Saturday, August 31, 2013

32 Forms of Ganapathi

...
Lord Ganesha is worshipped in 32 different forms..

1. Bala Ganapati
2. Taruna Ganapati
3. Bhakti Ganapati
4. Vira Ganapati
5. Shakti Ganapati
6. Dvija Ganapati
7. Siddhi Ganapati
8. Ucchhishta Ganapati
9. Vighna Ganapati
10. Kshipra Ganapati
11. Heramba Ganapati
12. Lakshmi Ganapati
13. Maha Ganapati
14. Vijaya Ganapati
15. Nritya Ganapati
16. Urdhva Ganapati
17. Ekakshara Ganapati
18. Varada Ganapati
19. Tryakshara Ganapati
20. Kshipra Prasada Ganapati
21. Haridra Ganapati
22. Ekadanta Ganapati
23. Srishti Ganapati
24. Uddanda Ganapati
25. Rinamochana Ganapati
26. Dhundhi Ganapati
27. Dvimukha Ganapati
28. Trimukha Ganapati
29. Sinha Ganapati
30. Yoga Ganapati
31. Durga Ganapati
32. Sankatahara Ganapati


Bala Ganapati

Bala Ganapati is “the childlike” God of golden hue. In his hands he holds a banana, mango, sugar cane and jackfruit, all representing the Earth’s abundance and fertility. His trunk garners his favorite sweet, the modaka.


Taruna Ganapati

Eight-armed, Taruna Ganapati, “the youthful,” holds a noose and goad, modaka, wood apple, rose apple, his broken tusk, a sprig of paddy and a sugarcane stalk. His brilliant red color reflects the blossoming of youth.


Bhakti Ganapati

Shining like the full moon during harvest season and garlanded with flowers, Bhakti Ganapati, dear to devotees, is indeed pleasant to look upon. He holds a banana, a mango, coconut and a bowl of sweet payasa pudding.


Vira Ganapati

The valiant warrior, Vira Ganapati, assumes a commanding pose. His 16 arms bristle with weapons, symbols of mind powers: a goad, discus, bow, arrow, sword, shield, spear, mace, a battleaxe, a trident and more.


Shakti Ganapati

Four-armed and seated with one of his shaktis on his knee, Shakti Ganapati, “the powerful," of orange-red hue, guards the householder. He holds a garland, noose and goad, and bestows blessings with the abhaya mudra.

Dvija Ganapati

Four-headed Dvija Ganapati, “the twice-born,” is moon-like in colour. Holding a noose, a goad, an ola leaf scripture, a staff, water vessel and a his japa beads, he reminds one and all of the urgency for disciplined striving.

Siddhi Ganapati

Golden-yellow Siddhi Ganapati, “the accomplished,” is the epitome of achievement and self-mastery. He sits comfortably holding a bouquet of flowers, an axe, mango, sugarcane and, in his trunk, a tasty sesame sweet.

Ucchhishta Ganapati

Ucchhishta Ganapati is “lord of blessed offerings” and guardian of culture. Of blue complexion and six-armed, he sits with his Shakti, holding a vina, pomegranate, blue lotus flower, japa mala and a sprig of fresh paddy.

Vighna Ganapati

Vighna Ganapati, “lord of obstacles,” is of brilliant gold hue and bedecked in jewels. His eight arms hold a noose and goad, tusk and modaka, conch and discus, a bouquet of flowers, sugarcane, flower arrow and an axe.

Kshipra Ganapati

Handsome, red-hued Kshipra Ganapati, “quick-acting” giver of boons, displays his broken tusk, a noose, goad and a sprig of the kalpavriksha (wish-fulfilling) tree. In his uplifted trunk he holds a tiny pot of precious jewels.

Heramba Ganapati

Five-faced, white in color, Heramba Ganapati, “protector of the weak,” rides a big lion. He extends the gestures of protection and blessing while holding a noose, japa beads, axe, hammer, tusk, garland, fruit and modaka.

Lakshmi Ganapati

Lakshmi Ganapati, pure white giver of success, sits flanked by wisdom and achievement. Gesturing varada mudra, he holds a green parrot, a pomegranate, sword, goad, noose, sprig of kalpavriksha and a water vessel.

Maha Ganapati

Accompanied by one of his shaktis, “the Great,” Maha Ganapati, is red-complexioned and three-eyed. He holds his tusk, a pomegranate, blue lily, sugar-cane bow, discus, noose, lotus, paddy sprig, mace and a pot of gems.

Vijaya Ganapati

Four-armed, of red hue and riding his resourceful mushika, Vijaya Ganapati is “the victorious” bestower of success. His insignia are the broken tusk, elephant goad, a noose and a lucious golden mango, his favorite fruit.

Nritya Ganapati

The "happy Dancer,” Nritya Ganapati, is four-armed and golden, with rings on his fingers, holding a tusk, goad, noose and modaka sweet. He prances under the kalpavriksha tree, epitomizing exuberant activity and joy.

Urdhva Ganapati

Seated with one of his shaktis on his left knee, Urdhva Ganapati is “the elevated” Lord of golden hue. In his six hands he holds a sprig of paddy, a lotus, the sugarcane bow, an arrow, his ivory tusk and a blue water lily.

Ekakshara Ganapati

Ekakshara, of “single-syllable” (gam), is three-eyed, of red complexion and attire. Crescent moon on his crown, he sits in lotus pose upon Mushika, offers the boon-giving gesture and holds a pomegranate, noose and goad.

Varada Ganapati

Varada Ganapati, “the boon-giver," with prominent third eye of wisdom, holds a dish of honey, the noose and goad and encloses a pot of jewels in his trunk. His shakti is at his side, and the crescent moon adorns his crown.

Tryakshara Ganapati

Tryakshara Ganapati, “the lord of three letters” (A-U-M), is gold in colour and has fly whisks in his big floppy ears. He carries the broken tusk, goad, noose and mango and is often seen grasping a sweet modaka in his trunk.

Kshipra Prasada Ganapati

Kshipra Prasada Ganapati, “the quick rewarder,” presides from a kusha-grass throne. His big belly symbolizes the manifest universe. He holds a noose, goad, tusk, lotus, pomegranate and a twig of the wish-fulfilling tree.

Haridra Ganapati

Haridra Ganapati, the golden one dressed in bright yellow vestments, sits calmly on a posh, regal throne. Along with his tusk and a modaka, he wields a noose to hold devotees close and a sharp goad to spur them onward.

Ekadanta Ganapati

Ekadanta, of “single tusk,” is distinguished by his blue color and sizeable belly. The attributes of this murti are an axe for cutting the bonds of ignorance, prayer beads for japa, a laddu sweet and the broken right tusk.

Srishti Ganapati

Riding on his docile and friendly mouse, Srishti Ganapati is the lord of happy “manifestation.” This active God, of red complexion, holds his noose a goad, a perfect mango, and his tusk, representing selfless sacrifice.

Uddanda Ganapati

Uddanda Ganapati is the bold “enforcer of dharma,” the laws of being. His ten hands hold a pot of gems, a blue lily, sugar cane, a mace, lotus flower, sprig of paddy, a pomegranate, noose, garland and his broken tusk.

Rinamochana Ganapati

Rinamochana Ganapati is humanity’s liberator from guilt and bondage. His figure of alabaster skin is apparelled in red silks. He bears a noose and a goad, his milk-white tusk and a favorite fruit, the rose apple.

Dhundhi Ganapati

Red-hued Dhundhi Ganapati, “the sought after,” holds a strand of rudraksha beads, His broken tusk, an axe and a small pot of precious gems thought to represent the treasury of awakenings that he he saves for all ardent devotees.

Dvimukha Ganapati

Dvimukha Ganapati, called Janus by the Romans, with two divergent faces, sees in all directions. His blue-green form is dressed in red silk. He wears a bejewelled crown and holds a noose, goad, his tusk and a pot of gems.

Trimukha Ganapati

Trimukha Ganapati, the contemplative “three-faced” Lord of red hue, sits on a golden lotus, telling his beads, holding a noose, goad and vessel of nectar. He gestures protection with a right hand and blessings with a left.

