Monday, December 11, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 31

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 31 செவ்வாய்கிழமை …



6 மணிக்கு ஏந்துண்டு7 மணிக்கு கங்கா ஸ்னாநம் (துலா ஸ்னாநம்)

நான்காம் தடவை .. குளிச்சுட்டு வரும்போது மடியா சொம்புல 

கங்காஜலம் ஸ்ராதத்துக்கு .. தகப்பனார் வருஷாந்த்ர ஸ்ராத்தம் 

9 மணிக்கு ஆரம்பிச்சு, பிண்ட ப்ரதான் முடியறச்ச மணி 12 

ஆயிடுத்து .. அப்புறம் பிண்டங்களைஎடுத்துண்டு கங்கைக்கு போய்

கரைச்சோம் .. பிண்டங்களை மீன்கள் சாப்டும்போது மூதாதையர்கள்

உண்கிறார்கள் என்கிற ஒரு ஆத்ம திருப்திசந்தோஷம் .. அதுவும் 

புண்ணியக்ஷேத்ரம் காசியில் புனித கங்கையில் என்பது ஒரு 

ரெட்டிப்பு மகிழ்ச்சி .. வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபிகளாய் இருக்கும் 

என்னுடைய ஸங்ருதி கோத்ர பித்ரு பிதாமக ப்ரபிதாமகர்களுக்கும்,

 மாத்ரு பிதாமகி ப்ரபிதாமஹிகளுக்கும் என் அனந்த கோடி 

சாஷ்டாங்க நமஸ்காரங்கள்



தகப்பனாரின் ஆப்தீகம் (முதல் ஸ்ராத்தம் . 1991) இங்குதான் 

பண்ணினோம் .. இப்ப இருக்குற வாத்யாரின் தகப்பனார்தான் 

பண்ணிவெச்சார் .. இன்று 33வது 


பிண்டமாகஉதகத்தில் (நீரில்நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் 

பெற்றதைஉதகத்தில் பிண்டத்தை இணைத்துபிண்டோதகக்

கிரியையாகயார் மூலமாகப் பெற்றோமோஅவர் மூலமாகஅவர் 

நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில்

அடைந்தவுடன்திருப்பித் தருகிறோம்.

தாய் தந்தையரது மரபணு மூலமாகஐம்பூதங்களிளிருந்தும் 

சத்தினை இழுத்து நம் உடலைவளர்க்கிறோம்.  அந்த 

ஐம்பூதங்களுக்கும் நாம் பட்ட கடனை பெற்றோர் மூலமாக

ஸ்ரத்தையுடன் பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் 

தருகிறோம்.

உதகத்தில்பிண்டம் வளரக் கடன் வாங்கினோம்.  பிண்டத்தை 

உதகத்தில் கரைத்து அதைத்திருப்பிச் செலுத்துகிறோம்.


நாங்க சாப்ட்டு முடிக்க ரெண்டு மணி ஆயிடுத்து .. உடம்பு டயர்ட் 

ஆயிடுத்துபடுத்தாண்டாச்சு .. ஏந்துக்கும்போது அஞ்சு மணி 

ஆயிடுத்துசமையற்கார மாமா சூடா காபி கொடுத்தார்பாடி 

நார்மலுக்குவந்துடுத்து .. டுடே நோ மோர் ப்ரோக்ராம்ஸ்திண்ணை 

அரட்டை .. டெல்லில மினிஸ்ட்ரீல இருக்கற ரெண்டு உயர்மட்ட

அதிகாரிகள் அவா அப்பா அம்மாக்கு ஸ்ராத்தம் பண்ணவந்திருந்தா,

எங்களை மாதிரி .. அவாளும் எங்களோட அரட்டைல சேந்துட்டா .. 

டைம் போனதே தெரியல

எட்டரை மணிக்கு சமையற்கார மாமா குரல் குடுத்தார் .. பந்திக்கு 

முந்திண்டாச்சு .. உப்மா கொழுக்கட்டை, தேங்கா சட்னி, டம்ளர் 

மோர் .. 10 மணிக்கு படுத்தாண்டாச்சு

No comments:

Post a Comment