Friday, November 24, 2017

॥ श्री स्कन्द षट्कम् ॥ .. ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்
இதைப் படித்தால் இல்லத்தில் பொன் பொருள் சேரும். அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும் உண்டாகும்.

श्री गणेशाय नमः   ஓம் ஸ்ரீ கணேஶாய நமஹ:

(1)
षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्चशैलविमर्दनम्
देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम्  

ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஶைல விமர்தநம்
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(2)
तारकासुर हन्तारं मयूरासन संस्थितम्
शक्तिपाणिं देवेशं स्कन्दं वन्दे शिवात्मजम्  

தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸந ஸம்ஸ்திதம்
ஶக்திபாணிம் தேவேஶம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(3)
विश्वेश्वरप्रियं देवं विश्वेश्वरतनूद्भवम्
कामुकं कामदं कान्तं स्कन्दं वन्दे शिवात्मजम्  

விஶ்வேஶ்வர ப்ரியம் தேவம் விஶ்வேஶ்வர தநூத்பவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும், தேவனும், ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும், மனதைக் கவருகின்றவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(4)
कुमारं मुनिशार्दूलमानसानन्द गोचरम्
वल्लीकान्तं जगद्योनिं स्कन्दं वन्दे शिवात्मजम्  

குமாரம் முநிஶார்தூலமாநஸாநந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

குமரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும், வள்ளியின் கணவனும், உலகங்களுக்கு காரணமானவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்

(5)
प्रलयस्थितिकर्तारं आदिकर्तारमीश्वरम्
भक्तप्रियं मदोन्मत्तं स्कन्दं वन्दे शिवात्मजम्  

ப்ரலயஸ்திதிகர்தாரம் ஆதிகர்தாரமீஶ்வரம்
பக்தப்ரியம் மதோந்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும், முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும், ஆனந்தத்தால் மதம் கொண்டவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(6)
विशाखं सर्वभूतानां स्वामिनं कृत्तिकासुतम्
सदाबलं जटाधारं स्कन्दं वन्दे शिवात्मजम्  

விஶாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும், ஜடையை தரித்தவனுமான, சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(7)
स्कन्दषट्कं स्तोत्रमिदं यः पठेत् शृणुयान्नरः
वाञ्छितान् लभते सद्यश्चान्ते स्कन्दपुरं व्रजेत्  

ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம் : படேத் ஶ்ருʼணுயாந்நர:
வாஞ்சிதாந் லபதே ஸத்யஶ்சாந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத்  

ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்ரீ ஸ்கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள், அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள். முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள்.

इति श्री स्कन्द षट्कं सम्पूर्णम्   இதி ஶ்ரீ ஸ்கந்த ஷட்கம் ஸம்பூர்ணம்

.....
வலைப்பூ பதிவுகள் படித்த விஷயங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.....

No comments:

Post a Comment