அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல்
நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …
அக்டோபர் 26 வியாழக்கிழமை … (தொடர்கிறது)
துந்திராஜ் கணபதி மந்திர் அன்னபூரணி கோவிலை ஒட்டியுள்ள ஒரு
சிறிய கல்லியில் அமைந்துள்ளது .. மிகச்சிறிய கோவில் என்பதால்
கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியம் .. கோவில் என்பதை
விட மிகச்சிறிய சன்னதி என்று கூறலாம் .. துந்தி கணபதியை
தரிசிக்காமல் காசி யாத்திரை முழுமை அடையாது என்று
ஸர்வேஸ்வரனே கூறியுள்ளார் ..
துந்திராஜ் அருளால் அவர் தாள் வணங்கி சரணடைந்தேன்.
துண்டி கணபதிக்கான தியான ஸ்லோகம்:
அக்ஷமலம் குத்தாரம் ச ரத்னபத்ரம் ஸ்வதாண்டகம்|
தத்தே கரைஹ் விக்னராஜஹ துனிநாம முதேசஸ்து நஹ் ||
“ருத்திராட்சம், கோடாரி, ரத்தினக் கோப்பை, தன் தந்தம்
ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியபடி, துந்தி என்ற பெயரால்
அழைக்கப்படும் அந்த கணபதி நம்மைப் பற்றி மகிழ்ச்சியடையட்டும்.
காசி க்ஷேத்திரத்தின் பாதுகாப்பிற்காக 56 வடிவங்களில் ஏழு
ஆவரணங்களில் (அடுக்குகள்), ஒவ்வொரு அடுக்கிலும் எட்டு
வடிவங்களில் எட்டு திசைகளில் கணபதி தன்னை நிலை
நிறுத்தியுள்ளார்.
காசி மண்டலத்தின் மையத்தில் துண்டி கணபதி அமர்ந்துள்ளார்.
ஸ்ரீ பரமேஸ்வரன் கூறுகிறார்:
“ஷட்பஞ்சாஷத் கஜமுகாநேதான் யঃ சம்ஸ்மரிஷ்யதி ।
দூரதேசாந்தரஸ்தோபி ச மৃதோ ஞானமாப்னுயாத் ॥“
"இந்த ஐம்பத்தாறு கணபதியை தியானிப்பவன், தொலைவில்
இருந்தாலும், மரணத்தின் போதுஞானத்தை அடைவான்."
अन्वेषणे ढुढिरयं प्रथितोस्ति धातुः सर्वार्थढुंढितया तव ढुंढिनाम ।
काशीप्रवेशमपि को लभतेत्र देही तोषं विना तव विनायक ढुंढिराज ॥
“The root ‘ढुढ् ‘means ‘to search’. You are now ‘ढुंढि ‘
because you search for fulfilment of all the wishes of
devotees. O Vinayaka, O Dhundhiraja, without pleasing
you, which jiva here on earth can enter Kashi?”
ढुढ्' என்ற மூலத்திற்கு 'தேடுதல்' என்று பொருள். பக்தர்களின்
அனைத்து விருப்பங்களையும்நிறைவேற்ற நீ தேடுவதால், நீ
இப்போது 'துந்தி' ஆக உள்ளாய். ஓ விநாயகா, ஓ துந்திராஜா,
உன்னை மகிழ்விக்காமல், பூமியில் உள்ள எந்த ஜீவன் காசிக்குள்
நுழைய முடியும்?"
சிவன் பின்னர் கூறுகிறார்,
ढुण्ढे प्रणम्य पुरतस्तव पादपद्मं यो मां नमस्यति पुमान् इह काशिवासी ।
तत्कर्णमूलमधिगम्य पुरा दिशामि तत्किञ्चिदत्र न पुनर्भवतास्ति येन ॥
“One who first worships your lotus feet and then
worships me, I whisper into his ears at the time of his
death that mantra which enables him to never return
to this samsara”.
“ஒருவன் முதலில் உனது தாமரைப் பாதங்களை வணங்கிவிட்டு,
பிறகு என்னை வணங்குகிறானோ, அவன் இந்த சம்சாரத்திற்கு
திரும்பாமல் இருக்க உதவும் மந்திரத்தை அவன் இறக்கும் போது
நான்அவன் காதுகளில் கிசுகிசுக்கிறேன்".
( ….. தொடரும் )
No comments:
Post a Comment