Friday, October 13, 2017

கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்





கர்மவினைகளை அடியோடு நீக்கிட, நாம் செய்ய வேண்டியது அண்ணாமலை கிரிவலம் தான்.
சுமார் 12 தடவை கிரிவலம் சென்றுவந்தால், அதன் விளைவாக நமது அனைத்து கர்மவினைகளும் அடியோடு நீங்கி, நமது தினசரி வாழ்க்கை மிகவும் எளிதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்துவிடும் என்பது அனுபவ நிச்சயம்.

உங்களின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளன்று, நீங்கள் அண்ணாமலைக்கு வந்து விடவேண்டும். வரும்போது மஞ்சள் நிற ஆடை, இரு ருத்ராட்சங்கள், குறைந்தது ஐந்து கிலோ டயமண்டு கல்கண்டு இவைகளைக் கொண்டு வர வேண்டும்.

உங்களின் ஜன்ம நட்சத்திரம் உதயமாகும் நேரத்தில் நீங்கள் சாப்பிடாமல்,(உபவாசம் இருத்தல்) மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு உடலெங்கும் விபூதி பூசிக்கொண்டு, இரட்டைப்பிள்ளையார் கோவிலில் ஒரு தேங்காயை விடலை விட வேண்டும். அங்கே இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் புறப்பட வேண்டும். அங்கிருந்து கிழக்குக் கோபுர வாசலுக்கு வந்து, கோபுரவாசலில் இருந்தவாறு அண்ணாமலையாரை வழிபட்டு விட்டு, தேரடி முனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று அவரிடம் வழித்துணைக்கு வரும்படி மனதார வேண்டிக்கொண்டு, கிரிவலம் புறப்பட வேண்டும்.
கிரிவலப்பாதை முழுவதும் யாரிடமும் பேசக் கூடாது; பேசாமல் மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே கிரிவலம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது அக்னி லிங்கத்தைக் கடந்ததும், கொண்டு வந்திருக்கும் டையமண்டு கல்கண்டை கிரிவலப்பாதையில் பாதையின் ஓரத்தில் அடர்த்தியாக இருக்கும் காட்டுப்பகுதியினுள் தூவ வேண்டும்.

கிரிவலத்தை பூதநாராயணர்கோவிலில் நிறைவு செய்ய வேண்டும். நிறைவு செய்தபின்னர், கோவிலுக்குள் சென்று அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். அதன்பிறகு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

உங்களால் கிரிவலப்பாதை முழுவதும் சாப்பிடாமல் பயணிக்கமுடியவில்லை எனில், கிரிவலப்பாதையில் இளநீர் அல்லது பால் அருந்தலாம்.

கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே இருப்பதால், உடல் சூடாகிக்கொண்டே வரும்.இளநீர் அருந்துவதால் அதுவரை நாம் ஜபித்துவந்த ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் நமது உடலுக்குள் முழுமையாக பதிவாகிவிடும். இதை நமக்கு ஆராய்ந்து சொன்னவர் ருத்ராட்ச தெரபிஸ்ட் சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

இரண்டாம் மாதத்தில் இதே போல உண்ணாவிரதமிருந்து 27 உணவுப் பொட்டலங்களைச் சுமந்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும். ஓவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் தலா 3 துறவிகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அவ்வாறு 27 உணவுப்பொட்டலங்களைச் சுமக்க  இயலாதவர்கள் உடன் வருபவருடன் 27 உணவுப்பொட்டலங்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு, முன்பே ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் காத்திருக்கச் செய்து நீங்களே அன்னதானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு 12 மாதங்கள் செய்துவந்தால், 6 வது அல்லது 8 வது கிரிவல விரதம் பலனளிக்கத் துவங்கும். நமது பிரச்னைகள் எப்பேர்பட்டதாக இருந்தாலும் அந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும். நமது ஏக்கங்கள் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும். நமது வாழ்க்கைப் பயணமே அடியோடு மாறிவிடும்.

ஓம்சிவசிவஓம்

... Courtesy:. *சித்தர்களின் குரல் Shiva Shangar*

No comments:

Post a Comment