Monday, August 12, 2013

சில காரண காரியங்களுக்கு மந்திரம், ஸ்தோத்ரம், பாடல்

...

ஒன்னும் நிம்மதியே இல்லைன்னு நினைக்கிறவங்க..

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்,
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை,
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்,
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

என்ற தேவாரப்பாடலை 12 முறை பாராயணம் செய்து வரவேண்டும்.

விநாயகர், முருகன், சிவன்,பார்வதி ஆகிய நால்வரும் சேர்ந்திருக்கும் சிவகுடும்ப படம் வைத்து இப்பாடலைப் பாடுவது சிறந்த பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் இவ்வழிபாட்டை செய்யலாம். கோயில்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகளில் விளக்கேற்றுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.

...

திருஞானசம்பந்தர் திருச்சி மலைக்கோட்டையில் குடிகொண்டருளும் தாயுமான சுவாமிகளை குறித்து பாடிய இப் பாடல்களை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் மனமுருக பாடினால், பிரசவம் இனிதே நடைபெறும்.

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றுடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.

கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறு சிராப்பள்ளி
வெம்முகவேழத்து ஈருரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராபபள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

துறை மல்கு சாரற் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
சிறை மகு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன் கனலெரியாடுங்க் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.

...

சந்தான வித்தை - அகத்தியர்

இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.

- அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்திபெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும் மந்திரத்தை செபிக்கவும்.

பூசை முறை

கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,குங்குமம்,பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியனவைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை வைத்துக்கொண்டு
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப்பார்த்தவாரே "ஓம் ரீங் அங்வங்" என்ற மந்திரத்தை 108 உரு செபித்தால் மந்திரம் சித்தியாகும். இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.

பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும் மங்கையர்க்கு மாதவிலக்கான சமயத்தில் உண்ணும்படி கொடுத்தால் அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி குழந்தை பிறக்கும்.

...

‘‘பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே.’’

பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

...

எந்த தெய்வங்களை வணங்கினால் உங்கள் குறை தீரும் - சித்தர் பெருமக்கள்


காரியம் நடக்கவிக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

...







No comments:

Post a Comment