Friday, October 20, 2017

श्रीशिवताण्डवस्तोत्रम् रावणरचितम् ॥ ॥ ஶ்ரீஶிவதாண்டவஸ்தோத்ரம் ராவணரசிதம் 


சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ராவணனுக்காகச் சிவபெருமான் ஆடிய தாண்டவம்தான் பஞ்ச சகார சண்ட நாட்டியம் என்னும் தாண்டவமாகும்.     


சிவபெருமானின் அருளைப்பெற்ற ராவணன், ‘`ஐயனே, என் அகந்தை அடக்கி ஆட்கொண்ட பரமனே! நான் பாட, அதற்கேற்ப தாங்கள் திருநடனம் ஆடும் காட்சியை நான் தரிசிக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்தான். ஐயனும் இசைவு தெரிவித்தார். மனம்மகிழ்ந்த ராவணன், ‘மஹா பரமேஸ்வரனின் தலைவழியே சிந்தும் புனித கங்கை பூமியைப் புனிதமாக்குகிறாள். அந்த புனித பூமியில் சிவன் ஆனந்தமயமான நாட்டியம் ஆடுகிறார். அப்போது அவரது கழுத்தில் உள்ள ராஜநாகம் மாலை போல சுழல்கிறது. சிவனின் கையில் இருக்கும் உடுக்கை எழுப்பும் `டமட் டமட் டமட்' என்ற நாதத்தின் ஓசைக்கேற்ப ஈசனின் சகார சண்ட தாண்டவம் ஆடப்படுகிறது’ என்ற கருத்துடன் தொடங்கும் பாடலைப் பாட, அதன் தாளகதிக்கு ஏற்ப, சிவபெருமான் ‘பஞ்ச சகார சண்ட தாண்டவம்' ஆடினார். 



ராவணன் பாடிய சிவதாண்டவ ஸ்தோத்திரப் பாடல்களை எவரொருவர் பக்தியுடன் பாடுகிறாரோ அவருக்கு சிவபெருமானின் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.



श्रीशिवताण्डवस्तोत्रम् रावणरचितम् ॥ ॥ ஶ்ரீஶிவதாண்ட³வஸ்தோத்ரம் ராவணரசிதம் 

॥ अथ रावणकृतशिवताण्डवस्तोत्रम् ॥ ॥ அத² ராவணக்ருʼதஶிவதாண்ட³வஸ்தோத்ரம் ॥

॥ ஶ்ரீக³ணேஶாய நம: ॥ ॥ श्रीगणेशाय नमः ॥

जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले
  गलेऽवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् ।
डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं
  चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् ॥ १॥

ஜடாடவீக³லஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்த²லே
  க³லேঽவலம்ப்³ய லம்பி³தாம் பு⁴ஜங்க³துங்க³மாலிகாம் ।
ட³மட்³ட³மட்³ட³மட்³ட³மந்நிநாத³வட்³ட³மர்வயம்
  சகார சண்ட³தாண்ட³வம் தநோது ந: ஶிவ: ஶிவம் ॥ 1॥

जटाकटाहसम्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरी-
     -विलोलवीचिवल्लरीविराजमानमूर्धनि ।
धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके
      किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम ॥ २॥

ஜடாகடாஹஸம்ப்⁴ரமப்⁴ரமந்நிலிம்பநிர்ஜ²ரீ-
     -விலோலவீசிவல்லரீவிராஜமாநமூர்த⁴நி ।
த⁴க³த்³த⁴க³த்³த⁴க³ஜ்ஜ்வலல்லலாடபட்டபாவகே
      கிஶோரசந்த்³ரஶேக²ரே ரதி: ப்ரதிக்ஷணம் மம ॥ 2॥

धराधरेन्द्रनंदिनीविलासबन्धुबन्धुर
      स्फुरद्दिगन्तसन्ततिप्रमोदमानमानसे ।
कृपाकटाक्षधोरणीनिरुद्धदुर्धरापदि
      क्वचिद्दिगम्बरे(क्वचिच्चिदम्बरे) मनो विनोदमेतु वस्तुनि ॥ ३॥

