...
"பிரதிபன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதா" என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம்.
பிரதிபன் என்பது பிரதமையை குறிக்கும் சொல். ராகா என்பது பூர்ணிமையை குறிப்பது. பிரதமை முதல் பூர்ணிமை வரையில் மேலும் பூர்ணிமை கழிந்த பிரதமை முதல் அமாவாசை வரையிலும் வரும் திதிகளாக பூஜிக்கப்படுபவள் அம்பிகை. இதுதான் மேலே இருக்கும் நாமாவளியின் சாரம்.
ஒவ்வொரு திதிக்கும் உரியவளாக அம்பிகையின் அம்சமான ஒரு தேவி உண்டு. இந்த தேவிகள் மகாவித்தையுடன் சேர்ந்து பதினாறு பேர். இவர்கள் எல்லோருமே அம்பிகையின் அங்க தேவதைகள். சாக்ஷாத் அம்பிகையே 16ஆம் நித்ய தேவதை. அம்பிகையின் மஹா மந்திரமான ஷோடசியில் 16 அக்ஷரங்கள் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு அக்ஷரங்களுக்கும் அதி-தேவதையாக ஒரு நித்யாதேவி இருக்கிறாள். பதினாறாம் அக்ஷரம் சந்திர கலா ரூபமாகையால் ஸாதா பரா என்று சொல்லப்படும் மஹாவித்யை. மற்ற 15 கலைகளும்/நித்யாக்களும் இந்த மஹாவித்யையில் அடக்கம் என்பர்.
எந்த திதிக்கு யார் தேவதை ...
பிரதமை-- காமேஸ்வரி
துவிதியை-- பகமாலினி
திருதியை-- நித்யக்லின்னா
சதுர்த்தி-- பேருண்டா
பஞ்சமி-- வஹ்நி வாசினி
சஷ்டி-- மஹா வஜ்ரேஸ்வரி
சப்தமி-- சிவதூதி
அஷ்டமி-- த்வரிதா
நவமி-- குலசுந்தரி
தசமி-- நித்யா
ஏகாதசி-- நிலபதாகா
துவாதசி-- விஜயா
திரயோதசி-- ஜ்வாலா மாலினி
சதுர்த்தசி-- ஸர்வ மங்களா
பெளர்ணமி-- சித்ரா
இந்த 15 நித்யைகளுக்கும் மேலாக மஹா நித்யை என்று கூறப்படும் பராம்பிகை 16ஆம் நித்யை. இதனால் சஹஸ்ர நாமத்தில் வரும் இன்னொரு நாமாவளி, "நித்யா ஷோடசிகா ரூபா" என்பது.
அகஸ்தியர் தீந்தமிழில், வித்யைக்கு ஒன்றாக 16 விருத்த பாக்களை அருளியிருக்கிறார். அதன் பெயரே "ஷோடச விருத்தம்" என்பது தான்.
அகத்தியர் அருளிய சோடச மாலை
அமாவாசைத் திதி
அம்மாவசி தானான அரூபித் தாயே
அகண்டபரி பூரணியே யமலை சக்தி
நம்மாலே பாடரிது நினது பேரை
நாவிலே வந்தருள்செய் நாயே னுக்குத்
தம்மாலே சோடசதோத் திரம் விளங்கத்
தயவுசெய்து நின்பதத்தில் தரிப்பாய் தேவி!
சும்மா நீ இருக்காதே கண்பார்த் தாள்வாய்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!
பிரதமை திதி - ஸ்ரீகாமேஸ்வரிதேவி
பிரதமையில் பிரவிடையாய்ந் கலைவே றாகிப்
பின்கலைவிட் டிடகலையில் பிறந்த கன்னி
உறவாகி ரவியைவிட் டகலா நின்ற
உமையவளே என்பிறவி ஒழியச் செய்வாய்
இறவாத வரத்துடனே ஏமம் வாமம்
எட்டெட்டுஞ் சிந்திக்க எனக்குத் தந்து
சுருதியிலே வந்தருள்செய் அடியே னுக்குச்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!
மந்திரம்:
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.
வழிபடு பலன்கள்: குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை
துவிதியை திதி ... ஸ்ரீ பகமாலினி தேவி
துதிகையென்றும் உபயமென்றும் இடையின் என்றுஞ்
சுவர்க்கமென்றும் நரகமென்றுஞ் சொல்லக் கேட்டு
மதிரவியா யடிமுடியாய் உயராண பெண்ணாய்
வாழ்வாகித் தாழ்வாகி வழங்குந் தாயே!
விதிதொலந்து வினைதொலைந்து வெட்கங் கெட்டு
வீம்பவும் ஆசைதுக்கம் விட்டே யோட்டு
சுதன முகம்பார் மதிமுகத்தால் சூட்சாசூட்சி
சோதியே! மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே!
த்ரிதியை திதி ... ஸ்ரீ நித்யக்லின்னா தேவி
திரிதிகையில் அசுத்தமற்றுச் சுத்தமாகிச்
சிற்சொரூபந் தனைச் சேர்ந்த தெளிவே கண்டு
உறுதியுடன் உனதுபதம் அகலாச் சிந்தை
உறவு செய்வாய் உம்பரையே உமையே தாயே
அறுதியாய் இகத்தாசை அகன்ற ஞான
ஆனந்த வாசையைத்தா அடியேனுக்குச்
சுருதியிலே மனமிருக்கத் துணை செய் தாயே!
சோதியே! மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே!
சதுர்த்தி திதி - ஸ்ரீபேருண்டாதேவி
சதுர்த்தியிலே நாதவிடை வாம பூசை
தரவேணுந் தயவாக அடிமை செய்ய
மதித்தபடி வரமருள்வாய் வாம ரூபி
வான் வெளியே வாசியே மௌனத் தாயே!
பதித்துன்றன் பதத்திலென்றன் சென்னி தன்னைப்
பரிதிமதி அகன்றாலும் அகலா மற்றான்
துதித்தபடி நின்சரண் மெனக்குத் தந்தாள்
சோதியே! மனோன்மணியே! சுழுனை வாழ்வே!
மந்திரம்:
ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.
வழிபடு பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.
பஞ்சமி திதி - ஸ்ரீ வன்ஹிவாசினி தேவி
பஞ்சமியில் பெற்றெடுத்தாய் சேயேன் றன்னைப்
பால்கொடுத்துப் பத நடனஞ் செய்தாய் தாயே!
கொஞ்சமொரு காரியத்தில் தவக்கஞ் செய்தால்
குழிப்பயிருங் கூரையின்மேல் ஏறுமோ தான்
தஞ்சமென நின் பொற்றாள் சார்ந்த மைந்தன்
சாக்கிரத்துக் கப்பால் நின் றாறி நைக்குள்
துஞ்சியுந்துஞ் சாதிருக்க ஏணி தந்தாள்
சோதியே! மனோன்மணியே! சுழினை வாழ்வே!
மந்திரம்:
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.
வழிபடு பலன்கள்: நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க
.....
இதில் காணப்படுபவை யாவும் - ஆன்மீக சொற்கள், வாக்கியங்கள், வரிகள் யாவும் - அடியேனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ, என் கருத்துக்கள் என்றோ எண்ணி விட வேண்டாம்.
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
Saturday, August 10, 2013
"ஷோடச விருத்தம்" - சோடச மாலை
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
Thete are lot of mistakes in shodasa maalai. Pls correct those.
ReplyDeleteஅறிவுரைக்கு மிக்க நன்றி .. யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல் .. பிழைகள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும் ..
Delete