Thursday, October 12, 2017

காலபைரவர்

ॐ भ्रं भैरवाय नमः 
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ:
..........

ராமகிரி கோயிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள்.

சென்னை - திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி.
சுவாமி: அருள்மிகு வாலீஸ்வரர், சந்தான பிராப்தி பைரவர்
அம்பாள்: அருள்மிகு மரகதாம்பிகை
தீர்த்தம்: நந்தி தீர்த்தம்
விருட்சம்: அரசமரம்
..........

கொக்கராயன் பேட்டையில் அமைந்திருக்கும் அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்.
தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு பைரவரை வணங்கினால், பித்ரு சாபமும் பிரேத சாபமும் நிவர்த்தி ஆகும். மேலும், பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும், நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும் என்பது ஐதீகம்.
திருச்செங்கோடு மற்றும் ஈரோடு பேருந்து நிலையங்களில் இருந்து கொக்கராயன்பேட்டைக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன.
..........

பிதுர் தோஷம் நீக்கும் ஆவூர் பஞ்ச பைரவர்கள்
கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது.
இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்". பிதுர் சம்பந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பைரவரை வணங்கி பூஜையில் ஈடுபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 
பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
..........

அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment