறார்.  


காசியில் அசோக மரத்தின் வேரில் கடுமையாக தவம் செய்து

கொண்டிருந்த ஹரிகேஷா என்ற யக்ஷனை பரமேஸ்வரன் தொட்டு

எழுப்பி தரிசனம் அளித்துஎனக்கு பிரியமான இந்த புனித 

ஸ்தலத்தில் நிரந்தர தண்டதராவாக (நியாயக்கோலை 

பிடிப்பவனாக) இரு என்று ஆசீர்வதித்து, இன்று முதல் நீ எனக்கு 

பிடித்தமானவாகவும் துன்மார்க்கரை தண்டிப்பவனாகவும் 

தகுதியுள்ளவர்களுக்கு பாதுகாவலனாகவும் இரு என்று நியமித்து, 

உனக்கு இனிமேல் தண்டபாணி என்று பெயர் சூட்டியதாக ஸ்கந்த 

புராண காசி காண்டம்  கூறுகிறது.  

ஞான வாபி தீர்த்தத்தில் நீராடிமுன்னோர்களுக்கு அர்ச்சனை 

செய்துபின் தண்டபாணியை வழிபடும் பக்தர்கள்சிவபெருமான் 

ஆசி பெற்றுவாழ்வில் உள்ள சவால்கள் அனைத்தும் நீங்கி

அதீதசெழிப்பை அடைவார்கள் என்றும் அவர்கள் சந்தேகமில்லாமல் 

முக்தியை அடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.


வாத்யார் ஆத்துக்கு திரும்பும்புபோது ரெண்டு மணி ஆயிடுத்து .. 

இலை போட்டு திவ்ய சாப்பாடு .. சுடசுட சாதம் சாம்பார் ரஸம் தயிர் 

கறி கூட்டு அப்பளம் வடை பாயஸம் .. மூணு மணி நேரம் நடந்தது ..

நல்ல பசிநன்னா சாப்டாச்சு .. அப்புறம் என்னதூக்கம் தான் .. 

அஞ்சு மணிக்கு எழுந்தா சமையற்கார மாமா சூடா காபி கொடுத்தார்

ஆறு மணிக்கு வாத்யார் ஆத்துக்கு எதிரே இருக்கும் காமகோடிஸ்வர் 

மந்திர்க்கு போனோம் .. ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தால் 

நிர்வகிக்கப்படுகிறது .. நம்மூர் கோயில் ..

அஞ்சு அடுக்கு கோபுரத்துடன் பிரதான வாசல் .. உள்ளே நந்தியம் 

பெருமானுடன் கூடிய லிங்கம் (காமகோடீஸ்வரர்)அழகான 

அம்பாள் (காமகோடீஸ்வரி), விநாயக பெருமான்இடும்பன் வீரபாகு

உடன் ஆறுமுக பெருமான், பூர்ண புஷ்காலம்பா ஸமேத தர்மசாஸ்தா

(அய்யப்ப ஸ்வாமி), கஜலக்ஷ்மிபட்டாபிஷேக ராமர்ஆஞ்சநேயர், 

ஸ்ரீ மாதவ பெருமாள், ஸூர்ய பகவான் நவகிரஹங்கள் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.  

ஆதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ பஞ்சாயதன முறைப்படி

இந்த கோயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீ ஸர்வமங்களா தேவிஸூர்யன், சந்திரன், சப்தரிஷிகள் 

உடனிருக்க ஆலஹால விஷத்தை உண்டபின் மயக்கத்தில் 

சயனித்திருக்கும் சிவபெருமானின் பள்ளிகொண்டேஸ்வரர் 

திருக்கோலம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.


இன்னிக்கி வேற ப்ரோக்ராம் இல்லை .. அதனால வாசல் திண்ணைல

உட்காண்டு வேடிக்கை . வாத்யார் ஆத்துக்கு வரவா போறவாட்டலாம் 

எங்கேந்து வறேள் எதுக்கு வந்திருக்கேள்ன்னு குஜலம் விஜாரிப்பு .. 

டைம் போனதே தெரியல .. எட்டரை மணிக்கு சமையற்கார மாமா 

குரல் குடுத்தார் .. பந்திக்கு முந்திண்டாச்சு .. இட்லி சட்னி சாம்பார், 

ஒரு டம்ளர் மோர் .. 9 மணிக்கு படுத்தாண்டாச்சுநாளைக்கு 

தகப்பனார் வருஷாந்த்ர ஸ்ராத்தம்(33வது)


( ….. தொடரும் )

No comments:

Post a Comment