Sinha Ganapati

Sinha Ganapati, white in color, rides a lion and displays another lion in one hand, symbolizing strength and fearlessness. He also holds a kalpavriksha sprig, the vina, a lotus blossom, flower bouquet and a pot of jewels.

Yoga Ganapati

Yoga Ganapati is absorbed in mantra japa, his knees strapped in meditative pose, hands holding a yoga staff, sugacane stalk, a noose and prayer beads. His color is like the morning sun. Blue garments adorn his form.

Durga Ganapati

Durga Ganapati, the “Invincible,” waves the flag of victory over darkness. This splendid murti is of deep gold hue, dressed in red, holding a bow and arrow, noose and goad, prayer beads, broken tusk and a rose apple.

Sankatahara Ganapati

Sankatahara Ganapati, “the dispeller of sorrow,” is of sunlike hue, dressed in blue, and seated on a red lotus flower. He holds a bowl of pudding, a goad and a noose while gesturing the boon-granting varada mudra.


... Culled from various blog-posts. Great Thanks to those Bloggers.


























































अष्ट विनायक ... Ashtavinayak


In Maharashtra, there are eight temples dedicated to Ganesha, related to various episodes from the puranas and other legends - and these deities are collectively known as AshtaVinayak.

1. Mayureshwar - Morgaon
2. Mahaganapati - Ranjangaon
3. Varadvinayak - Mahad
4. Chintamani - Thevoor
5. Girijaatmaja - Lenyadri
6. Vigneshwara - Ozar
7. Ballaleshwar - Pali
8. Siddhi Vinayak - Siddhatek


अष्ट विनायक स्तोत्र ...

|| श्री गणेशाय नमः ||

ॐ कार रूपीणं देवं सिन्धुसम्हारा कारिणं |
आदिदेवं त्रिमूर्तीषम मोरेश्वरम उपास्महे ||१||
आविर्भूतं तू लेन्यद्रौ पार्वती जपतोशियम |
कमालासुरा हन्तारं वन्देS हम गिरिजात्मजम ||२||
कालम विघ्नं चन्नाशास्त्रम हटवा योस पालायात सुरान |
पार्श्वपुत्रम गणपतिम तम विघ्नेश्वरं आश्रय ||३||
मधु कैटभ नाशार्तम विष्णुना पूजितं प्रभुम |
रिद्धि सिद्धि युतं देवं ध्यायेत सिद्धिविनायकम ||४||p
दुष्टं गाणं राणे हटवा कपिलाय मणिप्रदम |
चिन्तयेत स्ठेवारा नित्यं चिंतामणि विनायकं ||५||
पित्र तर्जिता बल्लाल भक्त बाला कपालकम |
पल्लिपुरे महाक्षेतरे बल्लालेश्वरम अर्चायेत ||६||
गणानां त्वा महा मंत्र दृष्ट्र ग्रुत्समदर्शिना |
निर्मिते मंदिरे पश्येत वरदाम तू विनायकं ||७||
त्रिपुरासुर नाशय शंकरेनापी पूजितं |
महा गणपतिम नत्वा सर्व सिद्धि मवाप्नुयात ||८||
इति अनंतनारायण कृत अष्ट विनायक स्तोत्रं संपूर्ण ||

Ashtavinayak stotra ...

|| Shri Ganeshaya namah ||

OmkaararoopiNam devam sindhusamhaarakaariNam |
aadidevam trimoortisham moreshwaramupaasmahe || 1 ||
aavirbhootam tu leNyaadrou paarvatijapatoshiam |
kamalaasura hantaaram vande (S) ham girijaatmajam || 2 ||
kaalam vighnam channashatram hatvaa yo (S) paalayat suraan |
paarshvaputram gaNapatim tam vighneshwaramaashraye || 3 ||
madhukaiTabha naashaartham vishNunaa poojitam prabhum |
Riddhi siddhi yutam devam dhyaayet siddhivinaayakam || 4 ||
dushTam gaNam raNe hatva kapilaaya maNipradam |
chintayet sthevare nityam chintaamaNi vinaayakam || 5 ||
pitra tarjita ballaaLa bhaktabaalakapaalakam |
pallipure mahaakshetre ballaLeshwaramarchayet || 6 ||
gaNaanaam tvaa mahaamantra drashTraa gRutsamadarshiNaa |
nirmite mandire pashyet varadam tu vinaayakam || 7 ||
tripuraasura naashaaya shankareNaapi poojitam |
mahaagaNapatim natvaa sarva siddhi mavaapnuyaat || 8 ||
iti anantanaarayaNa kRuta ashTa vinaayaka stotram sampoorNam ||


... Culled from various blog-posts. Great Thanks to those Bloggers.





















Friday, August 30, 2013

"ஸ்ரீ கிருஷ்ண கவசம்'"


'துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும்'
என்று "ஸ்ரீ கிருஷ்ண கவசம்'" என்ற புத்தகத்தில் முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.


அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே !

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க தூயோன் வருக ! துணையே தருக !
மாதர் கற்பும் மடவார் நோன்பும் மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத் திசைவரு கவலை பசைஇலதாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத் தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக கர்மசந் யாசக் களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக ! நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன் தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் ! இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் ! வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் ! யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக ! கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம் சத்தின் நாயகன் வருக !யதுவம் சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்துன்பம் இராவணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய் கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய் படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன் பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டுபெண்ணாய் ஆனது பிழையே யன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் ! கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை கண்ணனி லாமல் கவிதையுமில்லை
கண்ணனி லாமல் காலமுமில்லை கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன் தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால் பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு ! உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல் மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல் இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல் தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல் படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு ! இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனெனஉயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர் சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் ! அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்

ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய...

Thursday, August 29, 2013

குழந்தை கிருஷ்ணர்



குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?

நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.
இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா. “ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன்" என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.

...

8 வகை கிருஷ்ணர்கள்...

1.சந்தான கோபால கிருஷ்ணர் :யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

2.பாலகிருஷ்ணன்:தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

3.காளிய கிருஷ்ணன்: காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

4.கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6.முரளீதரன்: இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7.மதன கோபால்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

8.பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

...

கோகுலாஷ்டமி : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...

நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிகாக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராசலீலா, தகி அண்டி என பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம். ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்த விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நடைமுறை கூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.

மற்ற திதிகள் போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில், மகாவிஷ்ணு நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம். கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணனாக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்‘ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது. இப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம். கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபடுவர். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். இதைத்தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

என்று பாடியருளி, கிருஷ்ணனை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

இறை வழிபாட்டு முறைகள்

.

இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் -

”ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்”

1. ச்ரவணம் – கேட்டல்:

இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு சொந்தமாகத் தெரிந்து வைத்திருக்க அவசியம் இல்லை. கற்றிலன் ஆயினும் கேட்க என்றும் செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். அதனால் அறிந்தவர் சொல்வதைக் கேட்பதே போதும். ஆனாலும் கேட்பது என்பது மிக எளிமையாகத் தோன்றினாலும் கேட்கும் மனமும், பொறுமையும் எல்லாருக்கும் வந்து விடுவதில்லை என்றாலும் நல்லதைக் கேட்க முயல வேண்டும்.

பிரகலாதன் தாயின் கருவில் இருக்கும் போதே நாரதர் சொன்ன இறைவனின் பெருமைகளைக் கேட்டு உள்வாங்கிக் கொணடதை நாம் அறிவோம். எத்தனை துன்பங்கள் வந்த போதும் அவரை அந்த நாராயண மந்திரத்தைப் பலமாகப் பற்றிக் கொள்ள வைத்ததும் இறைவனை அவதாரம் எடுக்க வைத்துக் காப்பாற்றியதும் அந்தக் ”கேட்டல்” தான் என்பதால் அதன் முக்கியவத்தை வேறெதுவும் சொல்லி மேலும் விளக்க வேண்டியதில்லை.

