Tuesday, November 7, 2017

Sita Gufa .. சீதா குகை .. सीता गुफा


Sita Gufa on Ramayana.
Lord Ram, Sita, Lakshman were living in Dandakaranya forestf. During that period, in Tapovan near Panchvati, when Lakshman severed the nose of Surpanaka, sister of Ravana, when she tried to kill Ma Sita, a battalion of Asuras came to fight with Lord Ram and Lakshman. To hide Sita Devi, Lakshman made this small cave in one night and planted five banyan trees for easy identification and numbered it. The Number One is for the cave entry.  Huge bodied Asuras cannot enter into this Gufa.

இராமாயணத்தில் 'சீதா குகை' ...
தண்டகாரண்ய வனத்தில் இராமபிரான், சீதாபிராட்டி, லக்ஷ்மணன் வசித்துக்கொண்டு இருந்தகாலங்களில், பஞ்சவடிக்கு அருகில் இருக்கும் தபோவன் என்கிற இடத்தில் சீதாபிராட்டியை கொல்லவந்த இராவணன் தங்கை சூர்பனகையின் மூக்கை இளவல் இலக்குமணன் வெட்டியதால் அசுரப்படைகள் போரிடவந்தன. சீதாபிராட்டி ஒளிந்துகொள்ள, லக்ஷ்மணன் இரவோடுஇரவாக அருகிலிருக்கும் மலைக்குன்றை குடைந்து ஒரு மிகச்சிறிய குகையை உருவாக்கி அதைச்சுற்றி ஐந்து ஆலமரங்களை நட்டு, எளிதில் கண்டுபிடிக்க எண்களையும் செதுக்கிவிட்டார். குகை வாசலுக்கு எதிரில் இருக்கும் ஆலமரம் முதலாம் எண். பெருத்த சரீரங்களடும் உள்ள ஆஜானுபாகுவான அசுரரகள் அந்த குகையில் நுழையமுடியாது.


This is our Third Temple Visit in Nasik. Been to Sita Gufa and a few very important places that hold mentions in the Epic Ramayana. It is located just a 45-minutes drive from Hari Viswa, our residence. Thambi at wheels, left home at 11 in the morning after having meals. Reached around 12 noon.

சீதா குகையும் இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில முக்கிய இடங்களும்தான், நாசிக்நகரில் எங்களுடைய மூன்றவாது ஆலய தரிசனம். தம்பியின் இல்லமான 'ஹரிவிஷ்வா'வில் இருந்து 45 நிமிஷ பயணம்தான் என்பதால், நன்றாக சாப்பிட்டுவிட்டு தம்பி கார் ஓட்ட காலை 11 மணிக்கு கிளம்பி மதியம் 12 மணி அளவில் அங்கு சென்றடைந்தோம்.

Sita Gufa, a cave in a small hillock in the Panchvati area.
As depicted in the Ramayana, Panchavati used to be a part of the Dandakaranya forest. During 14 years Vanvas, it is strongly believed, Lord Ram with His Consort Sita Devi and His brother Lakshmanan lived few years in Panchvati, a place known in the Ramayana for ‘Sita’s haran’ and many events leading up to it.
பஞ்சவடி பகுதியில் இருக்கும் ஒரு சிறிய குன்றின் உள்ளேயுள்ள மிகச்சிறிய இருப்பிடம்தான் 'சீதா குகை'.
14 வருஷ வனவாசத்தின்போது ஸ்ரீ இராமரும் சீதாதேவியும் லக்ஷ்மணனும் இந்த பஞ்சவடியில் சிலகாலங்கள் வசித்தார்கள் என்று நம்பப்படுகிறது. இராமாயண காவியத்தின்படி தண்டகாரண்ய காட்டின் ஒரு பகுதிதான் பஞ்சவடி. சீதாதேவியின் கஷ்டகாலம் இந்த பஞ்சவடியில்தான் ஏற்பட்டு, அது பலமுக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாயிற்று என்று இராமாயணம் குறிப்பிடுகிறது.

Panchvati literally means Five Banyan Trees, Panch Vati. These five trees which are believed to be exist even today. They are situated around Sita Gufa and engraved with the numerals. The Number One is just in front of Sita Gufa.

ஐந்து ஆலமரங்கள் என்பதுதான் பஞ்சவடியின் தாத்பர்யம். இளவல் இலக்குமானனால் நடப்பட்ட இந்த மரங்கள் இன்றளவும் தழைத்து வேரூன்றி நிற்கின்றன. அவைகள் எண்களால் செதுக்கப்பட்டு சீதகுகையை சுற்றி நிற்கின்றன. குகை வாசலின் அருகிலிருக்கும் மரம்தான் எண் ஒன்று.

The Cave is very small and it has a low entrance and its height should be around 3 feet only. Rough stone cuts, so called steps, are there. Either by stooping or by sitting on every step only, we can go down. It becomes narrow as we go inside. ( People with breathing problems and big shape people may skip )
இந்த சிறியகுகையின் தாழ்வான வாசல் 3 அடி உயரம்தான் இருக்கும். கரடுமுரடான பாறையை வெட்டி படிகள் மாதிரி செய்துருக்கிறார் லக்ஷ்மணர். குனிந்து போகவேண்டும் அல்லது படிப்படியாக உட்கார்ந்து போகவேண்டும். போகப்போக வழி குறுகலாகிறது. மூச்சுத்திணறல் உள்ளவர்களும் பெரியஉடம்பு உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

Hardly it takes 2 minutes to touch a small space. Here we can stand. Stone age idols of Ram, Sita and Lakshman are there in a pedestal. There is a sense of tranquility that prevails inside the cave. The atmosphere is cool and one cannot draw their eyes away from the serene idols. There is also a wooden Paduka here, claimed to be Rama Paduka from His time at Panchavati.

சுமார் இரண்டு நிமிஷங்கள் குனிந்து சென்றால் சற்று விசாலமான ஒரு பகுதி உள்ளது. இங்கே நாம் நிற்கலாம். கண்களை வசீகரிக்கும் அழகான சாந்தமான மிகப்பழமைவாய்ந்த கல்லாலான ராம லக்ஷ்மண சீதை சிலைகள் உயர்வானப்பகுதியில் இருக்கிறது. மகரிஷிகள் யாரவது இதை வைத்திருக்கலாம். பஞ்சவடியில் இருந்த காலத்தில் இராமபிரான் உபயோகித்த மரத்திலான பாதுகைகள் இருக்கிறது. குளிர்ந்த அமைதியான ஆழ்மனதை ஊடுருவும் சூழல் நிலவுகிறது. 

Then again we have to stoop and move forward to another small space. Here we can't stand but can sit. There is a ShivLinga. It is believed that Devi Sita Herself installed this Lingam and did Pooja everyday when She spent Her days in this Cave. I sat in front of the magnificient ShivLinga and meditated for few seconds only. I touched the very bottom portion of Lingam and felt a super lightening passed thru me. The vibration is excellent and powerful. What I experienced cannot be described in words.  I have to come here again on a very less crowd day to sit and meditate at least for 10 minutes.
திரும்பவும் குனிந்து முன்னேசென்று இடதுபுறம் திரும்பினால் ஒரு சிறியத்தளம் வருகிறது. இங்கு நிற்கமுடியாது. உட்காரவேண்டும் அல்லது குனியவேண்டும். இங்கு ஒரு சிவலிங்கம் உள்ளது. குகையில் இருந்தகாலத்தில் சீதாபிராட்டியார் இந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தினமும் பூஜித்தார் என்று மிகவும் நம்பப்படுகிறது. அந்த சிறப்புவாய்ந்த சிவலிங்கத்தின் முன் ஒருசில நொடிகள் உட்கார்ந்து, பஞ்சாக்ஷரம் சொல்லி அந்த லிங்கத்தின் அடிப்பாகத்தை தொட்டபோது சக்திவாய்ந்த மின்னல் உள்ளத்தையும் உடலையும் ஊடுருவியதுபோல் உணர்ந்தேன். ஆற்றல்மிக்க மேம்பட்ட அதிர்வுஅலைகள். நான் அங்கு அனுபவித்ததை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அந்த அற்புதமான சக்திமிக்க சிவலிங்கத்தின் முன் ஒரு பத்து நிமிஷங்களாவது உட்கார்ந்து த்யானம் பண்ண, கூட்டமில்லாத ஒரு நாளில் இங்கே வரவேண்டும். என் அப்பன்தான் அதற்கு வழிவகுக்க வேண்டும்.

Across the road from the Sita Gufa is the path through which Maricha is said to have led Rama forty miles into the forest. This place has been converted into a mini museum with idols depicting different scenes from Ramayana pertaining to the Aranya Kandam.

சீதாகுகைக்கு எதிரிலுள்ள பாதை மூலமாகத்தான் மாரிஷன் மான் வடிவத்தில் 40 மைல் காட்டுக்குள் கூட்டிச்சென்றான் என்று அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். அங்கே இப்பொழது ஒரு சின்ன மியூசியம் இருக்கிறது. அங்கு இராமாயணத்தில் ஆரண்யகாண்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை சிலைகள் வடிவத்தில் காட்டப்படுள்ளது.

A few feet away from the Sita Gufa is a chariot that is claimed to be the Jatayu Vimana in which Jatayu had tried to intercept Ravana while he was carrying away Sita. This vimana is used during the Rama Navami celebrations to depict the Apaharan of Sita.

சீதாகுகைக்கு சில அடி தூரத்தில் ரதம் ஒன்று இருக்கிறது. 'ஜடாயு விமானம்' என்று சொல்லப்படுகிறது. இராவணன் சீதையை தூக்கிக்கொண்டு செல்லும்போது, பக்ஷிராஜா ஜடாயு இந்த விமானத்தின் மூலம்தான் போய் தடுத்து நிறுத்தி போரிட்டார் என்று நம்பப்படுகிறது. ராமநவமி கொண்டாடும் சமயத்தில் சீதைக்கு நிகழ்ந்த துன்பங்களை விவரிக்கும் பொழுது இந்த விமானத்தை இன்றும் உபயோகிக்கிறார்கள்.

Also there is Ram Laxman Gufa near KalaRam Mandir. But there seems to be no visitors and hence we didn't attempt it.

காலாராம் மந்திர்க்கு அருகில் ராமலக்ஷ்மண குகை இருக்கிறது. அதற்குள் யாருமே செல்லாததால் நாங்களும் போகவில்லை.

The Names of few important Places that holds special mentions in Ramayana is listed out in a blackboard which is kept in an AutoRickshaw Stand, just opposite to Sita Gufa.

இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில முக்கிய இடங்களின் பட்டியல் ஒன்று சீதாகுகைக்கு எதிரிலுள்ள ஆட்டோரிக்ஷா ஸ்டாண்டில் தொங்கவிடப்பட்டுள்ளது.

The List .. பட்டியல்
1. Sitha Haran .. சீதாஹரன்
2. Lakshmana Rekha .. லக்ஷ்மன்ரேகா
3. Lambe Hanuman .. லம்பேஹனுமான்
4. LakshmiNarayan Mandhir .. லக்ஷ்மிநாராயன் மந்திர்
5. Lakshman Sheshnag Avatar .. லக்ஷ்மன் ஷேஷ்நாக் அவதார்
6. Surpanaka Nak Kati .. சூர்ப்பனகை நாக் கடி
7. Lakshman Tapsya Mandhir .. லக்ஷ்மன் தபஸ்ய மந்திர்
8. Kapila Godavari Sangham .. கபில கோதாவரி சங்கமம்
9. Brahma Vishnu Mahesh Dhinkunt .. பிரம்மா விஷ்ணு மகேஷ் தின்குண்ட்
10. SitaMatha Agnikunt .. சீதாமாதா அக்னிகுண்ட்
11. Sriram Parankuti .. ஸ்ரீராம் பரண்குடி
Detailed out hereunder are the places in the said List.
Hired an auto to see the places. Per head 40 rupees. Thambi is always very keen to shower kindness. He sat along with the Driver in front and me Usha Renu in backseat.

பட்டியலிலுள்ள இடங்களை கீழே விவரித்துள்ளேன். தலைக்கு 40 ரூபாய் வீதம் ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டோம். இளகியமனதுடைய தம்பி யாருக்குமே கஷ்டங்களை கொடுக்கமாட்டார். அவர் ஓட்டுனருடன் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். நான் உஷா ரேணு பின்சீட்டில் உட்கார்ந்துகொண்டோம்.

Lakshman Rekha .. லக்ஷ்மன்ரேகா

When SriRam gone after the Golden Deer ( Maricha in disguise ) and didn't return for a long time, Ma Sita got worried and coerced Lakshman to leave and to find his brother. Lakshman was reluctantly decided to leave on seeing Seetha crying in grief. But subject to a condition that Sita should not cross the Protective Line that was drawn by him. Other than Ram Sita Lakshman, if anyone crosses the Line they will be engulfed by the flames that will be erupting from the Line.
Once Lakshman left in search of his brother SriRam, Ravana appeared as a religious mendicant and asked 'biksha'. Ravana requested Sita to cross the Line as 'biksha' cannot be accepted across a barrier, Ma Sita adhering the अतिथि देवो भवः tradition crossed the Line unsuspectingly. Once she crossed the Lakshman Rekha, Ravana abducted her.

இராமரை மாரிஷன் தங்கமான் ரூபத்தில் வந்து வனத்திற்குள் தொலைதூரம் கூட்டிக்கொண்டு போய்விட்டதால், இராமர் திரும்பிவராதைக்கண்டு சீதாப்பிராட்டியார் கவலைகொண்டு லக்ஷ்மணனை காட்டுக்குள்போய் இராமரை தேடச்சொல்கிறாள். லட்சுமணனுக்கு போக இஷ்டமில்லை. இருந்தாலும் சீதாப்பிராட்டியார் கவலையை அகற்ற போக தீர்மானிக்கிறார். சீதாதேவி இருக்கும் குடிலை சுற்றி ஒரு பாதுகாப்பு வலையம் போட்டு, இதை தாண்டாதீர்கள் என்று வேண்டுகோள்விடுத்துவிட்டு செல்கிறார். இராமர் சீதை லக்ஷ்மணன் இவர்கள் மூவரைத்தவிர யார் இந்த பாதுகாப்பு கோட்டை தாண்டினாலும், அக்கினிஜுவாலை அவர்களை சூழ்ந்து அழித்துவிடும்.
லக்ஷ்மணன் சென்றவுடன், இராவணன் பிக்ஷை எடுக்கும் சந்நியாசி போல் வேடம்தரித்து சீதாப்பிராட்டியாரிடம் யாசகம் கேட்கிறான். யாசகம் கொடுப்பவர் வாங்குபவர் இடையே எந்த தடைஅரணும் இருக்கக்கூடாது என்று சொல்லி, சீதாதேவியை கோட்டைத்தாண்டி வந்து பிக்ஷை போடும்படி சொல்கிறான். எந்தவித சந்தேகங்களும் இல்லாமல், பிக்ஷை போடுவதற்கு சீதாப்பிராட்டியார் கோட்டை தாண்டுகிறாள். உடனே தேவியை இராவணன் அபகரித்து செல்கிறான். ( இது இராமாயண சரிதம் )

When we had been to that place, I was amazed that the Lakshman Rekha is not a Line at all. It was a small ravine around a tiny hut. In the hut, a small Ma Sita idol is kept. After that ravine, the Lakshman Rekha, Ravana statue made up of sand is standing.

நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, எங்களுக்கு ஒரே ஆச்சர்யம். லக்ஷ்மன்ரேகா ஒரு கோடு அல்ல. அது ஒரு குறுங்கணவாய். சிறிய குடிலை சுற்றி இருக்கிறது. அந்தக்குடிலில் சீதாதேவியின் சிறிய சிலை இருக்கிறது. குறுங்கனவாயைத்தாண்டி இராவணனின் மண்ணாலான சுதை உள்ளது.

Lambe Hanuman .. லம்பேஹனுமான்

Opposite to Lakshman Rekha, Just across the road, situated is a Hanuman Mandir by name Lambe Hanuman. No significance in regard to Panchvati part in Ramayana. Well maintained Temple.
லக்ஷ்மன்ரேகா எதிரிலுள்ள சாலையை கடந்தால் ஒரு சிறிய நன்கு பராமரிக்கப்படும் ஹனுமான் மந்திர் உள்ளது. இதை 'லம்பேஹனுமான்' என்று அழைக்கிறார்கள். இதற்கும் இராமாயணத்திற்கும் எந்தசம்பந்தமும் கிடையாது.

LakshmiNarayan Mandhir .. லக்ஷ்மிநாராயன் மந்திர்

A few yards away from Lambe Hanuman is LakshmiNarayan Mandir. This has also no significance in regard to Ramayana. This temple premises are quiet large. Apart from LakshmiNarayan idols, Ganpathi, Hanuman, ShivLing, RamLaxmanSita idols are installed. All are in marble. A KoShala with 15 cows is there. Both Thambi and me donated a meagre amount for the upkeep of cows.
லம்பேஹனுமான் பக்கத்தில் லக்ஷ்மிநாராயன் மந்திர் இருக்கிறது.  இராமாயணத்திற்கும் இதற்கும் எந்தசம்பந்தமும் கிடையாது. கோவில்வளாகம் பெரியது. மார்பிளாலான லக்ஷ்மிநாராயன், கணபதி, ஹனுமான், சிவலிங்கம், ராமலக்ஷ்மண சீதை சிலைகள் இருக்கிறது. கோசாலையில் 15 பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. தம்பியும் நானும் எங்களால் இயன்ற பொருளுதவி செய்தோம்.

Lakshman Sheshnag Avatar .. லக்ஷ்மன் ஷேஷ்நாக் அவதார்
Surpanaka Nak Kati .. சூர்ப்பனகை நாக் கடி
Lakshman Tapsya Mandhir .. லக்ஷ்மன் தபஸ்ய மந்திர்
Kapila Godavari Sangham .. கபில கோதாவரி சங்கமம்
Brahma Vishnu Mahesh Dhinkunt .. பிரம்மா விஷ்ணு மகேஷ் தின்குண்ட்
SitaMatha Agnikunt .. சீதாமாதா அக்னிகுண்ட்
Sriram Parankuti .. ஸ்ரீராம் பரண்குடி

All these are situated adjacent to each other in Tapovan which is a mesmerizing spot covered with lush greenery and once it was a part of Dandakaranya forest. It is on the banks of the confluence of rivers Kapila and Godavari. This was preferd by Great Sages for meditation.

இவையாவும் தபோவன் என்கிற இடத்தில் பக்கத்துபக்கத்துலே அமைந்துள்ளது. தண்டகாரண்ய வனத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தஇடம் இப்பொழுதும் பச்சைபசேர்ன்று மிகரம்மியமாக இருக்கிறது. கோதாவரி நதியும் கபில ஆறும் சங்கமம் ஆகும் இடத்திலிருக்கும் இதை அந்தக்காலத்தில் மகரிஷிகள் பலர் தவம் செய்ய தேர்ந்துஎடுத்துள்ளார்கள்.

It is believed that Lakshmana severed the nose of Surpanaka here. A sculpture depicting this scene is erected. Nearby is a spot where Lakshmana was meditated. There is an idol depicting Lakshmana as the avatar of Sheshnag.
இங்குதான் லக்ஷ்மணன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டினார் என்று நம்பப்படுகிறது. அதை சித்தரிக்கும்வகையில் ஒரு சிற்பத்தை நிறுவியுள்ளார்கள். இதற்கு அருகில்தான் லக்ஷ்மணன் தவம் செய்ததாக சொல்கிறார்கள். "ஷேஷ்நாக்" அவதாரத்துடன் லக்ஷ்மணன் சிலை இருக்கிறது.

On the point where rivers Godavari and Kapila mege, there are four hollow spaces and they were being called Brahma Vishnu Mahesh Dhinkunt and SitaMatha Agnikunt. The relevance is not known. We saw a small hut like shape structure atop a hillock nearby and the locals call it Sriram Parankuti. We didn't go there.

கோதாவரி கபில சங்கமத்தில், ஒரு பாறையில் நான்கு ஆழமான பள்ளங்கள் இருக்கிறது. இவற்றை பிரம்மா விஷ்ணு மகேஷ் குண்டம் மேலும் சீதாமதா அக்னிகுண்டம் என்று விவரிக்கிறார்கள்.  இதன் தாத்பர்யம் யாருக்கும் தெரியவில்லை. சும்மா அவற்றை பார்த்துவிட்டு வந்தோம். இதற்குஅருகில் ஒரு சிறியகுன்றில் குடில் மாதிரி தெரிகிறது. அதை இராமர் பரண் என்று சொல்கிறார்கள். நாங்கள் அங்கே போகவில்லை.

Autowala dropped back at Sita Gufa where we boarded it. Then Thambi on the wheel and back home around 6 in the evening. Renu started her actions to exhibit her culinary skills. Hats off to her.

ஆட்டோவாலா எங்களை மறுபடியும் நாங்கள் ஏறியஇடமான சீதாகுகைக்கிட்டே கொண்டுவந்து விட்டுவிட்டார். தம்பி சாரதியாக மாற நாங்கள் மாலை சுமார் 6 மணி அளவில் இல்லம் வந்துசேர்ந்தோம். ரேணு அவளோட சமையல்கலை நிபுணர் திறமையை நிரூபிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு என்னுடைய வணக்கங்கள்.

My next Post on our visit to Sri Kapileshwara Mandir and Sri KalaRam Mandir.

என்னுடைய அடுத்தப்பதிவு கபிலேஸ்வர மந்திர் மற்றும் காலாராம் மந்திர் விஜயம்.

.....
இதில் காணப்படுபவை யாவும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல்கள்.  படித்ததில் பிடித்ததை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதி ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். வலைப்பதிவாளர்களுக்கு மிக்க நன்றி.
தமிழாக்கம் முழுவதும் என்னுடையது. இலக்கணப்பிழையோ எழுத்துப்பிழையோ இருந்தால் மன்னிக்கவும்.

All these including first four photographs are culled, extracted from different Website & BlogPosts. Those which trigger my mind and invite my attention are being articulated in my style of expression. Great Thanks to those Writers for their information.
Tamil translation is entirely mine. Errors and mistakes may be forgiven.
.....

No comments:

Post a Comment