Sunday, October 22, 2017

KOSHASRINI


அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டி அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள, அடியேனால் உண்டுபண்ணப்பட்ட வலைப்பூ, KOSHASRINI.

அனைத்து வலைப்பதிவர்களுக்கும் மிக்க நன்றி.

இதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அவை யாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை. என் நேர்க்காட்சியுணர்வுகளும் உள்ளன.

என்னுடைய அனுபவங்களை, சிந்தனைகளை, எண்ணங்களை, நான் அறிந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள, எனக்குப் பிடித்த, என் உயிரோடு ஒன்றாகிப் போன, என்னைச் சிந்திக்க வைத்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

என்னுடைய வாழ்வில், குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும், எனது பிரத்யோக ஆன்மிக பயணங்களையும், புகைப்படுங்களுடன் ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது, பதிவுகளை படித்து உணர்ந்து, உங்களுடைய தனித்தன்மைவாய்ந்த கருத்துகளை ஆலோசனைகளை அந்தந்த பதிவுகளின் அடிப்பாகத்தில் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும்  புகைப்படங்கள் இணையதளம் / வலைத்தளத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டது. அந்த வலைப்பதிவாளர்களுக்கு மிக்க நன்றி. முக்கிய பங்கு "Google Images".

..... என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன் ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாசன்

No comments:

Post a Comment