2. கீர்த்தனம் – பாடுதல்:

இறைவனைப் பாடி வழிபடுதல் அடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இசையால் இறைவனை ஈர்த்தே அவன் திருவடிகளை அடைந்தவர்கள் நம் நாட்டில் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் என்றும் முதலிடம் பெறக்கூடியவர் தியாகையர். இசையாலேயே இறைவனிடம் பேசிக் கொண்டிருந்தவர் அவர். இன்றும் கச்சேரிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். கர்னாடக சங்கீதம் உள்ளளவும் பேசிக் கொண்டிருப்பார் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உளமாறப் பாடியே இறைவனைத் தன்னிடம் இழுத்தவர். அந்த இசையாலே நாமும் இறையருளைப் பெறப் பாடி வைத்து விட்டுப் போனவர் அவர்.

தென்னிந்தியாவில் தியாகையர் என்றால் வட இந்தியாவில் ”அஷ்டபதி” என்ர கிரந்தத்தைப் பாடிய ஜெயதேவரைச் சொல்லலாம். இவரது கீத கோவிந்தம் இசையில் கண்ண பரமாத்மாவே சொக்கிப் போனார் என்கிறார்கள். பக்தியுடன் சேர்ந்த இசைக்கு அந்த மகாசக்தி உண்டு. அதனாலேயே “பாடும் பணியில் பணித்தருள்வாய்”” என்று வேண்டுகிறார் குமரகுருபர சுவாமிகள்.

3. ஸ்மரணம் – நினைத்தல்:

இறைவனை வழிபட மூன்றாவது முறை அவனை நினைத்தல். மிகச் சுலபமாகத் தோன்றினாலும் இது மிகவும் கஷ்டமான முறை தான். ”நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை என்றும் சிவன் தாளினை” என்று பாடி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதும் மனதின் உள்ளே இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது ஒரு மேலான நிலை. ஆனால் சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து இறைவனை நினைக்க முடிவது பிரம்மப் பிரயத்தனமே. அது வரை பதுங்கி இருந்த ஓராயிரம் சிந்தனைகள் இறைவனை நினைக்க ஆரம்பித்தவுடன் அதைப் புறந்தள்ளி விட்டு நம் மனதை ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன. இறைவனை விட்டு நீண்ட நேரம் சஞ்சரித்து விட்டோம் என்று நாம் புரிந்து கொள்வதே சற்றுத் தாமதமாகத் தான். ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான வழிமுறை என்பதில் சந்தேகமில்லை.

4. பாதஸேவனம் - திருவடி தொழல்:

இறைவனுடைய திருவடிகளைத் தொழுவது நான்காவது வழிமுறை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனது திருவடிகளை விடாமல் பற்றிக் கொண்டு தொழுதவர்கள்.

திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்கிறார்.
“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற்க்கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.”

அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்குபவர்களைத் தவிர மற்றவர்களால் பொருள், இன்பம் ஆகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது என்கிறார் திருவள்ளுவர். கடந்து போக வேண்டிய கடல்களில் மூழ்கி விடாமல் காப்பது இந்த திருவடி தொழுதல்.

5. அர்ச்சனம் – பூஜித்தல்:

இறைவனைப் பக்தியுடன் பூஜித்தல் அடுத்த வழிபாட்டு முறை. இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் இருந்தாலும் எப்படி பூஜித்தாலும் பக்தியுடன் பூஜித்தால் இறைவன் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்கிறார்கள் நம் பெரியோர்கள்.

மனமுவந்து பூஜிப்பவர்கள் பூஜிக்கும் முறைகளில் தவறு இருந்தாலும் அந்தத் தவறுகளை அலட்சியப்படுத்தி அவர்களுடைய அன்பில் இறைவன் நெகிழ்கிறார் என்பதற்கு கண்ணப்ப நாயனாரும், சபரியும் சிறந்த உதாரணங்கள்.

