தேவி ஸப்தஸ்ருங்கி நிவாஸினி ஏழு மலைச்சிகரங்களுக்கு நடுவில் குடிகொண்டுள்ளாள்.
This is our 2nd Temple Visit in Nasik. As it is located 60 kilometres away from "Hari Vishwa", Thambi's Apartments, we have hired a Driver for our Ford Figo. Left around 7 in the morning. The road is well laid out. Reached Vani, a small village at the foothills, at 8 but we have been asked to park the car there itself and to catch a Bus to go to the Hill. The reason is very huge inflow of pilgrims from Maharashtra, Gujarat, Madhya Pradesh & Rajasthan. It is a local festival. The concluding day of Chaitrotsav, a Nine-Days Festival. The Day is Chaitra Poornima (Full Moon Day) and it is Mangalvar (Tuesday).
நாசிக் நகரில் இது எங்களுடைய இரண்டாவது ஆலய தரிசனம்.
தம்பி வசிக்கும் "ஹரி விஷ்வா" அடுக்குமாடி குடியிருப்பிலருந்து 60 KM தொலைவில் உள்ளதால், வாகனஓட்டி ஒருவரை அமர்த்திக்கொண்டோம். காலை 7 மணிக்கு கிளம்பினோம். நல்ல அருமையான சாலை. 8 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள வணி என்கிற ஒரு சிறிய கிராமத்தை அடைந்தோம். காவல் துறையினர் காரை இங்கையே நிறுத்திவிட்டு, மலையிலுள்ள கோவிலுக்கு பஸ்ஸில் போக சொல்லிவிட்டார்கள். மகாராஷ்டிரா, குஜராத், மத்யப்ரதேஷ், ராஜஸ்தான் மாநிலங்களிலேர்ந்து மிக அதிகமான பக்தர்கள் வந்துகொண்டேயிருப்பதால் இந்த ஏற்பாடு. உள்ளூர் கோவில் திருவிழா. 'சைத்ரோட்ஸவ' என்கிற 9-நாள் விழாவின் கடைசி தினம். ( நம்மஊர் சித்திரை திருவிழா ) மங்களமான நாள் என்று போற்றப்படும் செவ்வாய்க்கிழமையும், சித்திரை பௌர்ணமியும் சேர்ந்த ஓர் நன்நாள்.
We were totally unaware that the Day we have chosen to have the Darshan of the Divine Mother is very auspicious for Saptashrungi Nivasini. It is a Divine Blessing. Divine Mother wanted us to meet HER on the Day which is very important for HER.
We were totally unaware that the Day we have chosen to have the Darshan of the Divine Mother is very auspicious for Saptashrungi Nivasini. It is a Divine Blessing. Divine Mother wanted us to meet HER on the Day which is very important for HER.
எதுவும் தெரியாமல் தேவியை தரிசிக்க நாங்கள் தேர்ந்து எடுத்த இந்ததினம், தேவி ஸப்தஸ்ருங்கி நிவாஸினிக்கு ஒர் முக்கியமான உகந்த நாள். அம்பிகைக்கு மிகவும் பிடித்த மங்களகரமான இந்த இனிய நன்னாளில் எங்களுக்கு தரிசனம் தரத்தான் அன்னை எங்களை இன்று வரச்செய்த்துள்ளாள். ஏதோ சிறிதளவு புண்ணியம் பண்ணியிருக்கோம் என்று நம்புகிறோம். அம்பாளின் அநுக்கிரஹம்.
We took bus but that too was stopped 2-3 KMs away from the Temple entrance. Actually it is climbing. On reaching the entrance, we came to know that we have to climb 510 steps to reach HER abode. We saw two funicular trolleys, one goes up and another comes down. We were very happy that we can avoid the steps. But alas. The trolleys are not yet operational and under testing.
பஸ்ஸும் கோவில்வாயிலேர்ந்து 3 KMக்கு முன்னாடியே நிறுத்தப்பட்டுவிட்டது. அங்கேயிருந்து நடை. இல்லை, இல்லை. மலை ஏற்றம். அம்பாளை தரிசிக்க இன்னும் 510 படிகள் மேலே ஏறவேண்டும் என்று கோவில்வாசலை அடைந்த பிறகுதான் தெரிந்தது, அப்போது பழனிமலை விஞ்சுக்கார் மாதிரி இரண்டு மேலேயும் கீழேயும் போய்க்கொண்டு இருந்தது. ஆஹா, படி ஏறவேண்டாம் என்று மகிழ்ச்சியாக இருந்தோம். அந்தோ பரிதாபம். அவைகள் இன்னும் பரிசோதனையில்தான் உள்ளன.
முதல்படிக்கு அருகில் ஒரு சிறிய விநாயகர் ஆலயம். படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் மார்பிளாலான பெரிய ஆமையின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு விநாயகப்பெருமானை வேண்டிக்கொண்டு ஏறத்துவங்கினோம்.
Because of huge crowd, we ascended inch by inch on the steps and we reached atop after 2 hours. Then we stood in the Q for another 30 minutes. Extremely exhausted. It is a 4600 feet height peak. While we were moving on the steps, we saw the idols of Rama, Hanuman, Radha and Krishna, Dattatreya. Lot of monkeys are seen.
மிகத்திரளான பக்தர்களின் கூட்டத்தால், அடிஅடியாகத்தான் படிகளில் ஏற முடிந்தது. இரண்டு மணி நேரம் கழித்து, மலையிலுள்ள ஆலய மண்டபத்தை அடைந்தோம். அதற்கு அப்புறமும் அரைமணி நேரம் Qவில் நின்றோம். ரொம்பவும் களைப்படைந்துவிட்டோம். 4600 அடி உயரமுள்ள மலைச்சிகரம். படிகளில் ஏறும்போது ஆங்காங்கே ராமர், ஹனுமான், ராதை, கிருஷ்ணர், தத்தாத்ரேயர் சிலைகள் உள்ளன. நிறைய குரங்குகள் இருக்கிறது.
A mountainous path with steps cut out of the hill, which starts right at the foothills and goes all the way to the mountain atop. The hills are covered with verdant forests having medicinal herbs.
மலையடிவாரத்திலேருந்து மலையுச்சி வரை கரடுமுரடான மலைப்பாதையும் இருக்கிறது. மருத்துவகுணம் வாய்ந்த பசுமையான காடுகளால் மலை சூழப்பட்டுள்ளது.
The 18-armed ashta-dasha bhuja Saptashrungi Devi image is said to be swayambhu on a rock on the sheer face of a mountain. The image is about 8 feet tall and appears saffron in colour, as it is covered with sindoor. However, the eyes are not touched by the colour but are made of white porcelain, which shine very brightly. The Devi is decorated with high crown, a gold nose-ring and gold necklaces. And gold toe rings too. Her attire is in the form of a robe with a blouse, which are being changed every day with new ones.
அம்பிகையின் தரிசனம். அம்பாளே நேரில் வருவது போல், ஆனந்தம் தரும் அன்பு அலைகள் சூழ்ந்து ஆன்மா தூய்மை பெறுகிறது.
பதினெட்டு கைகளையுடைய அஷ்டதசபுஜ ஸப்தஸ்ருங்கி தேவியின் எட்டு அடி உயரமுள்ள உருவம் சுயம்புவாக, மலையிலுள்ள ஒரு செங்குத்தான பாறையில் வெளிப்படையாக தெரிகிறது. கண்களைத்தவிர, உடல் முழுவதும் சிந்தூரத்தால் பூசப்பட்டு ஸிந்தூர வண்ணமாக காட்சிகொடுக்கிறாள். கண்கள் வெண்மையான சோழியால் பொருத்தப்பட்டு பளீர் என்று பிரகாசிக்கிறது. தேவிக்கு தலையில் ஒரு பெரிய கிரீடமும், மராத்திய பெண்கள் அணியும் முறையில் தங்க மூக்குத்தியும், தங்க நெக்லசும், கால்களில் தங்க மெட்டியும் போடப்பட்டுள்ளது. புடவையும், ரவிக்கையும் அணிவிக்கப்பட்டுள்ளது. தினமும் புதுவஸ்திரம் அணிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
As described in the Devi-Mahatmya, the Goddess holds these weapons in Her arms: the trishula (trident) of Shiva, the sudarshana chakra of Vishnu, the shankha (conch) of Varuna, the flames of the fire-god Agni, the bow and arrow of Vayu, the vajra (thunderbolt) and ghanta (bell) of Indra, Danda (cudgel) of Yama, akshamala (string of beads) of Daksha, kamandalu (water-pot) of Brahma, the rays of the sun-god Surya, the sword and shield of Kali, the parashu (axe) of Vishvakarma, the wine-cup of Kubera, gada (mace), lotus, lance and pasha (noose).
தேவீமாஹாமியத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, அம்பாள் ஆயுதங்களை தாங்கிகொண்டுருக்கிறாள். சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சுதர்சனச்சக்கரம், வருணனின் சங்கு, அக்னியின் ஜுவாலை, வாயுவின் வில்அம்பு, இந்திரனின் வஜ்ராயுதம் மணி, எமதர்மராஜனின் தண்டம், தக்ஷனின் மணிமாலை, ப்ரம்மாவின் கமண்டலம், சூரியனின் ஒளி, காளியின் வாள் கவசம், விஸ்வகர்மாவின் கோடாலி, குபேரனின் கோப்பை, தண்டாயுதம், தாமரை, ஈட்டி, பாஷம்.
அர்த்தமண்டபத்தில் அம்பாளை நோக்கி, மணிகளாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
In the scripture "Devi Mahatmya", the presiding Goddess of the Temple, Saptashrungi Nivasini, is considered as a combined manifestation of the three Goddesses, Mahalakshmi of Kolhapur, Mahasaraswati of Tuljapur and Mahakali of Mahur.
கோலாப்பூர் மஹாலக்ஷ்மியம், துல்ஜாபூர் மஹாசரஸ்வதியும், மாஹுர் மஹாகாளியும் சேர்ந்த பூர்ணாவதாரம்தான் தேவி ஸப்தஸ்ருங்கி நிவாஸினி என்று தேவீமாஹாமியத்தில் வர்ணிக்கப்படுகிறது.
It is one among the 51 Shakti Peethas and is the location where the Sati's right arm is reported to have fallen. ( When agitated Shiva was carrying Sati's dead body round the world on His shoulders, Vishnu had cut her body into pieces with his Sudarshana Chakra)
51 ஷக்திபீடங்களில் இதுவும் ஒன்று. சத்தியின் இறந்தஉடலை தன்தோளில் சுமந்துகொண்டு ஆக்ரோஷத்துடன் சிவபெருமான் உலகை சுற்றியபோது, அவரை சாந்தப்படுத்த விஷ்ணுபகவான் தன்னுடைய சுதர்சனச்சக்கரத்தால் அந்த உடலை சிதைத்தபோது வலதுகை விழுந்த இடம்தான் இந்த ஸப்தஸ்ருங் சிகரம்.
SHE is also known as Sapatashrungi (Goddess of Seven Hills), Saptashrunga-mata (The Mother of Saptashrunga), and Brahmasvarupini (one who has form of Brahma). The Goddess is reported to have appeared from the 'kamandalu' (water-pot) of the Creator-God Brahma.
ஸப்தஸ்ருங்கி என்றும், ஸப்தஸ்ருங்மாதா என்றும், ப்ரம்மாவின் கமண்டலம் வழியாக உதித்ததால் ப்ரம்மசுரூபிணி என்றும் அழைக்கப்படுகிறாள்.
It is also said that when the demon king Mahishasura was creating havoc in the forests, the devatas and people urged Durga to kill the demon. Then the 18 armed Saptashrungi Devi took the form of Durga and slayed Mahishasura, and since then She is also known as Mahishasura Mardhini. Mahishasura was in the form of a buffalo. At the foot of the hill, from where one starts climbing the steps, there is the head of a buffalo, made in stone, which is believed to be of demon Mahishasura.
மகிஷாசுரன் காட்டில் செய்யும் அட்டுழியங்களை தாங்கமுடியாமல் தேவர்களும் மனிதர்களும் துர்காபரமேஸ்வரியிடம் முறையிட்டதால், அம்பாள் பதினெட்டு கைகளையுடைய அஷ்டதசபுஜ ஸப்தஸ்ருங்கி தேவியாக அவதரித்து அசுரனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள். மகிஷாசுரன் எருமைத்தலையுடன் இருந்ததால், மலையடிவாரத்திலேருந்து மலைப்பாதைக்கு ஏறும் இடத்தில் கல்லிலான எருமைமுகம் பதிக்கப்பட்டுள்ளது.
Saptashrung mountain was a part of the forest called "Dandakaranya" mentioned in the 'Ramayana'. It is mentioned that Lord Rama, along with Seeta, and Lakshmana had come to these hills to pray to the Goddess and seek Her blessings.
இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள தண்டகாரண்ய காடுகளின் ஒரு பகுதிதான் இந்த ஸப்தஸ்ருங் மலைச்சிகரங்கள். ராமபிரானும், சீதாதேவியும், லக்ஷ்மணனும் இங்கேவந்து தேவி ஸப்தஸ்ருங்கி நிவாஸினியை தரிசித்தார்கள் என்று நம்பப்படுகிறது.
In the epic Ramayana war, when Lakshmana was lying unconscious in the war field, Hanuman came to Saptashrungi hills in search of medicinal herbs to restore his life.
இராமாயணப்போரில், லக்ஷ்மணன் மூர்ச்சடைந்தபோது ஹனுமான் இங்கேவந்து மூலிகைகள் பறித்துச்சென்றதாக சொல்லப்படுகிறது.
It is believed that the Devi Mahatmya, a sacred book which extols the greatness of Devi and Her exploits, was composed by Sage Markandeya who performed rigorous penance in a cave in a hill that is located to the east of Saptashringi and a deep ravine divides the two hills. That hill is now named after him as Markandeye Hill. While staying in this cave, Markandeya is believed to have recited Devi Mahatmya to entertain the Devi. If we look the Devi's image, we can notice that Her head slightly tilted towards her left which is believed that She was listening to him.
தேவீமாஹாமியத்தை இயற்றிய மார்க்கேண்டய மகரிஷி ஸப்தஸ்ருங் மலைக்கு கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள ஒரு குன்றின்குகையில் தவம் இயற்றியதாக நம்பப்படுகிறது. அந்த குன்று இப்போது மார்க்கேண்டயமலை என்று அழைக்கப்படுகிறது. மார்க்கேண்டய மகரிஷி இங்கு தங்கியிருந்த காலத்தில் தேவீமாஹாமியத்தை பாராயணம் பண்ணும்போது, இரண்டு மலைகளுக்கும் நடுவில் இருக்கும் குறுகிய மலையிடுக்குவழியாக தேவி காதுகொடுத்து கேட்பாளாம். அம்பிகையின் சுயம்பு உருவத்தை உற்றுநோக்குங்கள். தேவியின் தலை சற்று இடப்புறமாக சாய்ந்து எதையோ ஊன்று கவனிப்பதுபோல் தோன்றும்.
Another local myth is that a tiger resides in the garbagriaha (sanctum sanctorum) every night and a keeps a watch on the temple but goes away before sunrise.
இரவுநேரத்தில் ஒரு புலி கர்பகிருகத்தில் தங்கியிருந்து கோவிலை காக்குமாம். சூரியஒளிக்குமுன் அது மறைந்துவிடுமாம்.
While coming out, there is a small shrine for KalBairav. The ascending steps are in the other way and luckily not as crowded as while ascending. We had been to the AnnaDhana Centre and had lunch. Then walked down to catch Bus to go to the Foothills where we have parked our car.
ஓர் சிறிய காலபைரவர் சன்னதி உள்ளது. அவரை தரிசித்தபின் கீழே இறங்க ஆரம்பித்தோம். நல்லவேளை, மேலே ஏறியபோது இருந்த கூட்டநெரிசல் இங்கே இல்லை. இறங்கியதும் அன்னதான சத்திரத்திற்கு சென்று வயிறுமுட்ட சாப்பிட்டோம். பஸ்சை பிடித்து, மலையடிவாரத்தில் கார் பார்க்கபண்ணிய இடத்திற்கு சென்று இல்லம் நோக்கி பயணம்.
While coming out, there is a small shrine for KalBairav. The ascending steps are in the other way and luckily not as crowded as while ascending. We had been to the AnnaDhana Centre and had lunch. Then walked down to catch Bus to go to the Foothills where we have parked our car.
ஓர் சிறிய காலபைரவர் சன்னதி உள்ளது. அவரை தரிசித்தபின் கீழே இறங்க ஆரம்பித்தோம். நல்லவேளை, மேலே ஏறியபோது இருந்த கூட்டநெரிசல் இங்கே இல்லை. இறங்கியதும் அன்னதான சத்திரத்திற்கு சென்று வயிறுமுட்ட சாப்பிட்டோம். பஸ்சை பிடித்து, மலையடிவாரத்தில் கார் பார்க்கபண்ணிய இடத்திற்கு சென்று இல்லம் நோக்கி பயணம்.
Selfie by Usha and Renu in front of the replica of Devi kept in the AnnaDhana Centre.
அன்னதான கூடத்தில் வைக்கப்பட்டுருந்த தேவியின் உருவச்சிலைக்கு முன் உஷாவும் ரேணுவும் 'selfie'.
அன்னதான கூடத்தில் வைக்கப்பட்டுருந்த தேவியின் உருவச்சிலைக்கு முன் உஷாவும் ரேணுவும் 'selfie'.
Around 9 in the night, we reached home.
இரவு 9 மணிக்கு இல்லத்தை அடைந்தோம்.
Instead of just sitting in the car, Mr.Joshi, the Maharashtrian Driver, came along with us from the start of the Foothills to the final reaching. He was very polite and helpful. Hats off to a fine human being.
மராட்டிய வாகனஓட்டி திரு ஜோஷி, கார்லேயே இருக்கமால் எங்களுடன் எல்லாஇடத்திற்கும் வந்து எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அந்த நல்ல அருமையான மனிதருக்கு எங்களுடைய வணக்கங்கள்.
It is believed that Devi Saptashrung Nivasini installed a ShivLing and performing Pooja daily. We would like to visit again to locate and worship that ShivLing. Also we missed to have Darshan of Her Feets and toe ring. The heavy inflow of pilgrims made us to move faster.
தேவி ஸப்தஸ்ருங்கி நிவாஸினி ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து இன்றளவும் பூஜை செய்து கொண்டுயிருக்கிறாள் என்று அங்கேயுள்ளவர்கள் சொல்கிறார்கள். மிக அதிகஅளவில் பக்தர்கள் வந்துகொண்டேயிருப்பதால் கோவில் நிர்வாகம் எங்களை ஒரு நிமிஷத்திற்கு மேல் நிற்கவைக்கவில்லை. அதலால்தான் எங்களால் அந்த சிவலிங்கத்தை பார்க்கமுடியவில்லை. மேலும் அம்பிகையின் கால்களையும், அதிலிருக்கும் மெட்டிகளையும் பார்க்கமுடியவில்லை. இதற்காகவே திரும்பவும் இங்கே வரவேண்டும்.
..........
All these information on Goddess are culled from Websites & Blog Posts and tailored to present here with my kind of syllables. Great Thanks to Owners of those Websites & Blogs.
இதில் காணப்படுபவை யாவும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கே ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். வலைப்பதிவாளர்களுக்கு மிக்க நன்றி.
To know more, please visit .. மேலும் தெரிந்துகொள்ள, கீழேயுள்ள லிங்க்கில் பிரவேசிக்கவும்.
http://saptashrungi.net/online_darshan.html.
இன்றைய (3.11.2017) புனிதமான வெள்ளிக்கிழமையுடன் கூடிய ஐப்பசி பௌர்ணமி நன்நாளில். இப்பதிவை இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
The next Post is on our visit to the Sita Gufa and other places mentioned in the epic Ramayana.
அடுத்த ஆலயதரிசன பதிவு ... சீதா குகையும், இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய இடங்களும் பற்றிய தொகுப்பு.
No comments:
Post a Comment