Thursday, August 22, 2013

பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய ஸ்தோத்திரங்கள்

...

பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய " சண்முக நாமாவளி " ...

ஹரஹரசிவசிவ சண்முகநாதா
ஹரஹரசிவசிவ வென்முகநாதா
ஹரஹரசிவசிவ பரமவிலாசா
ஹரஹரசிவசிவ வபயகுகேசா

அருணகிரிபரவு மருணெறிநாதா
தருமவறுவர்புகழ் சததளபாதா
அரிபிரமாதிக டொழுவடிவேலா
திருவடிநாரவ ருளமுறைசீலா

எனினியகுருநித மெணுமதியீசா
சனனவெய்தறவளி தருபரமேசா
பாசாபாச பாபவிநாசா
மாசேறாத மானநடேசா

போஜாவாஜா பூஜகர்நேசா
தேஜாராஜா தேவஸமாஜா
தீஞ்சுவையருளொரு திருவாரமுதே
ஓஞ்சரவணபவ வுருவேயருவே.

...

பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய " தௌத்தியம் (திருவடித் துதி) " ...

அரஹர மந்திர அமல நிரந்தர
சரவண சம்ப்ரம சங்கர புத்திர
சுரபதி பூம சுகோதய போதக
பரிபுர சததள பாத நமஸ்தே

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே

இந்துள அம்பக இங்கித மங்கல
சுந்தர ரூப துவாதச கரதல
சந்திர சேகர தடதா கிடதடப்
பந்திகொள் நிர்த்தன பாத நமஸ்தே

ஈசுர நந்தன ஈசுர புங்கவ
தேசுற குண்டல சித்திர பந்தன
ஆசறு சஸ்திர ஹஸ்த சரோருக
பாச விமோசன பாத நமஸ்தே

உச்சித மஞ்ஞையில் ஊர்அதி மோகன
நிச்சய உத்தர நித்ய மனோலய
சற்சனர் மித்திர சத்துரு கண்டன
பச்சைஅம் புஷ்கர பாத நமஸ்தே

ஊர்த்துவ நாடகர்க் கோதிய தேசிக
ஆர்த்த தயித்தியர் அடல்தெறு காதக
கூர்த்திகை வீரிய குக்குட கேதன
பார்க்க அரும்குக பாத நமஸ்தே

எண்ணறு வைபவ இந்த்ர விசேஷண
புண்ணிய உத்தம பூரண பச்சிமக்
கண்இல கும்சிவ கந்த கிருபாசன
பண்ணவர் பூஜித பாத நமஸ்தே

ஏரக நாயக என்குரு நாயக
தாரக நாயக ஷண்முக நாயக
காரக நாயக கதிதரு நாயக
பாரக நாயக பாத நமஸ்தே

ஐங்கர சோதர அம்பிகை காதல
மங்கள வல்லி மனோகர குஞ்சரி
இங்கித காவல இகபர சாதக
பங்கயன் மால்பணி பாத நமஸ்தே

ஒகரம ஹாரத ஒளிர்புய அமுதர்கள்
புகழ்உப வீதவி பூதிகொள் முண்டக
ரகித விதூன லலாட விலோசன
பககுஹ பாவக பாத நமஸ்தே

ஓம்அர ஹரசிவ ஓம்சர வணபவ
ரீம்அர ஹரசிவ நிகழ்பரி புரபவ
ஸ்ரீம்அர ஹரசிவ திரள்பவம் ஒழிவளர்
பாமகள் புகழ்அருள் பாத நமஸ்தே

...

" ஸ்ரீ குமாரஸ்தவம் "

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது.

ஓம் ஷண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
ஓம் நவநிதி பதயே நமோ நம!
ஓம் சுபநிதி பதயே நமோ நம!
ஓம் நரபதி பதயே நமோ நம!
ஓம் சுரபதி பதயே நமோ நம!
ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
ஓம் ஷடஷர பதயே நமோ நம!
ஓம் கவிராஜ பதயே நமோ நம!
ஓம் தபராஜ பதயே நமோ நம!
ஓம் இகபர பதயே நமோ நம!
ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
ஓம் ஜயஜய பதயே நமோ நம!
ஓம் நயநய பதயே நமோ நம!
ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
ஓம் வல்லீ பதயே நமோ நம!
ஓம் மல்ல பதயே நமோ நம!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
ஓம் இஷ்டி பதயே நமோ நம!
ஓம் அபேத பதயே நமோ நம!
ஓம் கபோத பதயே நமோ நம!
ஓம் வியூஹ பதயே நமோ நம!
ஓம் மயூர பதயே நமோ நம!
ஓம் பூத பதயே நமோ நம!
ஓம் வேத பதயே நமோ நம!
ஓம் புராண பதயே நமோ நம!
ஓம் ப்ராண பதயே நமோ நம!
ஓம் பக்த பதயே நமோ நம!
ஓம் முக்த பதயே நமோ நம!
ஓம் அகார பதயே நமோ நம!
ஓம் உகார பதயே நமோ நம!
ஓம் மகார பதயே நமோ நம!
ஓம் விகாச பதயே நமோ நம!
ஓம் ஆதி பதயே நமோ நம!
ஓம் பூதி பதயே நமோ நம!
ஓம் அமார பதயே நமோ நம!
ஓம் குமார பதயே நமோ நம!

ஓம் சரவண பவ

...

பாம்பன் சுவாமிகள் விளக்கம் ...

ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

...

அதி சூட்சும முருக மந்திரம்
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.
சரவண பவ ஓம்

...

இதில் காணப்படுபவை யாவும் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டும. வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.










1 comment:

  1. ஓம் சரவண பவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    ReplyDelete