Monday, October 16, 2017

ஸ்ரீ  தக்ஷின காளிகா அபராத க்ஷமாபண ஸ்தோத்திரம்


பக்தன் தன் இஷ்ட தேவதையாகிய ஸ்ரீ தக்ஷின காளியிடம் இந்த ஜன்மத்தில் தான் இதுவரை தெரிந்தும் தெரியாமலும் செய்த பல குற்றங்களை எல்லாம் நன்கு உணர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி அவற்றிற்கெல்லாம் தேவியின் மன்னிப்பு கோரி, தன் பரம ஸரணாகதியைத் தெரிவித்து, மன்னித்து அருளவேண்டும் என்று மனதார வேண்டும் ஸ்ரீ  தக்ஷின காளிகா அபராத க்ஷமாபண ஸ்தோத்திரம்.

ப்ராக்தேஹஸ்தோ  ய்தாஹம்  தவசரணயுகம் நாஸ்ரிதோ  நார்ச்சிதோsஹம்
தேனாத்யா கீர்த்திவர்க்கைர் ஜடரஜதஹனைர்  பாத்யமானோ  பலிஷ்டை:
ஷிப்த்வா  ஜன்மாந்தரான்ன:  புனரிஹ  பவிதா க்வாஸ்ரய: க்வாபி ஸேவா
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே                

ஆதியில் நான் இந்த  ஜன்மம் எடுக்கும்போது என் தாயின்  கர்ப்பத்தில் இருந்த காலத்தில் உன் பாத கமலங்களுக்கு பூஜை செய்து உன்னை சரணமடையவில்லையே.   ஸிஸுவாய் இப்புவியில் ஜனித்த வேளையிலிருந்து பசியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டும், பூர்வ ஜன்ம கர்மாக்களின் பலனாக இன்னும் பல்வேறு வகைகளிலும் பீடிக்கப்பட்டும், ஊழின் சூழலில் சிக்குண்ட எனக்கும், என்போன்ற மற்றவர்களுக்கும் மறுவாழ்வு பெற இந்தச் சூழலிலிருந்து விடுதலை எப்படி கிடைக்கப் போகிறது.  
தேவியே, உன்னை சரணடைந்து உனக்கு முறைப்படி உபாஸன க்ரமத்தில் அமைந்த ஆராதனை முதலான மங்களகரமான உன் சேவை செய்து உய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      1                      

பால்யே பாலாபிலாபைர் ஜடித ஜடமதிர்  பாலலீலாப்ரஸக்தோ
ந த்வாம் ஜானாமி மாத: கலிகலுஷஹராம் போக மோஷப்ர தாத்ரீம
நாசாரோ  நைவ பூஜா ந யஜனகதா  ந  ஸ்ம்ருதிர்நைவ ஸேவா
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே                

தாயே, பால்ய வயதில் இளஞ் சிறார்களுடன் கூடிக்கொண்டு, சிறுபிள்ளை பருவத்திலேயே பொறுப்பற்ற பல்வகை விளையாட்டுப் பேச்சுக்கள் பேசி காலங்கழித்துக்கொண்டும், ஜடா புத்திக்காரனாக பால லீலைகளிலேயே மோஹம் கொண்டு பொழுதெல்லாம் வீணாக்கினேன்.  கலியின் தோஷங்களைக் களைந்து பக்தர்களுக்கு இஹபோக சுகவாழ்வு இறுதியில் மோக்ஷமும் அளித்தருளும் கருணா மூர்த்தியான உன் சிறப்பியல்புகளை கொஞ்சம் கூட தெரிந்து கொள்ளாத மூடனாகிவிட்டேன். ஸ்மிருதிகளில் திட்டமிட்ட ஆசார முறைப்படி நித்ய நைமித்ய கர்மானுஷ்டானத்துடன் தூய வாழ்க்கை நடத்தினேனா, இல்லையே.  விதிப்படி உனது ஆவரண பூஜைகளும், உபசார வரிவஸ்யாக்ரம பூஜைகளும் நிகழ்த்தவில்லையே. உனது மூல மந்திர ஹோமாதி யக்ஞங்கள், தர்பணங்கள் முதலியன ஒன்றும் செய்யவில்லையே. உன்னுடைய த்யானம் ஜபம் பாராயணம் தர்ஸனம் யோகிநிகளின் ஸமாராதனம் பிரதக்ஷிண நமஸ்காரங்கள் முதலிய சேவைகள் ஏதும் செய்தறியேனே.   
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      2

ப்ராப்தோsஹம்  யௌவனம்  சேத்விஷதர ஸத்ருஸைரிந்த்ரியைர் தஷ்டகாத்ரோ
நஷ்டப்ரஜ்ஞ:  பரஸ்த்ரீபரதன ஹரணே ஸர்வதா ஸாபிலாஷ:
த்வத் பாதாம்போஜயுக்மம்  க்ஷணம்பி மனஸா  ந ஸ்ம்ருதோsஹம் கதாபி
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே        
          
யௌவனப் பருவம் அடைந்த போது கொடிய விஷப்பாம்புகளுக்கு ஒப்பான இந்த்ரியங்களால் பீடிக்கப்பட்டு விஷயாதி சுகாநுபவத்திலேயே என் பொருளையும் சரீர சக்தியையும்  பொன்னான பொழுதையும் வீணாக்கிக் கொண்டு நிதானமிழந்து  மேலும் மேலும் சுகானுபவ வேட்கையின் தீவிரத்தில் எந்த கார்யத்தையும் யோசித்துப் பாராமல், என் இன்பநுகற்சிகளுக்குத் தேவையான பொருள் அடைய பிறர் பொருளையும் பிறர் ஸ்த்ரீகளையும் கூட திருடி அநுபவித்துக்கொண்டு இங்கனம் அக்ருத்யங்களை அஞ்சாமல் செய்துகொண்டே காலங்கழித்தேன்.  
இதனால் உன் பாதாரவிந்தங்களை ஒரு கணமேனும் நினைத்துப்பார்த்தது கூட கிடையாது.  
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      3

ப்ரௌடோ பிக்ஷாபிலாஷீ  ஸுததுஹித்ருகலத்ரார்த்த மன்னாதிசேஷ்ட:
 க்வ ப்ராப்ஸ்யே குத்ர யாமீத்யநுதினமநிஸம்  சிந்தயாமக்னதேஹ:
யோ தே  த்யானம் ந சாஸ்தா ந ச  பஜன விதிர் நாம  ஸங்கீர்த்தனம்  வா
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே 
                 
க்ருஹஸ்தானாகி நல்ல வளர்ச்சியான பருவத்தில் மனைவி மக்களுக்காக அன்ன வஸ்த்ராதி யோகக்ஷேமங்களை ஸம்பாதிக்கும் பிரயாசைகளிலேயே அனவரதமும் தீவிரமாக ஈடுபட்டு அதெல்லாம் சரிவரக் கிடைக்காததால் 'ஆஹா நான் எங்கு செல்வேன், யாரை அணுகுவேன், மேற்கொண்டு எந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறேன்'  என்றெல்லாம் நாள்தோறும் இரவும் பகலுமாக கவலைகளிலேயே மூழ்கிக் கிடந்து காலத்தை எல்லாம் வீணாக்கிவிட்டேன். தவிர உனது திவ்ய மங்கள ஸுரூபத்தை  கொஞ்சமேனும் த்யானித்தேனா?  உனது வழிபாட்டில் சிறிதேனும் பொருந்தி நிலைதேனா?  உனது திரு நாமங்களை மனமார உச்சரித்து ஆனந்தபரமான நாம சங்கீர்த்தனம் ஸ்வரமாகவும் மதுரமாகவும் செய்து மகிழ்ந்தேனா?  இவை எல்லாம் எதுவும் நான் செய்ததில்லையே. இதல்லாம் என் பாபம் தானே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      4

வ்ருத்தத்வே புத்திஹீன: க்ருதவிவஸதநுஸ் ஸ்வாஸகா ஸாதிஸாரை:
கர்மாநர்ஹோ s க்ஷிஹீன: ப்ரகலிததஸன: க்ஷுத்பிபாஸாதி பூத:
பஸ்சாத்தாபேன  தக்தோ மரணமநுதினம்  த்யேயமாத்ரம் ந சான்யத்    
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே
                    