த⁴ராத⁴ரேந்த்³ரநந்தி³நீவிலாஸப³ந்து⁴ப³ந்து⁴ர
      ஸ்பு²ரத்³தி³க³ந்தஸந்ததிப்ரமோத³மாநமாநஸே ।
க்ருʼபாகடாக்ஷதோ⁴ரணீநிருத்³த⁴து³ர்த⁴ராபதி³
      க்வசித்³தி³க³ம்ப³ரே(க்வசிச்சித³ம்ப³ரே) மநோ விநோத³மேது வஸ்துநி ॥ 3॥

जटाभुजङ्गपिङ्गलस्फुरत्फणामणिप्रभा
      कदम्बकुङ्कुमद्रवप्रलिप्तदिग्वधूमुखे ।
मदान्धसिन्धुरस्फुरत्त्वगुत्तरीयमेदुरे
     मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि ॥ ४॥

ஜடாபு⁴ஜங்க³பிங்க³லஸ்பு²ரத்ப²ணாமணிப்ரபா⁴
      கத³ம்ப³குங்குமத்³ரவப்ரலிப்ததி³க்³வதூ⁴முகே² ।
மதா³ந்த⁴ஸிந்து⁴ரஸ்பு²ரத்த்வகு³த்தரீயமேது³ரே
     மநோ விநோத³மத்³பு⁴தம் பி³ப⁴ர்து பூ⁴தப⁴ர்தரி ॥ 4॥

सहस्रलोचनप्रभृत्यशेषलेखशेखर
     प्रसूनधूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः ।
भुजङ्गराजमालया निबद्धजाटजूटक
     श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः ॥ ५॥

ஸஹஸ்ரலோசநப்ரப்⁴ருʼத்யஶேஷலேக²ஶேக²ர
     ப்ரஸூநதூ⁴லிதோ⁴ரணீ விதூ⁴ஸராங்க்⁴ரிபீட²பூ:⁴ ।
பு⁴ஜங்க³ராஜமாலயா நிப³த்³த⁴ஜாடஜூடக
     ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரப³ந்து⁴ஶேக²ர: ॥ 5॥

ललाटचत्वरज्वलद्धनञ्जयस्फुलिङ्गभा-
    -निपीतपञ्चसायकं नमन्निलिम्पनायकम् ।
सुधामयूखलेखया विराजमानशेखरं
     महाकपालिसम्पदेशिरोजटालमस्तु नः  ॥ ६॥

லலாடசத்வரஜ்வலத்³த⁴நஞ்ஜயஸ்பு²லிங்க³பா⁴-
    -நிபீதபஞ்சஸாயகம் நமந்நிலிம்பநாயகம் ।
ஸுதா⁴மயூக²லேக²யா விராஜமாநஶேக²ரம்
     மஹாகபாலிஸம்பதே³ஶிரோஜடாலமஸ்து ந:  ॥ 6॥

करालभालपट्टिकाधगद्धगद्धगज्ज्वल-
     द्धनञ्जयाहुतीकृतप्रचण्डपञ्चसायके ।
धराधरेन्द्रनन्दिनीकुचाग्रचित्रपत्रक-
    -प्रकल्पनैकशिल्पिनि त्रिलोचने रतिर्मम ॥। ७॥

கராலபா⁴லபட்டிகாத⁴க³த்³த⁴க³த்³த⁴க³ஜ்ஜ்வல-
     த்³த⁴நஞ்ஜயாஹுதீக்ருʼதப்ரசண்ட³பஞ்சஸாயகே ।
த⁴ராத⁴ரேந்த்³ரநந்தி³நீகுசாக்³ரசித்ரபத்ரக-
    -ப்ரகல்பநைகஶில்பிநி த்ரிலோசநே ரதிர்மம ॥। 7॥

नवीनमेघमण्डली निरुद्धदुर्धरस्फुरत्-
     कुहूनिशीथिनीतमः प्रबन्धबद्धकन्धरः ।
निलिम्पनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः
     कलानिधानबन्धुरः श्रियं जगद्धुरंधरः ॥ ८॥

நவீநமேக⁴மண்ட³லீ நிருத்³த⁴து³ர்த⁴ரஸ்பு²ரத்-
     குஹூநிஶீதி²நீதம: ப்ரப³ந்த⁴ப³த்³த⁴கந்த⁴ர: ।
நிலிம்பநிர்ஜ²ரீத⁴ரஸ்தநோது க்ருʼத்திஸிந்து⁴ர:
     கலாநிதா⁴நப³ந்து⁴ர: ஶ்ரியம் ஜக³த்³து⁴ரந்த⁴ர: ॥ 8॥

प्रफुल्लनीलपङ्कजप्रपञ्चकालिमप्रभा-
    -वलम्बिकण्ठकन्दलीरुचिप्रबद्धकन्धरम् ।
स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं
     गजच्छिदांधकच्छिदं तमन्तकच्छिदं भजे ॥ ९॥

ப்ரபு²ல்லநீலபங்கஜப்ரபஞ்சகாலிமப்ரபா⁴-
    -வலம்பி³கண்ட²கந்த³லீருசிப்ரப³த்³த⁴கந்த⁴ரம் ।
ஸ்மரச்சி²த³ம் புரச்சி²த³ம் ப⁴வச்சி²த³ம் மக²ச்சி²த³ம்
     க³ஜச்சி²தா³ந்த⁴கச்சி²த³ம் தமந்தகச்சி²த³ம் ப⁴ஜே ॥ 9॥

अखर्व(अगर्व)सर्वमङ्गलाकलाकदम्बमञ्जरी
     रसप्रवाहमाधुरी विजृम्भणामधुव्रतम् ।
स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं
     गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे ॥ १०॥

அக²ர்வ(அக³ர்வ)ஸர்வமங்க³ளாகலாகத³ம்ப³மஞ்ஜரீ
     ரஸப்ரவாஹமாது⁴ரீ விஜ்ருʼம்ப⁴ணாமது⁴வ்ரதம் ।
ஸ்மராந்தகம் புராந்தகம் ப⁴வாந்தகம் மகா²ந்தகம்
     க³ஜாந்தகாந்த⁴காந்தகம் தமந்தகாந்தகம் ப⁴ஜே ॥ 10॥

जयत्वदभ्रविभ्रमभ्रमद्भुजङ्गमश्वस-
    -द्विनिर्गमत्क्रमस्फुरत्करालभालहव्यवाट् ।
धिमिद्धिमिद्धिमिध्वनन्मृदङ्गतुङ्गमङ्गल
     ध्वनिक्रमप्रवर्तित प्रचण्डताण्डवः शिवः ॥ ११॥

ஜயத்வத³ப்⁴ரவிப்⁴ரமப்⁴ரமத்³பு⁴ஜங்க³மஶ்வஸ-
    -த்³விநிர்க³மத்க்ரமஸ்பு²ரத்கராலபா⁴லஹவ்யவாட் ।
தி⁴மித்³தி⁴மித்³தி⁴மித்⁴வநந்ம்ருʼத³ங்க³துங்க³மங்க³ள
     த்⁴வநிக்ரமப்ரவர்தித ப்ரசண்ட³தாண்ட³வ: ஶிவ: ॥ 11॥

दृषद्विचित्रतल्पयोर्भुजङ्गमौक्तिकस्रजोर्-
    -गरिष्ठरत्नलोष्ठयोः सुहृद्विपक्षपक्षयोः ।
तृणारविन्दचक्षुषोः प्रजामहीमहेन्द्रयोः
     समं प्रवर्तयन्मनः कदा सदाशिवं भजे ॥ १२॥

த்³ருʼஷத்³விசித்ரதல்பயோர்பு⁴ஜங்க³மௌக்திகஸ்ரஜோர்-
    -க³ரிஷ்ட²ரத்நலோஷ்ட²யோ: ஸுஹ்ருʼத்³விபக்ஷபக்ஷயோ: ।
த்ருʼணாரவிந்த³சக்ஷுஷோ: ப்ரஜாமஹீமஹேந்த்³ரயோ:
     ஸமம் ப்ரவர்தயந்மந: கதா³ ஸதா³ஶிவம் ப⁴ஜே ॥ 12॥

कदा निलिम्पनिर्झरीनिकुञ्जकोटरे वसन्
     विमुक्तदुर्मतिः सदा शिरः स्थमञ्जलिं वहन् ।
विमुक्तलोललोचनो ललामभाललग्नकः
     शिवेति मंत्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम् ॥ १३॥

கதா³ நிலிம்பநிர்ஜ²ரீநிகுஞ்ஜகோடரே வஸந்
     விமுக்தது³ர்மதி: ஸதா³ ஶிர: ஸ்த²மஞ்ஜலிம் வஹந் ।
விமுக்தலோலலோசநோ லலாமபா⁴லலக்³நக:
     ஶிவேதி மந்த்ரமுச்சரந் கதா³ ஸுகீ² ப⁴வாம்யஹம் ॥ 13॥

निलिम्प नाथनागरी कदम्ब मौलमल्लिका-
     निगुम्फनिर्भक्षरन्म धूष्णिकामनोहरः ।
तनोतु नो मनोमुदं विनोदिनींमहनिशं
     परिश्रय परं पदं तदङ्गजत्विषां चयः ॥ १४॥

நிலிம்ப நாத²நாக³ரீ கத³ம்ப³ மௌலமல்லிகா-
     நிகு³ம்ப²நிர்ப⁴க்ஷரந்ம தூ⁴ஷ்ணிகாமநோஹர: ।
தநோது நோ மநோமுத³ம் விநோதி³நீம்மஹநிஶம்
     பரிஶ்ரய பரம் பத³ம் தத³ங்க³ஜத்விஷாம் சய: ॥ 14॥

प्रचण्ड वाडवानल प्रभाशुभप्रचारणी
     महाष्टसिद्धिकामिनी जनावहूत जल्पना ।
विमुक्त वाम लोचनो विवाहकालिकध्वनिः
     शिवेति मन्त्रभूषगो जगज्जयाय जायताम् ॥ १५॥

ப்ரசண்ட³ வாட³வாநல ப்ரபா⁴ஶுப⁴ப்ரசாரணீ
     மஹாஷ்டஸித்³தி⁴காமிநீ ஜநாவஹூத ஜல்பநா ।
விமுக்த வாம லோசநோ விவாஹகாலிகத்⁴வநி:
     ஶிவேதி மந்த்ரபூ⁴ஷகோ³ ஜக³ஜ்ஜயாய ஜாயதாம் ॥ 15॥

इदम् हि नित्यमेवमुक्तमुत्तमोत्तमं स्तवं
     पठन्स्मरन्ब्रुवन्नरो विशुद्धिमेतिसंततम् ।
हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं
     विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिंतनम् ॥ १६॥

இத³ம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
     பட²ந்ஸ்மரந்ப்³ருவந்நரோ விஶுத்³தி⁴மேதிஸந்ததம் ।
ஹரே கு³ரௌ ஸுப⁴க்திமாஶு யாதி நாந்யதா² க³திம்
     விமோஹநம் ஹி தே³ஹிநாம் ஸுஶங்கரஸ்ய சிந்தநம் ॥ 16॥

पूजावसानसमये दशवक्त्रगीतं
     यः शम्भुपूजनपरं पठति प्रदोषे ।
तस्य स्थिरां रथगजेन्द्रतुरङ्गयुक्तां
     लक्ष्मीं सदैव  सुमुखिं प्रददाति शम्भुः ॥ १७॥

பூஜாவஸாநஸமயே த³ஶவக்த்ரகீ³தம்
     ய: ஶம்பு⁴பூஜநபரம் பட²தி ப்ரதோ³ஷே ।
தஸ்ய ஸ்தி²ராம் ரத²க³ஜேந்த்³ரதுரங்க³யுக்தாம்
     லக்ஷ்மீம் ஸதை³வ  ஸுமுகி²ம் ப்ரத³தா³தி ஶம்பு:⁴ ॥ 17॥

   ॥ इति श्रीरावणविरचितं शिवताण्डवस्तोत्रं सम्पूर्णम् ॥
   ॥ இதி ஶ்ரீராவணவிரசிதம் ஶிவதாண்ட³வஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥


ராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தின் கருத்துரை .....

சிவன் ஆனந்தமயமான நாட்டியம் ஆடுகிறார். அப்போது அவரது கழுத்தில் உள்ள ராஜநாகம் மாலை போல சுழல்கிறது. சிவனின் கையில் இருக்கும் உடுக்கை எழுப்பும் `டமட் டமட் டமட்' என்ற நாதத்தின் ஓசைக்கேற்ப ஈசனின் சகார சண்ட தாண்டவம் ஆடப்படுகிறது.
சிவனின் நீண்ட ஜடாமுடியும், கங்கையும் சிதறி வீச,நெற்றி பிரகாசமாக ஜொலிக்கிறது. கொண்டை முடியில் சூடிய பிறை தகதகவென ஜொலிக்க, சிவன் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்.
பார்வதியை இடபாகமாகக்கொண்டு, உலகைக் காக்க திருவிளையாடல் புரிகிறான் ஈசன். பற்றில்லாத ஞானியான ஈசன், அவனைத் தொழும் பக்தர்களிடம் திருவிளையாடல் புரிய ஆடுகிறார். 
ஆடும் பரமனின் கழுத்து நாகங்கள் வெளியிடும் மாணிக்கங்களின் ஒளியில் திசைகள் அனைத்தும் சிவந்து பவளம் போல ஜொலிஜொலிக்கிறது. யானையின் தோலாலான ஈசனின் மேலாடை பெரும் ஒளியோடு அசைந்தாடுகிறது. ஈசனின் நடனத்தைக் காணும் என் உள்ளம் ஆனந்த வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்திரனும், தேவர்களும் ஈசனின் அருள் வேண்டி வணங்குகிறார்கள். ஈசனின் திருப்பாத துளி அவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. அள்ளி முடிந்த ஈசனின் திருமுடியை ராஜ நாகத்தால் கட்டி, அதன்மீது சந்திரனைச் சூடியுள்ளார். அது அவர் அருள்போன்ற தூய ஒளியைச் சிந்திக்கொண்டிருக்கிறது.
ஈசனின் நெற்றிக்கண் நெருப்பால் மன்மதனின்  ஐந்து மலர்க்கணைகளையும் எரித்து, காமனையும் எரித்து சாம்பலாக்கினார். நிலவைச் சூடியிருக்கும் மஹா கபாலியின் ஜடாமுடியிலிருந்து, நாம் அனைவரும் சகல செல்வ சுகங்களையும் பெற்று வாழ்வோமாக.
சிவனே அனைத்து படைப்புகளையும் உருவாக்கும் ஒரே சிற்பியாக  இருக்கிறார். மூலப் பெருமானின் இந்த தாண்டவத்தால் என் இதயம்  மகிழ்ச்சிக் கொள்கிறது.
விஷத்தைத் தன் கண்டத்தில்  வைத்துள்ளவரே! கங்கையைச் சடையில் தாங்கியவரே! அண்ட சராசரங்களை காப்பவரே! அனைவரையும் காப்பாயாக.
திரிபுரங்களை அழித்தவரே! ஆணவ தட்சனின் யாகத்தை வீழ்த்தியவரே! கஜாசூரனை ஒழித்தவரே! அந்தகன் எனும் அசுரனை வீழ்த்தியவரே!  அறியாமையை அழித்து எங்களைக் காக்கும் சிவனே! உன்னை வணங்குகிறேன்.
எம்பெருமான் நாட்டியத்தில் பெருக்கெடுக்கும் அமுதம் பொங்கி வழிந்து, அவரால்  உருவாக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளையும் மகிழ்விக்கிறது. காலனைத் தண்டித்த கருணா மூர்த்தியே! உன்னைப் பாடித் தொழுகிறேன், அருள்புரி.
ஈசனின் நெற்றிக்கண், பலிபீடம் போல் ஜொலிக் கிறது. மிருதங்கமானது `டிமிட் டிமிட் டிமிட்' என்று ஒலித்துக்கொண்டிருக்க... அந்தத் தாள லயத்தோடு சேர்ந்து, நடராஜனான சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்.
ஈசனே! எப்போது சுகமுள்ள மெத்தையையும், கட்டாந்தரையையும் ஒன்றே என்று உணரப் போகிறேன்? எப்போது நவரத்தினத்தால் செய்யப்பட்ட அணியையும்  குப்பைகூளத்தையும் ஒன்றென எண்ணி உணரப் போகிறேன்? ஈசனே! எப்போது புல்லைப்போன்ற சாதாரணக் கண்களையும், தாமரையைப் போன்ற அழகிய கண்களையும் ஒன்றாக எண்ணப் போகிறேன்? எப்போது சாதாரண ஜனத்தையும், அரசனையும் ஒன்றாகவே எண்ணி  உணரப் போகிறேன்? ஈசனே என்று நான் சதாசிவனையே எதிலும் கண்டு இன்புறும் நாள் வருமோ? 
சதாசிவனே! எப்போது உன் குகையினை வந்தடைந்தடைய இருக்கிறேன்? சகல தீய எண்ணங்கள் எல்லாம் நீங்கி, இரு கரங்களையும் சிரசின் மேல் தூக்கி உன்னை வணங்கிப் போற்றும் நாள் எப்போது வருமோ?  திருநீற்றோடு சிவ நாமத்தை சொல்லியபடி, ஆனந்தம் பொங்க உன்னில் நான் கலந்திடும் காலம் என்றுதான் வருமோ?

எல்லா செல்வங்களைவிடவும் மேலான இந்தப் பாடல்களை அனுதினமும் உள்ளத்தூய்மையோடு பாடித் துதிப்பவர்களுக்கு ஈஸ்வரனே குருவாக வந்து அருளுவான். இந்தப் பாடலை தவிர ஈசனை அடைய சிறந்த வழி இல்லை. இந்தப் பாடல்களைத் தியானிப்பவர்களின் அறியாமையை நீக்கி ஈசன் நிச்சயம் அருள்புரிவார். தினமும் சிவனை எண்ணி வழிபடும் நேரத்தில், பத்து தலைகளைக்கொண்ட ராவணனின் இந்தப் பாடலைப் பாடி, துதி செய்பவர்களுக்கும் பிரதோஷ காலங்களில் இதைப் பாடி, சிவ சிந்தனையில் நிலைத்திருப்பவர்களுக்கும் ஈசன் சகல செல்வங் களையும் தந்து அருளுவார். இதைப் பாடும் அன்பர்களுக்கு  லட்சுமி தேவியும் இன்முகம் காட்டி அருள்புரிவார். மஹா தேவனும் மனமகிழ்ச்சியோடு வேண்டியதைக் கொடுப்பார். இது நிச்சயம்.


The stotra is in PanchachAmara Chanda, in which there are 16 varna-s per line, each line begins with a laghu and the laghu and guru varna-s alternate. So there are eight LG (laghu-guru) pairs, making up 16 syllables of each line.  The last shloka is in Vasanta-tilakA metre.

jaṭāṭavī-galaj jala-pravāha-pāvita-sthale
gale 'valambya lambitāṃ bhujaṅga-tuṅga-mālikām ।
ḍamaḍ ḍamaḍ ḍamaḍ ḍaman nināda-vaḍ ḍamarvayaṃ
cakāra caṇḍa-tāṇḍavaṃ tanotu naḥ śivaḥ śivam ॥ 1 ॥

With his neck, consecrated by the flow of water flowing from the thick forest-like locks of hair, and on the neck, where the lofty snake is hanging like a garland, and the Damaru drum making the sound of Damat Damat Damat Damat, Lord Śiva did the auspicious dance of Tandava and may He shower prosperity on us all.[1]

jaṭā-kaṭā-hasambhrama-bhraman nilimpa-nirjharī
vilola-vīci-vallarī-virāja-māna-mūrdhani ।
dhagad dhagad dhagaj jvalal lalāṭa-paṭṭa-pāvake
kiśora-candraśekhare ratiḥ pratikṣaṇaṃ mama ॥ 2 ॥

I have a very deep interest in Lord Śiva, whose head is glorified by the rows of moving waves of the celestial river Gaṅgā, agitating in the deep well of his hair-locks, and who has the brilliant fire flaming on the surface of his forehead, and who has the crescent moon as a jewel on his head.[2]

dharādharendra-nandinī-vilāsa-bandhu-bandhura-
sphurad diganta-santati-pramoda-māna-mānase ।
kṛpā-kaṭākṣa-dhoraṇī-niruddha-durdharāpadi
kvacid digambare (kvacic cidambare) mano vinodametu vastuni ॥ 3 ॥

May my mind seek happiness in the Lord Śiva, in whose mind all the living beings of the glorious universe exist, who is the sportive companion of Parvati (daughter of the mountain king), who controls invincible hardships with the flow of his compassionate look, who is all-pervasive (the directions are his clothes).[3]

jaṭā bhujaṅga piṅgalasphurat phaṇāmaṇiprabhā
kadamba kuṅkuma drava pralip tadig vadhū mukhe ।
madāndha sindhuras phurat tvagut tarīyame dure
mano vinodamadbhutaṃ bibhartu bhūta bhartari ॥ 4 ॥

May I seek wonderful pleasure in Lord Śiva, who is supporter of all life, who with his creeping snake with reddish brown hood and with the luster of his gem on it spreading out variegated colors on the beautiful faces of the maidens of directions, who is covered with a glittering upper garment made of the skin of a huge intoxicated elephant.[4]

sahasralocana prabhṛtya śeṣalekha śekhara
prasūna dhūli dhoraṇī vidhūsarāṅghri pīṭhabhūḥ ।
bhujaṅga rājamālayā nibaddha jāṭajūṭaka
śriyai cirāya jāyatāṃ cakora bandhuśekharaḥ ॥ 5 ॥

May Lord Śiva give us prosperity, who has the moon (relative of the Cakora bird) as his head-jewel, whose hair is tied by the red snake-garland, whose foot-stool is grayed by the flow of dust from the flowers from the rows of heads of all the Gods, Indra/Vishnu and others.[5]

lalāṭa ca tvara jvalad dhanañjaya sphuliṅgabhā
nipīta pañcasāyakaṃ naman nilimpa nāyakam ।
sudhā mayū khale khayā virājamāna śekharaṃ
mahā kapāli sampade śiro jaṭā lamastu naḥ ॥ 6 ॥

May we get the wealth of Siddhis from Śiva's locks of hair, which devoured the God of Love with the sparks of the fire flaming in His forehead, who is bowed by all the celestial leaders, who is beautiful with a crescent moon.[6]

karāla bhāla paṭṭikā dhagad dhagad dhagaj jvalad
dhanañjayā hutīkṛta pracaṇḍa pañca sāyake ।
dharā dharendra nandinī kucāgra citra patraka
prakalpanaika śilpini trilocane ratirmama ॥ 7 ॥

My interest is in Lord Śiva, who has 'three eyes, who has offered the powerful God of Love into the fire, flaming Dhagad Dhagad on the flat surface of his forehead, and who is the one expert artist of creation accompanied by Parvati, the daughter of the mountain king.[7]

navīna megha maṇḍalī niruddha durdhara sphurat
kuhū niśīthinī tamaḥ prabandha baddha kandharaḥ ।
nilimpa nirjharī dharastanotu kṛtti sindhuraḥ
kalā nidhāna bandhuraḥ śriyaṃ jagad dhuraṃdharaḥ ॥ 8 ॥

May Lord Śiva give us prosperity, who bears the burden of this universe, who is lovely with the moon, who is red wearing the skin, who has the celestial river Ganga, whose neck is dark as midnight of new moon night covered by many layers of clouds.[8]

praphulla nīla paṅkaja prapañca kālima prabhā-
-valambi kaṇṭha kandalī ruchi prabaddha kandharam ।
smaracchidaṃ puracchidaṃ bhavacchidaṃ makhacchidaṃ
gaja kchidāṃ dha kchidaṃ taman ta kchidaṃ bhaje ॥ 9 ॥

I pray to Lord Śiva, whose neck is tied with the luster of the temples hanging on the neck with the glory of the fully bloomed blue lotuses which looked like the blackness (sins) of the universe, who is the killer of Manmatha, who destroyed Tripuras, who destroyed the bonds of worldly life, who destroyed the sacrifice, who destroyed the demon Andhaka, the destroyer of the elephants, and who controlled the God of death, Yama.[9]

akharva sarva maṅgalā kalā kadaṃba mañjarī
rasa pravāha mādhurī vijṛṇbhaṇā madhu vratam ।
smarāntakaṃ purāntakaṃ bhavāntakaṃ makhāntakaṃ
gajāntak āndhakāntakaṃ taman ta kāntakaṃ bhaje ॥ 10 ॥

I pray to Lord Śiva, who has bees flying all over because of the sweet honey from the beautiful bunch of auspicious Kadamba flowers, who is the killer of Manmatha, who destroyed Tripuras, who destroyed the bonds of worldly life, who destroyed the sacrifice, who destroyed the demon Andhaka, the killer of the elephants, and who controlled the God of death, Yama.[10]

jayatvada bhravi bhrama bhramad bhujaṅga maśvasa
dvi nirgamat kramasphurat karāla bhāla havyavāṭ ।
dhimid dhimid dhimi dhvanan mṛdaṅga tuṅga maṅgala
dhvani krama pravartita pracaṇḍa tāṇḍavaḥ śivaḥ ॥ 11 ॥

Lord Śiva, whose dance of Tāṇḍava is in tune with the series of loud sounds of drum making Dhimid Dhimid sounds, who has the fire on the great forehead, the fire that is spreading out because of the breath of the snake wandering in whirling motion in the glorious sky.[11]

dṛṣa dvi citra talpayor bhujaṅga mauktikasrajor-
gariṣṭha ratna loṣṭhayoḥ suhṛd vipakṣa pakṣayoḥ ।
tṛṇā ravinda cakṣuṣoḥ prajā mahī mahendrayoḥ
sama pravṛ tikaḥ kadā sadāśivaṃ bhajamyaham ॥ 12 ॥

When will I worship Lord SadāŚiva (eternally auspicious) God, with equal vision towards the people and an emperor, and a blade of grass and lotus-like eye, towards both friends and enemies, towards the valuable gem and some lump of dirt, towards a snake and a garland and towards varied ways of the world.[12]

kadā nilimpa nirjharī nikuñja koṭare vasan
vimukta durmatiḥ sadā śiraḥstha mañjaliṃ vahan ।
vimukta lola locano lalā mabhāla lagna kaḥ
śiveti mantra muccaran kadā sukhī bhavā myaham ॥ 13 ॥

When will I be happy, living in the hollow place near the celestial river, Ganga, carrying the folded hands on my head all the time, with my bad thinking washed away, and uttering the mantra of Lord Śiva and devoted in the God with glorious forehead with vibrating eyes.[13]

nilimpa nāthanāgarī kadamba maulamallikā-
nigumphanirbhakṣaranma dhūṣṇikāmanoharaḥ ।
tanotu no manomudaṃ vinodinīṃ mahaniśaṃ
pariśraya paraṃ padaṃ tadaṅgajatviṣāṃ cayaḥ ॥ 14 ॥

Divine beauty of different parts of Lord Śiva which are enlightened by fragrance of the flowers decorating the twisted hair locks of angels may always bless us with happiness and pleasure.[14]

pracaṇḍa vāḍavānala prabhāśubhapracāraṇī
mahāṣṭasiddhikāminī janāvahūta jalpanā ।
vimukta vāma locano vivāhakālikadhvaniḥ
śiveti mantrabhūṣago jagajjayāya jāyatām ॥ 15 ॥

The Shakti (energy) which is capable of burning all the sins and spreading welfare of all and the pleasant sound produced by angels during enchanting the pious Shiv mantra at the time of Shiv-Parvati Vivah may win over & destroy all the sufferings of the world.[15]

imaṃ hi nityamevamuktamuttamottamaṃ stavaṃ
paṭhansmaranbruvannaro viśuddhimetisaṃtatam |
hare gurau subhaktimāśu yāti nānyathā gatiṃ
vimohanaṃ hi dehināṃ suśaṅkarasya ciṃtanam ॥ 16 ॥

Whoever reads, remembers and says this best stotra as it is said here, gets purified for ever, and obtains devotion in the great Guru Śiva. For this devotion, there is no other way. Just the mere thought of Lord Śiva indeed removes the delusion.[16]

pūjāvasāna samaye daśavaktragītaṃ
yaḥ śaṁbhupūjanaparaṃ paṭhati pradoṣe ।
tasya sthirāṃ rathagajendra turaṅgayuktāṃ
lakṣmīṃ sadaiva sumukhiṃ pradadāti śaṁbhuḥ ॥ 17 ॥

In the evening, after sunset, at the end of Puja, whoever utters this stotra for 10 times sung by the one with the ten heads (Rāvaṇa), which is dedicated to the worship of Śiva, Lord Śiva will indeed bless him with great Lakṣmī (prosperity) with all the richness of chariots, elephants and horses.[17]

iti śrī rāvaṇa-kṛtam śivatāṇḍava stotraṃ sampūrnam,
Thus ends the Śiva-Tāṇḍava Stotra written by Śrī Rāvaṇa.

..........
இதில் காணப்படுபவை யாவும் அடியேனால் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டி அறிந்த ஆன்மீக விஷயங்கள்.  படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இவையாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை.  வலைப்பதிவர்களுக்கு மிக்க நன்றி.
..........

No comments:

Post a Comment