Wednesday, August 21, 2013

சாபம் தீர, தோஷம் நீங்க

...

மிக அதிகமான மக்களின் ஆதர்ச தெய்வம் வினாயகர். மிக எனிமையானவர். கோபுரம் நிறைந்த கோவிலிலும் இருப்பார். தெரு முக்கிலும் உட்கார்ந்திருப்பார். கூரையே இல்லாத அரசமரத்தடியிலும் இருப்பார். வேண்டுவோரின் துயர் துடைப்பது மட்டுமே முக்கிய பணியாய்க் கொண்டு அருள் பாலிப்பவர்.

பள்ளிக்கூடப் பையன்கள் பரிட்ஷையில் பாஸ் பண்ணுவது முதற் கொண்ட அனைத்துக்கும் வேண்டப்படுவது அவரைத்தான்.

இம்மையில் மட்டுமின்றி மோட்சம் அளிப்பது வரை அனைத்துக்குமான மூலகாரணம் அவர். நாம் எத்தொழிலைச் செய்தாலும் முதலில் வினாயகரைத் துதித்துப் பின்தான் எதையும் தொடங்குவோம். நம் விக்னங்களைக் களைவதால் அவர் விக்னேஸ்வரர் ஆகிறார். சர்வகாரியத்திற்கு மூலாதாரமாக விளங்குபவர்.

- ஸ்ரீ மஹாபெரியவா

...

நவகிரஹ சாபம் தீர அகஸ்தியர் அருளிய பாடல்

" போ மென்று விடுக்கதே இன்னும் கேளு
பொல்லாத நவகிரஹ சாபம் தீர
நாமொன்று சொல்கிறோம் மைந்தா
நலமான பூரணத்தை நாட்டிப் பார்த்து
ஓ மென்று பூரித்து ரேசகமே பண்ணி
ஒரு மொழியால் ககும்பத்தில் நின்றால் மைந்தா
ஆ மென்ற நவகிரஹ சாபம் எல்லாம்
அப்போதே அகன்றுவிடும் அறிந்துபாரே !"

...

செவ்வாய் தோஷம் நீங்க, செல்வவளம் பெருக...

நாரதாதி மஹாயோகி ஸித்த கந்தர்வ ஸேவிதம்
நவவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்
பகவான் பார்வதி ஸூநோ ஸ்வாமின் பக்தார்திபஞ்ஜன
பவத் பாதாப்ஜயோர்பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

-ஸுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தோத்ரம் (குமார தந்த்ரம்)

பொதுப் பொருள்:
நாரதர் முதலான சிறந்த யோகிகளாலும் சித்தர்களாலும் கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரே முருகப் பெருமானே, நமஸ்காரம்.
வீரபாகு முதலான ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதங்களை உடையவரே, நமஸ்காரம்.
என் வாழ்வில் வளம் சேர்க்க அருள் புரிவீராக!
பகவானே, பார்வதி குமாரனே, ஈசனே, செவ்வாய் கிரக பாதிப்புகளை நீக்குபவரே, பக்தர்தம் கவலையெல்லாம் போக்கும் முருகப் பெருமானே நமஸ்காரம்.

(தைப்பூச தினத்தன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப் பெருமான் அருளால் செவ்வாய் தோஷம் தீரும். செல்வ வளம் பெருகும். )

...

"கண்காணி யில்லென்று கள்ளம் பல சொல்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே!'

"வான்வாழி வானையளி மாதவரும் வாழி
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
நான் நீ யென லகற்று நாதாக்கள் வாழியவே"

...

இதில் காணப்படுபவை யாவும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டும. வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.









No comments:

Post a Comment