ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (10)
2-9-2024 . திங்கள்
சக்கரபாணி திருக்கோயில் …
2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பிரசித்தி பெற்ற
ஆலயங்களில் ஒன்று.
சக்கரவடிவமான தாமரைப்பூவில் அறுகோண எந்திரத்தில்
மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத்
திருக்கரங்களிலும் ஏந்தி எழுந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ
சக்கரபாணிபெருமாள் தரிசனம். சக்கரத்தினைக் கரத்தில்
கொண்டு விளங்குவதால் சக்கரபாணி.
தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும்
அழைக்கப்படுகிறார்.
மூன்று கண்களுடன் இருப்பதால் சிவபெருமானை போல
இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ
இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது.
வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம். சூரியன்
இத்திருத்தலத்தில் ஸ்ரீசக்கரபாணி பெருமாள் வழிபட்டு
தன் சக்தியை மீண்டும் பெற்றதால் பாஸ்கர சேத்திரம்.
கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம்
சரணடைந்து, பலன் பெற்றதால் நவகோள்களால் ஏற்படும்
இன்னல்கள் தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை
வழிபடவிலகும்.
ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால்
ஏவிய சக்ராயுதம் அவனையும் மற்ற அசுரர்களையும் வதம்
செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும்
புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து
கொண்டிருந்த பிரம்மதேவரின் கைகளில் வந்துவிழுந்தது
சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில்
ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த
சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி, சூரியனின்
ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால்
பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை
கூட்டியபோது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள்
உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம்
நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று
கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய
ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த
தனது ஒளியைமீண்டும் பெற்றார் சூரிய பகவான்.
வலைத்தளம்/வலைப்பூ முகநூல் பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான்அறிந்தவைகளோடுஅங்கொன்றும்,
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி
ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு மிக்க நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்