Thursday, December 14, 2023

விருந்தாவண் .. மதுரா (1)

ஜனவரி 21ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு நான் பார்யாள் 

உமாகாந்த் கணு பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம் .. 

காலம்கார்த்தால அஞ்சு மணிக்கு ஏர்போர்ட்ல மைலாப்பூர் 

அறுபத்துமூவர் வைபவ கூட்டம் மாதிரி ஜேஜேன்னு ஜனங்கள் .. 

நமது பாரத தேசம் நன்னா முன்னேறிடுத்து .. மெயின் எண்ட்ரன்ஸ் 

டு செக்யூரிட்டி கிலீரென்ஸ் டுக் 45 மினிட்ஸ் .. டெல்லி போய் 

அங்கேந்து விருந்தாவண் போறதுக்கு மத்யானம் ரெண்டு மூணு மணி

ஆயிடும் .. அதுவரைக்கும் பசி பொறுக்காது .. அதனால கார்த்தால 

6:15 மணிக்கு கொதிக்ககொதிக்க மிளகு போட்ட வெண்பொங்கல்,

தொட்டுக்க தயிர் .. இன்னிக்கி அமாவாஸை, வஸ்துக்கள் கூடாது .. 

ஏழு மணி இண்டிகோ .. நானும் பார்யாளும் பிலைட்ல போன 

உமாகாந்த் எப்பவுமே மூணாவது ரோ தான் புக் பண்ணுவான் .. மூணு

மணிக்கே ஏந்துகுளிச்சதால, சீட்ல உட்காந்ததும் சொக்கிடுத்து .. 

ஒரு புண்ணியவதி எட்டரை மணிக்கு எழுப்பி hot coffee வித் 

roasted cashew குடுத்தா.. நான் முந்திரி டப்பாவை பார்யாள் 

handbag வெச்சுட்டேன் .. நாளைக்கு கொறிக்க .. பத்து மணிக்கு

தலைநகர் லேண்டிங் .. Umakanth already booked an Innova 

from Delhi to Vrindavan to Mathura to Agra to back Delhi

அந்த டிரைவர் ரெடியா இருந்தான் .. ஓல்ட் ரூட்ல பயணம், 

டுவார்ட்ஸ் விருந்தாவண் .. 125 KMs, two and half hours ..  

Reached Vrindavan at 3pm .. checked in to Best Western

Chain at Vrindavan .. well maintained, best equipped 

4-Star Hotel .. stay till Monday 23rd .. 

Plans to visit religiously important places in connection 

with Sri Krishna Paramathma’s early life..

Vrindavan, Mathura, Govardhan, Barsana

அமாவாஸ்யா தினம்பெஸ்ட் தயிர்சாதம் .. ரூம் சர்வீஸ் ஆர்டர் 

பண்ணினோம்எனக்கும் பர்யாளுக்கும் .. உயர்ரக உணவகத்திற்கு

ஏற்ப கிஸ்மிஸ் மாதுளை முத்துக்கள் பொடிப்பொடியாக நறுக்கின

கொத்தமல்லி தூவி ஒரு பௌல் ஸர்வ் பன்னினான் .. ஆஹா 

ஜீவாமிர்தம் .. கார்த்தாலே நாலு மணியிலிருந்து கன்டினியஸ் 

ட்ராவல் பாடி டயர்ட் ஆயிடுத்து தயிர்சாதம் உள்ளே போனதும் 

சொக்கிடுத்து .. படுத்தாண்டாச்சு, ஆழ்ந்த தூக்கம் 


தொடரும்  )





No comments:

Post a Comment