...
சகல மங்களங்களும் பெருக..
பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய
(மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)
பொதுப்பொருள்:
பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம்.
(ஒவ்வொரு சனிப் பிரதோஷத்தன்றும் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும் பெருகும்.)
...
நினைத்தது நிறைவேற, அனைத்து லாபங்களும் கிட்ட...
காருண்யபூர்ணநயனே கலசோபிமாலே
பத்மாலயே மதுரகோமள வாக்விலாஸே
ஸத்பக்தகல்பலதிகே புவனைகவந்த்யே
ஸௌந்தர்யவல்லி சரணம் ப்ரபத்யே
(ஸௌந்தர்யவல்லி அஷ்டகம்)
பொதுப்பொருள்:
கருணை ததும்பும் கண்களைஉடையவளே, ஒளி மிகுந்த முத்துமாலையை அணிந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே, வாக்கி னிலே இனிமையும் அழகும் கொண்டவளே, எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத் தக்கவளே, சௌந்தரவல்லித் தாயே, நமஸ்காரம்.
(இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் திருமகள் திருவருளால் நினைத்தது நிறைவேறி ஐஸ்வர்யம், வியாபார விருத்தி, உத்தியோகத்தில் உயர்வு, சந்தான பாக்யம் என்று அனைத்துவித லாபங்களும் கிடைக்கும்.)
...
உயர் பதவி கிடைக்க ...
த்ரயாணாம் தேவாநாம் திரிகுண ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் முகுலித கரோத்தம்ஸ மகுடா:
(ஸௌந்தர்யலஹரி-25)
பொதுப்பொருள்:
ஈசனின் மனைவியான தேவியே நமஸ்காரம். உன் திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களால் தோன்றிய நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளால் செய்யப்படும் பூஜையாகும். உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும் ரத்ன சிம்மாசனத்தின் அருகில் கிரீடங்களுக்கு மேலாகத் தம் கைகளைக் கூப்பியபடி அவர்கள் மூவரும் நின்று கொண்டிருக்கிறார்கள். உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையும் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ?
(இத்துதியை 45 நாட்கள் தினமும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை பாராயணம் செய்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, தடங்கல்கள் எல்லாம் நீங்கி எளிதாகக் கிட்டும்.)
...
பஞ்சம், பட்டினியற்ற வாழ்வு பெற ...
மன்மாதா ஸஸிசேகரோ மம பிதா ம்ருத்யுஞ்ஜயோ மத்குரு:
ந்யக்ரோதத்ரும மூலவாஸாஸிகோ மத் ஸோதர: ஸங்கர:
மத்பந்துஸ்த்ரிபுராந்தகோ மம ஸகா கைலாஸசைலாதிப:
மத்ஸ்வாமீ பரமேஸ்வரோ மம கதி: ஸாம்ப: ஸிவோ நேதர:
(சாம்பசிவ த்யானம்)
பொதுப்பொருள்:
பிறைசூடிய பெருமானே, நீங்களே என் தாய். யமனை வென்ற ஈசனே, நீங்களே என் தந்தை. ஆலமரத்தடியில் அமர்ந்து தட்சிணாமூர்த்தியாக விளங்கும் நீங்களே எனக்கு ஆசான். உலகுக்கே மங்களம் செய்விக்கும் மகாதேவனே, நீங்களே என் சகோதரன். த்ரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே நீங்களே எனக்கு உறவினர். கயிலாய மலையின் அதிபரே, நீங்களே என் தோழர். பரமேஸ்வரனே, நீங்களே என் தெய்வம். அம்பாளின் கருணையும் சேர்த்து அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரா, எனக்கு உங்களைத் தவிர வேறு கதி இல்லை. என்னைக் காத்து, பஞ்சம், பட்டினியில்லாத வாழ்க்கையை அருள்வீராக.
(காசி விஸ்வநாதர் சந்நதியில் தினமும் அர்த்தஜாம பூஜையில் பாராயணம் செய்யப்படும் ஸ்லோகம் இது. இத்துதியை ஆனித்திருமஞ்சனம் அன்று பாராயணம் செய்தால் எல்லா நன்மைகளும் பெருகும்.)
...
துர்தேவதைகள் தொல்லை விலக...
நீலம் துரங்கமதிரூட விராஜமாநா
நீலாம்ஸுகாபரணமால்ய விலேபநாட்யாம்
நித்ராபடேந புவநாதி திரோதநாநா
கட்காயுதா பகவதி பரிபாது பக்தாந்
(திரஸ்கரணீ ஸ்லோகம்)
பொதுப்பொருள்:
மகாவாராஹி தேவியின் ப்ரத்யங்க தேவியான திரஸ்கரணீ தேவியே, நமஸ்காரம். கைகளில் வில்லும் அம்பும் தரித்து, நீலநிற குதிரையில் ஆரோகணித்தவளே, புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி தியானம் செய்யும் தோற்றம் கொண்டவளே, உறக்கப் போர்வையால் உலகத்தை மறைப்பவளே, மகாமாயையாகவும் நித்ராதேவியாகவும் விளங்கி உலகை வசப்படுத்துபவளே, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் அம்மா.
(இத்துதியை இரவு நேரத்தில் பாராயணம் செய்தால் துர்தேவதைகளினால் ஏற்படும் தொல்லைகள் நம்மை அண்டாது)
...
எல்லா ஆபத்துகளும் நீங்க, கண் திருஷ்டிகள் அகல...
ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.
பொதுப்பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்க ளைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.
(தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.)
...
எதிரிகளையும் நண்பர்களாக்க;
ஹனுமந் நஞ்ஜனீஸூனோ மஹாபலபராக்ரம
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
ஸ்ம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
-ஹநுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம்.
பொதுப்பொருள்:
ஆஞ்சநேயப் பெருமானே, அஞ்சனா தேவியின் புதல்வரே நமஸ்காரம். மிகுந்த பலத்தையும் எதிரிகளை எளிதாக வெல்லும் சக்தியை யும் கொண்டவரே, நமஸ்காரம். தங்களது வாலாகிய அஸ்திரத்தைப் பிரயோகித்து, என் எதிரிகளின் மனங்களை வீழ்த்தி அவர்களை என்னுடன் நேசம் கொண்டவர்களாக மாற்றித் தாருங்கள். நினைத்த மாத்திரத்தில் கோரிய எல்லாவற்றையும் வழங்கி அருளும் ஆஞ்சநேயா, நமஸ்காரம். உம்மை வணங்குபவரிடம் பேரன்பு கொண்டவரே, நமஸ்காரம்.
(இத்துதியை ஞாயிற்றுக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் எல்லாம் நண்பர்களாவார்கள்; கோரிய பிரார்த்தனைகளும் நிறைவேறும்.)
...
ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:
1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
...
ஒரு வலைப்பூ http://aanmikam.blogspot.in/ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் Sasithara Sarma (Swiss) தகவல்களுக்கு மிக்க நன்றி.
Saturday, August 3, 2013
மந்திரங்களும் பலன்களும்
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
Sarvam sivamayam jegath . Siva dharisanam Jenna bakyam
ReplyDelete