என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்
அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல்
நவம்பர் 1 புதன் கிழமை நடுநிசி வரை …
நவம்பர் 1 புதன் கிழமை … (தொடர்கிறது)
மணி 12 ஆயிடுத்து .. இலை போட்டு சாப்பாடு .. சுடசுட சாதம்
சாம்பார் ரஸம் தயிர் கறி கூட்டு .. காசிக்கு வந்துட்டு பெனாரஸ் சில்க்
ஸாரீ வாங்கலைன்னா எப்படி .. சாப்ட கையோட வாத்யார்
ரெகமெண்ட் பண்ண புடவைக் கடைக்கு விஜயம் .. வாத்யார்
லோக்ல்ல வெரி இன்ஃப்ளுன்ஷியல் பெர்சன், யோகி ஜி வரைக்கும்
பழக்கம் .. கடைக்காரன் நல்ல குவாலிட்டி புடவைகள் காமிச்சான்
சுமார் 20-30 புடவைகளை அலசிட்டு, மூணு புடவை செலக்ட்
பண்ணினா பார்யாள் .. விலை எனக்கு பிரமிப்பு, வேறவழி
கொடுத்தாச்சு .. பேக் டு வாத்யார் ஹவுஸ்
2 மணிக்கு படுத்தாண்டாச்சு, அரைகுறை தூக்கம் .. அஞ்சு
மணிக்கு ஏந்துண்டு, தங்கியிருந்த இடத்தை சுத்தியுள்ள வீதிகளில்
கேஸுல் வாக் .. ஒரு இடத்துல நல்ல கூட்டம் .. கிட்டபோய் பாத்தா
கையேந்தி பவன் .. மூனு சோட்டிசைஸ் ஆலூ கச்சோரி,
மண்குவளை டீ .. திரும்பி வந்து, பேக்பண்ணி, எல்லார்டையும்
சொல்லிண்டு .. ஸ்பெஷலா சமையல்கார மாமா, ஏழுநாள் ரெண்டு
வேளை நல்ல ஆகாரம் குடுத்தார் .. ரெடி ஆயாச்சு
ஏர்போர்ட்டுக்கு எட்ரைக்கு போயாச்சு .. பாரதப்ரதமர்
தொகுதியாச்சே, இங்கேயும் டிஜி யாத்ரா App .. மெயின்
என்ட்ரன்ஸ் முதல் செக்யூரிட்டி கிளியரன்ஸ் வரை நாலே நிமிஷம்
தான் .. ஸிம்ப்ளி வாக்-இன்.. here an added advantage, for
Boarding too DigiYatra App .. 9:45க்கு பிலைட் கிளம்பிடுத்து
கிளம்பி ஓன் அவர்ல சூடா காஃபியும் ஒரு டபுள்டெக் buttered
பிரட் சாண்ட்விச் குடுத்தா ஒருபுண்ணியவதி
நடுநிசி 12:15க்கு பெங்களூர் லேண்டிங் .. ஏற்கனவே புக் பண்ணின
cabwala ரெடியா இருந்தார் .. இல்லம் வர ஒன்றைமணி நேரம்
ஆயிடுத்து .. ஹோம் ஸ்வீட் ஹோம், பிரெஸ்டிஜ் வெல்லிங்டன் பார்க்
அப்புறம் என்ன, தூக்கம் தான் .. கட்டையை கடத்தியாச்சு
ஓம் துந்தி கணபதியே நம:
ஓம் விசாலாக்ஷி ஸமேதயா விஸ்வநாத பரப்ரஹ்மணே நம:
ஓம் அன்னபூரணி தேவ்யை நம:
ஓம் காலபைரவயா நம:
(காசி யாத்திரை முடிவுற்றது)
No comments:
Post a Comment