Saturday, December 9, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 27 (1)

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 26 வியாழக்கிழமை … (தொடர்கிறது)


துந்திராஜ் கணபதி மந்திர், அன்னபூரணி தேவி மந்திர், விசாலாக்ஷி

கோவில்விஸ்வநாதர் கோயில் .. இந்த 4 கோயில் பாக்கறதுக்கு 

மூணு மணி நேரம் ஆயிடுத்து .. செல் இல்லாததால் நிறைய நல்ல

சுவாரஸ்யமான சம்பவங்களை க்ளிக் பண்ணமுடியலை .. டோட்டல் 

மிஸ் .. செருப்பையும் செல்லையும் கலெக்ட் பண்ணிண்டு இரிக்ஷா

பிடிக்கறதுக்கு முன்னாடி சூடா டீ குடிச்சோம் .. மண்குவளைல 

குடுத்தான்நல்ல டேஸ்ட் .. வாத்யார் ஆத்துக்கு திரும்பும்புபோது 

எட்டு மணி ஆயிடுத்து .. டிபன் இட்லி சட்னி சாம்பார் .. மூணு மணி

நேரம் நடந்தது நல்ல பசிசூடா ஆறு இட்லி கபளீகரம் ஆயாச்சு, 

கூட ஒரு டம்ளர் மோர் .. நாளைக்கு கயா விஸிட், cabwalaக்கு 

போன் பண்ணி கார்த்தாலே நாலரை மணிக்கு வரசொல்லிட்டு நேர 

ரூம்க்கு போய் கட்டையை கடத்தியாச்சு .. நல்ல ஆழ்ந்த தூக்கம் 


அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை …

Cabwala 4 மணிக்கு கதவை தட்டி எழுப்பிட்டான் .. பல் தேச்சு

மூஞ்சி அலம்பிண்டு நாலரைமணிக்கு கிளம்பியாச்சு .. 250 KM, 

அஞ்சு மணி நேரம் ஆகும் .. காசி ஷேத்திரத்திலேர்ந்து கொஞ்ச

தூரம் போய் ஹைவே டச் பண்ணி பத்து நிமிஷம் கழிச்சு ரோடு

சைடு கடையிலே சூடா டீ .. மண்குவளை டீயே ஒரு தனி அலாதி 

டேஸ்ட் .. நல்ல உய்டு ரோடு .. நீட் அண்ட் கிலீன் .. median 

strips and traffic islands are well maintained with lush 

greens, hats-off to Nitin Gadkari Ji & Yogi Ji .. நடுநடுவே

கிராமங்கள் .. பலவகை உடைகளில் ஜனங்கள்கூடவே எருமை 

மாடுகள் .. ஸூர்யபகவான் எங்களுக்கு முன்னாடி போய்க்

கொண்டிருக்க்கிறார் .. சைடுல யூனிபார்ம்ல சைக்கிள்ல ஸ்கூல்

ஸ்டூடெண்ட்ஸ் .. ஸோன் ரிவர் கிராஸ் பண்ணினவுடனே பீகார் 

ஆரம்பம் .. கார்ல போயிண்டு இருக்கும்போதே ரோடு தராதரத்தை

உணரும்போதும் சுற்றுப்புற சூழ்நிலைகளை பார்க்கும்போதும்

நன்கு தெரிகிறது நாம் உபியில் இல்லை என்று ..  புத்கயா கிட்ட 

வண்டிஓட்டி நாஷ்டாகாக நிறுத்தினான் .. சிராத்த காரியத்துக்கு 

போயிண்டு இருக்கோம் .. முடியும் வரை சாப்பிடமாட்டோம் என்று

சொன்னதால, அவனும் சாப்டலை .. நான் மட்டும் சாப்டறது நல்லது

இல்லைஉங்களை கயாவுல உட்டுட்டு நான் சாப்பிட்டுகிறேன் 

சொல்லிட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சுட்டான் .. என்ன ஒரு உயர்ந்த

உள்ளம் .. காசி வாத்யார் ரெபர் பண்ணின கயா பூமா மாமி ஆத்துக்கு

வந்தபோது மணி ஒன்பதரை .. மூணு பேரும் குளிச்சிட்டு

மடி வஸ்த்ராம் அனிஞ்சுண்டு அக்ஷ்யவடம் போறதுக்கு ரெடி

ஆயிட்டோம் .. பூமா மாமி அன்னம் வடிச்சு கொடுத்தா .. சகதர்மிணி

அதுல 64 பிண்டம் பிடுச்சு வெச்சா .. கயா வாத்யார் சிக்னல்லுக்கு 

வெயிட் பண்ணிண்டுருக்கோம்.


வாத்யார் அக்ஷ்ய வடத்துக்கு வர்துக்கு இன்னும் ஒரு மணி நேரம் 

ஆகும், நீங்க விஷ்ணுபாத மந்திர்க்கு போய்ட்டு வந்துடுங்கோ

பக்கத்துல தான் இருக்குன்னு பூமா மாமி சொன்னா .. மடி வஸ்த்ரம் 

கட்டிண்டாச்சு, எப்படி போறதுன்னு யோசிச்சோம் .. ஆனா மாமி 

புரிஞ்சுண்டு காசியிலும் கயாவிலும் மடி ஆச்சாரம் எதுவும் 

கிடையாது, ஸாக்ஷாத் பரமேஸ்வரனும் விஷ்ணுவும் இங்கே 

நடமாடிண்டு இருக்கா, பித்ருக்கள் கோவிச்சுக்க மாட்டா, போய்ட்டு

வாங்கோன்னு சொல்லிஒரு ஆட்டோரிக்க்ஷா ஏற்ப்பாடுபண்ணிட்டா

இங்கேந்து அஞ்சு நிமிஷம்தான் .. ஸ்ரீராமர் சீதாபிராட்டி லக்ஷ்மணன்

குளிச்ச பல்குணி நதிக்கு போனோம் .. காசில கங்கை நதியை 

எவ்வளவு சுத்தமா வெச்செண்டு இருக்கா .. இங்கே அந்த ஸ்பிரிட் 

டெடிகேஷன் இல்லை தலையிலே ப்ரோச்னம் பண்ணிண்டாச்சு ..

ஸர்வம் கிருஷ்ணார்ப்பனம்

ஃபால்குனி நதி …

லீலாஜன் ஆறும்மோகனா ஆறும் புத்தகயையில் (புத்தகயா /

போத்கயாஒன்று கூடி ஃபால்குனி நதியாக கயாவில் பாய்கிறது

ஃபால்குனி ஆற்றை நிரஞ்சனா ஆறு என்றும் அழைப்பர்

பல்குணி நதிக்கரையில் ஸ்ரீராமர் லக்ஷ்மணன் சீதாபிராட்டி தங்கி 

இருந்த போது தசரத மஹாராஜாவுக்கு ஸ்ராத்தம் கொடுக்க 

வேண்டிய நாள் வந்ததுஅதிகாலையில் எழுந்த சகோதர்கள் 

நதிக்கு அக்கரையில் தேவையான் பொருட்களைச் சேகரித்து நதி

வழியே வந்து கொண்டிருந்தனர்அவர்களை எதிர்பார்த்துக் 

கரையோரம் சீதா பிராட்டி காத்திருந்தபோது திடீரென தசரதரே

வந்துவிட்டார்.  அந்த யுகத்தில் முன்னோர்கள் நேரில் வந்து 

பிண்டங்களை வாங்கிக் கொள்வது வழக்கம்.  விதிர்விதிர்த்து

போன சீதா பிராட்டி மாமனாரை வணங்கி தாமதத்துக்கு 

மன்னிக்கச் சொல்லி சகோதரர்கள் வந்துவிடுவார்கள் என்று உறுதி

சொல்கிறாள்.  தசரதரோ “ மிகவும் பசியாய் இருக்கிறது.  சீதே, நீ 

அந்த மணலில் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை நீர் 

வார்த்து எனக்குக்கொடு” என்கிறார்.  தயங்கின சீதையை 

உற்சாகப் படுத்துகிறார்.  வேறு வழியின்றி அக்ஷயவடம்

ஃபால்குனிநதிஒரு பசுஒரு துளசிச் செடி மற்றும் ஒரு பிராமணன்

ஆகிய ஐந்து சாட்சிகளுடன் சீதையும் கொடுக்க அதை 

ஸ்வீகரித்தபடி மறைந்து விடுகிறார். ஸ்ரீராமர் திரும்பி வந்ததும் 

சீதை நடந்ததைச்சொன்னாள்.  சீதை தன் சாட்சிகளைக் 

குறிப்பிட்டுஸ்ரீராமரிடம் உண்மையைச் சொல்லும்படி கேட்டாள்

ஐவரில் அக்ஷயவடம் மட்டும் தன் பக்கம் எடுத்து உண்மையைச் 

சொல்லமற்ற நால்வரும் பொய் சொல்லி ராமரின் பக்கம் பேசி 

சீதையின் சாபத்துக்கு உள்ளானார்கள்.  ஃபால்குனி நதிக்கு இனி 

கயாவில் தண்ணீர் இருக்காது;  பசுவை மற்ற அனைவரும் 

வணங்குவதுபோல் இனி முன் இருந்து வணங்க மாட்டார்கள்

அதன் பின்பக்கம் மட்டுமே வணங்கப்படும்;  கயாவில் துளசி செடிகள் 

இருக்காது மற்றும் கயா பிராமணர்கள் ஒருபோதும் திருப்தி 

அடையமாட்டார்கள்எப்போதும் பசியுடன் இருப்பார்கள்.  

அக்ஷ்யவடம் உண்மை சொன்னதால்கயாவிற்கு வருபவர்கள் 

அனைவரும் அதன் அடியிலும் பித்ருக்களுக்கு பிண்ட பிரதானம் 

செய்வார்கள் என்று ஆசீர்வதித்தாள்.


மழைக் காலங்களில் மட்டும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து 

ஓடும்.  பிற பருவ காலங்களில் ஆறுநீரின்றி வற்றி இருக்கும்.  

நிலத்தடியில் தண்ணீர் இருப்பது தெளிவாகத் தெரியும்.  

ஏனென்றால்ஒருவர் விரல்களால் தரையில் தோண்டும்போது 

தண்ணீர் தோன்றும்.  இது நதியின் சாபத்தின் காரணம்.


( ….. தொடரும் )


.

No comments:

Post a Comment