வயோதிக தசையில் நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறிந்து பாகுபடுத்தித் தெளியும் புத்தி ஸக்தி இழந்து, ஸ்வாச காஸம் அதிஸாரம் முதலிய கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு, உடல் மெலிந்து வலிமை சரிந்து வளம் குறுகி, மனத்தெம்பு குன்றி, கண் பார்வை அற்று, பற்கள் தேய்ந்து ஒடிந்து விழுந்து போய், பசி தாகம் மேலிட்டு உடலாலான காரியங்கள் செய்ய சக்தியற்றவனாகி, தன் முற்செயல்களை நினைத்து நினைத்து மனம் நைந்து நொந்து போய் நாளுக்கு நாள் விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கும் மரணத்தைப் பெரும் பீதியுடன் அனுதினமும் எதிர்நோக்கிய வண்ணம் அதையே நினைத்து நடுங்கிக்கொண்டு வேறொன்றையும் நினைத்துப் பார்க்கக் கூட ஸக்தியும் நேரமும் இல்லாமல்  காலத்தை எல்லாம் வீணாகவே கழித்து விட்டேன்.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      5

க்ருத்வா ஸ்நானம் தினாதௌ க்வசிதபி ஸலிலம் நாக்ருதம் நைவபுஷ்பம்
தே  நைவேத்யாதிகம் ச  க்வசிதபி  ந க்ருதம் நாபி பாவோ  ந பக்தி :
ந ந்யாஸோ நைவ  பூஜா ந  ச   குனகதனம் நைவ சர்சா க்ருதா தே
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே
                    
அதிகாலையில் எழுந்து ப்ராதஸ்நானம் செய்து என்றைக்காவது உனக்கு த்யானாவாஹனம், அர்க்யம், பாத்யம், அபிஷேகம், புஷ்ப குங்கும
அர்ச்சனை முதலிய உபசார வரிவஸ்யா ஆராதனா க்ரமங்கள் ஏதாவது செய்தேனா?
அல்லது த்யான தாரண, பாவனாதி யோகம் செய்தேனா?  அல்லது உனது வழிபாட்டு க்ரமங்களில் அனன்ய சரணாகதி பாவத்துடன் பக்தி செலுத்தினேனா? அங்கந்யாசாதி கரந்யாசாதி பூர்வகமாக பூஜாக்ரமங்கள் ஏதேனும் செய்தேனா?  அல்லது பல ஆஸ்திகர்கள் மனதில் பக்திபாவம் பொங்கி பெருகும் வகையில் உனது பிரபாவ குணச் சிறப்பியல்புகளை எடுத்து விளக்கிக் கூறி உபன்யாசம் செய்தேனா?  அல்லது உனது  தத்துவ மஹிமைகளின் சூஷ்மங்களை விரிவாகவும் ஆழமாகவும் விமர்சித்து ஆராய்ந்து வித்வத் ஸமூஹங்களில் பரப்பிநேனா?   இதெல்லாம் நான் செய்யாமலேயே என் ஜன்மம் பூராகவும் வீணாகப் போய்விட்டதே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      6

ஜானாமி த்வாம் ந சாஹம் பவபயஹரிணீம்  ஸர்வாஸித்திப்ரதாத்ரீம
நித்யானந்தோ தயாட்யாம் த்ரீதயகுணமயீம் நித்ய ஸுத்தோதயாட்யாம்
மித்யாகர்மாபிலாஷை ரநுதினமபித:  பீடிதோ து:கஸங்கை:
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே
                      
ஸம்ஸார பந்தத்தைப் போக்குபவளும்,  எல்லா ஸித்திகளையும் வரையாது வழங்கி அருள்பவளும்,  நிலைத்த ஆநந்தத்துக்கு இருப்பிடமானவளும்,  ஸத்வம் ராஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களே உருவான ஸகுணப்ரஹ்ம மூர்த்தியும்,  ஸாஸ்வதமான ஸுத்த புத்தமுக்தானந்த ஸ்வரூபிணியுமான உனது உண்மையான விராட் ஸ்வரூபத்தை உள்ளபடி நன்கு உணர்ந்து சிறிதளவுகூட நான் த்யானம் செய்யாமல் போய்விட்டேனே.  பொய்யான நிலையாத சிற்றின்ப நுகர்ச்சியின் அல்ப இச்சைகளாலும் அவற்றால் நிச்சயமாய் விளையும் கொடிய துன்பங்களாலும், அன்றாடம் நாலாவகைகளிலும் பீடிக்கப்பட்டு வருந்தலானேன தவிர நித்யானந்த ரூபிணியும் கருனைக்கடளுமான உன்னை த்யானிக்கவில்லையே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      7

