Monday, October 9, 2017

ஸ்ரீ துர்க்கா ஸப்தஸ்லோகீ


தேவி மஹாமியத்தில் மார்க்கண்டேய புராணத்தில் ( देवीमाहात्म्य मार्कण्डेय पुराण ) உள்ள தொள்ளாயிரம் மந்திரங்களில் சிறந்த மந்திரங்களாக சித்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஏழு மந்திரங்களாகும்.

இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. கேட்டவருக்கு கேட்ட வரம் தரவல்லவை. இதனாலேயே இந்த மந்திரங்களை " ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா' அழைக்கப்படுகின்றது. இம்மந்திரம் புரட்டாதி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது சிறந்தது. ஏனைய காலங்களில் செவ்வாய்,  வெள்ளிக்கிழமைகளில் இராகு காலங்களில் பாராயணம் செய்தால் அதன் பலனை அடைய முடியும்.

இறைவனிடம் சரணாகதியடைந்தால் எல்லாமே சரியாக நடைபெறும். எதையும் கேட்கவேண்டியது இல்லை. எல்லாம் நாம் செய்யும் செயலின் பலன் தான். ஆனால் வழிபாடு என்பது நம்மை சரியான வழியில் வழிப்படுத்த துணை செய்யும். இதனை சான்றோர் 'தலையால் போவதை தலைபாகையுடன் போவதாக' பழமொழி கூறியுள்ளனர்.

ஆசமனம் :
ஒம் அச்யுதாய நம:
ஒம் அனந்தாய நம:
ஒம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம்:
கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப,  தாமோதர             

விக்னேச்வர த்யானம்
சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசா’ந்தயே !!

ப்ராணாயாமம்;.
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாபோ:ஜ்யோதீரஸா:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் 

ஸங்கல்பம்: 
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் .....

தியானம்:
ஓம் மஹாலக்ஷ்மி ஓம் மஹாகாளி ஓம் மஹாசரஸ்வதி தேவதா
மாதர்மே மதுகைடபக்க்னி மஹிஷ ப்ராணா பஹாரோத்யமே
ஹேலா நிர்மித தூம்ரலோசனவதே ஹே சண்ட முண்டாத்தினி
நி: சேஷீக்ருத ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்ப்பாபஹே
சும்ப்பத்த்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்க்கே நமஸ்தே(அ)ம்பிகே
(தாயே! மதுகைடபர்களை வதம் செய்பவளே முஹிஷாஸீரனுடைய பிராணனைப் போகியவளே! வினையாட்டாக தூம்ரலோசனனை வதைத்தவளே! சண்டமுண்டர்களையழித்தவளே! ரக்தபீஜாசுரனை நிர்மூலமாக்கியவளே! சும்பனையும் நிசும்பனையும் ஒழித்தவளே! நித்தியமானவளே! துர்க்காம்பிகையே! உன்னை நமஸ்கரிக்கின்றேன். விரைவில் எனது பாவத்தைப் போக்கியருள்வாய்)

॥ ஶ்ரீது³ர்கா³ஸப்தஶ்லோகீ ॥

ௐ அஸ்ய ஶ்ரீது³ர்கா³ ஸப்தஶ்லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய நாராயண ருʼஷி: । அனுஷ்டுபா⁴தீ³னி ச²ந்தா³ம்ஸி ।
ஶ்ரீமஹாகாலீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தே³வதா: ।
ஶ்ரீதூ³ர்கா³ப்ரீத்யர்த²ம் ஸப்தஶ்லோகீ து³ர்கா³பாடே² வினியோக:³ ॥

ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा ।
बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति ॥ १॥
ஜ்ஞானிநாமபி சேதாம்ஸி தே³வீ ப⁴க³வதீ ஹி ஸா।
ப³லாதா³க்ருʼஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்ச²தி ॥ 1॥
(மஹாமாயா தேவியான பகவதி வலுவில் கவர்ந்து மோஹத்தில் செலுத்துகிறாள். அவளேதான் அசைவதும் அசையாததும்மான இவ்வுலகெல்லாம் சிஷ்டிக்கப்படுகின்றது.)

दुर्गे स्मृता हरसि भीतिमशेषजन्तोः स्वस्थैः स्मृता मतिमतीव शुभां ददासि ।
दारिद्र्यदुःखभयहारिणि का त्वदन्या सर्वोपकारकरणाय सदाऽऽर्द्रचित्ता ॥ २॥
து³ர்கே³ ஸ்ம்ருʼதா ஹரஸி பீ⁴திமஶேஷஜந்தோ: ஸ்வஸ்தை:² ஸ்ம்ருʼதா மதிமதீவ ஶுபா⁴ம் த³தா³ஸி ।
தா³ரித்³ர்யது:³க²ப⁴யஹாரிணி கா த்வத³ன்யா ஸர்வோபகாரகரணாய ஸதா³ঽঽர்த்³ரசித்தா ॥ 2॥
(கடத்தற்கரிய கஷ்டத்தில் நினைக்கப்பட்டால் நீ எல்லா ஜீவர்கயுளுடைய பயத்தையும் போக்குகின்றாய். இன்பத்தில் நினைக்கப்பட்டால் நலன் மிக்க மதியை அளிக்கின்றாய் ஏழ்மையும்;இதுன்பத்தையும் பயத்தையும் போக்குபவளே! ஏல்லோருக்கும் உபகாரம் செய்ய எப்போதும் உருகும் நெஞ்சுடையவள் உன்னைத் தவிர யார்உளர்?)

सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके ।
शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तु ते ॥ ३॥
ஸர்வமங்க³லமாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே ।
ஶரண்யே த்ர்யம்ப³கே கௌ³ரி நாராயணி நமோঽஸ்து தே ॥ 3॥
(எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய்! விளங்குபவளே! ஏல்லா நன்மைகளையும் அளிப்பவளே! ஏல்லா ஆசைகளையும் பூத்தி செய்பவளே! சரணடைதற்குரியவளே முன்று கண்களை யுடையவளே! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்)

शरणागतदीनार्तपरित्राणपरायणे ।
सर्वस्यार्तिहरे देवि नारायणि नमोऽस्तु ते ॥ ४॥
ஶரணாக³ததீ³னார்தபரித்ராணபராயணே । ஸர்வஸ்யார்திஹரே தே³வி நாராயணி நமோঽஸ்து தே ॥ 4॥
(தன்னை சரணடைந்த தீனர்களையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாய்க் கொண்டவளே! ஏல்லோருடைய துன்பங்களையும் துடைப்பவளே! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்)

सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते ।
भयेभ्यस्त्राहि नो देवि दुर्गे देवि नमोऽस्तु ते ॥ ५॥
ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே ।
ப⁴யேப்⁴யஸ்த்ராஹி நோ தே³வி து³ர்கே³ தே³வி நமோঽஸ்து தே ॥ 5॥
(அனைத்தின் வடிவமாகவும் அனைத்தையும் ஆள்பவளாகவும் சக்தியனைத்தும் விளங்கும் தேவியே பயங்பரமானவற்றினின்று எங்களைக் காப்பாய் துக்காதேவியே! உனக்கு நமஸ்காரம்)

रोगानशेषानपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टान् । त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिता ह्याश्रयतां प्रयान्ति ॥ ६॥
ரோகா³னஶேஷானபஹம்ஸி துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலானபீ⁴ஷ்டான் ।
த்வாமாஶ்ரிதாநாம் ந விபன்னராணாம் த்வாமாஶ்ரிதா ஹ்யாஶ்ரயதாம் ப்ரயாந்தி ॥ 6॥
(நீ ஸந்தோஷ மடைந்தால் எல்லா நோய்களும் அறவே போக்குகின்றாய். கோபத்தாலோ வேண்டப்படும் காமங்களை எல்லாம் அறவே அழிக்கின்றாய் உன்னை அண்டிய மனிதருக்கு விபத்து கிடையாது. உன்னை அண்டியவர் பிறர் அண்டுதற்குரியவராகின்றனரன்றோ? )

सर्वाबाधाप्रशमनं त्रैलोक्यस्याखिलेश्वरि ।
एवमेव त्वया कार्यमस्मद्वैरि विनाशनम् ॥ ७॥
ஸர்வாபா³தா⁴ப்ரஶமனம் த்ரைலோக்யஸ்யாகி²லேஶ்வரி ।
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்³வைரி வினாஶனம் ॥ 7॥
(அகில நாயகியே இவ்வாறே முவுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப்பட வேண்டும். உன்னால் எங்கள் சத்துருக்கள் அழிக்கப்படவேண்டும்)

॥ इति दुर्गासप्तश्लोकी सम्पूर्णा ॥
॥ இதி து³ர்கா³ஸப்தஶ்லோகீ ஸம்பூர்ணா ॥

..........

'ஓம் ஐம் ஹ்ரீம் க்லிம் சாமுண்டாயை விச்சே'
ஜம் - சித்தஸ்வரூபிணியான மஹாஸரஸ்வதி
ஹ்ரீம் - சிதமாத்மஸ்வரூபிணியான மஹாலஷ்மி
க்லிம் - ஆநந்தரூபிணியான மஹாகாளி
ஆகிய எல்லாத்தீமைகளையும் சமனம் செய்யும் நிர்விகல்பரூபிணியான உன்னை இதய கமலத்தில் தியானிக்கின்றேன்.
.....
அடியேனால் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment