Sunday, December 10, 2023

காசி யாத்திரை .. அக்டோபர் 29 (1)

என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்

அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல் 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …


அக்டோபர் 29 ஞாயிறு …  

Cabwala 4 மணிக்கே கதவை தட்டிட்டான் .. பல்தேச்சு மூஞ்சி 

அலம்பிண்டு நாலரை மணிக்கு கிளம்பியாச்சு .. 200 KM, நாலு  

மணி நேரம் ஆகும் .. கிளம்பி கொஞ்சநேரம் கழிச்சு ரோடுசைடு 

கடையிலே சூடா மண் குவளை டீ .. நல்ல விஸ்தாரமான ரோடு, 

டிராபிக் அவ்வளவு இல்லைஎட்டுமணிக்கே அயோத்யா தொட்டாச்சு

எண்ட்ரி பாயிண்ட்ல போலீஸ் கெடுபிடி .. எக்கச்சக்க கார்கள்

பஸ்கள் ட்ரக்குகள் வைட்டிங் . lengthy queue . 

Cabwala தெரிஞ்ச உள்ளூர் வாசிக்கு போன் பண்ணினான் .. அவன்

பைக்ல வந்து எங்க வண்டியை நிறைய குட்டிக்குட்டி சந்துகள் 

வழியே கூட்டிண்டு போய் சரயு நதி படித்துறையிலே விட்டான் 

இறங்கி மண்ணை தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டேன் .. 

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கால்கள்பதித்த இடம் .. ராம ஜென்ம பூமி .. 

ஸகோதரர்களுடன் அவர் ஓடியாடி விளையாடிய இடம் .. ராமஜென்ம

பூமியின் மண்ணை ஸ்பரிக்கும் கொடுப்பினை எங்களுக்கு . எல்லாம்

பூர்வ ஜென்ம புண்ணியம், தாய் தந்தை ஆசிர்வாதம் .. ஒன்பது 

மாதங்களுக்கு முன் ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமியின்(மதுரா) மண்ணை

ஸ்பரிக்கும் கொடுப்பினை  .. 

ஆஹா என்னஒரு இறைவனின் அனுக்ரஹம் 

சரயு நதி..

எந்த புத்திர சாபத்தால் தசரத மகாராஜா தம் இன்னுயிர் புத்திரன் 

ஸ்ரீராமனைப் பிரிந்து உயிரிழந்தாரோ அந்த சாபத்துக்குக் 

காரணமானசிரவண மோட்சம்” நடைபெற்றது சரயு நதிக்கரையில்

தான், அந்த சாபத்துக்கு மெளன சாட்சியாய் நின்றதும் இதே சரயு 

நதி தான் என்கிறது புராணம் .. சரயு நதிக்கரையில் அமைந்துள்ள 

அயோத்தியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார் .. ஸ்ரீராமர் அயோத்தியின்

ஆட்சிப் பொறுப்பை தமதுவாரிசுகளான லவகுசனிடம் ஒப்படைத்து

விட்டு சரயுவில் இறங்கி தம்அவதாரத்தை முடித்துக் கொண்டு 

மகாவிஷ்ணுவுடன் ஐக்கியமானார் என்கிறது துளசிதாஸரின் ராம

சரித மானஸ் .. இவ்வளவு புண்ணியம் செய்த இந்த புனித நதியின் 

இன்றையநிலைமைமனஸு ரொம்ப வலிக்கிறது .. காசில கங்கை 

நதியை எவ்வளவு சுத்தமா வெச்செண்டுஇருக்கா .. தலையிலே 

ப்ரோச்னம் பண்ணிண்டாச்சு .. ஸர்வம் கிருஷ்ணார்ப்பனம்


சீதா ரசோயிஸ் .. 

சீதாபிராட்டி தனது முதல் உணவை ஸ்ரீராமரின் தந்தை தசரத 

மகாராஜாக்கு சமைத்த சமையலறை .. ரசோய் ஆலய அடித்தளத்தில்

பச்சை வெள்ளை கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட மூன்று

ஓடுகள் கொண்ட ஒரு உட்காரும் கான்கிரீட்-பிளாக்ஒரு கான்கிரீட் 

ஓடு, உருட்டல் பலகை (டைனிங் டேபிள் மாதிரி) .. சுல்ஹா, நான்கு 

மூலையுள்ள  உணவு சமைக்க உபயோகப்படுத்தப்படும் கல் அடுப்பு .. 

ஒரு வார்ப்பு-கான்கிரீட் குழவி .. அருகில் சீதா கிணறு, சீதா பிராட்டி

வேண்டிய நீரை இதிலிரிந்துதான் எடுத்துக் கொள்வாராம் .. 

அடுத்துள்ள ஒரு மிகபெரும்பகுதி ஜன்ம ஸ்தான் என்று 

அழைக்கபடுகிறது .. இங்கேதான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பிறந்து 

வளர்ந்த இடம் என்கிறார்கள் .. அங்கு நான்கு ஸகோதரர்களின் 

(ராம் லக்ஷ்மன் பரத் ஷத்ருகன்பத்னிகளுடன் கூடிய (சீதா ஊர்மிளா

மாண்டவி ஸ்ருதகீர்த்தி) உருவச்சிலைகள் இருக்கிறது 

படே ஹனுமான் மந்திர் .. 

நின்றுகொண்டு இருக்கும் ஒரு மிகப்பெரிய ஹனுமாரின் கால்கள்

இடையே கோவிலுக்கு உள்ளே போனோம் .. அங்கே ராமர்

லக்ஷ்மணர் சீதை விக்கிரங்கள் வெச்சுபூஜை பண்ணிண்டுருக்கா.

சற்று எதிரில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோயிலில் ராதா-கிருஷ்ண

விக்கிரங்கள் இருக்கு


ஶ்ரீ ராம ஜென்ம பூமியில் புதுசா கட்டிண்டு இருக்கிற கோவிலுக்கு

வேண்டிய தூண்கள் மற்ற பகுதிகள் செஞ்சுண்டு  இருக்குற 

இடத்துக்கு போனோம் .. தூண்கள் பண்றதுக்கு ரொம்ப நீளமான

ரோஸ் கலர் ராஜஸ்தான் ஸ்டோன்ஸ் வரிசையா கிடக்கு .. அந்த 

ஸ்டோன்களை சுத்தி-உளி கொண்டு மிக நுண்ணிய 

கலையமைப்புள்ள தூண்களாக மனித கைத்திறன் ஸ்ருஷ்டிக்கும் 

காட்சி சந்தோஷத்தை கொடுத்தது .. நூற்று கணக்கில் கலை 

விற்பன்னர்கள் தங்கள் கைத்திறனை காட்டிக்கொண்டு 

இருக்கிறார்கள் .. உலகின் பல பாகங்களிலிருந்து வந்துள்ள 

ஶ்ரீ ராம்” என்று பதிக்கப்பட்ட செங்கல்கள் வரிசையா அடுக்கி 

வெச்சுருக்கு .. ஒரு தமிழ்நாடு பக்தரால் கொடுக்கப்பட்ட 613 

கிலோ எடையுள்ள மிக பெரிய வெங்கல மணி இருக்கு 



No comments:

Post a Comment