Saturday, August 24, 2013

ஸிம்ஹக்ந மூர்த்தம்

...

(சிவபெருமான் நரசிங்கத்தோல் அணிந்தது)


"பத்திச் சிங்கவணை மீது படரின்றிருந்து பார்த்திவனை
எத்திச் சிங்கலறக் கொன்ற இறுமாப்பதனால் இருநிலத்திற்
றத்திச் சிங்கலுறத் தேய்த்தறன்னைக் கண்டு சரபமதாய்க்
கொத்திச் சிங்கந்தனையழித்த கோவே நினது சரண் போற்றி"

"எரித்தமயிர் வாளர்க்கண் வெற்பெடுக்கத் தோளொடு தாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினாள்
உரித்த அரித்தோல் உடையான் உறைவிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவர்தாம் தக்காரே"

என்று திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் சரபேஸ்வரர் பராக்கிரமம் காட்டப்படுகிறது.


"துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை யாகங் கீண்ட
அங்கனகத் திருமாலு மயனுந் தேடு
மாரழலை யனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேன் மன்னி நின்ற
செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேனானே"

... அப்பர் சுவாமி


"நன்னாலிரண்டு திருவடியும், நனி நீள்வாலும், முகமிரண்டும்
கொன்னார் சிறகும், உருத்திரமும், கொடும் பேரார்ப்பும் எதிர்தோற்றிச்
செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல் ஆவி செகுத்துரிக் கொண்(டு)
ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான் சரபத் திருவுருவம்"

பொங்குளை யழல்வாய்ப் புகைவிழி யொருதனிச் சிங்கங் கொன்ற சேவகம் போற்றி

-பதினொராந் திருமுறை

...

உண்மையான பாதுகாப்பு கவசம்

1. நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும் அந்த நேரத்திலும்.

2.சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும் அவர்களும்

3.சிலருக்கு தீய கனவுகளின் காரணமாக இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள் அவர்களும்

4.சில குடும்பங்களில் கணவரின் தீய நடத்தையால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் .

5.பெண்கள் வேலை,படிப்பு காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும் போது தீயவர் தொல்லைக்கு ஆளாக கூடியவர்களும்.

6.வயதுக்கு வந்த பெண்ணை படிப்பதற்கு கல்லூரிக்கு(ஹாஸ்டல் ) அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் தகப்பனாரும்

7.சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும்

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! "

இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.

அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்.

...

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.



No comments:

Post a Comment