Sunday, October 29, 2017
Balaji Mandir & Someswar Mandir at Nasik
On advice from the Readers, the Religious Matters will also be in English.
I will continue to describe it in my Mother Tongue, Tamil.
Continuation of our Temple Visits in Nasik ...
நாசிக் நகரில் அனுபவித்த ஆலய தரிசனம் தொடர்கிறது ...
On return from Trimbkeswar Temple, Thambi has suggested to see Balaji Mandir and Sri Someswar Mandir. Since both are on the way to home, we decided to visit.
திரிம்பகேஸ்வர் ஆலய தரிசனத்தை முடித்து இல்லம் திரும்புகையில், தம்பியின் அறிவுரைப்படி, வரும் வழியிலேயுள்ள பாலாஜி மந்திர்க்கும், சோமேஸ்வர் மந்திர்க்கும் செல்லலாம் என்று தீர்மானித்தோம்.
First we had been to Sri Balaji Temple.
What a beautiful Temple, a tranquil place. The Temple Tower is like 'pagoda' - a pyramid like tower and typically having upward-curving roofs over the individual stories - as we see in Mahabalipuram, Tamil Nadu.
முதலில் பாலாஜி மந்திர்.
ஓர் அழகான சாந்தமிக்க அமைதியான ஆலயம். மஹாபலிபுரம் கடற்கரை கோயில் மாதிரி "பகோடா" அமைப்புப்படி அமைந்துள்ள ஆலய கோபுரம்.
In front of the Temple, a tall attractive brass plated Dhwaja Stambha is erected. Both Usha and Renu stood before it and had their selfie.
ஆலய நுழைவுவாயிலுக்கு முன், பித்தளையால் மூடப்பட்ட உயரமான மனத்தை இழுக்கத்தக்க துவஜ ஸ்தம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் உஷாவும், ரேணுவும் ஒரு 'selfie'.
The huge and eye catching First Hall is with dome shaped canopy. The floor is full of attractive polished granite slabs. A big marble Lord Garuda idol is placed facing the main Diety.
குவிந்த கூரை விதானத்துடன் கண்களை கவரக்கூடிய பெரிய அர்த்த மண்டபம். வழவழயென்று பளபளப்புடன் ஜொலிக்கும் பெரிய க்ரானைட் கல்லிலால் ஆன தரை. கர்பகிரஹத்தை நோக்கி மார்பிளாலான பெரிய கருடாழ்வார் சிலை.
Beautifully carved attractive idol of Sri Balaji, a replica of Tirupathi Srinivasa Perumal, is installed in the sanctum sanctorum. There are idols of Goddess MahaLakshmi and Padmavathi. At the entrance of sanctum sanctorum, tall black stone idols of Jaya & Vijaya, the Watch-Gods, are erected.
திருப்பதியில் இருக்கும் திருவேங்கடமுடையான் திருச்சிலை மாதிரி, மிக அழகாக செதுக்கப்பட்ட ஸ்ரீ பாலாஜியின் சிலை கர்பகிரஹத்தில் ஸ்தாபிக்கட்டுள்ளது. மஹாலக்ஷ்மி தாயாரின் சிலையும் பத்மவாதி தாயாரின் சிலையும் வெளிப்பிரகாரத்தில் உள்ளது. கர்பகிரஹத்தின் வாயிலின் இருபக்கமும் ஜெய-விஜய துவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன.
The soul captivating slogan "Govinda Govinda" is continuously being played. Divine Vibration in the entire Hall. Had a self experience of the Divine Thrill.
ஆழ்மனதை ஆட்டுவிக்கும் "கோவிந்தா கோவிந்தா" நாமம் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மண்டபம் முழுவதும் தெய்வீக அதிர்வு. நான் பிரத்யோகமாக தெய்வீக சுகத்தை உணர்ந்து அனுபவித்தேன்.
A Cow Shed with more than 50 cows. The entire vicinity is very clean and well maintained. A peaceful calm persists.
50க்கும் மேற்பட்ட பசுக்கள் கோசாலையில் பராமரிக்கப்படுகிறது. கோவிலைச்சுற்றி உள்ள இடம் முழுவதும் மிகமிக சுத்தமாகயுள்ளது. ஒருவகை அமைதியான நிசப்தம் நிலவுகிறது.
Mobile clicks of We Four in four postures. And also had fresh hot corns.
நாங்கள் நால்வரும் நாலுவித நிலையில் மொபைல் கிளிக்ஸ். தணல்ல நன்னா வாட்டி மக்காச்சோளம் இரண்டுமூணு உள்ளே தள்ளியாச்சு.
After a 10 minutes drive, we had been to Shree Someshwar Mandir. This Temple is on the banks of the Sacred River Godavari. The Shiv Ling and Nandhi are big.
அடுத்தது சோமேஸ்வர் மந்திர். புனித கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள சிவ ஆலயம். லிங்கமும் நந்தியும் பெரிதாகயுள்ளது.
The area looks like picnic spot. Lot of trees, stone benches, small eateries. Lot of kids are enjoying the boat ride in the river. Usha's selfie.
ஹாய்யா பொழுதை கழிக்கும் இடமாக தென்படுகிறது. நிறைய மரங்களும், கல் பெஞ்சுகளும், மிகச்சிறிய உணவகங்கள் உள்ளது. நிறைய குழந்தைகள் நதியில் படகு சவாரி செஞ்சென்றுக்கா. உஷா ஒரு செல்பி எடுத்துண்டா.
Back home by 8 in the night. Time to exhibit the culinary skill by Renu.
இரவு எட்டு மணிக்கு இல்லம் வருகை. ரேணு தன்னுடைய சமையல்கலை கைவண்ணத்தை காட்ட ஆரம்பிச்சுட்டா.
Next Post on visit to the Abode of the Goddess Saptashrungi Nivasini.
அடுத்த பதிவு, சப்தஸ்ருங்கி நிவாஸினி அம்பாள் ஆலயம்.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment