Tuesday, January 9, 2024

விருந்தாவன்.. மதுரா (6)

ஜனவரி 22ம் தேதி  (… தொடர்கிறது


பலராமரும் கிருஷ்ணரும் வாழ்ந்த இடம்;  

பலராமரும் கிருஷ்ணரும் பால பருவத்தில் ஒன்றாக இருந்த 

இல்லத்திற்கு போனோம் ..  மிக பழமையான இல்லம்ஆனால் 

ரொம்ப பெரிசு .. அங்கே பல்ராம் கிருஷ்ணர் உருவங்களை 

வைத்து பூஜை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் 

காளிங்க நர்த்தனம் நடந்த கேஷி காட்;  

யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு படித்துறை .. நீளமான

அகலமான படிகளை கொண்ட இத்துறை சுத்தமாக 

பராமரிக்கப்படுகிறது .. மிக அகண்ட யமுனை நதியை சூரிய 

வெளிச்சத்தில் பார்க்கும்போது பளிங்குக்கல் போல் ஜொலிக்கிறது

இந்த படித்துறையில் இருந்து யாரொருவர் யமுனை நதியை 

பார்க்கிறார்களோ, தொடுகிறார்களோகுளிக்கிறார்களோஅந்த 

ஜலத்தை பருகிறார்களோ அவரின் பாவங்கள் நீங்குகின்றன என்று 

இங்கு குறிப்படப்பட்டுள்ளது .. 

காளிங்க நர்தனம் ஆடி கேஷி என்ற அரக்கனை அழித்த பிறகு இந்த 

படித்துறையில் கிருஷ்ண பகவான் இளைப்பாறினார் .. அதலால் இது

கேஷி காட் என்று அழைக்கப்படுகிறது 


2 மணிக்கு திரும்பி வந்து நேரே ரெஸ்டாரண்ட்ஸெல்ப் சர்வீஸ்

பஸ்ட் ரெண்டு குல்ச்சா, மெஸ்ஸட் உருளை .. அப்புறம் தால் ரைஸ்,

 வெண்டக்கா கறி .. லாஸ்ட் தயிர், ரைஸ்மோர்மிளகா .. அரைமணி 

ரெஸ்ட் .. கார்ல மதுரா பயணம் .. just 20 minutes drive

மதுரா .. கிருஷ்ண ஜென்ம பூமி .. 

பரமாத்மா அவதரித்த இடம்ஆக்சுலா அந்த காலத்து ஜெயில்.

எக்கச்சக்க போலீஸ்வெரி ஸ்ட்ரிக்ட் செக்கிங் .. நோ மொபைல்,

நோ கேமரா .. உள்ளே போய் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த

இடத்தை பார்த்து அந்ததரையை தொட்டு கண்ணில் ஒற்றிகொன்டு

ஓர் நமஸ்காரம் பண்ணினேன் . ஆத்ம குளிர்ச்சி . கிருஷ்ண ஜென்ம

பூமியை தொடும் ஒரு புண்ணியம் .. என்ன ஒரு கொடுப்பினை 

தொடரும் … )

No comments:

Post a Comment