6. வந்தனம் – வணங்குதல்:

இறைவனை வணங்குதல் அடுத்த வழிமுறை. பொதுவாகப் படிப்பவர்களுக்குப் பூஜித்தல், திருவடி தொழல், வணங்குதல் என்ற இந்த மூன்று வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் தெரியாது. மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கிறது. இங்கு தலை வணங்குதல் என்று பொருள் கொள்வது சற்று பொருத்தமாக இருக்கும்.

திருவடி தொழுவதிலும் பூஜித்தலிலும் பக்தி முக்கியமாக பங்கு வகிக்கிறது. இதிலோ “நான்” என்ற அகங்காரம் களைந்து மேலான இறைவனைத் தலைவணங்குவது பிரதானமாகிறது. எல்லாம் நீ என்ற பணிவு இங்கு பிரதானமாகிறது. “நான்” என்பதை விட்டால் ஒழிய இறைவன் அருள் நமக்குக் கிடைக்க வழியே இல்லை என்பதால் இது முக்கியமாகிறது.

7. தாஸ்யம் – தொண்டு:

அடுத்த வழிபாட்டு முறை தொண்டு. இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் தொண்டு செய்வது இறைவனருள் பெற அடுத்த வழி. தன்னலம் இல்லாமல், புகழுக்காகவோ இலாபத்திற்காகவோ அல்லாமல் தாசராகத் தொண்டு புரிவதும் வழிபாடாகவே கருதப்படுகிறது.

தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணமாக திருநாவுக்கரசரையும் அன்னை தெரசாவையும் சொல்லலாம். முதுமையிலும் கோயில்கள் தோறும் சென்று தொண்டுகள் செய்தவர் திருநாவுக்கரசர். அன்னை தெரசா கல்கத்தா வீதிகளில் விழுந்து கிடந்த குஷ்ட நோயாளிகளிடம் கர்த்தரைக் கண்டு அவர்களுக்கு சேவை செய்து மகிழ்ந்தார். இறைவனை மகிழ்விக்க இது போன்ற சேவைகளை விட உயர்வானது எது இருக்க முடியும்?

8. சக்யம் – சிநேகம்:

இறைவனை சினேகத்துடன் பார்க்க முடிவது இந்திய ஆன்மிகத்தின் தனிச்சிறப்புத் தன்மை என்றே சொல்லலாம். சினேகமும், காதலும் இறைவனிடத்தில் ஏற்படுவது ஒருவித வழிபாடாகவே கருதப்படுகிறது. ஆண்டாளும், ராதையும் நல்ல உதாரணங்கள்.

அதே போல கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, குழந்தையாக, காதலனாக, காதலியாகக் கருத முடிந்த பாரதியையும் உதாரணமாகச் சொல்லலாம். இப்படி எல்லாமாக இறைவனைக் கண்டு சினேகித்தால் இறைவனால் அதை அலட்சியப்படுத்தி விட முடியுமா என்ன! ”அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே” என்று வள்ளலார் பாடினார். இறைவன் என்ற மலை நம் அன்பெனும் பிடியில் அகப்படும் அதிசயம் கற்பனை அல்ல நிஜம் தான்.

9. ஆத்ம நிவேதனம் – ஒப்படைத்தல்:

கடைசி வழிபாட்டு முறை உடல், பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணமாக்குவது. இது மகான்களுக்கே முடிகிற காரியம் என்றாலும் ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்ச நிலையாகக் கருதப்படுகிறது. தத்துவ வேதாந்த சாரமாகக் கூடச் சொல்லப்படுகிறது இந்த உயர்வு நிலை.

இறைவனை அடையவும், அவன் பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது பாதைகளும் உதவும். அவரவர் இயல்புக்கு ஏற்ப வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். அந்த சுதந்திரம் நமக்கு உண்டு. பிடித்த பாதையில் பயணியுங்கள். வாழ்த்துக்கள்!


- என்.கணேசன். ( நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -18-06-2013 )





Wednesday, August 28, 2013

ஈஸ்வர தியானம்


ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்.

சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய – சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய – சிவாய நம

ஓம் சிவாய சங்கரா

ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதர னே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா



சிவநாமாவளிகள்

கைலாச வாசா கங்காதரா
ஆனந்தத் தாண்டவ சதாசிவா
ஹிமகிரி வாசா சாம்பசிவா
கணபதி சேவித்ஹே பரமேசா
சரவண சேவித்ஹே பரமே சா
சைலகிரீஸ்வர உமா மஹேசா
நீலலோ சன நடன நடேசா
ஆனந்தத் தாண்டவ சதாசிவ
ஹிமகிரி வாசா சாம்பசிவா

நாதநாம மகிமை

போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா (போலோ)

கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா (போலோ)

சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா (போலோ)



நமசிவாய மாலை

ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய

ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும்
சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே

சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே

ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய் த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே

கண்ணிலே இருப்பவனே கருங்க டல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவி யங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே

அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே

அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே

பூவும் நீரும் என்மனம் பொருது கோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
மேவு கின்ற ஐவரும் விளங்கு தீப தீப மாய்
ஆடு கின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே

ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே

ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே

கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே

தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே

பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே

விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே

உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே

சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே

சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே



திரு அங்க மாலை

தலையே நீ வணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.

கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ

மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.

வாயே வாழ்த்து கண்டாய் – மத
யானையுரி போர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீ நினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினைவாய்

கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்.

ஆக்கையால் பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யால் அட்டிப் போற்றியெண்ணாத இவ்
ஆக்கையாற் பயனென்

கால் களாற் பயனென் – கறைக்
கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்
கால்களாற் பயனென்

உற்றார் ஆருளரோ – உயிர்
கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால்
நமக்குற்றா ராருளரோ.

இறு மாந்திருப்பன் கொலோ – ஈசன்
பல் கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு
இறுமாந்திருப்பன் கொலோ.

தேடிக் கண்டுகொண்டேன் – திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை
என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.

திருச்சிற்றம்பலம்



நமச்சிவாயத் திருப்பதிகம்

சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சி வாயவே

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்து
ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

திருச்சிற்றம்பலம்



சிவவாக்கியர் பாடல்

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

சரியை விலக்கல்

1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)

2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)

இதுவுமது

3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)

யோக நிலை

4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)

விராட் சொரூபம்

5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)

தெய்வ சொரூபம்

6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)

தேகநிலை

7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)

அட்சர நிலை

8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)

இதுவுமது

9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)

ஞானநிலை

10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)

ஞானம்

11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்)

அட்சர நிலை

12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)

பிரணவம்

13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்)

பஞ்சாட்சர மகிமை

14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்)

கடவுளின் உண்மை கூறல்

15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)

இராம நாம மகிமை

16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)

அத்துவிதம்

17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)

அம்பலம்

18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்)

பஞ்சாட்சரம்

19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)

பஞ்சாட்சர மகிமை

20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)



நமசிவாய மந்திரம்

நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)

வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்
பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)

தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)

புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)

திருச்சிற்றம்பலம்

...

திருமூலர் அருளியது பத்தாம் திருமுறை

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

திருச்சிற்றம்பலம்

...

பஞ்ச புராணம்

பேராயிரம் பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்தின் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
– தேவாரம்

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ
பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே !
– திருவாசகம்

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே.
- திருவிசைப்பா

பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
– திருப்பல்லாண்டு

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
– பெரியபுராணம்


வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க !
மலிவளம் சுரக்க ! மன்னன்
கோன்முறை அரசுசெய்க !
குறைவிலாது உயிர்கள் வாழ்க !
நான்மறை அறங்கள் ஓங்க !
நல்தவம் வேள்வி மல்க !
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.
– கச்சியப்பர்

...

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

...

சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு - இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி.

தென்னாடுடைய சிவனே போற்ற, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

சர்வமும் சிவமயம், சகலமும் சிவனருள். நடப்பதெல்லாம் ஈசன் செயல்.
எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் பரமேஸ்வரன் இதில் இல்லாமல் போவானா?

- என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்