காலாப்ர ஸ்யாமலாங்கீம் விகலிதசிகுராம்  கட்கமுண்டாபிராமாம்
த்ராஸத்ராணேஷ்டதாத்ரீமகுணபகண ஸிரோமாலினீம் தீர்கநேத்ராம்
ஸம்ஸாரஸ்யைக ஸாராம்  பவஜனஹராம் பாவிதோ பாவநாபி:
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே
                      
நீருண்ட மேகம் போல் கரிய சாயலுடன் அழகிய அங்கங்கள் கொண்டு ஜ்வலிப்பவளும்,  கட்டில்
அடங்காமல் பரக்க விரிந்து தொங்கும் கேஸஜாலங்களுடன் பிரகாசிப்பவளும்,  தனது இடது மேற்கரத்தில் பத்மாத்ராஜன் என்ற அழகியதொரு கட்கமும்,  இடது கீழ்கரத்தில் நர முண்டமும்,  வலது மேற்கரத்தில் அபய முத்திரையும், வலது கீழ்கரத்தில் வரத முத்திரையும் தரித்திருப்பவளும்,  ஸவங்களின் ஸிரஸ்ஸுகளாலான மாலை அணிந்து இருப்பவளும்,  ஸாம்ஸாரிக ஜீவர்கள் சுழன்ருழலும்  இந்தப் ப்ரபஞ்சத்தில் அலைந்து வருந்தும் தொல்லைகளினின்று விடுதலை பெற அடைக்கலம் புகத்தக்க ஒரே ஸரண்ய தேவதையாக  உள்ளவளும்,  இந்த ஸம்சார சக்ரத்தில் சிக்குண்டு தவிக்கும் பக்தர்கள் இனியும் மறுபிறவி  எடுக்காத வண்ணம் தடுத்தாட்கொண்டருளும் வள்ளலுமான அநுக்ரஹமூர்த்தியாகிய உன்னை ஸரணமடைவதாக பாவனைகள் பண்ணினேன தவிர உன்னை உறுதியாக பற்றிச் சரணமடயவில்லையே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      8

ப்ரஹ்மா விஷ்ணுஸ்ததேஸ: பரிணமதி  ஸதா  த்வத்பதாம்போஜயுக்மம்
பாக்யாபாவான்ன சாஹம்  பவஜனனி பவத்பாதயுக்மம்  பஜாமி
நித்யம் லோபப்ரலோபை:  க்ருத விவஸமதி: காமுகஸ்த்வாம் ப்ரயாசே
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே 
                       
சம்சாரிகளைக் கரை ஏற்றி அருளும் ஜகன்மாதாவே,  ப்ரஹ்மா விஷ்ணு ருத்ராதி சகல தேவர்களும் எப்பொழுதும் உன் பாதகமலங்களை வணங்கி பூஜிக்கின்றனர்.  அந்த பாக்கியம் எனக்கு இல்லாததால் நான் உன் திருவடித்தாமரைகளைச்  சரணமடைந்து வழிபடவே இல்லை.  அதற்கு மாறாக அன்றாடம் காமக்க்ரோதாதிகளின் வசப்பட்டு மகிழ்ந்து ஒரே வாக்காக ஆசை பேய்க்கிரையாகி முற்றிலும் நலிந்து போனபின் உன்னை யாசிக்க வந்திருக்கிறேன்.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      9

ராகத்வேஷை: ப்ரமத்த:  கலுஷுயுததநு:  காமனாபோகலுப்த:
கார்யா  கார்யா விஸாரீ குலமதிரஹித: கௌல ஸங்கைர்விஹீன:
க்வ த்யானம் தே க்வ சர்ச்சா க்வச மனுஜபனம் நைவ கிஞ்சித்க்ருதோஹம்
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே 
                       
விருப்பு வெறுப்புகளாகிய போதைக்கு இறையாகி, மனம் கலங்கி, உடல் நொந்துபோய், கலவி இன்ப நுகர்சியிலேயே சதா காலமும் உளைந்து, இது செய்யத்தக்கது இது செய்யத் தகாதது என்ற விவேகமான விசாரணை இல்லாமல் மனம் போனபடி அலைந்து, ஸீரழிந்து, மிகப் புனிதமான உனது வழிபாட்டின் மேலான க்ரமங்களின் விதி முறைகளில் கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லாமலும் உனது உபாஸகர்களின்  குழுக்களுடன் சிறிது கூட சஹவாசம் இல்லாமலேயே காலம் கழித்துக் கொண்டிருந்தேன தவிர நான் உனது திவ்ய மங்கள ஸ்வரூபத்தை என்றைக்காவது த்யானம் செய்து மகிழ்ந்தேனா?  உனது பர தத்துவத்தைப் பற்றி எப்பொழுதாவது ஏதாவது சர்ச்சை  செய்து தெளிந்தேனா?  உனது மஹோந்நதமான மூல  மந்திரமாகிய வித்யாராஜ்ஞி யை ஜபித்து உயர்ந்தேனா?  இது ஒன்றும் நான் இதுவரை செய்யவில்லையே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      10

ரோகீ து:கீ தரித்ர: பரவஸக்ரூபண:  பாம்ஸுல பாபசேதா:
நித்ராலஸ்யப்ரஸக்தஸ்ஸுஜடரபரணே வ்யாகுல: கல்பிதாத்மா
கிம்தேபூஜா விதானம் த்வயிக்வ ச  நு மதி: க்வாநுராக: க்வ சாஸ்தா
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே   
                     
என் வாழ்நாள் முழுவதும் பலவகை வியாதிகளால் பீடிக்கப்பட்டவனாகவும்,  மனதில் பல துன்பங்கள் அடைந்தவனாகவும்,  பரம தரித்திரனாகவும்,  பிறர் உடைமைகளை அடைய முயல்வதிலேயே கண்ணும் கருத்தும்மாக உள்ள பரமலோபியாகவும்,  மனதிலும் உடலிலும் பல அழுக்குகள் நிறைந்தவனாகவும்,  கெட்டபேச்சும்   இழிவான நடத்தையும் கொண்டு,  பாபத்திலேயே புத்தி உள்ளவனாகவும்,  பல பாபச்  செயல்கள் புரிபவனாகவும்,  எப்பொழுதும் நித்திரையிலேயே  காலங்கழிக்கும் சோம்பேரியாகவும்,  சதாகாலமும் பெரும் வ்யஸநங்கள் மேலிட்டவனாகவும்,  எப்போழுதுமே வயிற்றுக்கு பெரும் தீனி போடுவதிலேயே குறியாக இருப்பவனாகவும்,  இப்படியெல்லாம்  இழிவான வாழ்கை நடத்தினேனே தவிர உனக்கு எப்போதாவது ஏதாவது பூஜைகள் செய்தேனா?   உனது மஹாமங்கள ஸ்வரூபத்தை ப்ரேமையுடன் சிந்திக்கும் த்யான க்ரமங்களில் கொஞ்சமாவது ஈடுபட்டேனா?  ஒன்றும் லவலேசமும் செய்யவே இலையே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      11

மித்யாவ்யாமோஹராகை: பரிவ்ருதமனஸ: க்லேஸஸங்கான் விதஸ்ய
க்ஷுந்நித்ரௌகான்விதஸ்ய  ஸ்மரஸுவிரஹிண: பாப கர்மப்ரவ்ருத்தே:
தாரித்ர்யஸ்ய க்வ தர்ம க்வ ச ஜன னருசி: க்வ ஸ்திதிஸ்ஸாதுஸங்கை:
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே
                        
பொய் தோற்றங்களே மலிந்த இந்த மாயாஜால பிரபஞ்சத்தில் காமக்க்ரோதாதிகளால் உண்டாக்கப்பட்ட மயக்கங்களும் குழப்பங்களுமே  மனதில் நிறைவாக சூழப்பட்டவனாகவும்,. பலவகையான துன்பங்களால் இடையறாது பீடிக்கப்பட்டவனாகவும்,  எப்பொழுதுமே பசி தாகங்களால் அவதியுற்றவனாகவும்,. நிரந்தரமாகவே  காமத் தீயினால் தஹிக்கப்பட்டவனாகவும்,  அந்த இன்பம் தன் மனம் போல் கிட்டாததாலும், தாற்காலிகமாகக் கிட்டியது தொடராது போனால் விரஹதாபத்தால் பொசுக்கப்பட்டவனாகவும்,  இங்ஙனமான நிலைகளின் காரணமாகப் பலவித பாப காரியங்கள் புரிபவனாகவும்,  தீராத தாரித்த்ரியத்திலேயே மூழ்கிகிடப்பவனாகவும் இருந்த என் அவல வாழ்க்கையில் தர்மாசரணம் ஏது?   ஜன்மம் கடைந்தேருவதற்கு உதவியான நிஷ்டை யோகம் முதலிய ஆத்ம சாதன ஹேதுக்களான கருவிகளை  ஈட்டி பிரயோகிக்கும் பிரயாசைகள் ஏது ?  ஸாத்வீக புத்தியை வளர்த்துக்  கொடுக்கும் ஸத்ஸங்கம் கொஞ்சமேனும் உண்டா?  இந்த நல்ல அம்சங்கள் லவலேசம் கூட பழக்கத்தில் இல்லாத வ்ராத்யனான எனக்கு நற்கதி  ஏது?
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      12

மாதஸ்தாதஸ்ய தேஹாஜ்ஜனனி  ஜடரகஸ்ஸம்ஸ்திதஸ்த்வத்வஸேsஹம்
த்வம் ஹர்த்தா காரயித்ரீ கரணகுணமயீ கர்மஹேதுஸ்வரூபா
த்வம் புத்திஸ்சித்த ஸம்ஸ்தாப்யஹமதி பவதீ ஸர்வமேதத் க்ஷமஸ்வ
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே 
                         
ஜகதம்பிகே,  தகப்பனின் சரீரத்திலிருந்து பிந்து ரூபமாக தாயின் கர்பாஸயத்தில் பிரவேசித்தது முதல் இதுகாறும் மாறிமாறி பல்வேறு  நிலைகளினுடே  கடந்து வந்து பல்வேறு வகையான செயல்களில் உழன்று வந்ததெல்லாம் தாயே உன் செயலால் அல்லவோ.  உன் வசத்தில் ப்ரவர்த்திக்கும் ஜீவ வர்க்கத்தில் ஒருவனாக நான் பிரக்ருதியின் இயக்கத்திற்கு அதீனனானபடியால் என் சொந்த சக்தியினாலோ , சுயஇச்சைப்படியோ ஒரு இம்மியும் செயல்பட சக்தியற்று,  கேவலம் சந்தர்பங்களின் ஓட்டத்தால் இப்படியும் அப்படியுமாக மோதப்பட்டு அலைந்து திரிந்து கொண்டு,  பலனற்ற காரியங்களில் உளைந்து உளைந்து  காலத்தை எல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.   ஆனால் ஞானத் தெளிவு ஸித்திக்காத ஜடப்பிரக்க்ருதிகளான ஜீவர்களின் இந்த வீண் செயல்கள் எல்லாம் உனக்கு  விளையாட்டாக இருக்கின்றன.  ஏனென்றால் ஜீவர்களின் எல்லா செயல்களுமே அடிப்படையான  காரணகர்த்தா  நீயேதான் அல்லவோ.  அவற்றை எல்லாம் அழிப்பவளும் நீயேதான் அல்லவோ.  நீயே க்ரியாசக்தி மூர்த்தி அம்மா.  ஜீவர்களின் கர்மங்களுக்கு மூல காரணங்களான குணகணங்களும் உன் ஜாலங்கள் தானே.  ஜீவர்களின் சைதன்யத்தின் ஓட்டத்தின்  ஆழத்தின் விமர்ச நிரூபண புத்தி சக்தி மயமாக நிலைத்து, பராஹந்தா ஸ்வரூபிணியாக லீலா வினோதங்கள் பல புரிந்து கொண்டு, அவர்களின் ஸித்தஆஸயங்களை ஆட்டிப்  படைதுக்கொண்டே,  அதனில் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் லீலாவினோத மூர்த்தியே.  இத்தகைய உனது லீலைகளில் வசப்பட்டு நான் அறியாமல் இழைக்கும் பெருங்குற்றங்கள் யாவும் என் நற்கதிக்கு பெரும் தடைகளாக இருக்கின்றனவே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      13

த்வம் பூமிஸ்த்வம் ஜாலம்  ச  த்வமஸி  ஹுதவஹஸ்த்வம் ஜகத் வாயுரூபா
த்வம் சாகாஸம்  மனஸ்ச ப்ரக்ருதிரஸி  மஹத்பூர்விகா  பூர்வ பூர்வா
ஆத்மா த்வம்  சாஸிமாத: பரமஸி பவதி த்வத்பரம் நைவ கிஞ்சித்
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே 
                         
தாயே, இந்த ப்ரபஞ்சத்தின் பரிணாமங்கள் ஆன பஞ்ச பூதங்களும் நீயே.  ஜீவர்களின் பஞ்ச ஞானேந்த்ரியங்களும், பஞ்ச கர்மேந்த்ரியங்களும்,  மனஸும் ஆகிய இவ்ளவுல்லாம் நீயே.  வ்யக்த ஸ்போடமாகப்
பெருகியுள்ள இந்த மஹத்தான  பிரபஞ்சத்தின் அடிப்படை காரணமான மூலப்பிரக்க்ருத்தியின் நிர்ஹேதுகமான முதற் காரணமே நீ தானே.  ஜீவாத்மாவும் நீ தான், பரமாத்மாவும் நீயே தான். தாயே. உன்னைக்  காட்டிலும்  வேறானதாக இந்த ஆயிரத்து எட்டு அண்டங்களிலும் ஏதோன்றும் இல்லையே.   இந்த பெரும் உண்மைகளை நான் உணரவில்லையே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      14

த்வம் காலி த்வம்  ச  தாரா  த்வமஸி கிரிஸுதா சுந்தரி பைரவி த்வம்
த்வம்   துர்க்காச்சின்னமஸ்தா  த்வமஸிச புவனா த்வம் ஹி லக்க்ஷ்மீஸ் ஸிவாத்வம்
தூமாமாதங்கிநீ த்வம்  த்வமஸி ச பகலா மங்கலாதிஸ்தவாக்யா
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே     
                     
தாயே, தக்ஷினகாளிகையே,  நீயேதான் தாராதேவியாகவும்,  த்ரிபுரஸுந்தரியாகவும்,  பைரவியாகவும்,  சின்னமஸ்தாவாகவும், புவநேஸ்வரியாகவும்,  கமலாத்மிகாவாகவும், தூமாவதியாகவும்,  மாதங்கியாகவும், பகலாமுகியாகவும்  பரிணாமமாக ஆவிர்பவித்து  அந்த அந்த அவசரத்திற்கேற்ற நிலையில் மருவிய ஸ்வரூபம் கொண்டு லோகானுக்ரஹம் செய்து ஜீவர்களை உய்வித்தருள்கின்றாய்.  அந்தஅந்த மூர்த்திகளை யதாக்ரமம் ஸாஸ்த்ர  விதிமுறைப்படி புரச்சரணம்  செய்யும் பத்ததிகளை நான் அறியேன்.  எனினும் தாயே.  உன் நாம சங்கீர்த்தனம்  மட்டுமே இஹபர சௌக்கிய சுப மங்களங்களைப் பொழியவல்லது  என்ற மஹத்தான உண்மையை நான் சரிவர உணரவில்லையே.
ஆயினும் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் ஜ்வலிக்கும் முககமலம் கொண்டு பிரகாசிக்கும் பேரழகியே.  ஸ்ரீ  தக்ஷினகாளிகே, மாத்ருகா ஸ்வரூபிணீயே, ஷமா மூர்த்தியான என் தாயே, நான் அறியாமல் மேற்கூறிய குற்றங்கள் பல இழைத்துவிட்டேன்.  என்னை  உன் அபார   கருணாவிலாசத்தால் மன்னித்தருள வேண்டும் ஜகதம்பிகே.      15

ஸ்தோத்ரேணானேன தேவீம் பரிணம திஜ னோ  யஸ் ஸதா பக்தியுக்தோ
துஷ்க்ருத்யா துர்க்க ஸங்கம் பரிதரதி ஸதம்  விக்நதா நாஸமேதி
நாதிர் வியாதி:  கதாசித்  பவதி யதி புனஸ் ஸர்வதா  ஸாபராத
ஸ்ஸர்வம் தத்காமரூபே த்ரிபுவன ஜனனிக்ஷாமயே,  புத்ரபுத்த்யா             16

இந்த ஸ்தோத்ரத்தை எவனேனும் ஒரு பக்தன்  ப்ரேமையுடன்  தொடர்ச்சியாக பாராயணம் செய்து தேவிக்கு அர்ப்பணம் செய்வானேயாகில் கெட்ட செயல்கள் புரியும் துர்ப்பியாஸங்கள்  அறவே  அற்றுப் போய் அவன் பரிசுத்தனாகி விடுவான்.  கெட்டநடத்தையுள்ளவர்களுடன்  ஸஹவாசம் உடனே நீங்கிவிடும். அவன் பரிசுத்தனாகி விடுவான்.  கெட்ட நடத்தை உள்ளவர்க்கலுடன் சஹாவாசம் உடனே நீங்கி விடும்.  அவன் வாழ்க்கை பாதையில் ஏற்கனவே  நூற்றுக்கணக்கான் இடையூறுகள் இருந்திருப்பினும்  அவை யாவும் உடனடியாக அழிந்து விடும்.  மனக்கவலைகளும் உடல் நோய்களும் அவனை ஒருபோதும் அண்டாது.  இதனை பாராயணம் செய்வதற்கு தேசகால நிபந்த்தனைகள் எதுவும் கிடையாது.  அதாவது எந்த பக்தனும்  அவனுக்கு முடிந்த எந்தப் பொழுதிலும் இதனை பாராயணம் செய்யத்தகும்.
சர்வ மாத்ருகாக்ஷரங்களிலும் உறைபவளே,  சர்வ மந்திர வித்யாமயமான ஜகத்ரக்ஷகியே, இவ்வளவு உறுதியாகச் சபதம் செய்தும் நான் எப்பொழுதுமே  தீராத குற்றவாளியாக இருப்பேனேயாகில், மூவுலகுக்கும் அன்னையே, தாயே சேயை தண்டிக்கமாட்டாள்.  ஆதலால்  நான் உனது குழந்தை என்ற ஒரே உண்மைக்காக  என் குற்றம் அனைத்தையும் மன்னித்து என்னை  ஆட்கொள்ள வேண்டும்.

ஞாதா  வக்தா கவீஸோ பவதி தனபதிர் தான ஸீலோ  தயாத்மா
நிஷ்பாபீ நிஷ்கலங்கி குலபதி குஸலஸ்ஸத்யவாக் தார் மிகஸ் ச
நித்யானந்தோ தயாட்ய: பசுகணவிமுகஸ்ஸத் பதா சாரஸீல:
ஸம்ஸாராப்திம் ஸுகேன ப்ரதாதி கிரிஜாபாதயுக்மாவலம்பாத்.                 17

இதி ஸ்ரீ  காலீ தந்த்ரே ஸ்ரீ தக்ஷினகாளிகா அபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்  ஸமாப்தம்.
இந்த ஸ்தோத்திரத்தை  பக்தியுடன் பாராயணம் செய்பவன் ஒரு மாபெரும் ஞானியாகவும்,  ஒரு தலை சிறந்த பேச்சாளனாகவும்,  ஒரு உத்தமமான கவிஞனாகவும்,  குபேரனுக்கு ஒப்பான தனவானாகவும்,  ஒரு பெரும் கொடையாளியாகவும்,  தயை நிரம்பியவனாகவும்,  பாபம் அற்றவனாகவும்,  பரிசுத்தனாகவும்,  ஆயிரம் சிஷ்யர்கள் படைத்த மஹாகுருவாகவும்,  ஒரு த்ருடமான சத்யசந்தனாகவும்,  உறுதியான தர்மசிந்தனை உள்ளவனாகவும்,  நிலைத்த ஆனந்தம் அனுபவிப்பவனாகவும்,  ஒரு பெருங்கருணாமூர்த்தியாகவும்,  ஆஸ்திக மார்க்கத்தில்  ஆழ்ந்து ஸதாசாரஸீலனாகவே எப்பொழுதுமே ஸ்ரௌத ஸ்மார்த்த நித்ய நைமித்திய கர்மானுஷ்டானத்திலேயே நிலைத்து ஈடுபட்டவனாகவும்,  உலகம் போற்ற இன்புற்று நீடுழி வாழ்வான்.
தேவியின் உபாஸனக்ரமங்களிலேயே தன் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டு  தொடர்ச்சியான  ஆனந்தம் அனுபவித்துக்கொண்டே, சிலகாலம் வாழ்ந்து தேவியின் சரணாரவிந்தங்களில் அனன்ய சரணாகதியின் பயனாக வெகு எளிதாக, சீக்கிரமே சம்ஸாரக் கடலை தாண்டி மோக்ஷ சாம்ராஜ்யம் அடைந்து  நித்ய ஸுகி ஆவான் என்பது திண்ணம்.
இங்கனமாக ஸ்ரீகாளி தந்த்ரத்தில்  கூறப்பட்ட ஸ்ரீ தக்ஷினகாளிகா  அபராத ஷமாபன ஸ்தோத்ரம் முற்றிற்று.

...  இவை அனைத்தும் வலைப்பூ  "kalee krish" பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் Sri Krishnan Subramanian தகவல்களுக்கு மிக்க நன்றி.

.........
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.
"தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.
தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன்
வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥
.........

No comments:

Post a Comment