...
செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்
...
உங்கள் பாவத்தை குறைக்கும் - சதுரகிரி மகாலிங்க நாம ஜெபம்
ஓம் சேவே ஸ்ரீமஹாலிங்கம் சிவாலிங்கிதம்
...
ஸூர்ய நமஸ்காரம்
ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய்.
சந்த்ர நமஸ்காரம்
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி.
அங்காரக நமஸ்காரம்
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸப்ரபம் !
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம் யஹம்!!
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.
புத நமஸ்காரம்
ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி.
குரு நமஸ்காரம்
தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம் ருகஸ்பதி
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
வியாழப் பரதகுரு நேசா
க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்.
சுக்ர நமஸ்காரம்
ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!
சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.
சனி நமஸ்காரம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.
ராகு நமஸ்காரம்
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்தராதித்ய விமர்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!!
அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி.
கேது நமஸ்காரம்
பலாச புஸ்பஸ்ஙகாசம்
தாராகாக்ரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
கோரம் வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.
...
ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ
...
அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான
"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"
என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும்.
தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான
"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"
என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.
இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
...
இதில் காணப்படுபவை யாவும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டும. வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
Tuesday, August 13, 2013
சில பயனுள்ள மந்திரங்கள்
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment